Shopify POS செயலியில் உள்ள சிக்கலைத் தீர்த்தல்
Shopify POS-இல் நீங்கள் செயல்திறன் சார்ந்த சிக்கல்களை எதிர்கொண்டால், அவற்றைத் தீர்க்க நீங்கள் எடுக்கக்கூடிய சில பொதுவான படிகள் உள்ளன.
இந்தப் பக்கத்தில்
- Shopify POS iOS மற்றும் Android சாதன இணக்கத்தன்மைத் தேவைகள்
- உங்கள் மென்பொருள் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யவும்
- உங்கள் வலையமைப்பு அமைப்பைச் சரிபார்க்கவும்
- இணைப்பு மற்றும் விற்பனைத் தயார்நிலையைச் சரிபார்க்கவும்
- உங்கள் Shopify நிர்வாகியுடன் Shopify POS-ஐ மீண்டும் ஒத்திசைக்கவும்
- Shopify POS செயலியை வலுக்கட்டாயமாக மூடவும்
- குறிப்பிட்ட அம்சங்களின் சிக்கல்களைத் தீர்க்கவும்
- Shopify POS செயலியிலிருந்து பிழை அறிக்கை அல்லது சிக்கல் கண்டறிதல் அறிக்கையை அனுப்புதல்
Shopify POS iOS மற்றும் Android சாதன இணக்கத்தன்மைத் தேவைகள்
Shopify POS ஆனது iOS மற்றும் Android சாதனங்களில் மட்டுமே கிடைக்கிறது. லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் அல்லது Amazon Fire டேப்லெட்டுகளில் இது கிடைக்காது.
பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சாதனங்களில் Shopify POS வேலை செய்யும்:
| சாதனம் | விளக்கம் |
|---|---|
| iPad | iPadOS 15.1 அல்லது அதற்கும் பிந்தைய பதிப்பில் இயங்கும் 5ஆம் தலைமுறை அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள் |
| iPad Air | iPadOS 15.1 அல்லது அதற்கும் பிந்தைய பதிப்பில் இயங்கும் 2ஆம் தலைமுறை அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள் |
| iPad mini | iPadOS 15.1 அல்லது அதற்கும் பிந்தைய பதிப்பில் இயங்கும் 4ஆம் தலைமுறை அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள் |
| iPad Pro | iPadOS 15.1 அல்லது அதற்கும் பிந்தைய பதிப்பில் இயங்கும் அனைத்து iPad Pro மாடல்களும் |
| iPhone | iOS 15.1 அல்லது அதற்கும் பிந்தைய பதிப்பில் இயங்கும் iPhone 7 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள் |
| POS Go | Shopify வழங்கும் சமீபத்திய மென்பொருள் புதுப்பிப்புகளில் இயங்கும் POS Go |
| Android | Google Play சேவைகள் மற்றும் Google Mobile சேவைகள் செயல்படுத்தப்பட்டு, அதிகாரப்பூர்வ Android பதிப்பு 10.0 அல்லது அதற்கும் பிந்தைய பதிப்பில் இயங்கும் ஃபோன் அல்லது டேப்லெட் |
Shopify POS இனிமேல் iOS 14 அல்லது அதற்கும் முந்தைய பதிப்புகளை ஆதரிக்காது. iOS இன் பழைய பதிப்புகள் மூலம், நீங்கள் செயலியைத் தொடர்ந்து பயன்படுத்தலாம், ஆனால் அதைப் புதுப்பிக்க முடியாது. பிழைத் திருத்தங்கள் மற்றும் புதிய அம்சங்களைப் பயன்படுத்திக்கொள்ள, உங்கள் சாதனத்தை iOS 15.1 அல்லது அதற்கும் பிந்தைய பதிப்பிற்குப் புதுப்பிக்க வேண்டும். அது சாத்தியமில்லை என்றால், iOS 15.1 அல்லது அதற்கும் பிந்தைய பதிப்பில் இயங்கும் வேறொரு சாதனத்தில் Shopify POS-ஐப் பயன்படுத்தத் தொடங்கவும்.
iOS அனுமதித் தேவைகள்
உங்கள் சாதனத்தை iOS 15.1 அல்லது அதற்கும் பிந்தைய பதிப்பிற்குப் புதுப்பித்து, மூன்றாம் தரப்பு Shopify செயலிகளைப் பயன்படுத்தினால், உங்கள் iOS அமைப்புகளில் Cross-Website tracking என்பதை நீங்கள் செயல்படுத்த வேண்டியிருக்கலாம். உங்கள் Shopify நிர்வாகியில் நீங்கள் நிறுவும் மூன்றாம் தரப்பு Shopify செயலிகள், Shopify Inbox, Shopify Point of Sale மற்றும் Shopify செயலியுடன் தொடர்ந்து இணைந்திருக்க Cross-Website tracking அனுமதிக்கிறது.
Cross-Website tracking என்பதைச் செயல்படுத்த, பின்வரும் படிகளை நிறைவுசெய்யவும்:
- உங்கள் iOS சாதனத்தில், Settings செயலியைத் திறக்கவும்.
- Shopify, Shopify POS அல்லது Shopify Inbox என்பதைத் தட்டவும்.
- Allow Cross-Website Tracking என்பதைச் செயல்படுத்தவும்.
உங்கள் மென்பொருள் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யவும்
உங்கள் சாதனம் சமீபத்திய ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் Shopify POS செயலியின் பதிப்புகளில் இயங்குகிறதா என்பதை உறுதிசெய்யவும். புதிய அம்சங்கள், பாதுகாப்பு மேம்படுத்தல்கள் மற்றும் பிழைத் திருத்தங்களைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள, உங்கள் Shopify POS செயலியைச் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கவும்.
Shopify POS செயலியின் ஒவ்வொரு பதிப்பும் வெளியிடப்பட்ட பிறகு சுமார் 180 நாட்களுக்கு ஆதரிக்கப்படும். உங்கள் பதிப்பிற்கான ஆதரவு நிறுத்தப்படுவதற்கு முன்பு, எந்தத் தேதிக்குள் நீங்கள் புதுப்பிக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடும் செய்தி ஒன்று Shopify POS இல் காண்பிக்கப்படும். அந்தத் தேதிக்குள் நீங்கள் புதுப்பிக்காவிட்டால், சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கும் வரை அந்தச் சாதனத்தில் Shopify POS ஐ உங்களால் பயன்படுத்த முடியாது.
உங்களுடைய தற்போதைய செயலிப் பதிப்பு, iOS பதிப்பு மற்றும் ஏதேனும் தேவையான புதுப்பிப்புகள் ஆகியன Shopify POS செயலியில் காட்டப்படும்.
முதலில் உங்கள் சாதனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் புதுப்பித்துவிட்டு, பிறகு POS செயலிக்கான புதுப்பிப்புகளைச் சரிபார்க்கவும். உங்கள் சாதனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் காலாவதியானதாக இருந்தால், சமீபத்திய Shopify POS செயலிப் புதுப்பிப்பைப் பதிவிறக்க முடியாமல் போகலாம்.
படிகள்:
- Shopify POS செயலியிலிருந்து,
என்பதைத் தட்டவும்.
- This device என்பதைத் தட்டவும்.
- ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் புதுப்பிக்க வேண்டியிருந்தால், தொடர்வதற்கு முன்பு உங்கள் சாதனத்தின் அமைப்புகளிலிருந்து அதைப் புதுப்பிக்கவும்.
- App version வரிசையில் புதுப்பிப்பு இருந்தால், Download latest update என்பதைத் தட்டவும்.
Shopify POS ஐ எவ்வாறு புதுப்பிப்பது என்பதைத் தேர்வுசெய்யவும்
நீங்கள் Shopify POS ஐ தானியங்கியாகவோ மேனுவலாகவோ புதுப்பிக்கலாம். புதுப்பிப்புச் செய்தியில் உள்ள தேதிக்கு முன்பு நீங்கள் புதுப்பிக்கும் வரை, இரண்டு விருப்பங்களுமே புதுப்பிப்புத் தேவையைப் பூர்த்தி செய்யும். பின்வரும் விருப்பங்களில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்:
- தானியங்கிப் புதுப்பிப்புகள்: உங்கள் சாதனம் உங்களுக்காகச் செயலிப் புதுப்பிப்புகளைப் பதிவிறக்கி நிறுவும் என்பதால், புதுப்பிக்க வேண்டும் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்கத் தேவையில்லை. ஒரு புதுப்பிப்பு நிறுவப்படும் நேரத்தை உங்களால் தேர்வுசெய்ய முடியாது.
- மேனுவல் புதுப்பிப்புகள்: எப்போது புதுப்பிக்க வேண்டும் என்பதை நீங்களே தேர்வுசெய்வீர்கள். உங்கள் சாதனத்தில் தானியங்கிச் செயலிப் புதுப்பிப்புகளை ஆஃப் செய்துவிட்டு, உங்கள் ஸ்டோர் திறக்கும் முன் அல்லது அது மூடப்பட்ட பின் என்பது போன்று உங்கள் வணிக நேரங்களுக்கு வெளியே Shopify POS ஐப் புதுப்பிக்கவும். புதுப்பிப்புகள் உள்ளதா எனத் தொடர்ந்து சரிபார்த்து, ஏதேனும் புதுப்பிப்புச் செய்தியில் உள்ள தேதிக்கு முன்பாகப் புதுப்பிக்கவும்.
தானியங்கிச் செயலிப் புதுப்பிப்புகள் Shopify POS இல் அல்லாமல் உங்கள் சாதன அமைப்புகளில்தான் ஆன் அல்லது ஆஃப் செய்யப்படுகின்றன. iPhone மற்றும் iPad இல், இந்த அமைப்பு உங்கள் சாதனத்திலுள்ள அனைத்துச் செயலிகளுக்கும் பொருந்தும். அமைப்பை மாற்ற, iPhone அல்லது iPad இல் செயலிகளைப் புதுப்பித்தல் அல்லது Android இல் செயலிகளைப் புதுப்பித்தல் என்பதைப் பார்க்கவும்.
நீங்கள் பல சாதனங்களை நிர்வகித்தால், ஒவ்வொரு சாதனக் குழுவிலும் புதுப்பிப்புகள் எப்போது நிறுவப்பட வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்த மொபைல் சாதன நிர்வாக (MDM) மென்பொருளைப் பயன்படுத்தலாம். MDM மூலம் Shopify POS புதுப்பிப்புகளை நிர்வகித்தல் பற்றி மேலும் அறிக.
POS Go சாதனங்கள் வித்தியாசமாகப் புதுப்பிக்கப்படும். POS Go க்கான தானியங்கிப் புதுப்பிப்புகள் பற்றி மேலும் அறிக.
உங்கள் நெட்வொர்க் அமைவைச் சரிபார்க்கவும்
Shopify POS செயலியைப் பயன்படுத்த உங்கள் நெட்வொர்க் அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
இணைப்பு மற்றும் விற்பனைத் தயார்நிலையைச் சரிபார்க்கவும்
Shopify POS இல் உள்ள இணைப்பு மெனு உங்கள் விற்பனைத் தயார்நிலைத் தகவல்களை ஒரே இடத்தில் கொண்டுவருகிறது, இதனால் உங்கள் சாதனம் விற்பனைக்குத் தயாராக உள்ளதா என்பதை நீங்கள் விரைவாகச் சரிபார்க்க முடியும் மற்றும் ஏதாவது கவனம் செலுத்த வேண்டியிருக்கும்போது அடுத்த கட்டத்தைக் கண்டறியலாம்.
ஐகான் பின்வரும் இணைப்பு நிலைகளைக் காட்டுகிறது:
- உங்கள் இணையமும் வன்பொருளும் இணைக்கப்பட்டுள்ளபோது,
ஐகான் பச்சை நிறத்தில் இருக்கும்.
- வன்பொருள் துண்டிக்கப்பட்டிருக்கும்போது, ஐகான் மஞ்சள் எச்சரிக்கை நிலையைக் காட்டுகிறது.
- இணையம் துண்டிக்கப்பட்டிருக்கும்போது, ஐகான் சிவப்பு அபாய நிலையைக் காட்டுகிறது.
Shopify POS இல் இணைப்புத் திரையைத் திறக்க, ஐகானைத் தட்டவும். iPad இல், ஐகானைத் தட்டினால் முதலில் பாப்-அப் மெனு திறக்கும். முழு இணைப்புத் திரையைத் திறக்க விவரங்களைப் பார் என்பதைத் தட்டவும்.
இணைப்பு மெனுவில், நீங்கள் பின்வரும் இணைப்புகளைப் பார்த்து நிர்வகிக்கலாம்:
- இணையம்: உங்கள் Wi-Fi இணைப்பு மற்றும் சிக்னல் வலிமையைச் சரிபார்த்து, உங்கள் Wi-Fi அமைப்புகளைத் திறக்கவும்.
- Shopify: விற்பனைப் புள்ளி, நிர்வாகி மற்றும் செக்அவுட் போன்ற Shopify சேவைகளின் நிலையைச் சரிபார்க்கவும். நீங்கள் உங்கள் Shopify நிர்வாகியுடன் Shopify POS ஐ மீண்டும் ஒத்திசைக்கவும் முடியும் மற்றும் ஆஃப்லைன் செக்அவுட்டை இயக்கவும் முடியும்.
- இந்தச் சாதனம்: POS சாதன விவரங்களைப் பார்க்கவும், Shopify POS செயலிப் புதுப்பிப்புகளைச் சரிபார்க்கவும், மேலும் கண்டறிதல்களை இயக்கவும்.
- வன்பொருள்: ரசீது அச்சுப்பொறிகள், பார்கோடு ஸ்கேனர்கள், கார்டு ரீடர்கள் போன்ற இணைக்கப்பட்ட வன்பொருளை நிர்வகிக்கவும், புதிய வன்பொருளை அமைக்கவும்.
Shopify POS ஐ உங்கள் Shopify நிர்வாகியுடன் மீண்டும் ஒத்திசைக்கவும்
நீங்கள் செயலியைத் திறக்கும்போது, உங்கள் Shopify நிர்வாகியில் செய்யும் எந்தவொரு மாற்றத்தையும் காட்ட Shopify POS செயலி தானாகவே ஒத்திசைக்க வேண்டும்.
POS இல் காட்டப்படாத ஒரு மாற்றத்தை உங்கள் Shopify நிர்வாகியில் நீங்கள் செய்தால், சிக்கலைச் சரிசெய்ய POS ஐ உங்கள் நிர்வாகியுடன் மேனுவலாக ஒத்திசைக்க முயற்சி செய்யலாம்.
Shopify POS இல், பின்வரும் ஸ்டோர் தரவின் நிலையைப் பார்த்து, அதை உங்கள் Shopify நிர்வாகியுடன் ஒத்திசைக்கலாம்:
- இருப்பிடங்கள்
- தயாரிப்புகள் மற்றும் சரக்கு இருப்பு
- பணியாளர்கள்
- ஸ்டோர் அமைப்புகள்
- பேமெண்ட் அமைப்புகள்
- சாதனம்
படிகள்:
Shopify POS இலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
Shopify என்பதைத் தட்டவும்.
விருப்பத்தேர்வு: ஸ்டோர் தரவு பிரிவில், உங்கள் ஸ்டோர் தரவை ஒத்திசைக்க புதுப்பி என்பதைத் தட்டவும்.
விருப்பத்தேர்வு: தயாரிப்புகள் மற்றும் சரக்கு இருப்பு பிரிவில், உங்கள் தயாரிப்பு மற்றும் சரக்கு இருப்புத் தரவை ஒத்திசைக்க புதுப்பி என்பதைத் தட்டவும்.
தற்காலிகமாகச் செயலியை விட்டு வெளியேறி, மீண்டும் திறப்பதன் மூலமோ அல்லது செயலியை மூடிவிட்டு மீண்டும் திறப்பதன் மூலமோ நீங்கள் செயலியை மீண்டும் ஒத்திசைக்கச் செய்யலாம்.
Shopify POS செயலியை வலுகட்டாயமாக மூடவும்
Shopify POS செயலி மெதுவாக உள்ளதாகவோ, Shopify நிர்வாகியுடன் ஒத்திசைக்கப்படாமல் உள்ளதாகவோ அல்லது சில நேரங்களில் உறைந்துவிடுவதாகவோ நீங்கள் கண்டறிந்தால், செயலியை வலுகட்டாயமாக மூடிவிட்டு, மீண்டும் திறக்க முயலவும்.
படிகள்:
iOS
- உங்கள் சாதன முகப்புத் திரையிலிருந்து App Switcherஎன்பதைத் திறக்கவும்.
- Face ID உள்ள iOS சாதனத்தில்: கீழ்ப்பகுதியிலிருந்து மேல்நோக்கி ஸ்வைப் செய்து, திரையின் மையத்தில் நிறுத்தவும்.
- முகப்புப் பொத்தான் உள்ள iOS சாதனத்தில்: முகப்புப் பொத்தானை இரண்டு முறை அழுத்தவும்.
- Shopify POS செயலியைக் கண்டறியச் சென்று, அந்தச் செயலியை வலுகட்டாயமாக மூட அதன் மீது மேல்நோக்கி ஸ்வைப் செய்யவும்.
- செயலியை மீண்டும் திறக்க Shopify POS என்பதைத் தட்டவும்.
Android
- உங்கள் சாதனத்தைப் பொறுத்து, முகப்புத் திரையிலிருந்து மூன்று செங்குத்துக் கோடுகளைத் தட்டவும் அல்லது உங்கள் திரையின் கீழ்ப்பகுதியிலிருந்து மேல்நோக்கி ஸ்வைப் செய்து, அழுத்திப் பிடித்துப் பிறகு விடவும்.
- Shopify POS செயலியைக் கண்டறியச் சென்று, அந்தச் செயலியை வலுகட்டாயமாக மூட அதன் மீது மேல்நோக்கி ஸ்வைப் செய்யவும்.
- செயலியை மீண்டும் திறக்க Shopify POS என்பதைத் தட்டவும்.
குறிப்பிட்ட அம்சங்களில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கவும்
ஒரு செயலிப் புதுப்பிப்புக்குப் பிறகு ஒரு Shopify POS அம்சம் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை என்றால், அதன் பணிப்பாய்வு மாறியிருக்கக்கூடும். குறிப்பிட்ட அறிகுறிகளுக்கான சிக்கல் தீர்த்தலுக்கு, அந்த அம்சப் பக்கத்தைப் பார்க்கவும்:
- பரிமாற்றங்கள்: பரிமாற்ற விருப்பத்திற்குப் பதிலாக பணத்தைத் திரும்பப்பெறுதல் காட்டப்படுவது போன்ற சிக்கல்களைத் தீர்க்கவும்.
Shopify POS செயலியிலிருந்து பிழை அறிக்கை அல்லது சிக்கல் கண்டறிதல் அறிக்கையை அனுப்புதல்
முந்தைய சிக்கல் தீர்த்தல் படிகளைப் பின்பற்றிய பிறகும் Shopify POS செயலியில் செயல்திறன் சிக்கல்கள் தொடர்ந்தால், செயலியிலிருந்து ஓர் அறிக்கையை அனுப்பவும். பின்னர் தொழில்நுட்ப உதவிக்கு Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
இந்த அறிக்கைகளில் எதை அனுப்பினாலும் சாதனத்தின் பதிவுகள் Shopify-க்கு அனுப்பப்படும். இதனால், நீங்கள் Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளும்போது எங்களால் உங்களுக்கு மேலும் சிறப்பாக உதவ முடியும்.
பிழை அறிக்கையைச் சமர்ப்பித்தல்
Shopify POS செயலியில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலை Shopify-க்குத் தெரிவிக்க, பிழை அறிக்கையைச் சமர்ப்பிக்கவும். பிழை அறிக்கையைச் சமர்ப்பிக்க உங்கள் சாதனத்தில் இணைய இணைப்பு தேவை.
படிகள்:
- Shopify POS செயலியில்
> Support (ஆதரவு) என்பதைத் தட்டவும்.
- Report a bug (பிழை குறித்துப் புகாரளி) என்பதைத் தட்டவும்.
- Report a bug (பிழை குறித்துப் புகாரளி) உரையாடல் பெட்டியில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல் குறித்த விளக்கத்தை உள்ளிடவும்.
- Send (அனுப்பு) என்பதைத் தட்டவும்.
சிக்கல் கண்டறியும் சோதனைகளை இயக்கி அறிக்கையை அனுப்புதல்
செயலி நினைவகம், வட்டுப் பயன்பாடு, பிணையம் மற்றும் டொமைன்கள் போன்றவற்றின் செயல்நிலையை Diagnostics (பிழை கண்டறிதல்) திரை சோதிக்கிறது. Diagnostics (பிழை கண்டறிதல்) திரையிலிருந்து பின்வரும் செயல்களையும் தனித்தனியாகச் செய்யலாம்:
- Run test transaction (சோதனைப் பரிவர்த்தனையை இயக்கு): உங்கள் சாதனத்தில் ஒரு விற்பனையைத் தொடக்கம் முதல் இறுதி வரை நிறைவுசெய்ய முடியுமா என்பதைச் சரிபார்க்க, உங்கள் POS இருப்பிடத்தின் நாணயத்தில் 0.01 மதிப்புள்ள ரொக்க விற்பனையை நிறைவுசெய்யும். இந்த விற்பனை ஒரு சோதனை ஆர்டரை உருவாக்கும். அது உங்கள் Shopify நிர்வாகியின் ஆர்டர்கள் பக்கத்தில் காட்டப்படும். விற்பனைக்குப் பிறகு, செயலி தானாகவே சோதனை ஆர்டருக்கான பணத்தைத் திருப்பியளிக்கும். இருப்பினும், ஆர்டர் ஆர்டர்கள் பக்கத்தில் இருக்கும். எந்தக் கார்டிலிருந்தும் பணம் பிடித்தம் செய்யப்படாது. உங்கள் ஆர்டர்களைப் பெறும் ERP, கணக்கியல் அல்லது நிறைவேற்ற அமைப்புகள் போன்ற செயலிகளும் ஒருங்கிணைப்புகளும் சோதனை ஆர்டரையும் அதற்கான பணத்தைத் திரும்பப்பெறுதல் விவரங்களையும் இறக்குமதி செய்யக்கூடும். சோதனைப் பரிவர்த்தனையை இயக்கும் முன், சோதனை ஆர்டர்களை விலக்க முடியுமா என்பதை உங்கள் செயலி அல்லது ஒருங்கிணைப்பு வழங்குநரிடம் சரிபார்க்கவும்.
- Send report (அறிக்கையை அனுப்பு): பிழை கண்டறிதல் முடிவுகளையும் சாதனத்தின் செயலிப் பதிவுகளையும் Shopify-க்கு அனுப்பும். இதனால், நீங்கள் Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளும்போது உங்களுக்கு மேலும் சிறப்பாக உதவ முடியும். அறிக்கையை அனுப்புவதால் ஆர்டர் உருவாகாது.
படிகள்:
Shopify POS இலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
இந்தச் சாதனம் என்பதைத் தட்டி, பிறகு கண்டறிதல்களைப் பார் என்பதைத் தட்டவும்.
பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- உங்கள் சாதனத்தில் ஒரு விற்பனையை நிறைவுசெய்ய முடியுமா என்பதைச் சரிபார்க்க, Run test transaction (சோதனைப் பரிவர்த்தனையை இயக்கு) என்பதைத் தட்டவும்.
- Shopify ஆதரவுக்குச் சிக்கல் கண்டறிதல் அறிக்கையை அனுப்ப, Send report (அறிக்கையை அனுப்பு) என்பதைத் தட்டவும். செயல்நிலைச் சோதனைகள் முடிந்ததும் Send report (அறிக்கையை அனுப்பு) காட்டப்படும்.