உங்கள் Shopify நிர்வாகியில் மொத்தச் செயல்களைப் பயன்படுத்துதல்
பல ஆர்டர்களை நிறைவேற்றுதல், பல கோப்புகளை அழித்தல் அல்லது ஒரே செயலில் பல தயாரிப்புகளை வெளியிடுதல் போன்ற செயல்களை உங்கள் Shopify நிர்வாகியில் மொத்தமாகச் செய்யலாம். ஒரே நேரத்தில் பல உருப்படிகளில் மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய பணிகளை முடிக்க அனுமதிப்பதன் மூலம், மொத்தச் செயல்களானது நேரத்தைச் சேமிக்க உதவும்.
ஆர்டர்கள், தயாரிப்புகள், வாடிக்கையாளர்கள் மற்றும் தள்ளுபடிகள் உட்பட உங்கள் Shopify நிர்வாகியின் பல பக்கங்களில் மொத்தச் செயல்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
ஒரே நேரத்தில் நீங்கள் மொத்தமாக மாற்ற முயலும் தகவல்களின் அளவு அதிகரிக்கும்போது, உங்கள் மொத்த மாற்றங்கள் நிறைவடைவதற்கும் அதிக நேரம் எடுக்கும். உங்களின் தயாரிப்புகள், சரக்கு இருப்பு அல்லது வாடிக்கையாளர்களுக்கான அதிகளவிலான பட்டியல் உருப்படிகளை மொத்தமாகத் திருத்த நீங்கள் CSV கோப்பையும் பயன்படுத்தலாம். உங்கள் Shopify நிர்வாகியில் உங்கள் CSV கோப்பு பதிவேற்றப்பட்ட பிறகு, உங்களின் Shopify ஸ்டோரை அமைப்பதற்குப் பயன்படுத்திய மின்னஞ்சல் கணக்கிற்கு Shopify-இலிருந்து உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் வரும்.
இந்தப் பக்கத்தில்
மொத்தமாகத் திருத்துவதற்கான உருப்படிகளைத் தேர்ந்தெடுக்கவும்
ஆர்டர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் தயாரிப்புகள் உட்பட உங்கள் Shopify நிர்வாகியின் பல பக்கங்களில் மொத்தச் செயல்களைச் செய்வதற்கான உருப்படிகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
டெஸ்க்டாப் சாதனத்தைப் பயன்படுத்தும்போது தள்ளுபடிகள் போன்ற சில பக்கங்கள் மொத்தச் செயல்களை ஆதரிக்கின்றன, ஆனால் மொபைல் சாதனத்தைப் பயன்படுத்தும்போது ஆதரிப்பதில்லை.
படிகள்:
டெஸ்க்டாப்
- உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் போன்று ஆதாரங்களின் அட்டவணையைக் கொண்டுள்ள எந்தவொரு பக்கத்திற்கும் செல்லவும்.
- ஆதார வகைக்குக் கிடைக்கும் விருப்பங்களைப் பொறுத்து, பின்வருவனவற்றுள் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- ஒவ்வொன்றாக உருப்படிகளைத் தேர்ந்தெடுக்க, நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் ஒவ்வொரு உருப்படிக்கும் நேரான தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்யவும்.
- உருப்படிகளின் வரம்பைத் தேர்ந்தெடுக்க, ஓர் உருப்படியைக் கிளிக் செய்து, பின்னர்
Shiftவிசையை அழுத்திப் பிடித்தவாறே மற்றொரு உருப்படியைக் கிளிக் செய்யவும். இவ்வாறு செய்வதால் நீங்கள் கிளிக் செய்த முதல், கடைசி உருப்படிகளும் அவற்றுக்கு இடைப்பட்ட அனைத்து உருப்படிகளும் தேர்ந்தெடுக்கப்படும். - ஒரு பக்கத்திலுள்ள அனைத்து உருப்படிகளையும் தேர்ந்தெடுக்க, உருப்படிப் பட்டியலின் மேற்புறத்திலுள்ள தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் ஸ்டோரிலுள்ள அனைத்து உருப்படிகளையும் தேர்ந்தெடுக்க, உருப்படிப் பட்டியலின் மேற்புறத்திலுள்ள தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்துவிட்டு, அனைத்து 50+ உருப்படிகளையும் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
- 50-க்கும் மேற்பட்ட உருப்படிகளைக் கொண்ட வடிகட்டப்பட்ட காட்சியிலிருந்து அனைத்து உருப்படிகளையும் தேர்ந்தெடுக்க, பின்வரும் படிகளில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- உருப்படிப் பட்டியலின் மேற்புறத்திலுள்ள தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்துவிட்டு, 50 தேர்ந்தெடுக்கப்பட்டன கீழ்தோன்றலில், அனைத்து முடிவுகளையும் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும். இதன்மூலம் உங்களின் தற்போதைய வடிகட்டி நிபந்தனைகளுடன் பொருந்தக்கூடிய அனைத்து உருப்படிகளும் தேர்ந்தெடுக்கப்படும்.
- உருப்படிப் பட்டியலின் மேற்புறத்திலுள்ள தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்துவிட்டு, காட்சியில் அடுத்த பக்கத்திற்குச் சென்று மீண்டும் உருப்படிப் பட்டியலின் மேற்புறத்திலுள்ள தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்யவும். தேவையான அளவு உருப்படிகளைத் தேர்ந்தெடுக்கும் வரை இந்தப் படியைத் திரும்பச் செய்யவும்.
மொபைல்
- Shopify செயலிஎன்பதில், பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- Shopify செயலியில் இருந்து,
ஐகானைத் தட்டவும் .
மெனுவைத் தட்டி, ஆர்டர்களைத் தேர்ந்தெடு என்பதைத் தட்டவும்.
- Shopify செயலியில் இருந்து,
ஐகானைத் தட்டவும் .
மெனுவைத் தட்டி, தயாரிப்புகளைத் தேர்ந்தெடு என்பதைத் தட்டவும்.
ஐகானைத் தட்டி, வாடிக்கையாளர்கள் என்பதைத் தட்டவும்.
மெனுவைத் தட்டி, வாடிக்கையாளர்களைத் தேர்ந்தெடு என்பதைத் தட்டவும்.
- Shopify செயலியில் இருந்து,
- நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் ஒவ்வொரு உருப்படிக்கும் அருகிலுள்ள தேர்வுப்பெட்டியைத் தட்டவும்.
மொபைல் சாதனத்தில் ஒரே நேரத்தில் 25 உருப்படிகள் வரை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
மொத்தச் செயலைத் தேர்ந்தெடுத்தல்
ஒரே நேரத்தில் பல ஆதாரங்களுக்கு நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களே மொத்தச் செயல்களாகும். கிடைக்கக்கூடிய மொத்தச் செயல்கள் நீங்கள் மொத்தச் செயலை மேற்கொள்ளும் ஆதாரத்தின் வகையைப் பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக, உங்கள் வாடிக்கையாளர்கள் பட்டியலுக்கான மொத்தச் செயல் விருப்பங்களில், மொத்தமாகத் திருத்துதல், வாடிக்கையாளர்களை ஒன்றிணைத்தல், டேக்குகளைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல், நிறுவனத்தில் சேர்த்தல், வாடிக்கையாளர்களை நீக்குதல் அல்லது Shopify Flow தானியக்கமாக்கலை மேனுவலாக இயக்குதல் ஆகியவை அடங்கும். எனினும், உங்கள் வாடிக்கையாளர் பிரிவுகள் பட்டியலுக்கான மொத்தச் செயல் விருப்பங்கள், பிரிவுகளை மொத்தமாக நீக்குவதற்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படிகள் பட்டியலின் மேற்புறத்தில் பொதுவான மொத்தச் செயல்கள் தனித்தனிப் பொத்தான்களாகக் காண்பிக்கப்படும். செயலிகளால் வழங்கப்படும் மொத்தச் செயல்கள் உட்பட, பிற மொத்தச் செயல்கள் அனைத்தும் மெனுவில் இருக்கும்.
சில மொத்தச் செயல்கள் டெஸ்க்டாப் மற்றும் மொபைல் சாதனங்கள் என இரண்டிலும் கிடைக்கின்றன, சில மொத்தச் செயல்கள் டெஸ்க்டாப் சாதனங்களில் மட்டுமே கிடைக்கின்றன.
படிகள்:
டெஸ்க்டாப்
- நீங்கள் எந்தெந்தப் பட்டியல் உருப்படிகளில் மொத்தச் செயலை மேற்கொள்ள விரும்புகிறீர்களோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
- பின்வரும் வழிகளில் ஒன்றின் மூலம் மொத்தச் செயலைத் தேர்ந்தெடுக்கவும்:
- மொத்தச் செயலின் பெயரைக் கிளிக் செய்து, அந்தச் செயலை நிறைவு செய்வதற்கான தேவையான படிகளை மேற்கொள்ளவும்.
என்பதைக் கிளிக் செய்து, பின்னர் மொத்தச் செயலின் பெயரைக் கிளிக் செய்துவிட்டு, அந்தச் செயலை நிறைவு செய்வதற்கான தேவையான படிகளை மேற்கொள்ளவும்.
- விருப்பத்தேர்வு: பட்டியல் உருப்படிகளை நீங்கள் நீக்குகிறீர்கள் எனில், நீக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தேர்வை உறுதிப்படுத்தவும்.
மொபைல்
- நீங்கள் எந்தெந்தப் பட்டியல் உருப்படிகளில் மொத்தச் செயலை மேற்கொள்ள விரும்புகிறீர்களோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
- பின்வரும் வழிகளில் ஒன்றின் மூலம் மொத்தச் செயலைத் தேர்ந்தெடுக்கவும்:
- மொத்தச் செயலின் பெயரைத் தட்டி, அந்தச் செயலை நிறைவு செய்வதற்கான தேவையான படிகளை மேற்கொள்ளவும்.
என்பதைத் தட்டி, மொத்தச் செயலின் பெயரைத் தட்டவும், பின்னர் செயலை முடிப்பதற்கான தேவையான படிகளை மேற்கொள்ளவும்.
- விருப்பத்தேர்வு: பட்டியல் உருப்படிகளை நீங்கள் நீக்குகிறீர்கள் எனில், நீக்கு என்பதைத் தட்டுவதன் மூலம் உங்கள் தேர்வை உறுதிப்படுத்தவும்.
உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள மொத்தச் செயல்களுக்கான எடுத்துக்காட்டுகள்
உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள பின்வரும் எடுத்துக்காட்டுப் பக்கங்கள் எதிலும் மொத்தச் செயல்களைப் பயன்படுத்தலாம், மேலும் ஒவ்வொரு பக்கமும் தனக்கெனக் கிடைக்கக்கூடிய செயல்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது. உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள பெரும்பாலான ஆதார அட்டவணைகள் மொத்தச் செயல்களை ஆதரிக்கும் என்பதால், மொத்தச் செயல்கள் இந்தப் பட்டியலில் விவரிக்கப்பட்டுள்ள பக்கங்கள் அல்லது செயல்களுக்கு மட்டுமே வரம்பிற்குட்பட்டவை அல்ல.
சில மொத்தச் செயல்கள் டெஸ்க்டாப் மற்றும் மொபைல் சாதனங்கள் என இரண்டிலும் கிடைக்கின்றன, சில மொத்தச் செயல்கள் டெஸ்க்டாப் சாதனங்களில் மட்டுமே கிடைக்கின்றன.
| நிர்வாகப் பக்கம் | டெஸ்க்டாப்பிற்கான மொத்தச் செயல்கள் | மொபைலுக்கான மொத்தச் செயல்கள் |
|---|---|---|
| ஆர்டர்கள் |
|
|
| வரைவுகள் |
| |
| கைவிடப்பட்ட செக்அவுட்கள் |
| |
| தயாரிப்புகள் |
|
|
| பரிமாற்றங்கள் |
| |
| சரக்கு இருப்பு |
| |
| தொகுப்புகள் |
| |
| பரிசு கார்டுகள் |
|
|
| வாடிக்கையாளர்கள் |
|
|
| தள்ளுபடிகள் |
| |
| கோப்புகள் |
|
'மொத்தத் திருத்தம்' மொத்தச் செயல் இல்லாத ஆதாரங்கள்
மொத்தத் திருத்தும் அம்சம், வலைப்பதிவு இடுகைகள், பக்கங்கள் மற்றும் URL திசைதிருப்பல்களுடன் இணங்காது. உங்கள் வலைப்பதிவு இடுகைகள், பக்கங்கள் அல்லது URL திசைதிருப்பல்களை மொத்தமாகப் புதுப்பிக்க வேண்டுமானால், பின்வரும் மூன்றாம் தரப்புச் செயலிகளைப் பயன்படுத்தப் பரிசீலனை செய்யலாம்:
- வலைப்பதிவு இடுகைகள் மற்றும் பக்கங்களை மொத்தமாகத் திருத்து
- URL திசைதிருப்பல்களை மொத்தமாகத் திருத்து
- URL திசைதிருப்பல்களுக்கான மாற்று மொத்தத் திருத்தி