Shopify POS அமைவுச் சிக்கல்களைத் தீர்த்தல்
ஆரம்பகட்ட Shopify POS அமைவின்போது அல்லது புதிய சில்லறை விற்பனை இருப்பிடத்தைத் தொடங்கிய உடனேயே தோன்றும் சிக்கல்களை இந்தப் பக்கம் உள்ளடக்குகிறது. ஏற்கனவே உள்ள அமைப்பில் தொடர்ந்து தோன்றும் செயல்திறன் சிக்கல்களுக்கு, Shopify POS செயலிச் சிக்கல்களைத் தீர்த்தல் என்பதைப் பார்க்கவும்.
இந்தப் பக்கத்தில்
சிக்கல் தீர்ப்பதற்கு முந்தைய பொதுவான சரிபார்த்தல்கள்
குறிப்பிட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கு முன், பின்வரும் அடிப்படைச் சரிபார்த்தல்களை முடிக்கவும்:
- உங்கள் வலையமைப்பு Shopify POS வலையமைப்புத் தேவைகளைப் பூர்த்திசெய்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.
- Shopify POS செயலியும் உங்கள் சாதனத்தின் இயங்குதளமும் புதுப்பிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.
- ஒவ்வொரு சாதனத்திலும் சரியான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
- தயாரிப்பு அட்டவணை ஒத்திசைக்கப்பட்டுவிட்டதா என்பதை உறுதிப்படுத்தவும். Shopify POS இல்,
> Shopify > ஸ்டோர் தரவு என்பதைத் தட்டவும்.
குறிப்பிட்ட சிக்கல்களைத் தீர்த்தல்
ஒரு குறிப்பிட்ட Shopify POS அமைவுச் சிக்கலுக்கான படிப்படியான வழிகாட்டுதலுக்குப் பின்வரும் பிரிவுகள் எதையும் விரிவாக்கவும்.
Shopify POS இல் தயாரிப்புகள் காட்டப்படாத சிக்கலைத் தீர்த்தல்
Shopify POS இல் தயாரிப்புகள் காட்டப்படாமல் இருப்பதற்கு, வழக்கமாகப் பின்வரும் சிக்கல்களில் ஒன்றே காரணமாக இருக்கும்:
- தயாரிப்புகள் விற்பனைப் புள்ளி விற்பனைச் சேனலுக்கு ஒதுக்கப்படவில்லை. உங்கள் Shopify நிர்வாகியில், விற்பனைப் புள்ளி விற்பனைச் சேனலைச் சேர்க்க, தயாரிப்பு கிடைக்கும் தன்மையை அமைக்கவும். ஒரே நேரத்தில் பல தயாரிப்புகளைப் புதுப்பிக்க, மொத்தத் திருத்தியைப் பயன்படுத்தவும்.
- புதிய இடத்திற்குச் சரக்கு இருப்பு ஒதுக்கப்படவில்லை. புதிய இடத்தில் உள்ள ஒவ்வொரு தயாரிப்புக்கும் சரக்கு இருப்பு அளவுகளைச் சரிசெய்யவும்.
- சரக்கு இருப்பைத் தடமறிதல் செயல்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு தயாரிப்பிலும், அளவைத் தடமறி அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்துகொள்ளவும். சரக்கு இருப்பைத் தடமறிதல் அமைப்பைப் பார்க்கவும்.
- அட்டவணை ஒத்திசைவு முடிவடையவில்லை. Shopify POS இல்,
> Shopify > ஸ்டோர் தரவு என்பதைத் தட்டி, ஒத்திசைவின் நிலையை உறுதிப்படுத்தவும். ஒத்திசைவை மேனுவலாகத் தூண்ட, உங்கள் Shopify நிர்வாகியுடன் Shopify POS ஐ மீண்டும் ஒத்திசைப்பதைப் பார்க்கவும். முதல் உள்நுழைவின்போது பெரிய அட்டவணைகளை ஒத்திசைக்க 1 மணிநேரம் வரை ஆகலாம்.
புதிய இடத்தில் உள்ள தவறான சரக்கு எண்ணிக்கைகளின் சிக்கலைத் தீர்த்தல்
Shopify POS இல் உள்ள சரக்கு எண்ணிக்கைகள் ஷெல்ஃபில் உள்ளவற்றுடன் பொருந்தவில்லை எனில், அறிமுகப்படுத்துவதற்கு முன்பு புதிய இடத்திற்கு அளவுகள் ஒதுக்கப்பட்டிருக்காது.
- புதிய இடத்தில் உள்ள ஒவ்வொரு தயாரிப்புக்கும் சரக்கு இருப்பு அளவுகளைச் சரிசெய்யவும்.
- பெரிய அட்டவணைகளுக்கு, சரக்கு இருப்பை மொத்தமாகத் திருத்துவதைப் பார்க்கவும்.
- உங்கள் நிர்வாகியில் அளவுகள் சரியாகவும், ஆனால் Shopify POS இல் தவறாகவும் இருந்தால், உங்கள் Shopify நிர்வாகியுடன் Shopify POS ஐ மீண்டும் ஒத்திசைக்கவும்.
Shopify POS இல் கார்டு பேமெண்ட்டுகள் தோல்வியடையும் சிக்கலைத் தீர்த்தல்
அமைக்கும்போதோ அறிமுகத்திற்குப் பிறகோ கார்டு பேமெண்ட்டுகள் தோல்வியடைந்தால், பின்வருவனவற்றைச் சரிபார்க்கவும்:
- கட்டண முறையோ கட்டண வழங்குநரோ செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். Shopify POS செயலிக்கான கட்டண முறைகளை நிர்வகிப்பதைப் பார்க்கவும்.
- கார்டு ரீடர், சாதனத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். உங்கள் குறிப்பிட்ட ரீடர் மாடலுக்கான கார்டு ரீடர்களைப் பார்க்கவும்.
- தொடக்கம் முதல் முடிவு வரையான பேமெண்ட் ஓட்டத்தைச் சரிபார்க்க, சோதனைப் பரிவர்த்தனையைச் செய்து பார்க்கவும். சோதனைப் பரிவர்த்தனையை இயக்குவதைப் பார்க்கவும்.
- மற்ற பேமெண்ட் பிழைகளுக்கு, Shopify POS பேமெண்ட்டுகளின் சிக்கல்களைத் தீர்ப்பதைப் பார்க்கவும்.
புதிய இடத்தில் தவறான வரி வீதங்கள் பயன்படுத்தப்படும் சிக்கலைத் தீர்த்தல்
புதிய POS இடத்தில் தவறான வரி வீதங்கள் காட்டப்படுவதற்கு, முழுமையடையாத இடத்தின் முகவரியே வழக்கமாகக் காரணமாக இருக்கும். வரி வீதங்கள் முகவரியின் மூலமே தீர்மானிக்கப்படுகின்றன, எனவே அஞ்சல் குறியீடு போன்ற விவரங்கள் விடுபட்டிருந்தால் தவறான வீதம் பயன்படுத்தப்படலாம்.
- அஞ்சல் குறியீடு உட்பட இடத்தின் முகவரி முழுமையாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். இடங்களை அமைப்பதைப் பார்க்கவும்.
- POS-க்குக் குறிப்பான வரி அமைப்புகளை மதிப்பாய்வு செய்யவும். Shopify POS-க்கு வரிகளை அமைப்பதையும் சரிசெய்வதையும் பார்க்கவும்.
POS வன்பொருள் இணைக்கப்படாத சிக்கலைத் தீர்த்தல்
உங்கள் குறிப்பிட்ட வன்பொருள் மாடலுக்கு ஆதரிக்கப்படும் Shopify POS வன்பொருளைப் பார்க்கவும், பிறகு சிக்கல் தீர்க்கும் வழிமுறைகளை மதிப்பாய்வு செய்யவும்.
Shopify POS-இல் பணியாளரால் உள்நுழைய முடியாத சிக்கலைத் தீர்த்தல்
புதிய Shopify POS சாதனத்தில் பணியாளரால் உள்நுழைய முடியவில்லை என்றால், பின்வரும் சரிபார்த்தல்களை முடிக்கவும்:
- உங்கள் Shopify நிர்வாகியில் விற்பனைப் புள்ளி விற்பனைச் சேனல் நிறுவப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். சேனல் நிறுவல் நீக்கப்பட்டிருந்தால், Shopify App Store-இலிருந்து அதை நீங்கள் மீண்டும் நிறுவும் வரை பணியாளர்களால் Shopify POS-இல் உள்நுழைய முடியாது.
- சாதனத்தின் முதல் உள்நுழைவைக் கடையின் உரிமையாளர், நிறுவன உரிமையாளர் அல்லது POS சாதன அமைவுப் பங்கைக் கொண்ட பயனர் முடித்திருப்பதை உறுதிப்படுத்தவும். இந்தத் தொடக்க உள்நுழைவுக்குப் பிறகே, பணியாளர் PIN-கள் வேலை செய்யும்.
- பணியாளர் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஒவ்வொரு பணியாளருக்கும் சரியான விற்பனைப் புள்ளிப் பணியாளர் அனுமதிகள் உள்ளனவா என்பதையும் சரிபார்க்கவும்.
- பணியாளர் சரியான இடத்தில் உள்நுழைகிறார் என்பதை உறுதிப்படுத்தவும்.
Shopify POS ஏற்றப்பட்டும் பேமெண்ட்டுகள் தோல்வியடையும் சிக்கலைத் தீர்த்தல்
Shopify POS ஏற்றப்பட்டும் பேமெண்ட்டுகள் தோல்வியடைந்தால், தேவையான டொமைன்களையோ போர்ட்டுகளையோ ஃபயர்வால் தடுத்திருக்க வாய்ப்புள்ளது. நிர்வகிக்கப்படும் வலையமைப்புகளைக் கொண்ட நிறுவன இடங்களில் இது அடிக்கடி ஏற்படும்.
- உங்கள் ஃபயர்வால் அனுமதிப் பட்டியலில் தேவையான டொமைன்களைச் சேர்ப்பது உட்பட, முழுமையான Shopify POS வலையமைப்பு அமைவையும் முடிக்கவும்.
- சிக்கல் வலையமைப்பு தொடர்பானது என்பதை உறுதிப்படுத்த, செல்லுலார் ஹாட்ஸ்பாட் அல்லது கட்டுப்படுத்தப்படாத வலையமைப்பைப் பயன்படுத்திச் சோதிக்கவும்.
- சிக்கல் தொடர்ந்தால், Shopify POS பேமெண்ட்டுகளின் சிக்கல்களைத் தீர்ப்பதைப் பார்க்கவும்.
உங்கள் Shopify POS அமைவுச் சிக்கல் குறித்து Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்
இந்தப் பக்கத்தில் உள்ள படிகளைப் பயன்படுத்தி அமைவுச் சிக்கலை உங்களால் தீர்க்க முடியவில்லை எனில், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும். நீங்கள் தொடர்புகொள்ளும்போது, ஏற்கனவே எந்தெந்தச் சிக்கல் தீர்க்கும் படிகளை முயன்றுள்ளீர்கள் என்பதையும் நீங்கள் கண்ட பிழைச் செய்திகள் ஏதேனும் இருந்தால் அவற்றையும் பகிரவும்.