கோப்புகளைப் பதிவேற்றுதல் மற்றும் நிர்வகித்தல்
கோப்புகள் பிரிவில்தான் படங்கள், வீடியோக்கள், 3D மாடல்கள் மற்றும் PDFகள் மற்றும் CSV கோப்புகள் போன்ற பிற கோப்பு வகைகள் உட்பட உங்கள் ஸ்டோரில் பதிவேற்றப்பட்ட அனைத்துக் கோப்புகளையும் நிர்வகிக்கலாம். உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள கோப்புகள் பிரிவிலிருந்து கோப்புகளைப் பதிவேற்றலாம், நிர்வகிக்கலாம் மற்றும் நீக்கலாம்.
பின்வரும் உதாரணங்களைப் போல், கோப்புத் தேர்வி உங்கள் Shopify நிர்வாகியின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கும்:
- தயாரிப்பில் மீடியாவைச் சேர்த்தல்.
- உங்கள் தீமைத் திருத்துதல்.
- மெட்டாஃபீல்டுகளை உருவாக்குதல்.
- ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் மீடியாவைச் சேர்த்தல்.
கோப்புத் தேர்வியின் மூலம் நீங்கள் பதிவேற்றும் அனைத்துக் கோப்புகளும் உங்கள் Shopify நிர்வாகியின் கோப்புகள் பக்கத்தில் சேர்க்கப்படும்.
இந்தப் பக்கத்தில்
- கோப்புத் தேவைகள்
- கோப்புகள் பக்கத்தில் கோப்பைப் பதிவேற்றுதல்
- கோப்புகளைக் கோப்புறைகளில் ஒழுங்கமைத்து, கோப்புறைகளை நிர்வகியுங்கள்
- கோப்புப் பட்டியலைத் தேடுதல் மற்றும் வடிகட்டுதல்
- கோப்புப் பட்டியலின் வரிசைப்படுத்தும் முறையை மாற்றுதல்
- கோப்பைப் பதிவிறக்குவதற்குக் கிடைக்கச் செய்தல்
- அசல் மீடியா பதிவிறக்கங்கள்
- கோப்புகளைத் திருத்துதல்
- கோப்பை நீக்குதல்
- கோப்புகளை மாற்றுதல்
- ஏற்கெனவே உள்ள கோப்பின் மேல் எழுதாமல் கோப்புகளைத் திருத்துதல்
- திட்டத்தின் அடிப்படையில் கோப்பு சேமிப்பக வரம்புகள்
- திட்டத்தின் அடிப்படையில் வீடியோ மற்றும் 3D மாடல் வரம்புகள்
- கோப்புப் பெயர்களுக்கான சிறந்த நடைமுறைகள்
- படத்தை உருவாக்குதல்
கோப்புத் தேவைகள்
உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள கோப்புகள் பக்கத்தில் கோப்புகளைப் பதிவேற்றலாம். கோப்புகள் பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
படக் கோப்புத் தேவைகள்
| பண்புக்கூறு | தேவை |
|---|---|
| கோப்பு அளவு | அதிகபட்சம் 20 MB (மெகாபைட்) |
| தெளிவுத்திறன் | அதிகபட்சம் 25 MP (மெகாபிக்சல்கள்) |
| தோற்ற விகிதம் | 100:1 முதல் 1:100 வரை |
| கோப்பு வடிவங்கள் | JPEG, PNG, WEBP, HEIC மற்றும் GIF |
| கோப்புப் பெயர்கள் | கோப்புப் பெயர்களில் எழுத்துகள், எண்கள், இடைவெளிகள் மற்றும் குறியீடுகள் இருக்கலாம், ஆனால் . என்ற முற்றுப்புள்ளியுடன் தொடங்கக் கூடாது. |
வீடியோ கோப்பிற்கான தேவைகள்
| பண்புக்கூறு | தேவை |
|---|---|
| கோப்பு அளவு | அதிகபட்சம் 1 GB (ஜிகாபைட்) |
| தெளிவுத்திறன் | அதிகபட்ச ரெசல்யூஷன் UHD |
| வீடியோ நீளம் | வீடியோவின் அதிகபட்ச நீளம் 10 நிமிடங்கள் |
| கோப்பு வடிவங்கள் | MOV, MP4 மற்றும் WEBM |
| குறைந்தபட்ச அகலம் மற்றும் உயரம் | 100 பிக்சல்கள் |
| அதிகபட்ச அகலம் மற்றும் உயரம் | 4096 பிக்சல்கள் |
| அதிகபட்ச ஃப்ரேம் ரேட் | வினாடிக்கு 120 ஃப்ரேம்கள் |
| குறைந்தபட்ச வீடியோ நீளம் | 0.25 வினாடிகள் |
| கோப்புப் பெயர்கள் | கோப்புப் பெயர்களில் எழுத்துகள், எண்கள், இடைவெளிகள் மற்றும் குறியீடுகள் இருக்கலாம், ஆனால் புள்ளி . இல் தொடங்கக்கூடாது. |
பரிந்துரைக்கப்படும் வீடியோ விவரக்குறிப்புகள்
| அம்சம் | பரிந்துரை |
|---|---|
| தோற்ற விகிதம் | ஆஸ்பெக்ட் ரேஷியோ பின்வருவனவற்றில் ஒன்றாக இருக்க வேண்டும்:
|
| பிட்ரேட்கள் | உள்வரும் வீடியோக்கள் செயலாக்கப்பட்டு, சிறந்த தரம் தானாகவே தேர்ந்தெடுக்கப்படும். உள்ளீட்டு மீடியா பகுப்பாய்வு செய்யப்பட்டு, பின்வரும் வரம்புகளில் இருந்து தகுந்த பிட்ரேட் தேர்ந்தெடுக்கப்படும்.
|
| ஃப்ரேம் ரேட் |
|
| தெளிவுத்திறன் |
|
| ஆதரிக்கப்படும் கோடெக்குகள் |
|
| ஆதரிக்கப்படும் வண்ண இடைவெளிகள் |
|
பொதுவான கோப்பிற்கான தேவைகள்
பொதுவான கோப்புகள் HTML-ஐத் தவிர வேறெந்தக் கோப்பாகவும் இருக்கலாம், அவை வாடிக்கையாளர்கள் பதிவிறக்குவதற்காக வழங்கப்படுகின்றன.
| பண்புக்கூறு | தேவை |
|---|---|
| கோப்பு அளவு | அதிகபட்சம் 20 MB |
| கோப்பு வடிவங்கள் | HTML தவிர ஏதேனும் கோப்பு வகை |
| கோப்புப் பெயர்கள் | கோப்புப் பெயர்களில் எழுத்துகள், எண்கள், இடைவெளிகள் மற்றும் குறியீடுகள் இருக்கலாம், ஆனால் . என்ற முற்றுப்புள்ளியுடன் தொடங்கக் கூடாது. |
கோப்பு வடிவத் தேவைகள்
நீங்கள் கட்டணத் திட்டத்தைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், HTML-ஐத் தவிர வேறெந்தக் கோப்பு வடிவத்தையும் பதிவேற்றலாம்.
நீங்கள் சோதனைத் திட்டத்தில் இருந்தால், பின்வரும் கோப்பு வடிவங்களை மட்டுமே பதிவேற்ற முடியும்:
- JS
- CSS
- GIF
- JPEG
- PNG
- JSON
- CSV
- WebP
- HEIC
மேலும் PDF கோப்புகளைப் பதிவேற்றுவதற்கு முன்பு உங்கள் மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்க்க வேண்டும்.
நீங்கள் சோதனைத் திட்டத்தில் இருந்து வேறு கோப்பு வடிவங்களைப் பதிவேற்ற விரும்பினால், உங்கள் திட்டத்தைச் சரிபார்த்து புதுப்பிக்கவும்.
உங்கள் ஸ்டோரின் வெவ்வேறு பகுதிகளான தீம், பக்கங்கள் மற்றும் வலைப்பதிவுகள் ஆகியவை சில குறிப்பிட்ட கோப்பு வடிவங்களை மட்டுமே ஆதரிக்கின்றன. ஆதரிக்கப்படும் கோப்பு வடிவங்கள் குறித்த கூடுதல் தகவலுக்கு, பின்வரும் ஆதாரங்களைப் பார்க்கவும்:
- ரிச் டெக்ஸ்ட் எடிட்டரைப் பயன்படுத்துதல்: பக்கங்கள், வலைப்பதிவு இடுகைகள், தயாரிப்பு மற்றும் சேகரிப்பு விளக்கங்கள், தீம் கூறுகள் ஆகியவற்றுக்கு
- மீடியாவைப் பதிவேற்றுதல்: உங்கள் தீமிலுள்ள படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு
கோப்புகள் பக்கத்தில் ஒரு கோப்பைப் பதிவேற்றவும்
நீங்கள் கோப்புகள் பக்கத்தில் Shopify-க்குப் கோப்புகளைப் பதிவேற்றலாம். பிறகு, பதிவேற்றிய கோப்புகளை உங்கள் Shopify நிர்வாகி முழுவதும் பிராண்ட் படங்கள், தயாரிப்பு மீடியா மற்றும் மெட்டாஆப்ஜெக்ட்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியில், உள்ளடக்கம் > கோப்புகள் என்பதற்குச் செல்லவும்.
கோப்புகளைப் பதிவேற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
பதிவேற்ற 200 கோப்புகள் வரை தேர்ந்தெடுத்து, பின்னர் Open என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியில்,
ஐகானைத் தட்டவும்.
உள்ளடக்கம் மெனுவில்,
ஐகானைத் தட்டி, கோப்புகள் என்பதைத் தட்டவும்.
கோப்புகளைப் பதிவேற்று என்பதைத் தட்டவும்.
நீங்கள் பதிவேற்ற விரும்பும் கோப்புகளைத் தேர்ந்தெடுத்து, பின்னர் Open என்பதைத் தட்டவும்.
பதிவேற்றப்படும் அல்லது செயலாக்கப்படும் நிலையிலேயே இருக்கும் பதிவேற்றத்திற்கான சிக்கலைத் தீர்த்தல்
பதிவேற்றம் முடிந்த பிறகும் மீதமுள்ள 1 பதிவேற்றப்படுகிறது என்பது போன்ற பேனர், உள்ளடக்கம் > கோப்புகள் என்பதில் அப்படியே இருக்கக்கூடும். அந்தப் பேனர் தானாகவே மறைந்துவிடும்.
முதலில் உள்ளடக்கம் > கோப்புகள் என்பதைச் சரிபார்க்கவும். நீங்கள் ஒரு தயாரிப்பில் கோப்பைச் சேர்த்திருந்தால், அந்தத் தயாரிப்பின் மீடியா பிரிவையும் சரிபார்க்கவும். இரண்டில் ஏதேனும் ஓரிடத்தில் உங்கள் கோப்பு இருந்தால், பதிவேற்றம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது என்றும், நீங்கள் எந்தச் செயலும் எடுக்க வேண்டியதில்லை என்றும் அர்த்தம்.
கோப்புகள் அல்லது தயாரிப்பின் மீடியா பிரிவில் உங்கள் கோப்பு இல்லையென்றால், கோப்பின் செயலாக்கம் முடியவில்லை என்று அர்த்தம். பதிவேற்றப்படும்போதோ செயலாக்கப்படும்போதோ சிக்கிக்கொண்ட கோப்புகள் தானாகவே அகற்றப்படும், இதற்கு 2 மணிநேரம் வரை ஆகலாம். பேனர் மறைந்த பிறகு, கோப்பை மீண்டும் பதிவேற்றவும். பெரிய வீடியோவாக இருந்தால், வீடியோவைச் சுருக்கவும் அல்லது மீண்டும் பதிவேற்றும் முன் அதன் தெளிவுத்திறனைக் குறைக்கவும். 2 மணிநேரத்திற்குப் பிறகும் பேனர் காட்டப்பட்டால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
பிற பதிவேற்றப் பிழைகளுக்கு, தோல்வியடைந்த மீடியா பதிவேற்றத்தில் உள்ள சிக்கலைத் தீர்த்தல் என்பதைப் பார்க்கவும்.
கோப்புகளைக் கோப்புறைகளில் ஒழுங்கமைத்து, கோப்புறைகளை நிர்வகியுங்கள்
உங்கள் Shopify நிர்வாகியின் கோப்புகள் பக்கத்தில் கோப்புறைகளை உருவாக்கி, கோப்புகளை அந்தக் கோப்புறைகளுக்கு நகர்த்துவதன் மூலம் கோப்புகளை ஒழுங்கமைக்கலாம். கோப்புகளை இன்னும் நுணுக்கமாக ஒழுங்கமைக்க, பிற கோப்புறைகளுக்குள்ளும் துணைக்கோப்புறைகளை உங்களால் உருவாக்க முடியும்.
கோப்புறைக்குச் செல்ல, கோப்புறையின் பெயரைக் கிளிக் செய்யவும். முந்தைய கோப்புறை அல்லது முதன்மையான கோப்புகள் பக்கத்திற்குத் திரும்பிச் செல்ல, ஐகானைக் கிளிக் செய்யவும் அல்லது பிரெட்கிரம்ப்களில் இருந்து கோப்புறை அல்லது முதன்மையான கோப்புகள் பக்கத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
புதிய கோப்புறையைச் சேர்த்தல்
முதன்மையான கோப்புகள் பக்கத்திலோ மற்றொன்றின் உள்ளே துணைக் கோப்புறையாகவோ புதிய கோப்புறையைச் சேர்க்கலாம். துணைக் கோப்புறையைச் சேர்க்க, முதலில் நீங்கள் துணைக் கோப்புறையைச் சேர்க்க விரும்பும் கோப்புறைக்குச் செல்லவும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், உள்ளடக்கம் > கோப்புகள் என்பதற்குச் செல்லவும்.
புதிய கோப்புறை என்பதைக் கிளிக் செய்யவும்.
ஒரு பெயரை உள்ளிடவும்.
உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
கோப்புகளையும் கோப்புறைகளையும் நகர்த்துதல்
உங்கள் கோப்புகள் பக்கத்தில் உள்ள கோப்புகள், கோப்புறைகள் மற்றும் துணைக் கோப்புறைக் கோப்புகளை நகர்த்துவதன் மூலம் அவற்றை உங்களால் மறுசீரமைக்க முடியும். கோப்புகள் அல்லது கோப்புறைகளை முதன்மையான கோப்புகள் பக்கத்திற்குத் திரும்ப நகர்த்த, கோப்புகள் என்பதை இலக்காகத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் தேர்ந்தெடுத்த கோப்புகளை நகர்த்த, புதிய கோப்புறையையும் உருவாக்கலாம். தற்போதைய கோப்புறைக்குள் இந்தப் புதிய கோப்புறை உருவாக்கப்படும். உங்கள் துணைக் கோப்புறையை உருவாக்கிய பிறகும் அதை உங்களால் நகர்த்த முடியும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், உள்ளடக்கம் > கோப்புகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் நகர்த்த விரும்பும் கோப்புகள், கோப்புறைகள் அல்லது இரண்டையும் தேர்ந்தெடுக்கவும்.
இதற்கு நகர்த்து என்பதைக் கிளிக் செய்யவும்.
நகர்த்து உரையாடலில், ஓர் இலக்கைத் தேர்ந்தெடு புலத்தைக் கிளிக் செய்து, பின்வரும் வழிகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் இலக்கைத் தேர்ந்தெடுக்கவும்:
- ஏற்கனவே உள்ள கோப்புறையைத் தேர்ந்தெடுக்க:
- கோப்புறையைத் தேர்ந்தெடுக்கவும்.
- நகர்த்து என்பதைக் கிளிக் செய்யவும்.
- புதிய கோப்புறையைச் சேர்க்க:
புதிய கோப்புறை என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஒரு பெயரை உள்ளிடவும்.
- நகர்த்தி உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
கோப்புறையை நீக்கு
கோப்புகள் பக்கத்தில் உள்ள எந்தவொரு கோப்புறையையும் நீங்கள் நீக்கலாம். நீங்கள் ஒரு கோப்புறையை நீக்கினால், அக்கோப்புறையில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களையும் நீக்கிவிடுவீர்கள். ஒரு கோப்புறையை நீக்கும் முன், நீக்க விரும்பாத கோப்புகள் அல்லது துணைக் கோப்புறைகளை வேறொரு கோப்புறைக்கோ பிரதான கோப்புகள் பக்கத்திற்கோ நகர்த்துவதை உறுதிசெய்து கொள்ளவும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், உள்ளடக்கம் > கோப்புகள் என்பதற்குச் செல்லவும்.
நீக்க விரும்பும் கோப்புறைக்கு அருகிலுள்ள தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் பல கோப்புறைகளை அல்லது கோப்புகள் மற்றும் கோப்புறைகளின் தொகுப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.
நீக்கு என்பதைச் சொடுக்கி, உறுதிசெய்ய மீண்டும் நீக்கு என்பதைச் சொடுக்கவும்.
கோப்புப் பட்டியலைத் தேடவும், வடிகட்டவும்
உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள உள்ளடக்கம் > கோப்புகள் பக்கத்திலிருந்தோ கோப்புத் தேர்வியிலிருந்தோ, கோப்புப் பட்டியலை வடிகட்டலாம் அல்லது கோப்பைத் தேடலாம்.
நீங்கள் பின்வரும் வழிகளில் உங்கள் கோப்புகளை வடிகட்டலாம்:
- தேடல் பட்டியைப் பயன்படுத்தி, கோப்பின் பெயர்கள் மற்றும் வகைகள் உட்படக் கோப்புப் பண்புக்கூறுகளைத் தேடலாம்.
- கோப்பு அளவு வரம்புத் தேர்வியைப் பயன்படுத்தி அளவின் அடிப்படையில் வடிகட்டலாம்.
- வகை மெனுவைப் பயன்படுத்தி வகை வாரியாக வடிகட்டவும்.
- பயன்படுத்தப்பட்டுள்ள இடங்கள் மெனுவைப் பயன்படுத்திக் கோப்புக் குறிப்பின் அடிப்படையில் வடிகட்டலாம்.
- மாற்று உரை மெனுவைப் பயன்படுத்தி மாற்று உரையின் அடிப்படையில் வடிகட்டலாம்.
அனைத்து வடிப்பான்களும் தேடல் பட்டியில் இன்-லைனில் காட்டப்படும், இதனால் உங்கள் தேடல் முடிவுகளில் தாக்கம் செலுத்தும் அளவுகோல்களின் முழுப் பார்வையையும் நீங்கள் பெறலாம். குறிப்பிட்ட வடிப்பான் அளவுகோல்களுடன் மேம்பட்ட காட்சிகளை உருவாக்க, is/is not மற்றும் or/and போன்ற லாஜிக்கல் ஆப்பரேட்டர்களையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
Shopify நிர்வாகியில் உங்கள் பட்டியற் காட்சிகளைத் தேடுவது, வடிகட்டுவது மற்றும் வரிசைப்படுத்துவது குறித்து மேலும் அறிக.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், உள்ளடக்கம் > கோப்புகள் என்பதற்குச் செல்லவும்.
விருப்பத்தேர்வு: காட்சி மெனுவைத் திறக்க, அனைத்தும் என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் வடிகட்ட விரும்பும் காட்சியைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் வடிகட்டிக்கான ஆப்பரேட்டரையும் மதிப்பையும் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வடிகட்டியைப் பொறுத்துக் கிடைக்கும் மதிப்புகள் மாறுபடும்.
விருப்பத்திற்குரியது: உங்கள் தேடலைச் செம்மைப்படுத்த, வெவ்வேறு வடிப்பான்கள் மற்றும் மதிப்புகளைச் சேர்க்க தொடர்ந்து முக்கியச் சொற்களை உள்ளிடவும்:
- உங்கள் தேடலில்
andஆப்பரேட்டருடன் கூடுதல் வடிப்பானைச் சேர்க்க,என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது ஒரு ஸ்பேஸைச் சேர்த்து, நீங்கள் சேர்க்க விரும்பும் கூடுதல் வடிப்பானின் பெயரை உள்ளிடத் தொடங்கவும்.
- ஒரு வடிப்பானில்
orஆப்பரேட்டருடன் கூடுதல் மதிப்பைச் சேர்க்க, காற்புள்ளியைச் (comma) சேர்த்து, நீங்கள் சேர்க்க விரும்பும் கூடுதல் மதிப்பின் பெயரை உள்ளிடத் தொடங்கவும்.
- உங்கள் தேடலில்
விருப்பத்தேர்வு: வடிகட்டியைத் திருத்த, தேடல் பட்டியில் உள்ள ஏதேனும் வடிகட்டியின் வடிகட்டி டேக்களைக் கிளிக் செய்யவும்.
வடிகட்டிக் காட்சியைச் சேமி
ஒரே தேடல்களைச் செய்ய வேண்டியிருந்தால் அல்லது ஒரே சொற்களைக் கொண்டு தொடர்ந்து வடிகட்ட வேண்டியிருந்தால், வடிப்பான்களைக் காட்சிகளாக நீங்கள் சேமித்து வைக்கலாம்; இதன்மூலம் அவற்றை எளிதாக அணுகலாம். சேமிக்கப்பட்ட காட்சிகள் கோப்புகள் தேடல் பட்டிக்கு அடுத்துள்ள காட்சிகள் பட்டியலில் சேர்க்கப்படும். சேமிக்கப்பட்ட வடிப்பான் அளவுருக்களைப் பயன்படுத்திக் கோப்புகளை வடிகட்ட, நீங்கள் தேர்வியைக் கிளிக் செய்யலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியில், உள்ளடக்கம் > கோப்புகள் என்பதற்குச் செல்லவும்.
தேடல் பட்டியைப் பயன்படுத்தி, பொருத்தமான வடிகட்டிகளையும் தேடல் முக்கியச் சொற்களையும் பயன்படுத்தவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
காட்சியை இவ்வாறு சேமி உரையாடலில், உங்கள் சேமிக்கப்பட்ட வடிகட்டிக் காட்சிக்கான பெயரை உள்ளிடவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியில்,
ஐகானைத் தட்டவும்.
உள்ளடக்கம் மெனுவில்,
ஐகானைத் தட்டி, கோப்புகள் என்பதைத் தட்டவும்.
தேடி, வடிகட்டு விருப்பத்தைப் பயன்படுத்தி, பொருத்தமான வடிகட்டிகளையும் தேடல் முக்கியச் சொற்களையும் பயன்படுத்தவும்.
> புதிய காட்சியாகச் சேமி என்பதைத் தட்டவும்.
காட்சியை இவ்வாறு சேமி உரையாடலில், உங்கள் சேமிக்கப்பட்ட வடிகட்டிக் காட்சிக்கான பெயரை உள்ளிடவும்.
சேமி என்பதைத் தட்டவும்.
உங்கள் கோப்புகள் பட்டியலில் நெடுவரிசைகளைத் திருத்தவும்
நீங்கள் இயல்புநிலை மற்றும் தனிப்பயன் காட்சிகள் இரண்டிலும் நெடுவரிசைகளைத் திருத்தலாம், நீங்கள் செய்யும் மாற்றங்கள் நீங்கள் தற்போது உள்ள காட்சிக்கு மட்டுமே பொருந்தும். மிக இடதுபுறத்தில் உள்ள முக்கிய நெடுவரிசையைத் தவிர்த்து, மற்ற நெடுவரிசைகளை நீங்கள் மறைக்கலாம் அல்லது மறைத்ததை நீக்கலாம், அத்துடன் நெடுவரிசைகளை மறுவரிசைப்படுத்தலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், உள்ளடக்கம் > கோப்புகள் என்பதற்குச் செல்லவும்.
விருப்பத்தேர்வு: காட்சி மெனுவைத் திறக்க, அனைத்தும் என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் எந்தத் தனிப்பயன் காட்சிக்கான நெடுவரிசைகளைத் திருத்த விரும்புகிறீர்களோ அந்தத் தனிப்பயன் காட்சியைத் தேர்ந்தெடுக்கவும்.
காட்சி விருப்பப் பலகத்தைத் திறக்க,
ஐகானைக் கிளிக் செய்யவும்.
நெடுவரிசைகள் பிரிவில், பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்து உங்கள் காட்சியின் நெடுவரிசைகளைத் தனிப்பயனாக்கலாம்:
- ஒரு நெடுவரிசையை மறைக்க,
என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஒரு நெடுவரிசையை மறைத்ததை நீக்க,
என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஒரு நெடுவரிசையை மறுசீரமைக்க,
என்பதைக் கிளிக் செய்து, நெடுவரிசையை மேலே அல்லது கீழே இழுக்கவும்.
- ஒரு நெடுவரிசையை மறைக்க,
விருப்பத்தேர்வு: நெடுவரிசை வரிசையை உங்கள் தனிப்பயன் காட்சிக்கு நிரந்தரமாகப் பயன்படுத்த, சேமி > காட்சியைப் புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
பல கோப்புகளை நீக்க, மொத்தச் செயலைப் பயன்படுத்தவும்
எந்தவொரு கோப்புக் காட்சியிலும், நீங்கள் சில அல்லது அனைத்துக் கோப்புகளையும் தேர்ந்தெடுத்து அவற்றை மொத்தமாக நீக்கலாம். கோப்புகளைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்க நீங்கள் கோப்புக் காட்சிகளுக்கு இடையே மாறலாம், மேலும் நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய தொடர்புடைய கோப்புகளை மட்டும் காட்ட வடிகட்டிகளைப் பயன்படுத்தலாம் அல்லது முக்கியச் சொற்களைப் பயன்படுத்தித் தேடலாம்.
உங்கள் Shopify நிர்வாகியில் மொத்தச் செயல்களைப் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், உள்ளடக்கம் > கோப்புகள் என்பதற்குச் செல்லவும்.
ஒரு கோப்புக் காட்சியைச் சொடுக்கவும்.
கோப்புகளை நீக்கு என்பதைச் சொடுக்கவும்.
உரையாடல் பெட்டியில், நீக்கு என்பதைச் சொடுக்கவும்.
கோப்புப் பட்டியலின் வரிசையாக்கத்தை மாற்றவும்
இயல்பாக, கோப்புகள் அவை பதிவேற்றப்பட்ட தேதியின் அடிப்படையில் புதியதிலிருந்து பழையது வரை பட்டியலிடப்படும்.
உங்கள் கோப்புப் பட்டியலின் வரிசையாக்க அமைப்பை, பின்வரும் ஏதேனும் விருப்பங்களுக்கு நீங்கள் மாற்றலாம்:
| வரிசையாக்க விருப்பம் | மதிப்பு | விளக்கம் |
|---|---|---|
| சேர்க்கப்பட்ட தேதி | முதலில் புதியது அல்லது முதலில் பழையது எனத் தேதியின்படி வரிசையாக்கப்பட்டது. | தயாரிப்புகள் உருவாக்கப்பட்ட வரிசையில் இந்தக் கோப்புகளைக் காண்பிக்கும். இயல்பாக, கோப்புப் பட்டியல் சேர்க்கப்பட்ட தேதி: முதலில் புதியது என்பதன்படி வரிசையாக்கப்படும். |
| கோப்பின் பெயர் | அகரவரிசைப்படி A-Z அல்லது Z-A என வரிசையாக்கப்பட்டது. | இந்த விருப்பம் கோப்பின் பெயர் மூலம் அகரவரிசையில் கோப்புகளைக் காண்பிக்கும். |
| அளவு | கோப்பு அளவின்படி முதலில் சிறியது அல்லது முதலில் பெரியது என வரிசையாக்கப்பட்டது. | இந்த விருப்பம் கோப்பு அளவின் அடிப்படையில் கோப்புகளைக் காண்பிக்கும். |
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியில், உள்ளடக்கம் > கோப்புகள் என்பதற்குச் செல்லவும்.
விருப்பத்திற்குரியது: காட்சி மெனுவைத் திறக்க, அனைத்தும் என்பதைச் சொடுக்கி, வரிசையாக்க அமைப்பை நீங்கள் மதிப்பாய்வு செய்ய விரும்பும் தனிப்பயன் காட்சியைத் தேர்ந்தெடுக்கவும்.
காட்சி விருப்பப் பலகத்தைத் திறக்க,
ஐகானைக் கிளிக் செய்யவும்.
வரிசையாக்கு மெனுவைச் சொடுக்கி, ஒரு வரிசையாக்க அளவுகோல் விருப்பத்தையும், வரிசையாக்க அமைப்பையும் தேர்ந்தெடுக்கவும்.
மொபைல்
Shopify செயலியில்,
ஐகானைத் தட்டவும்.
உள்ளடக்கம் மெனுவில்,
ஐகானைத் தட்டி, கோப்புகள் என்பதைத் தட்டவும்.
விருப்பத்திற்குரியது: காட்சி மெனுவைத் திறக்க, அனைத்தும் என்பதைத் தட்டி, வரிசையாக்க அமைப்பை நீங்கள் மதிப்பாய்வு செய்ய விரும்பும் தனிப்பயன் காட்சியைத் தேர்ந்தெடுக்கவும்.
காட்சி விருப்பப் பலகத்தைத் திறக்க,
ஐகானைத் தட்டவும்.
வரிசையாக்கு மெனுவைத் தட்டி, ஒரு வரிசையாக்க அளவுகோல் விருப்பத்தையும், வரிசையாக்க அமைப்பையும் தேர்ந்தெடுக்கவும்.
கோப்பைப் பதிவிறக்குவதற்குக் கிடைக்கச் செய்யுங்கள்
பார்வையாளர்கள் பதிவிறக்குவதற்கு ஒரு கோப்பை வழங்க, அதைக் கோப்புகள் பக்கத்தில் பதிவேற்றவும், பின்னர் பக்கத்தின் உள்ளடக்கம் அல்லது உங்கள் ஆன்லைன் ஸ்டோர் மெனுக்களில் அதற்கான இணைப்பைச் சேர்க்கவும். கோப்பின் அருகிலுள்ள இணைப்பு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் கோப்பிற்கான இணைப்பை உங்கள் கிளிப்போர்டுக்கு நகலெடுக்கலாம்.
அசல் மீடியா பதிவிறக்கங்கள்
உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் தகுந்த இடத்தில் சிறந்த வடிவமைப்பு காட்டப்படுவதை உறுதிசெய்ய, Shopify Imagery சேவையானது உங்கள் படங்கள் மற்றும் வீடியோக்களை நிர்வகிக்கிறது.
முன்னோட்டம் மற்றும் திருத்து சாளரத்தில் உள்ள பதிவிறக்கப் பொத்தானைப் பயன்படுத்தி, உகப்பாக்கப்படாத அசல் கோப்பை உங்கள் சாதனத்தில் பதிவிறக்கலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியில், உள்ளடக்கம் > கோப்புகள் என்பதற்குச் செல்லவும்.
உங்களுக்கு வேண்டிய கோப்பைக் கிளிக் செய்யவும் அல்லது பட்டியலை வரிசைப்படுத்தவோ ஒரு குறிப்பிட்ட மீடியா கோப்பிற்குச் சுருக்கவோ வடிப்பான்களைப் பயன்படுத்தவும்.
பதிவிறக்கப் பொத்தானைச் சொடுக்கவும். அசல் வடிவமைப்பு உங்கள் சாதனத்தில் சேமிக்கப்படும்.
மொபைல்
Shopify செயலியில்,
ஐகானைத் தட்டவும்.
உள்ளடக்கம் மெனுவில்,
ஐகானைத் தட்டி, கோப்புகள் என்பதைத் தட்டவும்.
உங்களுக்கு வேண்டிய கோப்பைத் தட்டவும் அல்லது பட்டியலை வரிசைப்படுத்தவோ ஒரு குறிப்பிட்ட மீடியா கோப்பிற்குச் சுருக்கவோ வடிப்பான்களைப் பயன்படுத்தவும்.
பதிவிறக்கப் பொத்தானைத் தட்டவும். அசல் வடிவமைப்பு உங்கள் சாதனத்தில் சேமிக்கப்படும்.
கோப்புகளைத் திருத்துதல்
கோப்புகள் பக்கத்திலிருந்து கோப்பின் சிறுபடத்தைச் சொடுக்குவதன் மூலம் கோப்புகளை நீங்கள் முன்னோட்டம் பார்க்கலாம் மற்றும் திருத்தலாம். கோப்புகள் பக்கத்தில் நீங்கள் செய்யும் திருத்தங்கள் உங்கள் ஸ்டோரில் கோப்பு பயன்படுத்தப்படும் அனைத்து இடங்களுக்கும் பொருந்தும்.
உங்கள் கோப்புகளை எவ்வாறு திருத்துவது என்பது குறித்து மேலும் அறியப் பின்வரும் அட்டவணையை மதிப்பாய்வு செய்யவும்:
| செயல் | விளக்கம் |
|---|---|
| கோப்பை மறுபெயரிடுக | உங்கள் கோப்பின் URL ஹேண்டிலை மாற்றுவதன் மூலம் உங்கள் கோப்பின் பெயரைப் புதுப்பிக்கவும். உங்கள் கோப்பின் URL-ஐ மாற்றினால், அக்கோப்பிற்கான முந்தைய URL இனி செயல்படாது. |
| கோப்பை மாற்றவும் | ஏற்கனவே உள்ள கோப்பை புதிய கோப்பைக் கொண்டு மாற்றவும், மேலும் அதே கோப்புப் பெயரையும் URL ஹேண்டிலையும் வைத்திருக்கவும். நீங்கள் ஒரு கோப்பை அதே கோப்பு வடிவமைப்புடன் மட்டுமே மாற்ற முடியும், எடுத்துக்காட்டாக ஒரு JPEG கோப்பை மற்றொரு JPEG கோப்பைக் கொண்டு மாற்றுவது. |
| மாற்று உரையைச் சேர்க்கவும் | பார்வைக்குறைபாடு உள்ளவர்களுக்காக அல்லது குறைந்த அலைவரிசை இணைப்பைக் கொண்டவர்களுக்காகப் படம் அல்லது வீடியோவின் சுருக்கமான விளக்கத்தைச் சேர்க்கவும். |
| படத்தில் ஒரு குவியப் புள்ளியைச் சேர்க்கவும் | தீம்கள் படத்தைக் கூடுதல் துல்லியமாகச் செதுக்க உதவப் படத்தின் மிக முக்கியமான பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். |
| வீடியோ கவர் படத்தைப் புதுப்பிக்கவும் | உங்கள் வீடியோவின் முன்னோட்டப் படமாகச் செயல்படும் வீடியோ கவர் படத்தைப் புதுப்பிக்கவும். |
மீடியா எடிட்டர் மற்றும் AI-ஆல் இயக்கப்படும் மீடியா உருவாக்கத்தைப் பயன்படுத்தியும் நீங்கள் மீடியா கோப்புகளைத் திருத்தலாம்.
பிற வகையான திருத்தங்களைச் செய்ய, கோப்பைப் பதிவிறக்கி, உங்களுக்கு விருப்பமான எடிட்டிங் மென்பொருளில் திருத்தங்களைச் செய்து, பின்னர் அதை மீண்டும் கோப்புகள் பக்கத்தில் பதிவேற்றவும்.
கோப்பை நீக்கவும்
கோப்புகள் பக்கத்திலிருந்து ஒன்று அல்லது பல கோப்புகளை நீங்கள் நீக்கலாம். மொத்தச் செயல்கள் குறித்து மேலும் அறிக.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியில், உள்ளடக்கம் > கோப்புகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் நீக்க விரும்பும் கோப்பின் அருகிலுள்ள தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் பல கோப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
நீக்கு என்பதைச் சொடுக்கி, உறுதிசெய்ய மீண்டும் நீக்கு என்பதைச் சொடுக்கவும்.
மொபைல்
Shopify செயலியில்,
ஐகானைத் தட்டவும்.
உள்ளடக்கம் மெனுவில்,
ஐகானைத் தட்டி, கோப்புகள் என்பதைத் தட்டவும்.
நீங்கள் நீக்க விரும்பும் கோப்பின் அருகிலுள்ள தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் பல கோப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
நீக்கு என்பதைத் தட்டி, உறுதிசெய்ய மீண்டும் நீக்கு என்பதைத் தட்டவும்.
கோப்புகளை மாற்றவும்
கோப்புகள் பக்கத்திலிருந்து ஒரு கோப்பை நீங்கள் மாற்றலாம். மொத்தச் செயலாக நீங்கள் கோப்புகளை மாற்ற முடியாது.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், உள்ளடக்கம் > கோப்புகள் என்பதற்குச் செல்லவும்.
கோப்பின் பெயருக்கு அடுத்துள்ள மாற்று ஐகானைச் சொடுக்கவும்.
நீங்கள் பதிவேற்ற விரும்பும் கோப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
ஏற்கனவே உள்ள கோப்பை மேலெழுதாமல் கோப்புகளைத் திருத்துதல்
கோப்புத் திருத்தியில், படத்தின் பின்புலத்தை மாற்றுவது போன்ற மாற்றங்களை ஒரு படத்தில் செய்ய முடியும், இதனால் மூலப் படம் பாதிக்கப்படலாம். ஏற்கனவே உள்ள கோப்பை மேலெழுதாமல் மாற்றங்களைச் செய்ய, அவற்றைப் புதியதாகச் சேமிக்கவும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், உள்ளடக்கம் > கோப்புகள் என்பதற்குச் செல்லவும்.
கோப்புத் திருத்தியைத் திறக்க, ஒரு மீடியா கோப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
கோப்புத் திருத்தங்களைச் செய்யவும்.
சேமி என்பதற்கான கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, புதியதாகச் சேமி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
புதியதாகச் சேமிக்கும்போது, புதிய கோப்பு உங்கள் ஸ்டோரின் கோப்பு முறைமையில் சேமிக்கப்படும், மேலும் மூலப் படம் அதன் அசல் நிலையிலேயே பாதுகாக்கப்படும்.
திட்டம் வாரியாகக் கோப்புச் சேமிப்பக வரம்புகள்
பதிவேற்றிய கோப்புகளுக்குக் கிடைக்கும் சேமிப்பகத்தின் அளவு, உங்கள் Shopify சந்தாத் திட்டத்தைப் பொறுத்து மாறுபடும்.
கோப்புச் சேமிப்பக வரம்புகள் குறித்து மேலும் அறிய, பின்வரும் அட்டவணையைப் பார்க்கவும்.
| திட்டம் | ஒவ்வொரு ஸ்டோருக்கான வரம்பு |
|---|---|
| Starter | 100 GB |
| Pause and Build | 100 GB |
| Retail | 100 GB |
| Basic மற்றும் Shopify பார்ட்னர் டெவலப்மெண்ட் ஸ்டோர்கள் | 100 GB |
| Grow | 300 GB |
| Advanced | 500 GB |
| Plus மற்றும் Shopify பார்ட்னர் Plus சாண்ட்பாக்ஸ் ஸ்டோர்கள் | 1 TB |
| Enterprise | 10 TB |
கட்டணச் சேமிப்பக அதிகரிப்புகள்
உங்கள் நிறுவனத்திற்குக் கூடுதல் கோப்புச் சேமிப்பகத்தை வாங்க விரும்பினால், கூடுதல் சேமிப்பக அதிகரிப்பைக் கோருவதற்கு நிறுவன உரிமையாளர், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளலாம்.
கோரப்பட்ட சேமிப்பக அதிகரிப்புகளானது, ஒரு தயாரிப்பு ஸ்டோரிலும் அதிகபட்சமாக இரண்டு டெவலப்மெண்ட் ஸ்டோர்களிலும் சேர்க்கப்படும். சேர்க்கப்பட்ட மூன்று கடைகளுமே தனித்தனியே அதிகரிப்பைப் பெறும். அந்த அதிகரிப்பு, அவற்றிற்கு இடையில் பிரிக்கப்படாது. கிடைக்கும் அதிகரிப்பு அளவுகளில் மட்டுமே அதிகரிப்புகளைச் சேர்க்க வேண்டும். பகுதி அளவிலான கட்டண அதிகரிப்புகள் கிடைக்காது.
| திட்டம் | விலை அதிகரிப்பு அளவு |
|---|---|
| Plus | 1 TB-க்கு மாதத்திற்கு $100 USD |
| Enterprise | 10 TB-க்கு மாதத்திற்கு $1,000 USD |
திட்டம் வாரியாக வீடியோ மற்றும் 3D மாதிரி வரம்புகள்
நீங்கள் பதிவேற்றக்கூடிய வீடியோக்கள் மற்றும் 3D மாதிரிகளின் அளவு, உங்கள் Shopify சந்தாத் திட்டத்தைப் பொறுத்து மாறுபடும்.
வீடியோ மற்றும் 3D மாதிரி வரம்புகள் குறித்து மேலும் அறிய, பின்வரும் அட்டவணையைப் பார்க்கவும்.
| திட்டம் | ஒவ்வொரு ஸ்டோருக்கான வரம்பு |
|---|---|
| Starter | 250 |
| Pause and Build | 250 |
| Retail | 250 |
| Basic மற்றும் Shopify பார்ட்னர் டெவலப்மெண்ட் ஸ்டோர்கள் | 250 |
| Grow | 1,000 |
| Advanced | 5,000 |
| Plus மற்றும் Shopify பார்ட்னர் Plus சாண்ட்பாக்ஸ் ஸ்டோர்கள் | 50,000 |
| Enterprise | 100,000 |
திட்டம் வாரியாக வீடியோ சேமிப்பக வரம்புகள்
பதிவேற்றிய வீடியோக்களுக்குக் கிடைக்கும் சேமிப்பகத்தின் அளவு, உங்கள் Shopify சந்தாத் திட்டத்தைப் பொறுத்து மாறுபடும்.
வீடியோ சேமிப்பக வரம்புகள் குறித்து மேலும் அறிய, பின்வரும் அட்டவணையைப் பார்க்கவும்.
| திட்டம் | ஒவ்வொரு ஸ்டோருக்கான வரம்பு |
|---|---|
| Starter | 50 GB |
| Pause and Build | 50 GB |
| Retail | 50 GB |
| Basic மற்றும் Shopify பார்ட்னர் டெவலப்மெண்ட் ஸ்டோர்கள் | 50 GB |
| Shopify பார்ட்னர் Plus சாண்ட்பாக்ஸ் ஸ்டோர்கள் | 60 GB |
| Grow | 500 GB |
| Advanced | 500 GB |
| Plus | 2 TB |
| Enterprise | 10 TB |
கோப்புப் பெயர்களுக்கான சிறந்த நடைமுறைகள்
நீங்கள் படக் கோப்பைப் பதிவேற்றும்போது, கோப்புப் பெயருடன் தனித்துவமான அடையாளங்காட்டி சேர்க்கப்படலாம். இது பின்வரும் சூழ்நிலைகளில் நிகழக்கூடும்:
- உங்கள் ஸ்டோரில் இதே பெயரைக் கொண்ட கோப்பு ஏற்கனவே உள்ளது. உள்ளடக்கம் > கோப்புகள் என்பதில் காட்டப்படாத, தயாரிப்புப் பக்கங்களில் நேரடியாகப் பதிவேற்றப்பட்ட கோப்புகளும் இதில் அடங்கும்.
- கோப்புப் பெயரில் சிறப்பு எழுத்துகள் உள்ளன அல்லது Shopify-இன் கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க்குடன் (CDN) முரண்படுகின்ற வடிவமைப்பு உள்ளது.
கோப்புப் பெயர்களில் தனித்துவமான அடையாளங்காட்டிகள் சேர்க்கப்படுவதைத் தடுக்க, பின்வரும் கோப்புப் பெயரிடல் நடைமுறைகளைப் பயன்படுத்தவும்:
- கோப்புப் பெயர் தனித்துவமானதாகவும், உங்கள் ஸ்டோரில் ஏற்கனவே உள்ள எந்தக் கோப்புகளுடனும் பொருந்தாமலும் இருப்பதை உறுதிசெய்யவும்.
- கோப்புப் பெயரில் உள்ள படத்தின் பரிமாணங்களுக்கு முன்னால் உடனடியாக அடிக்கோடுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். எடுத்துக்காட்டாக,
product_image_5x4.jpegஎன்பதற்குப் பதிலாகproduct-image-5x4.jpegஎன்பதைப் பயன்படுத்தவும். - சிறப்பு வடிவமைப்பு இல்லாத விளக்கமான கோப்புப் பெயர்களைப் பயன்படுத்தவும்.
பதிவேற்றிய பிறகு கோப்புப் பெயரை மாற்ற விரும்பினால், URL ஹேண்டிலைத் திருத்துவதன் மூலம் உள்ளடக்கம் > கோப்புகள் பக்கத்திலிருந்து கோப்புகளின் பெயரை மாற்றிக்கொள்ளலாம்.
படத்தை உருவாக்கு
Shopify நிர்வாகி முழுவதுமுள்ள ஒருங்கிணைந்த கோப்புத் தேர்வியில், AI-ஐப் பயன்படுத்தி நீங்கள் நேரடியாகப் படங்களை உருவாக்கலாம். எந்தவொரு வெளிப்புறக் கருவிகளும் இல்லாமல், உங்கள் தயாரிப்புகள், உள்ளடக்கம் மற்றும் மார்க்கெட்டிங் தகவல்களுக்குத் தனிப்பயன் படங்களை உருவாக்க இந்த அம்சம் உங்களை அனுமதிக்கிறது.
நீங்கள் ஒரு படத்தை உருவாக்கும்போது, அது தற்காலிகமாக உருவாக்கப்பட்டு கோப்புத் தேர்வியில் காட்டப்படும். உருவாக்கப்பட்ட படத்தை உங்கள் ஸ்டோரில் சேமிக்க, நீங்கள் வைத்திரு என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். வைத்திரு என்பதைக் கிளிக் செய்து படத்தை நீங்கள் வெளிப்படையாகச் சேமிக்கவில்லை எனில், உருவாக்கப்பட்ட படம் நிராகரிக்கப்படும், மேலும் அது உங்கள் ஸ்டோரில் சேமிக்கப்படாது.