Shopify POS மூலம் Shop Pay Installments கட்டணங்களை ஏற்றல்
நீங்கள் POS-க்கு Shop Pay Installments கட்டணங்களை அமைத்த பிறகு, இப்போது வாங்கிப் பிறகு பணம் செலுத்தும் வசதியை வழங்கி உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்வான கட்டண விருப்பங்களை ஸ்டோரில் வழங்கலாம். தகுதிபெற்ற வாடிக்கையாளர்களுக்கு உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் வழங்கப்படுவது போலவே ஸ்டோரிலும் தவணை முறையில் பணம் செலுத்தும் விருப்பங்கள் வழங்கப்படும். ஆன்லைன் ஆர்டர்களைப் போலவே ஸ்டோரில் பெறப்படும் Shop Pay Installments ஆர்டர்களுக்கும் அதே பரிவர்த்தனைக் கட்டணங்களையே செலுத்துவீர்கள். Shop Pay Installments பற்றி மேலும் அறிக.
இந்தப் பக்கத்தில்
தேவைகள்
POS-க்கான Shop Pay Installments வசதி USD-இல் விற்பனை செய்யும் அமெரிக்காவில் உள்ள தகுதியான வணிகர்களுக்கு மட்டுமே கிடைக்கும். கனடாவைச் சேர்ந்த வணிகர்கள் ஆன்லைன் கொள்முதல்களுக்கு Shop Pay Installments-ஐ வழங்க முடியும் என்றாலும், கனடாவில் POS-க்கான Shop Pay Installments வசதி கிடைக்காது.
POS செக்அவுட்டில் Shop Pay Installments-ஐ ஏற்க, நீங்கள் 8.4.0 அல்லது அதற்குப் பிந்தைய Shopify POS செயலி பதிப்பைப் பயன்படுத்த வேண்டும்.
செக்அவுட்டில் Shop Pay Installments கட்டணங்களை ஏற்றல்
செக்அவுட்டில் Shop Pay Installments-ஐ ஏற்க, நீங்கள் கட்டண விருப்பமாக Shop Pay Installments என்பதைத் தேர்ந்தெடுக்கலாம், அதன்பிறகு உங்கள் வாடிக்கையாளர் தமது சொந்தச் சாதனத்தில் செக்அவுட்டை முடிப்பார்.
படிகள்:
Shopify POS இலிருந்து, கார்ட்டில் உருப்படிகளைச் சேர்த்துவிட்டு, செக்அவுட் என்பதைத் தட்டவும்.
கட்டண விருப்பத்தைத் தேர்ந்தெடு பக்கத்தில், Shop Pay Installments என்பதைத் தட்டவும். வாடிக்கையாளரின் கார்ட்டிற்கு ஒரு QR குறியீடு உருவாக்கப்படும்.
உங்கள் சாதனத்தை வாடிக்கையாளரைப் பார்த்தவாறு திருப்பி, அவர்களின் ஸ்மார்ட்போன் கேமராவைப் பயன்படுத்தி QR குறியீட்டை ஸ்கேன் செய்து, அவர்களின் சாதனத்தில் விண்ணப்பத்தை நிரப்புமாறு அவர்களுக்கு அறிவுறுத்தவும்.
வாடிக்கையாளர் விண்ணப்பத்தை நிரப்பி, ஒப்புதல் பெற்று, அதன்பிறகு தங்கள் கொள்முதலுக்குப் பணம் செலுத்தியதும், பரிவர்த்தனை முடிந்தது எனக் காட்டப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.
வாடிக்கையாளர் தேவைகள்
ஸ்டோரில் Shop Pay Installments மூலம் செக்அவுட் செய்ய, வாடிக்கையாளர் பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
- $50 USD முதல் $20,000 USD வரை கொள்முதல் செய்ய வேண்டும்.
- Wi-Fi அல்லது மொபைல் டேட்டா மூலம் இணைய அணுகல் உள்ள ஸ்மார்ட்போன் சாதனத்தை வைத்திருக்க வேண்டும்.
- அமெரிக்காவின் பில்லிங் மற்றும் ஷிப்பிங் முகவரியைக் கொண்டிருக்க வேண்டும் அத்துடன் USD-இல் பணம் செலுத்த வேண்டும்.
- பணம் செலுத்தப் பயன்படுத்த வேண்டியது: Shop Pay ஆதரிக்கும் கார்டு.
- வாடிக்கையாளர் தங்களின் ஆர்டருக்கான கட்டணத்தை நான்கு இருவாரத் தவணைகளாகப் பிரித்துச் செலுத்த விரும்பினால், அவர்கள் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்.
- வாடிக்கையாளர் மாதாந்திரக் கட்டணத் திட்டத்தைத் தேர்வுசெய்தால், டெபிட் கார்டு மூலமாக மட்டுமே அவர்களால் பணம் செலுத்த முடியும்.
வாடிக்கையாளரின் செக்அவுட் அனுபவம்
செக்அவுட்டில் கட்டண முறையாக Shop Pay Installments-ஐத் தேர்ந்தெடுத்த பிறகு, வாடிக்கையாளர் பின்வரும் படிகளை முடிக்க வேண்டும்.
படிகள்:
- வாடிக்கையாளர் தங்கள் ஸ்மார்ட்போனைக் கொண்டு POS சாதனத்திலுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வார், இதனால் மொபைல் உலாவியில் செக்அவுட் திறக்கப்படும்.
- வாடிக்கையாளர் பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்வார்:
- புதிய Shop Pay வாடிக்கையாளராக இருந்தால், அவர்கள் Shop Pay கணக்கை உருவாக்கத் தங்கள் மின்னஞ்சலை உள்ளிட வேண்டும், பிறகு கட்டணத் தகவல் மற்றும் பில்லிங் முகவரியை உள்ளிட வேண்டும்.
- ஏற்கெனவே உள்ள Shop Pay வாடிக்கையாளராக இருந்தால், அவர்கள் தங்களின் Shop Pay கணக்கில் உள்நுழைவார்கள்.
- வாடிக்கையாளர் பின்வரும் பிராம்ட்களில் ஒன்றைப் பெறுவார்:
- அவர்கள் முதல்முறையாக Shop Pay Installments-ஐப் பயன்படுத்துபவர் எனில், Affirm விண்ணப்பச் செயல்முறையின் ஒரு பகுதியாகத் தங்களின் பிறந்த தேதி, பில்லிங் முகவரி போன்ற தகுதித் தகவல்களை உள்ளிட வேண்டும்.
- அவர்கள் ஏற்கெனவே Shop Pay Installments-ஐப் பயன்படுத்துபவர் எனில், அவர்களின் அடையாளத்தைச் சரிபார்க்க உதவக்கூடிய கூடுதல் தகுதித் தகவல்களை உள்ளிடுமாறு பிராம்ட் செய்யப்படலாம்.
- Shop Pay Installments மூலம் பணம் செலுத்த அவர்களுக்கு ஒப்புதல் கிடைத்தால், வாடிக்கையாளர் தங்களுக்கு வழங்கப்படும் கட்டணத் திட்டங்களில் ஒன்றைத் தேர்வுசெய்துவிட்டு தொடர்க என்பதைத் தட்டுவார்.
- கொள்முதலை Affirm சரிபார்த்த பிறகு, வாடிக்கையாளர் தங்களின் கட்டண விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மதிப்பாய்வு செய்துவிட்டு கொள்முதலை முடி என்பதைத் தட்டுவார்.
- கொள்முதல் முடிந்துவிட்டதை உறுதிப்படுத்த வாடிக்கையாளர் சாதனத்தை உங்களிடமோ உங்கள் பணியாளரிடமோ திருப்பித் தருவார்.
வாடிக்கையாளர்கள் Affirm உதவி மையத்தில் Shop Pay Installments-ஐப் பயன்படுத்துவது பற்றி மேலும் அறியலாம்.
Shop Pay Installments செக்அவுட் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது மற்றொரு வாடிக்கையாளருக்கு உதவுதல்
வாடிக்கையாளருக்கு Shop Pay Installments விண்ணப்பத்தை நிரப்பச் சிறிது நேரம் தேவைப்பட்டால், நீங்கள் செக்அவுட் செயல்முறையைப் பின்னணியில் இயங்கவிட்டு, அதேநேரத்தில் Shopify POS-இல் பிற வாடிக்கையாளர்களுக்கு உதவலாம்.
படிகள்:
- QR குறியீடு திரையில், மற்றொரு வாடிக்கையாளருக்கு உதவு என்பதைத் தட்டவும்.
- மற்ற வாடிக்கையாளருக்கான செக்அவுட்டை முடிக்கவும்.
- செக்அவுட் முடிந்த பிறகு, நீங்கள் Shop Pay Installments பரிவர்த்தனையை மீட்டெடுக்கத் தயாராக இருக்கும்போது, கார்ட் > மேலும் செயல்கள் என்பதற்குச் செல்லவும்.
- Shop Pay செக்அவுட்களைப் பார் என்பதைத் தட்டி, தொடர உங்கள் வாடிக்கையாளரின் பரிவர்த்தனையைத் தேர்ந்தெடுக்கவும்.
வரம்புகள்
POS செக்அவுட்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் Shop Pay Installments-களுக்குப் பின்வரும் வரம்புகள் பொருந்தும்:
- POS-ஐப் பயன்படுத்தும் Shop Pay Installments ஆர்டர்களுக்கு அசல் கட்டண முறைக்கு மட்டுமே பணத்தைத் திரும்பப் பெற முடியும். Shop Pay Installments ஆர்டர்களுக்குப் பரிமாற்றங்கள் அல்லது கிஃப்ட் கார்டுக்கான பணத்தைத் திரும்பப்பெறுதல் ஆதரிக்கப்படாது.
- பிரித்துச் செலுத்தும் கட்டண முறைகள் ஆதரிக்கப்படாது.
- Shop Pay Installments-ஐப் பயன்படுத்திச் செக்அவுட் செய்யப்பட்ட கார்ட்களில் பிரிக்கப்பட்ட விநியோக முறைகள் ஆதரிக்கப்படாது.
- Shop Pay Installments-ஐப் பயன்படுத்திச் செக்அவுட் செய்யப்பட்ட கார்ட்களில் கிஃப்ட் கார்டுகள் ஆதரிக்கப்படாது.
- கூறுகள் தேவைப்படும் தொகுப்புகளுக்கு, நீங்கள் Shop Pay Installments மூலம் செக்அவுட் செய்வதற்கு முன்பாகத் தயாரிப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
- கண்காணிக்கப்படும் தயாரிப்பின் சரக்கு இருப்பு கிடைக்காமல் இருந்து, அத்தயாரிப்பானது அதிக விற்பனையைத் தடுக்கும் வகையில் உள்ளமைக்கப்பட்டிருக்கும்போது உங்களால் Shop Pay Installments செக்அவுட்டை முடிக்க முடியாது. சரக்கு இருப்பை நிர்வகிப்பது பற்றி மேலும் அறிக.
- POS-க்கான Shop Pay Installments தானியங்கு தள்ளுபடிகள், தள்ளுபடிக் குறியீடுகள் மற்றும் பல தள்ளுபடிகளை ஆதரிக்காது. ஒரு ஆர்டரில் தள்ளுபடியைச் செலுத்த, Shop Pay Installments-ஐப் பயன்படுத்திச் செக்அவுட் செய்ய ஒற்றைப் பிரத்தியேகத் தள்ளுபடியைப் பயன்படுத்தவும்.
- சில வரி விதிக்கக்கூடிய உருப்படிகளுக்கு மட்டும் பகுதியளவு வரிகள் செலுத்தப்பட்ட கார்ட்களை POS-க்கான Shop Pay Installments ஆதரிக்காது.
POS-இல் உள்ள Shop Pay Installments-க்கான பணியாளர்கள் பயிற்சி
உங்கள் சில்லறை விற்பனை இருப்பிடங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு Shop Pay Installments-ஐ வழங்குவதற்கு உங்கள் பணியாளர்களைத் தயார் செய்ய பின்வரும் ஆதாரங்களை நீங்கள் பயன்படுத்தலாம்:
- Shop Pay Installments x Affirm ஆன்லைன் பயிற்சி, Shop Pay Installments செக்அவுட் செயல்முறை பற்றிய கண்ணோட்டத்தை உங்கள் பணியாளர்களுக்கு வழங்குகிறது, மேலும் தவணைகளை வழங்குவதற்கான அரசாங்க விதிமுறைகளுக்கு இணங்கச் செயல்படுவதற்கான சிறந்த நடைமுறைகளைப் பகிர்கிறது.
- ஸ்டோரில் வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்யும்போது உங்கள் பணியாளர்கள் பார்வையிட Shop Pay Installments ஆதாரத் தாள்களை அச்சிடலாம். இந்தப் பதிவிறக்கத்தில் அமைவு சரிபார்ப்புப் பட்டியல், செக்அவுட் வழிமுறைகள், ஸ்டோர் விற்பனைக்கான உதவிக்குறிப்புகள் மற்றும் வாடிக்கையாளர் FAQ ஆகியவை அடங்கும்.