வாடிக்கையாளர் ரசீதுத் தேர்வு

Shopify POS இல் செக்அவுட்டின்போது வாடிக்கையாளர்கள் தங்களது ரசீதை எப்படிப் பெற வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்க, நீங்கள் வாடிக்கையாளர் ரசீதுத் தேர்வைப் பயன்படுத்தலாம். வாடிக்கையாளர்கள் அச்சிடப்பட்ட ரசீதை அல்லது மின்னஞ்சல், SMS அல்லது Shop செயலி மூலமான டிஜிட்டல் ரசீதைத் தேர்ந்தெடுக்கலாம். வாடிக்கையாளர் பார்க்கும் வகையிலான திரை எதுவும் இணைக்கப்படவில்லை எனில், வாடிக்கையாளர் ரசீது விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து அவர்களின் தகவலை உள்ளிடுவதற்கு ஏதுவாக POS சாதனத்தை வாடிக்கையாளர் பக்கம் திருப்புமாறு பணியாளர்களிடம் கேட்கப்படும்.

ஒரு வாடிக்கையாளர் டிஜிட்டல் ரசீதைத் தேர்ந்தெடுக்கும்போது, உங்கள் ஸ்டோரில் ஒரு வாடிக்கையாளர் சுயவிவரத்தை உருவாக்கி அதனை அந்த ஆர்டருடன் இணைக்க, Shopify POS அவர்களின் மின்னஞ்சல் முகவரி அல்லது மொபைல் எண்ணைப் பயன்படுத்துகிறது. வாடிக்கையாளர் ரசீதுத் தேர்வு மூலம், Shopify இன் வலையமைப்பு முழுவதிலுமிருந்து மீண்டும் வரும் வாடிக்கையாளர்களை உங்களால் கண்டறிய முடியும். இதனால் ரசீதுத் தேர்வின்போது ஏற்கனவே கண்டறியப்பட்ட வாடிக்கையாளரின் தகவல் அவர்களுக்குக் காண்பிக்கப்படும்.

நீங்கள் ஆன்லைனில் Shop Pay ஐச் செயல்படுத்தியிருந்தால், Shop வலையமைப்பில் உள்ள வாடிக்கையாளர்களையும் உங்களால் கண்டறிய முடியும். ஒரு வாடிக்கையாளரின் தகவல் Shop கணக்குடன் பொருந்தினால், ரசீது விருப்பமாக Shop செயலி என்பது காண்பிக்கப்படும். அத்துடன் வாடிக்கையாளர் தனது ரசீதை Shop செயலியில், மின்னஞ்சல் மூலமாக, SMS மூலமாக அல்லது அச்சிடப்பட்ட ரசீதாகப் பெறலாம். ஒரு வாடிக்கையாளர் Shop செயலியைத் தேர்வுசெய்தால், அவர்களின் எதிர்கால ரசீதுகள் தானாகவே அங்கு அனுப்பப்படும்; இதனை அவர்கள் Shop செயலியில் உள்ள தங்களின் ஸ்டோர் கொள்முதல்கள் அமைப்பில் நிர்வகிக்கலாம்.

வாடிக்கையாளர் உங்களிடம் முதல் முறையாக செக்அவுட் செய்யும்போது, ரசீதை ஏற்பதற்கு முன்பு மார்க்கெட்டிங் தகவல்களைப் பெற விரும்புகிறீர்களா என்பதைத் தேர்வுசெய்யுமாறு அவர்களிடம் கேட்கப்படும். இயல்புநிலையாக, இந்த விருப்பம் உங்களின் தற்போதைய மின்னஞ்சல் மற்றும் SMS மார்க்கெட்டிங் அமைப்புகளுடன் பொருந்தும்.

வாடிக்கையாளர் ரசீதுத் தேர்வினைப் பயன்படுத்துவதன் மூலம், சேவை விதிமுறைகளை ஏற்கிறீர்கள்.

வாடிக்கையாளர் ரசீதுத் தேர்வினைப் பயன்படுத்துவதற்கான தேவைகள்

வாடிக்கையாளர் ரசீதுத் தேர்வைப் பயன்படுத்த, பின்வரும் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்:

  • புதுப்பிக்கப்பட்ட Shopify POS செயலியை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
  • உங்களிடம் Shopify POS Terminal, Verifone Victa Mobile அல்லது Customer View செயலியை இயக்கும் வகையிலான, வாடிக்கையாளர் பார்க்கும் வகையிலான திரை இருக்க வேண்டும். இந்தச் சாதனங்களில் ஏதேனும் ஒன்று உங்களிடம் இல்லை எனில், உங்கள் POS சாதனத்தை உங்கள் வாடிக்கையாளர் பக்கம் உங்களால் திருப்ப முடிய வேண்டும்.
  • நீங்கள் Shopify Payments என்பதைச் செயல்படுத்தியிருக்க வேண்டும்.
  • நீங்கள் Shopify கார்டு ரீடரைப் பயன்படுத்த வேண்டும்.
  • Shop செயலியில் ரசீதுகளை வழங்க, நீங்கள் ஆன்லைனில் Shop Pay ஐச் செயல்படுத்தியிருக்க வேண்டும் மற்றும் வாடிக்கையாளர் பார்க்கும் வகையிலான திரையை இணைத்திருக்க வேண்டும். வாடிக்கையாளர் Shop செயலியைத் தொடர்ந்து பயன்படுத்துபவராக இருக்க வேண்டும் மற்றும் அவர்களின் பேமெண்ட் கார்டு அவர்களின் Shop கணக்கில் சேமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

வாடிக்கையாளர் ரசீதுத் தேர்வை நிர்வகித்தல்

வாடிக்கையாளர் ரசீதுத் தேர்வு வசதி இயல்பாகவே ஆன் செய்யப்பட்டிருக்கும். உங்கள் Shopify நிர்வாகியில், உங்கள் வாடிக்கையாளர் ரசீதுத் தேர்வு அமைப்புகளை நீங்கள் நிர்வகிக்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > விற்பனைப் புள்ளி என்பதற்குச் செல்லவும்.

  2. ஸ்டோரின் அனுபவத்தைத் தனிப்பயனாக்குங்கள் என்ற பிரிவில் விற்பனைப் புள்ளியைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. POS எடிட்டர் மெனுப் பட்டியில் உள்ள Settings ஐகானைக் கிளிக் செய்யவும்.

  4. வாடிக்கையாளர் ரசீதுத் தேர்வு என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. POS சாதனத்தில் காண்பி என்பதைச் செயல்படுத்தவும் அல்லது முடக்கவும். உங்களிடம் வாடிக்கையாளர் பார்க்கும் வகையிலான திரை இருந்தால், வாடிக்கையாளர் ரசீதுத் தேர்வு அந்தத் திரைக்காக எப்போதும் ஆன் செய்யப்பட்டிருக்கும்.

  6. விருப்பத்தேர்வு: வாடிக்கையாளர் ரசீதுத் தேர்வினைப் புதிய இடங்கள் அனைத்திலும் பயன்படுத்த விரும்பினால், புதிய இடங்களுக்குப் பயன்படுத்து என்பதைச் செயல்படுத்தவும்.

  7. விருப்பத்தேர்வு: வாடிக்கையாளர் ரசீதுத் தேர்வு பயன்படுத்தப்படும் இடங்களை மாற்ற விரும்பினால், இடங்களைத் திருத்துவதற்கு Edit ஐகானைக் கிளிக் செய்யவும்.

  8. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

வாடிக்கையாளர் அனுபவம்

Customer View செயலி மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது ரசீது விருப்பத்தையும் சந்தைப்படுத்தல் விருப்பத்தேர்வுகளையும் கைமுறையாகத் தேர்ந்தெடுக்கலாம்.

ரசீதுத் தேர்வு

Shopify POS இல் வாடிக்கையாளர் ரசீதுத் தேர்வு செயல்படுத்தப்படும்போது, பேமெண்ட் பெறப்பட்ட பிறகு, வாடிக்கையாளர்கள் ரசீதை எவ்வாறு பெற விரும்புகிறார்கள் என்பதைத் தேர்ந்தெடுப்பதற்காக, Shopify POS சாதனத்தை அவர்களை நோக்கித் திருப்புமாறு பணியாளர்களிடம் கேட்கப்படும். நீங்கள் POS Terminal ஐப் பயன்படுத்தினால், சாதனத்தைத் திருப்ப வேண்டியதில்லை, ஏனெனில் ரசீதுத் தேர்வு POS Terminal இன் வாடிக்கையாளர் டிஸ்ப்ளேயில் நடக்கும். வாடிக்கையாளர் டிஸ்ப்ளே அல்லது வாடிக்கையாளரை நோக்கித் திருப்பக்கூடிய POS சாதனம் உங்களிடம் இல்லை என்றாலும், வாடிக்கையாளர் ரசீதுத் தேர்வை நீங்கள் பயன்படுத்தலாம், ஆனால் உங்கள் வாடிக்கையாளருக்கான ரசீது விருப்பத்தை நீங்களே தேர்ந்தெடுக்க வேண்டும்.

செக்அவுட்டைத் தொடங்குவதற்கு முன், ஒரு வாடிக்கையாளரை நீங்கள் ஆர்டரில் சேர்த்தால், பேமெண்ட்டிற்குப் பிறகு சாதனத்தை வாடிக்கையாளரை நோக்கித் திருப்புமாறு உங்களிடம் கேட்கப்படாது. அதற்குப் பதிலாக, வாடிக்கையாளரின் தகவல் முன்பே நிரப்பப்பட்டிருக்கும். அவர்களுக்கான ரசீது முறையை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். வாடிக்கையாளர் பார்க்கும் திரை இணைக்கப்பட்டிருந்தால், வாடிக்கையாளர் தங்கள் ரசீது விருப்பங்களைத் திரையில் தேர்ந்தெடுக்கலாம். அவர்கள் தேர்வு செய்த மின்னஞ்சல், உரைச்செய்தி அல்லது Shop செயலி போன்ற ரசீது முறை பதிவேட்டில் உள்ள உங்கள் திரையில் புதுப்பிக்கப்படும்.

வாடிக்கையாளருக்கு ஒரு Shop கணக்கு இருந்து, அவர்கள் பயன்படுத்தும் கட்டண முறை அவர்களது கணக்குடன் பொருந்தினால், Shop செயலி ஒரு ரசீது விருப்பமாகக் காண்பிக்கப்படும். Shop அனுபவம் குறித்த கூடுதல் தகவலுக்கு, Shop உதவி மையத்தில் உள்ள Shopக்கு இன்-ஸ்டோர் ரசீதுகளை அனுப்புதல் என்பதைப் பார்க்கவும்.

உங்கள் வாடிக்கையாளர் மின்னஞ்சல், உரைச்செய்தி, அச்சிடு அல்லது ரசீது வேண்டாம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் வாடிக்கையாளர் ஒரு டிஜிட்டல் ரசீது விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால், ஒரு வாடிக்கையாளர் சுயவிவரம் உருவாக்கப்படும்.

மின்னஞ்சல் அல்லது SMS மார்க்கெட்டிங் தேர்வு

வாடிக்கையாளர் ஒரு ரசீது விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, உங்கள் பிசினஸிடமிருந்து மின்னஞ்சல் அல்லது SMS மார்க்கெட்டிங் தகவல்களைப் பெறுவதற்குப் பின்வரும் விருப்பங்கள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன:

  • அவர்கள் மின்னஞ்சல் என்பதைத் தேர்ந்தெடுக்கும்போது பிரத்தியேகச் சலுகைகளை மின்னஞ்சல் மூலம் பெறப் பதிவுசெய்யுங்கள் என்பது தோன்றும். மின்னஞ்சல் பொருத்தம் ஏதும் கண்டறியப்படவில்லை எனில், மின்னஞ்சலை உள்ளிடுக திரை தோன்றும், அதில் வாடிக்கையாளர் தமது மின்னஞ்சல் முகவரியைத் தட்டச்சு செய்ய வேண்டும்.
  • அவர்கள் உரை என்பதைத் தேர்ந்தெடுக்கும்போது பிரத்தியேகச் சலுகைகளை SMS மூலம் பெறப் பதிவுசெய்யுங்கள் என்பது தோன்றும். தொலைபேசி எண் பொருத்தம் ஏதும் கண்டறியப்படவில்லை எனில், தொலைபேசியை உள்ளிடுக திரை தோன்றும், அதில் வாடிக்கையாளர் தமது தொலைபேசி எண்ணைத் தட்டச்சு செய்ய வேண்டும்.
  • அவர்கள் மின்னஞ்சல் மற்றும் உரை ஆகிய இரண்டையும் தேர்ந்தெடுக்கும்போது பிரத்தியேகச் சலுகைகளை மின்னஞ்சல் மற்றும் SMS மூலம் பெறப் பதிவுசெய்யுங்கள் என்பது தோன்றும். மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண் பொருத்தம் ஏதும் கண்டறியப்படவில்லை எனில், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண் உரைப் புலம் தோன்றும், அதில் வாடிக்கையாளர் தமது மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணைத் தட்டச்சு செய்ய வேண்டும்.

Customer View இல் பிரத்தியேகச் சலுகைகளை மின்னஞ்சல் மூலம் பெறப் பதிவுசெய்யுங்கள் மற்றும் பிரத்தியேகச் சலுகைகளை SMS மூலம் பெறப் பதிவுசெய்யுங்கள் ஆகியவை தோன்ற, உங்கள் Shopify நிர்வாகியின் செக்அவுட் அமைப்புகளில் உள்ள சந்தைப்படுத்தல் விருப்பங்கள் பிரிவில் SMS மற்றும் மின்னஞ்சல் சந்தைப்படுத்தலை நீங்கள் செயல்படுத்த வேண்டும்.