உள்ளடக்கத்திற்கு ரிச் டெக்ஸ்ட் எடிட்டரைப் பயன்படுத்துதல்
உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் காட்டப்படும் உள்ளடக்கத்தை ஃபார்மேட் செய்து, ஸ்டைலிங் செய்வதற்கு, Shopify-இன் ரிச் டெக்ஸ்ட் எடிட்டரை நீங்கள் பயன்படுத்தலாம்.
இந்தப் பக்கத்தில்
- ரிச் டெக்ஸ்ட் எடிட்டரைப் பயன்படுத்த வேண்டிய இடங்கள்
- ரிச் டெக்ஸ்ட் எடிட்டர் மூலம் HTML உள்ளடக்கத்தைச் சேர்த்தல்
- ரிச் டெக்ஸ்ட் எடிட்டர் மூலம் உரையை ஃபார்மேட் செய்தல்
- ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் உள்ள ஃபார்மேட்டிங்கை அழித்தல்
- ரிச் டெக்ஸ்ட் எடிட்டர் மூலம் அட்டவணைகளைச் செருகுதல்
- ரிச் டெக்ஸ்ட் எடிட்டர் மூலம் இணைப்புகளைச் செருகுதல்
- ரிச் டெக்ஸ்ட் எடிட்டர் மூலம் அக மற்றும் புற இணைப்புகளைச் சேர்த்தல்
- பக்க உள்ளடக்கத்தில் உள்ள கோப்பை இணைத்தல்
- ரிச் டெக்ஸ்ட் எடிட்டர் மூலம் படங்களைச் செருகுதல்
- ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் ஒரு படத்தை நகர்த்துதல் மற்றும் அளவை மாற்றுதல்
- ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் ஒரு படத்தைத் திருத்துதல்
- ரிச் டெக்ஸ்ட் எடிட்டர் மூலம் வீடியோக்களைச் செருகுதல்
- ரிச் டெக்ஸ்ட் எடிட்டர் மூலம் ஆடியோ கோப்புகளைச் செருகுதல்
- ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் அகக் கருத்துகளைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்
- ரிச் டெக்ஸ்ட் எடிட்டரைப் புரிந்துகொள்ளுதல்
- ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் சிக்கலைத் தீர்த்தல்
ரிச் டெக்ஸ்ட் எடிட்டரைப் பயன்படுத்த வேண்டிய இடங்கள்
உங்கள் ஸ்டோரில் உள்ள பல்வேறு இடங்களில், உரையைச் சேர்க்க அல்லது திருத்த ரிச் டெக்ஸ்ட் எடிட்டரை நீங்கள் பயன்படுத்தலாம்:
நீங்கள் ஒரு இணக்கமான தீமைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், தீம் எடிட்டரைப் பயன்படுத்தி உங்கள் பக்கங்களில் அல்லது வார்ப்புருக்களில் ரிச் டெக்ஸ்ட் பிரிவுகளை நீங்கள் சேர்க்கலாம்.
ரிச் டெக்ஸ்ட் எடிட்டர் மூலம் HTML உள்ளடக்கத்தைச் சேர்த்தல்
ரிச் டெக்ஸ்ட் எடிட்டர் மூலம் உங்கள் வலைப்பதிவு இடுகைகள், பக்கங்கள், தயாரிப்பு விளக்கங்கள் மற்றும் சேகரிப்பு விளக்கங்களுக்கான HTML உள்ளடக்கத்தை நீங்கள் உள்ளிடலாம்.
ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் உள்ள உள்ளடக்களுக்கான HTML குறியீட்டைப் பார்க்க, பொத்தானைக் கிளிக் செய்யவும்.
HTML பார்வையில், ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் உள்ள உள்ளடக்கத்தில் நீங்கள் பல மாற்றங்களைச் செய்யலாம். HTML ஐப் பயன்படுத்தி நீங்கள் படங்கள், வீடியோக்கள் அல்லது அட்டவணைகளைச் சேர்க்கலாம், மேலும் நீங்கள் தளவமைப்பு மற்றும் உள்ளடக்க ஸ்டைலில் உள்ள பிழைகளைத் திருத்தலாம் அல்லது நேர்த்தியாக்கலாம்.
மீடியா விட்ஜெட்டை உட்பொதித்தல்
நீங்கள் வீடியோ அல்லது இசை விட்ஜெட்டை உட்பொதிக்க விரும்பினால், முதலில் அதை Youtube, Vimeo அல்லது SoundCloud போன்ற சேவையில் ஹோஸ்ட் செய்ய வேண்டும். இந்தச் சேவைகள் ஒரு உட்பொதி குறியீட்டை உருவாக்குகின்றன, அதை நீங்கள் நகலெடுத்து உங்கள் Shopify நிர்வாகி ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் ஒட்டலாம்.
படிகள்:
- நீங்கள் உட்பொதிக்க விரும்பும் மீடியாவிற்கான உட்பொதி குறியீட்டைக் கண்டறியவும்.
- முழு உட்பொதி குறியீட்டையும் கிளிக் செய்து, PC-இல்
ctrl+Aஅல்லது Mac-இல்command+Aஎன்பதை அழுத்துவதன் மூலம் அதைத் தேர்ந்தெடுக்கவும். - PC-இல்
ctrl+Cஅல்லது Mac-இல்command+Cஎன்பதை அழுத்துவதன் மூலம் உட்பொதி குறியீட்டை நகலெடுக்கவும். - உங்கள் Shopify நிர்வாகியில், நீங்கள் திருத்தும் உள்ளடக்கத்திற்கான ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் HTML-ஐக் காட்டு என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- PC-இல்
ctrl+Vஅல்லது Mac-இல்command+Vஎன்பதை அழுத்துவதன் மூலம் உட்பொதி குறியீட்டை ஒட்டவும். - சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
ரிச் டெக்ஸ்ட் எடிட்டர் மூலம் உரையை வடிவமைக்கவும்
வடிவமைப்பு பொத்தான் மூலம், நீங்கள் விரைவாகப் பத்திகள், தலைப்புகள் அல்லது தொகுதி மேற்கோள்களை உருவாக்கலாம். சரியான வடிவமைப்பு மற்றும் தலைப்பு நிலைகளைப் பயன்படுத்துவது, உங்கள் இணையதளத்தின் உள்ளடக்கத்தைப் படிக்க மக்களுக்கும் தேடுபொறிகளுக்கும் உதவுகிறது.
உரைக்கான வடிவமைப்பைத் தேர்வுசெய்ய, உரையை ஹைலைட் செய்து, பின்னர் வடிவமைப்பு பொத்தானைக் கிளிக் செய்யவும்.
வடிவமைப்பு விருப்பங்கள்
பத்தி
உங்கள் இணையதளத்தின் பெரும்பாலான உரை உள்ளடக்கம் பத்தி உரையாகும். பத்தி உரை வழக்கமாக 10–12 pt எழுத்துரு அளவைக் கொண்டிருக்கும், ஆனால் சில தீம்கள் வெவ்வேறு எழுத்துரு அளவுகளைப் பயன்படுத்துகின்றன.
தலைப்பு (1-6)
உள்ளடக்கத்தை வடிவமைக்கத் தலைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. 6 தலைப்பு நிலைகள் உள்ளன. தலைப்பு 1 மிக முக்கியமான நிலை மற்றும் தலைப்பு 6 குறைவான முக்கியத்துவம் வாய்ந்தது.
தொகுதி மேற்கோள்
மேற்கோள் அல்லது புத்தகம் அல்லது இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி போன்ற வேறொருவருக்குச் சொந்தமான உரையைக் காட்டத் தொகுதி மேற்கோள் பயன்படுத்தப்படுகிறது.
தடிமனான உரை
உரையைத் தடிமனாக்க, உரையை ஹைலைட் செய்து தடிமன் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
உரையைச் சாய்வாக்கு
உரையைச் சாய்வாக்க, உரையை ஹைலைட் செய்து சாய்வு பொத்தானைக் கிளிக் செய்யவும்.
உரைக்கு அடிக்கோடிடு
உரைக்கு அடிக்கோடிட, உரையை ஹைலைட் செய்து அடிக்கோடு பொத்தானைக் கிளிக் செய்யவும்.
புல்லட் செய்யப்பட்ட பட்டியலை உருவாக்கு
புல்லட் செய்யப்பட்ட பட்டியலை உருவாக்க, புல்லட் செய்யப்பட்ட பட்டியல் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
முதல் புல்லட் செய்யப்பட்ட பட்டியல் உருப்படியை உருவாக்க நீங்கள் தட்டச்சு செய்யலாம். புதிய பட்டியல் உருப்படிகளை உருவாக்க, enter அல்லது return விசையை அழுத்தவும். பட்டியலை முடிக்க, enter அல்லது return விசையை இருமுறை அழுத்தவும்.
எண்ணிடப்பட்ட பட்டியலை உருவாக்கு
எண்ணிடப்பட்ட பட்டியலை உருவாக்க, எண்ணிடப்பட்ட பட்டியல் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
முதல் எண்ணிடப்பட்ட பட்டியல் உருப்படிகளை உருவாக்க நீங்கள் தட்டச்சு செய்யலாம். புதிய பட்டியல் உருப்படிகளை உருவாக்க, enter அல்லது return விசையை அழுத்தவும். பட்டியலை முடிக்க, enter அல்லது return விசையை இருமுறை அழுத்தவும்.
உரையை உள்தள்ளு
ஒரு பத்தியை உள்தள்ளுவது அதன் இடது பக்கத்தில் விளிம்பை அளிக்கிறது. ஒரு பத்தியை உள்தள்ள, உள்தள்ளு பொத்தானைக் கிளிக் செய்யவும்.
உரை உள்தள்ளலை நீக்கு
ஒரு பத்தியின் உள்தள்ளலை நீக்குவது, அது கொண்டுள்ள ஏதேனும் உள்தள்ளப்பட்ட விளிம்புகளை அகற்றும். ஒரு பத்தியின் உள்தள்ளலை நீக்க, உள்தள்ளலை நீக்கு பொத்தானைக் கிளிக் செய்யவும்.
உரையைச் சீரமை
உரையைச் சீரமைக்க, உரையைத் தேர்ந்தெடுத்து, சீரமைப்பு பொத்தானைக் கிளிக் செய்து, இடது சீரமைப்பு, மையச் சீரமைப்பு அல்லது வலது சீரமைப்பு என்பதைத் தேர்வுசெய்யவும்.
உரை நிறத்தை மாற்று
- உரையை ஹைலைட் செய்து நிறம் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- ஹைலைட் செய்யப்பட்ட உரையை அந்த நிறத்திற்கு மாற்ற, ஒரு நிறத்தைக் கிளிக் செய்யவும் அல்லது ஹெக்ஸ் குறியீட்டை உள்ளிடவும்.
உரையின் பின்னணி நிறத்தை மாற்று
- உரையை ஹைலைட் செய்து நிறம் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- பின்னணி தாவலைக் கிளிக் செய்யவும்.
- ஹைலைட் செய்யப்பட்ட உரையின் பின்னணியை அந்த நிறத்திற்கு மாற்ற, ஒரு நிறத்தைக் கிளிக் செய்யவும் அல்லது ஹெக்ஸ் குறியீட்டை உள்ளிடவும்.
ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் வடிவமைப்பை அழி
உரை அல்லது படங்களிலிருந்து வடிவமைப்பை அகற்ற, உள்ளடக்கத்தை ஹைலைட் செய்து, பின்னர் வடிவமைப்பை அழி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
ரிச் டெக்ஸ்ட் எடிட்டர் மூலம் அட்டவணைகளைச் செருகு
ரிச் டெக்ஸ்ட் எடிட்டர் மூலம் உங்கள் வலைப்பதிவு இடுகைகள், பக்கங்கள், தயாரிப்பு விளக்கங்கள் மற்றும் சேகரிப்பு விளக்கங்களில் அட்டவணைகளைச் செருகலாம். நீங்கள் ஒரு அட்டவணையை உருவாக்கிய பிறகு அதில் உரை, படங்கள் அல்லது வீடியோக்களைக் கூட வைக்கலாம்.
படிகள்:
- ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில், அட்டவணையைச் செருகு பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- அட்டவணையைச் செருக, அட்டவணையைச் செருகு என்பதைக் கிளிக் செய்யவும். இது ஒரு வரிசை மற்றும் ஒரு நெடுவரிசையுடன் ஒரு அட்டவணையை உருவாக்குகிறது.
நீங்கள் ஒரு அட்டவணையை உருவாக்கிய பிறகு, அட்டவணையின் வரிசைகள் மற்றும் நெடுவரிசைகளை மாற்ற, மீண்டும் அட்டவணையைச் செருகு பொத்தானைக் கிளிக் செய்யவும்:
- மேலே வரிசையைச் செருகு: உங்கள் கர்சரை ஒரு வரிசையில் வைத்து, மேலே புதிய வரிசையைச் செருக இந்தப் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- கீழே வரிசையைச் செருகு: உங்கள் கர்சரை ஒரு வரிசையில் வைத்து, கீழே புதிய வரிசையைச் செருக இந்தப் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- முன்பு நெடுவரிசையைச் செருகு: உங்கள் கர்சரை ஒரு நெடுவரிசையில் வைத்து, அந்த நெடுவரிசைக்கு முன்பு புதிய நெடுவரிசையைச் செருக இந்தப் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- பின்பு நெடுவரிசையைச் செருகு: உங்கள் கர்சரை ஒரு நெடுவரிசையில் வைத்து, அந்த நெடுவரிசைக்குப் பின்பு புதிய நெடுவரிசையைச் செருக இந்தப் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- வரிசையை நீக்கு: நீங்கள் நீக்க விரும்பும் வரிசையில் உங்கள் கர்சரை வைத்து, பின்னர் இந்தப் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- நெடுவரிசையை நீக்கு: நீங்கள் நீக்க விரும்பும் நெடுவரிசையில் உங்கள் கர்சரை வைத்து, பின்னர் இந்தப் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- அட்டவணையை நீக்கு: உங்கள் கர்சரை அட்டவணையில் எங்கு வேண்டுமானாலும் வைத்து, பின்னர் முழு அட்டவணையையும் நீக்க இந்தப் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
ரிச் டெக்ஸ்ட் எடிட்டர் மூலம் இணைப்புகளைச் செருகு
ரிச் டெக்ஸ்ட் எடிட்டர் மூலம் வலைப்பதிவு இடுகைகள், பக்கங்கள், தயாரிப்பு விளக்கங்கள் மற்றும் சேகரிப்பு விளக்கங்களில் இணைப்புகளை (ஹைப்பர்லிங்க்கள்) செருகலாம். உங்கள் Shopify ஆன்லைன் ஸ்டோரில் உள்ள பக்கங்களுக்கும் பிற இணையதளங்களுக்கும் வாடிக்கையாளர்களை வழிநடத்தும் இணைப்புகளை நீங்கள் சேர்க்கலாம். வாடிக்கையாளர்கள் உங்களைத் தொடர்புகொள்ள உதவ, மின்னஞ்சல் செய்திகளைத் திறக்கும் அல்லது தொலைபேசி அழைப்புகளைச் செய்யும் இணைப்புகளையும் நீங்கள் சேர்க்கலாம்.
படிகள்:
- நீங்கள் இணைப்பாக மாற்ற விரும்பும் உரை அல்லது படத்தை ஹைலைட் செய்யவும்.
- இணைப்பைச் செருகு என்பதைக் கிளிக் செய்யவும்.
- இணைப்பிற்கான இலக்கு URL-ஐ இந்த இதற்கு இணை புலத்தில் உள்ளிடவும்:
- உங்கள் Shopify ஸ்டோருக்கு வெளியே உள்ள வெளிப்புற இணையதளத்தை இணைக்க,
https://என்பதைத் தொடர்ந்து இணைய முகவரியை உள்ளிடவும், எடுத்துக்காட்டாகhttps://www.example.com. - உங்கள் Shopify ஆன்லைன் ஸ்டோருக்குள் உள்ள ஒரு பக்கத்தை இணைக்க, சிறிய URL-ஐ உள்ளிடவும், எடுத்துக்காட்டாக
/collections/summer-collection. - மின்னஞ்சல் செய்தியைத் திறக்கும் இணைப்பை உருவாக்க,
mailto:என்பதைத் தொடர்ந்து மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், எடுத்துக்காட்டாகmailto:example@example.com. - தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளும் இணைப்பை உருவாக்க,
tel:என்பதைத் தொடர்ந்து தொலைபேசி எண்ணை உள்ளிடவும், எடுத்துக்காட்டாகtel:+0-123-456-7890.
- உங்கள் Shopify ஸ்டோருக்கு வெளியே உள்ள வெளிப்புற இணையதளத்தை இணைக்க,
- இணைப்பின் தலைப்பு பெட்டியில் இணைப்பின் சிறு விளக்கத்தை உள்ளிடவும்.
- இணைப்பு எவ்வாறு திறக்கப்படும் என்பதை இந்த இந்த இணைப்பை இங்கு திற மெனு மூலம் தேர்ந்தெடுக்கவும்:
- அதே சாளரம்: பயனரின் தற்போதைய உலாவித் தாவல் அல்லது சாளரத்தில் இணைப்பு திறக்கப்படும்.
- புதிய சாளரம்: புதிய உலாவித் தாவல் அல்லது சாளரத்தில் இணைப்பு திறக்கப்படும்.
- நீங்கள் தனிப்படுத்தியுள்ள உரையை இணைப்பாக மாற்ற, இணைப்பைச் செருகு என்பதைக் கிளிக் செய்யவும்.
ரிச் டெக்ஸ்ட் எடிட்டரைப் பயன்படுத்தி உள் மற்றும் வெளிப்புற இணைப்புகளைச் சேர்த்தல்
உங்கள் Shopify ஸ்டோருக்குள் உள்ள பக்கங்களுக்கான இணைப்புகள், உள் இணைப்புகள் என அழைக்கப்படுகின்றன. உள் இணைப்புகளை உருவாக்க, நீங்கள் சிறிய URL-களைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, /collections எனும் URL உங்கள் ஸ்டோரின் சேகரிப்புப் பக்கத்தைக் குறிக்கும்.
உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் சேகரிப்பு அல்லது தயாரிப்புப் பக்கம் போன்ற குறிப்பிட்ட பக்கத்தை இணைக்க, /page-type/page-handle எனும் URL வடிவமைப்பைப் பயன்படுத்தவும். எடுத்துக்காட்டாக, நீங்கள் உருவாக்கிய கோடைகாலச் சேகரிப்பு என்பதை இணைக்க /collections/summer-collection என்ற URL-ஐப் பயன்படுத்தவும்.
உங்கள் Shopify ஸ்டோருக்கு வெளியே உள்ள இணையதளங்களுக்கான இணைப்புகள், வெளிப்புற இணைப்புகள் என அழைக்கப்படுகின்றன. வெளிப்புற இணைப்புகளை முழுமையாக உள்ளிட வேண்டும், மேலும் அவை http:// எனத் தொடங்க வேண்டும்.
பக்க உள்ளடக்கத்தில் ஒரு கோப்பிற்கான இணைப்பைச் சேர்த்தல்
நீங்கள் கோப்பைப் பதிவேற்றியதும், தயாரிப்பு அல்லது சேகரிப்பு விளக்கம், இணையப்பக்கம் அல்லது வலைப்பதிவு இடுகை ஆகியவற்றிலிருந்து அதைப் பதிவிறக்குவதற்கு வசதியாக, ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் உள்ள உள்ளடக்கத்தில் அதனை இணைக்கலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > கோப்புகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் இணைக்க விரும்பும் கோப்பிற்கான URL-ஐ நகலெடுக்கவும்.
உங்கள் Shopify நிர்வாகியில், கோப்பைச் சேர்க்க விரும்பும் தயாரிப்பு, சேகரிப்பு, இணையப்பக்கம் அல்லது வலைப்பதிவு இடுகையைக் கிளிக் செய்யவும்.
ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில், இணைப்பு உரையை உள்ளிடவும் அல்லது தேர்ந்தெடுக்கவும்.
இணைப்பு உரையைத் தேர்ந்தெடுக்கவும்.
இணைப்பைச் செருகு என்பதைக் கிளிக் செய்யவும்
இதற்கு இணை புலத்தில், நீங்கள் இணைக்க விரும்பும் கோப்பிற்கான URL-ஐ ஒட்டவும்.
இணைப்பைச் செருகு என்பதைக் கிளிக் செய்யவும். ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில், இணைக்கப்பட்ட உரை நீல நிறத்திலும் அடிக்கோடிட்டும் காட்டப்படும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
உள்ளடக்கம் மெனுவில்,
ஐகானைத் தட்டி, கோப்புகள் என்பதைத் தட்டவும்.
நீங்கள் இணைக்க விரும்பும் கோப்பிற்கான URL-ஐ நகலெடுக்கவும்.
உங்கள் Shopify நிர்வாகியில், கோப்பைச் சேர்க்க விரும்பும் தயாரிப்பு, சேகரிப்பு, இணையப்பக்கம் அல்லது வலைப்பதிவு இடுகையைத் தட்டவும்.
ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில், இணைப்பு உரையை உள்ளிடவும் அல்லது தேர்ந்தெடுக்கவும்.
இணைப்பு உரையைத் தேர்ந்தெடுக்கவும்.
இணைப்பைச் செருகு என்பதைத் தட்டவும்
இதற்கு இணை புலத்தில், நீங்கள் இணைக்க விரும்பும் கோப்பிற்கான URL-ஐ ஒட்டவும்.
இணைப்பைச் செருகு என்பதைத் தட்டவும். ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில், இணைக்கப்பட்ட உரை நீல நிறத்திலும் அடிக்கோடிட்டும் காட்டப்படும்.
ரிச் டெக்ஸ்ட் எடிட்டரைப் பயன்படுத்திப் படங்களைச் செருகுதல்
ரிச் டெக்ஸ்ட் எடிட்டரைப் பயன்படுத்திப் படத்தைச் செருக மூன்று வழிகள் உள்ளன. அவை:
- படங்களைப் பதிவேற்றுதல்
- உங்கள் தயாரிப்புப் படங்களிலிருந்து தேர்ந்தெடுத்தல்
- பொதுவான பட URL-ஐப் பயன்படுத்துதல்.
படங்களைப் பதிவேற்றுதல்
படிகள்:
ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில், படத்தைச் செருகு பொத்தானைக் கிளிக் செய்யவும்.
படத்தைச் செருகு உரையாடலில், பதிவேற்றிய படங்கள் தாவலைக் கிளிக் செய்யவும்.
கோப்பைப் பதிவேற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் கணினியிலிருந்து WebP, HEIC, SVG, GIF, JPEG அல்லது PNG படக் கோப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் பதிவேற்றிய படத்தைத் தேர்ந்தெடுக்க, அதைக் கிளிக் செய்யவும்.
அளவு மெனுவிலிருந்து, படத்தின் காட்சி அளவைத் தேர்ந்தெடுக்கவும். படத்தின் காட்சி அளவை மாற்றாமல் செருக அசல் என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.
ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் படத்தைச் செருக, படத்தைச் செருகு என்பதைக் கிளிக் செய்யவும்.
தயாரிப்புப் படங்களிலிருந்து தேர்ந்தெடுத்தல்
படிகள்:
ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில், படத்தைச் செருகு பொத்தானைக் கிளிக் செய்யவும்.
படத்தைச் செருகு உரையாடலில், தயாரிப்புப் படங்கள் தாவலைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் செருக விரும்பும் படத்தைக் கிளிக் செய்யவும். நீங்கள் செருக விரும்பும் தயாரிப்பு மீடியாவைக் கண்டறிய முடியாவிட்டால், வெவ்வேறு பக்கங்களில் உலாவ அம்புக்குறிப் பொத்தான்களைப் பயன்படுத்தலாம்.
அளவு மெனுவிலிருந்து, படத்தின் காட்சி அளவைத் தேர்ந்தெடுக்கவும். படத்தின் காட்சி அளவை மாற்றாமல் செருக அசல் என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.
- ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் தயாரிப்புப் படத்தைச் செருக, படத்தைச் செருகு என்பதைக் கிளிக் செய்யவும்.
பட URL-ஐப் பயன்படுத்துதல்
பொதுவான URL-ஐப் பயன்படுத்திப் படத்தைச் செருக:
- ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில், படத்தைச் செருகு பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- படத்தைச் செருகு உரையாடலில், URL தாவலைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் படக் கோப்பின் பொதுவில் அணுகக்கூடிய URL-ஐ உள்ளிடவும்.
- ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் படத்தை அதன் அசல் அளவில் செருக படத்தைச் செருகு என்பதைக் கிளிக் செய்யவும்.
ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் உள்ள ஒரு படத்தை நகர்த்துதல் மற்றும் அதன் அளவை மாற்றுதல்
ஒரு தயாரிப்பு அல்லது சேகரிப்பு விளக்கம், இணையப்பக்கம் அல்லது வலைப்பதிவில் ஒரு படத்தைச் சேர்த்த பிறகு, உள்ளடக்கத்தில் உள்ள வேறொரு இடத்திற்கு அதை நீங்கள் நகர்த்தலாம்.
படிகள்:
- நீங்கள் நகர்த்த அல்லது அளவு மாற்ற விரும்பும் படத்தைக் கொண்டுள்ள தயாரிப்பு, சேகரிப்பு, இணையப்பக்கம் அல்லது வலைப்பதிவு இடுகையை உங்கள் Shopify நிர்வாகியில் கிளிக் செய்யவும்.
- ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில், படத்தைக் கிளிக் செய்யவும்.
- பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- படத்தை நகர்த்த, உள்ளடக்கம் புலத்தில் உள்ள மற்றொரு இடத்திற்கு அதைக் கிளிக் செய்து இழுக்கவும்.
- படத்தின் அளவை மாற்ற, அதன் மூலைகளில் ஒன்றைக் கிளிக் செய்து இழுக்கவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் உள்ள ஒரு படத்தைத் திருத்துதல்
ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் உள்ள ஒரு படத்தின் அளவு, உரை மடிப்பு மற்றும் சீரமைப்பு ஆகியவற்றை நீங்கள் மாற்றலாம். பட URL-ஐத் திருத்தவோ அல்லது பட மாற்று உரையைச் சேர்க்கவோ திருத்தவோ முடியும்.
படிகள்:
- படத்தைத் திருத்து உரையாடலைத் திறக்க, ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் உள்ள படத்தை இருமுறை கிளிக் செய்யவும்.
- படத்தைத் திருத்துவதற்கு அளவு மற்றும் சீரமைப்பு விருப்பங்களைப் பயன்படுத்தவும்:
- படத்தின் அளவை மாற்ற, அளவு விருப்பம் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் SEO மற்றும் அணுகல்தன்மையை மேம்படுத்த, பட மாற்று உரையைச் சேர்க்கவும் அல்லது திருத்தவும்.
- இடைவெளியைச் சேர்க்க, ஒவ்வொரு பக்கத்திலும் நீங்கள் விரும்பும் இடைவெளியின் பிக்சல்களின் எண்ணிக்கையை உள்ளிடவும்.
- படத்தின் சீரமைப்பை மாற்ற, இடது, மைய அல்லது வலது சீரமைப்பைக் குறிக்கும் ஐகான்களில் இருந்து தேர்ந்தெடுக்கவும்.
- உரை மடிப்பைச் சேர்க்க, படத்தைச் சுற்றி உரையை மடி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் மாற்றங்களைச் சேமிக்க படத்தைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
ரிச் டெக்ஸ்ட் எடிட்டரைப் பயன்படுத்தி வீடியோக்களைச் செருகுதல்
ரிச் டெக்ஸ்ட் எடிட்டரைப் பயன்படுத்தி வலைப்பதிவு இடுகைகள், பக்கங்கள், தயாரிப்பு விளக்கங்கள் மற்றும் சேகரிப்பு விளக்கங்கள் ஆகியவற்றில் நீங்கள் வீடியோக்களைச் செருகலாம் அல்லது உட்பொதிக்கலாம்.
நீங்கள் உருவாக்கிய ஒரு வீடியோவை உட்பொதிக்க விரும்பினால், முதலில் அதை YouTube அல்லது Vimeo போன்ற வீடியோ ஸ்ட்ரீமிங் தளத்தில் பதிவேற்ற வேண்டும்.
தொடர்புடைய வீடியோக்களை முடக்குவதற்கு YouTube உங்களை அனுமதிப்பதில்லை, ஆனால் தொடர்புடைய வீடியோக்கள் தற்போது இயக்கப்பட்ட வீடியோவின் அதே சேனலில் இருந்து இருக்க வேண்டும் எனக் குறிப்பிடலாம்.
படிகள்:
- ஒரு PC-இல்
ctrl+Cஅல்லது Mac-இல்command+Cஆகியவற்றை அழுத்துவதன் மூலம் வீடியோவின் URL-ஐ நகலெடுக்கவும்.
- Embed Responsively தளத்திற்குச் செல்லவும். Embed Responsively என்பது உங்கள் வீடியோவுக்கான மேம்படுத்தப்பட்ட உட்பொதி குறியீட்டை உங்களுக்கு வழங்கும் ஒரு கருவியாகும்.
- Embed Responsively தளத்தில், உங்கள் வீடியோ அமைந்துள்ள வீடியோ இணையதளத்தைத் தேர்ந்தெடுக்க கிளிக் செய்யவும்.
- ஒரு PC-இல்
ctrl+Vஅல்லது Mac-இல்command+Vஆகியவற்றை அழுத்துவதன் மூலம் நீங்கள் நகலெடுத்த வீடியோவின் URL-ஐ, Embed Responsively தளத்தில் உள்ள பக்க URL பெட்டியில் ஒட்டவும். - உட்பொதி என்பதைக் கிளிக் செய்யவும். Embed Responsively உங்களுக்கான உட்பொதி குறியீட்டை உருவாக்கும்.
- வீடியோ YouTube-இலிருந்து எடுக்கப்பட்டதாக இருந்து, அதே YouTube சேனலில் உள்ள தொடர்புடைய வீடியோக்களை மட்டுமே நீங்கள் காண்பிக்க விரும்பினால், உட்பொதி குறியீட்டில் வீடியோவின் URL-ஐக் கண்டறியவும். மேற்கோள் குறிகளுக்குள் அதன் முடிவில்
?rel=0என்பதை நகலெடுத்து ஒட்டவும். - உட்பொதி குறியீடு பெட்டிக்குள் உள்ள அனைத்துக் குறியீடுகளையும் நகலெடுக்கவும்.
- உங்கள் Shopify நிர்வாகியில், ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் உள்ள வீடியோவைச் செருகு பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- வீடியோவைச் செருகு உரையாடலில் உள்ள பெட்டியில் உட்பொதி குறியீட்டை ஒட்டவும்.
- வீடியோவைச் செருகு என்பதைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் முடித்தவுடன், நீங்கள் திருத்திய உருப்படியில் உங்கள் மாற்றங்களைச் சேமிக்க சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
ரிச் டெக்ஸ்ட் எடிட்டரைப் பயன்படுத்தி ஆடியோ கோப்புகளைச் செருகுதல்
வலைப்பதிவு இடுகைகள், பக்கங்கள், தயாரிப்பு விளக்கங்கள் மற்றும் சேகரிப்பு விளக்கங்கள் ஆகியவற்றில் ஆடியோ கோப்புகளைச் செருக அல்லது உட்பொதிக்க நீங்கள் ரிச் டெக்ஸ்ட் எடிட்டரைப் பயன்படுத்தலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > கோப்புகள் என்பதற்குச் செல்லவும்.
உங்கள் ஸ்டோரில் செருக அல்லது உட்பொதிக்க விரும்பும் ஆடியோ கோப்பைப் பதிவேற்ற, கோப்புகளைப் பதிவேற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆன்லைன் ஸ்டோர் பிரிவிலிருந்து, நீங்கள் ஆடியோ கோப்பைக் காட்ட விரும்பும் பக்கம் அல்லது வலைப்பதிவு இடுகைக்கான ரிச் டெக்ஸ்ட் எடிட்டரைத் திறக்கவும்.
<div id="player"><audio controls="controls">என்பதை நகலெடுத்து, உங்கள் பக்கத்தில் ஆடியோ பிளேயரை உட்பொதிக்க ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் அந்தக் குறியீட்டை ஒட்டவும்.பின்வரும் குறியீட்டை நகலெடுக்கவும்:
<source src="https://cdn.shopify.com/s/files/1/0220/2378/files/example.mp3" type="audio/mpeg" /></div>
- ஆடியோ பிளேயருக்கான குறியீட்டிற்குப் பிறகு உங்கள் ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் இந்தக் குறியீட்டை ஒட்டவும், பின்னர்
https://cdn.shopify.com/s/files/1/0220/2378/files/example.mp3என்பதை Shopify-க்கு அதைப் பதிவேற்றியபோது உங்கள் ஆடியோ கோப்பிற்காக நீங்கள் உருவாக்கிய URL-ஐக் கொண்டு மாற்றவும். எந்த நேரத்திலும் கோப்புகள் பக்கத்தில் உங்களின் ஆடியோ கோப்பின் URL-ஐ நீங்கள் கண்டறியலாம். - சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் ஆடியோ கோப்பு சரியாக இயங்குவதை உறுதிசெய்ய, பார்வையிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் அகக் கருத்துகளைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்
உங்கள் ஸ்டோரில் வெளியிட விரும்பாத அக உரைக்கு, கருத்துக்கான குறிச்சொற்களான <!-- மற்றும் --> ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.
படிகள்:
- உங்கள் ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில், HTML-ஐக் காட்டு பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- அகக் கருத்தைச் சேர்க்க, மறைத்து வைக்க விரும்பும் உரையை
<!--மற்றும்-->ஆகியவற்றிற்குள் அடைக்கவும். எடுத்துக்காட்டாக:<!--yourtext-->. - சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
கருத்துக்கான குறிச்சொற்களுக்குள் அடைக்கப்பட்ட HTML குறிச்சொற்கள் அக உரையாகச் சேமிக்கப்படும். அந்த HTML குறிச்சொற்கள் சரியாக வேலை செய்ய, அவற்றைச் சுற்றியுள்ள கருத்துக்கான குறிச்சொற்களான <!-- மற்றும் --> ஆகியவற்றை நீங்கள் அகற்ற வேண்டும்.
ரிச் டெக்ஸ்ட் எடிட்டரைப் புரிந்துகொள்ளுதல்
ரிச் டெக்ஸ்ட் எடிட்டரானது, மூன்றாம் தரப்பு உள்ளடக்க டெலிவரி வலையமைப்பான (CDN) TinyMCE உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு சில முக்கியமான தாக்கங்களைக் கொண்டுள்ளது:
- உள்ளடக்க வரம்பு: ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் உள்ளிடப்படும் உள்ளடக்கத்திற்கு 64 KB என்ற கட்டாய வரம்பு உள்ளது. இது பக்கங்கள், வலைப்பதிவு இடுகைகள் மற்றும் கூடுதல் ஸ்கிரிப்டுகளுக்குப் பொருந்தும்.
- HTML சுத்திகரிப்பு: ஸ்டோர்ஃபிரண்ட் செயலிழப்புகள் மற்றும் பாதுகாப்பு அபாயங்களைத் தடுக்க HTML வடிவமைப்பைத் தானாகவே திருத்தும் உள்ளடக்கத்தை வடிகட்டும் லாஜிக்கை TinyMCE வழங்குகிறது. நீங்கள் HTML ஐ அதன் அசல் வடிவத்திற்கு மேனுவலாகத் திருத்தலாம் என்றாலும், சாத்தியமான சிக்கல்களைத் தடுக்க இந்தத் தானியங்கி மாற்றங்களுடன் செயல்படுவது பரிந்துரைக்கப்படுகிறது.
ரிச் டெக்ஸ்ட் எடிட்டர் சிக்கல் தீர்த்தல்
ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் உங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், பின்வரும் சிக்கல் தீர்க்கும் படிகள் மற்றும் பொதுவான சிக்கல்களைப் பார்க்கவும்.
வடிவமைப்புச் சிக்கல்களைத் தீர்த்தல்
நகலெடுக்கப்பட்ட உள்ளடக்கத்தில் உள்ள வடிவமைப்புச் சிக்கல்கள்
உரை எப்போதும் அது உருவான எடிட்டர் அல்லது இணையப்பக்கத்தின் வடிவமைப்பைப் பெற்றிருக்கும். நீங்கள் Microsoft Word இல் உள்ளடக்கத்தை எழுதி, பிறகு அதை நகலெடுத்து ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் ஒட்டினால், அது <div> குறிச்சொற்கள் உட்பட அதே நிறம், அளவு, உள்தள்ளல் மற்றும் இடைவெளியைப் பராமரிக்கும்.
சாத்தியமான போதெல்லாம், உங்கள் உள்ளடக்கத்தை நேரடியாக ரிச் டெக்ஸ்ட் எடிட்டரிலேயே திருத்தி வடிவமைக்கவும்.
மிகவும் சிக்கலான பக்கத் தளவமைப்புகளுக்கு, Shogun Drag & Drop Page Builder போன்ற பேஜ் பில்டர் செயலிகளைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளவும்.
வடிவமைப்புச் சிக்கல்களைக் கண்டறிதல்
மற்றொரு மூலத்திலிருந்து உள்ளடக்கத்தை நகலெடுத்து ஒட்டும்போது பரிமாற்றப்படும் உட்பொதிக்கப்பட்ட ஸ்டைலிங் அல்லது வடிவமைப்பே, ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் ஏற்படும் பொதுவான சிக்கல்களுக்கு முக்கியக் காரணமாகும்.
இது வெவ்வேறு வழிகளில் தோன்றலாம், ஆனால் Shopify நிர்வாகியில் காட்டப்படுவதற்கும் உங்களின் லைவ் ஸ்டோரில் காட்டப்படுவதற்கும் இடையே ஏதேனும் முரண்பாடு இருக்கும்போது இதுவே பொதுவாகக் காரணமாகும். தகவல் புதுப்பிக்கப்படாமல் இருப்பதோ அல்லது ஸ்டைலிங் வித்தியாசமாகக் காட்டப்படுவதோ இதில் அடங்கும்.
வடிவமைப்புச் சிக்கல்களைத் தீர்த்தல்
சிக்கலுக்கு வடிவமைப்புப் பிழைகள் காரணமா என்பதைச் சோதிக்க இரண்டு வழிகள் உள்ளன: வடிவமைப்பை அகற்று பொத்தானைப் பயன்படுத்துதல் அல்லது HTML ஸ்ட்ரிப்பர் மூலம் ரிச் டெக்ஸ்ட் எடிட்டர் உள்ளடக்கத்தை இயக்குதல்.
சோதிக்க, சிக்கல் இருக்கும் தயாரிப்பு அல்லது பக்கத்தின் நகலை உருவாக்கி, அதன் நகலில் பின்வரும் சோதனைகளில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்.
சோதனை 1: வடிவமைப்பை அகற்றுதல்
- ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் உள்ள அனைத்து உள்ளடக்கத்தையும் ஹைலைட் செய்யவும்.
- வடிவமைப்பை அகற்று பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்து சோதிக்கவும்.
சோதனை 2: HTML ஸ்ட்ரிப்பர்
- ரிச் டெக்ஸ்ட் எடிட்டரிலிருந்து அனைத்து உள்ளடக்கத்தையும் நகலெடுக்கவும்.
- striphtml.com போன்ற HTML ஸ்ட்ரிப்பரில் அதை ஒட்டவும்.
- ஸ்ட்ரிப் செய்யப்பட்ட அனைத்து உள்ளடக்கத்தையும் நகலெடுக்கவும்.
- அசல் உள்ளடக்கத்தை மாற்றுவதன் மூலம், மீண்டும் ரிச் டெக்ஸ்ட் எடிட்டரிலேயே அதை ஒட்டவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்து சோதிக்கவும்.
இந்த இரண்டு படிகளில் ஏதேனும் ஒன்று சிக்கலைத் தீர்த்தால், தொடக்கத்தில் ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் உள்ளடக்கத்தைச் சேர்த்தபோது, மாற்றப்பட்ட வடிவமைப்பிலிருந்தே சிக்கல் உருவாகிறது என்பதை அறியலாம். அசல் உள்ளடக்கத்தைச் சரிசெய்ய இதே முறைகளை நீங்கள் பயன்படுத்தலாம்.
தவறாகச் சீரமைக்கப்பட்ட படக் குறியீட்டுச் சிக்கலைத் தீர்த்தல்
உரையைச் சுற்றியமைக்கும் (wrap) விருப்பத்தைப் பயன்படுத்தும்போது, படத்திற்கு அருகில் உரையைச் சரியாகச் சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், குறியீட்டை நீங்கள் நகர்த்த வேண்டியிருக்கலாம். இதனால் படக் குறிச்சொல் பத்தியின் நடுவில் தோன்றாமல் தொடக்கத்தில் தோன்றும்.
- ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் 'குறியீட்டைத் திருத்து' பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- படக் குறியீட்டைக் கண்டறிந்து முழு
<img>குறிச்சொல்லையும் பத்தியின் மேற்புறத்திற்கு,<p>பத்திக் குறிச்சொற்களுக்கு வெளியே நகர்த்தவும். - படத்திற்குக் கீழே வரும் அடுத்தடுத்த பத்திகளில் ஏதேனும்
<span>குறிச்சொற்கள் இருந்தால் அவற்றை அகற்றவும். - சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
தவறாகச் சீரமைக்கப்பட்ட படக் குறியீட்டிற்கான எடுத்துக்காட்டு:
<p style="float: left;"><br/><img alt="" src="your image link" style="float: left; margin-right: 20px;">This 22x34 special purchase frame...</p>
திருத்தப்பட்ட குறியீடு:
<img alt="" src="your image link" style="margin-right: 20px; float: left;">
<p>This 22x34 special purchase frame...</p>
செயல்படாத mailto இணைப்புகளுக்கான சிக்கலைத் தீர்த்தல்
mailto: இணைப்புகள் செயல்படவில்லை எனில் (வெற்றுப் பக்கத்தை ஏற்றுதல் அல்லது அஞ்சலைத் திறக்காமல் இருத்தல்), இணைப்பு இந்த அமைப்பைப் பின்பற்றுகிறதா எனச் சரிபார்க்கவும்:
mailto:email@example.com
மேலே உள்ள கட்டமைப்புடன் அது பொருந்தியும், எதிர்பார்த்தபடிச் செயல்படவில்லை எனில், அது உலாவி அல்லது மின்னஞ்சல் கிளையண்ட் அமைப்புகளில் உள்ள சிக்கலாக இருக்கலாம். mailto: இணைப்புகளைச் சரியாகக் கையாளும் வகையில் அவை உள்ளமைக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதிசெய்ய, உங்கள் உலாவி மற்றும் மின்னஞ்சல் கிளையண்டிற்கான அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
பக்கப் படங்களை மறுஅளவிட்ட பிறகு அவை அசல் அளவிற்கே திரும்புவது தொடர்பான சிக்கலைத் தீர்த்தல்
பக்கத்தில் படங்களைச் செருகும்போது, உருவாக்கப்படும் HTML இல் src அளவுரு, data-mce-src அளவுரு ஆகிய இரண்டும் இடம்பெறும். இவை இரண்டும் பொருந்தவில்லை எனில், data-mce-src அளவுருவுடன் பொருந்தும் வகையில் src புதுப்பிக்கப்படும்.
இருப்பினும், ரிச் டெக்ஸ்ட் எடிட்டரைப் பயன்படுத்திப் படத்தை மறுஅளவிடுகையில், src மட்டுமே புதுப்பிக்கப்பட்டு, அசல் அளவிலான URL ஆக data-mce-src இருக்கும். மேலும் சில கிளிக்குகளுக்குப் பிறகு, src மீண்டும் data-mce-src URLக்கே மாற்றப்படும்.
இதைத் தவிர்க்க, நீங்கள் விரும்பும் பட அளவோடு பொருந்தும் வகையில் data-mce-src URL ஐ மேனுவலாகப் புதுப்பிக்கவும்:
- ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் 'குறியீட்டைத் திருத்து' பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் மறுஅளவிட்ட படக் குறிச்சொல்லைக் கண்டறியவும்.
src,data-mce-srcஅளவுருக்கள் இரண்டையும் கண்டறியவும்.srcURL உடன் பொருந்தும் வகையில்data-mce-srcURL ஐப் புதுப்பிக்கவும்.- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
தானியங்கி HTML மாற்றங்கள் (சுத்திகரிப்பு) தொடர்பான சிக்கலைத் தீர்த்தல்
ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் மாற்றங்களைச் செய்யும்போது, அதற்கேற்ப HTML தானாகவே மாற்றப்படுவதை நீங்கள் கவனிக்கலாம்.
இது ஏன் நடக்கிறது?
Shopify-இன் ரிச் டெக்ஸ்ட் எடிட்டர், மூன்றாம் தரப்பு உள்ளடக்க டெலிவரி வலையமைப்பான (CDN) TinyMCE உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த CDN, ஒரு விரிவான மற்றும் நம்பகமான உள்ளடக்க வடிகட்டுதல் லாஜிக் தொகுப்பை வழங்குகிறது. இது ஸ்டோர்ஃபிரண்டில் ஏற்படும் செயலிழப்புகள் அல்லது பாதுகாப்பு அபாயங்களைத் தவிர்க்க HTML வரிகளின் வடிவமைப்பைத் தானாகவே திருத்துகிறது. இந்தச் செயல்முறை HTML சுத்திகரிப்பு என்று அழைக்கப்படுகிறது.
நான் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் HTML ஐ முன்பிருந்தபடியே மேனுவலாகத் திருத்துவதன் மூலம் உள்ளடக்க வடிகட்டுதல் லாஜிக்கை உங்களால் மாற்றிமைக்க முடிந்தாலும், தானியங்கு மாற்றங்களையே பின்பற்றுவது பரிந்துரைக்கப்படுகிறது. இந்தத் தானியங்கித் திருத்தங்கள் எதிர்பார்த்தபடியான செயல்பாடாகும், மேலும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் ஸ்டோர்ஃபிரண்டின் மாற்றங்களைத் தடுக்கும் முக்கிய நோக்கத்திற்காக இவை செயல்படுகின்றன.
CDN திருத்த முயற்சிக்கும் HTML ஐ எழுதுவதன் மூலம் நீங்கள் குறிப்பிட்ட இலக்குகளை அடைய முயற்சித்தால், எதிர்பார்த்த HTML வடிவமைப்பை ஆதரிக்கும் உங்கள் தீம் குறியீட்டில் மாற்றங்களைச் செய்வது போன்ற பிற சிறந்த வழிகள் உள்ளதா எனச் சிந்தியுங்கள்.
தேர்ந்தெடுத்த சந்தையிலிருந்து வாடிக்கையாளர்களை வெளியேற்றும் இணைப்புகளுக்கான சிக்கலைத் தீர்த்தல்
subfolders மற்றும் Geolocation செயலியுடன் நீங்கள் Shopify Markets ஐப் பயன்படுத்தினால், தயாரிப்பு விளக்கங்கள், வலைப்பதிவு இடுகைகள், பக்கங்கள் மற்றும் சேகரிப்பு விளக்கங்களில் உள்ள இணைப்புகள் வாடிக்கையாளர்களைத் தாங்கள் தேர்ந்தெடுத்த பிராந்தியத்தில் வைத்திருக்காமல் உங்களின் முதன்மை டொமைனுக்குத் திசைதிருப்பக்கூடும்.
இது ஏன் நடக்கிறது?
ரிச் டெக்ஸ்ட் எடிட்டரானது நேரடி இணைப்புகள் (முழு URLகள்) மற்றும் உள்ளக இணைப்புகள் (குறுகிய URLகள்) ஆகிய இரண்டையும் ஆதரிக்கிறது. முழு URL ஐ உள்ளடக்கிய நேரடி இணைப்பை நீங்கள் பயன்படுத்தினால் (எடுத்துக்காட்டாக, https://yourstore.com/collections/summer), வாடிக்கையாளர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த சந்தையைப் புறக்கணித்துவிட்டு அந்த குறிப்பிட்ட URLக்குத் திசைதிருப்பப்படுவார்கள்.
இதை எப்படிச் சரிசெய்வது
உங்கள் இணைப்புகள் பிராந்தியங்களை உணர்ந்தறிந்து வாடிக்கையாளர்களை அவர்கள் தேர்ந்தெடுத்த சந்தையிலேயே வைத்திருப்பதை உறுதிசெய்ய, முழு URLகளுக்குப் பதிலாக / இல் தொடங்கும் உள்ளக இணைப்புகளைப் பயன்படுத்தவும்.
- நேரடி இணைப்பு (பிராந்தியத்தை உணராதது):
https://yourstore.com/collections/summer - உள்ளக இணைப்பு (பிராந்தியம் சார்ந்தது):
/collections/summer
ஏற்கெனவே இருக்கும் இணைப்புகளைப் புதுப்பிக்க:
- உங்கள் Shopify நிர்வாகியில், நீங்கள் இணைப்புகளைப் புதுப்பிக்க விரும்பும் தயாரிப்பு, சேகரிப்பு, பக்கம் அல்லது வலைப்பதிவு இடுகைக்குச் செல்லவும்.
- ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில், HTML-ஐப் பார்க்க, குறியீட்டைத் திருத்து பொத்தானைக் கிளிக் செய்யவும்.
https://எனத் தொடங்கி, உங்கள் ஸ்டோரின் டொமைனை உள்ளடக்கியிருக்கும் ஏதேனும் இணைப்புகளைக் கண்டறியவும்.- முழு URL-க்கும் பதிலாகச் சுருக்கமான URL வடிவமைப்பைப் பயன்படுத்தவும். எடுத்துக்காட்டாக,
https://yourstore.com/pages/aboutஎன்பதை/pages/aboutஎன மாற்றவும். - சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
புதுப்பிக்க வேண்டிய பல தயாரிப்புகள், சேகரிப்புகள், வலைப்பதிவுகள் அல்லது பக்கங்கள் உங்களிடம் இருந்தால், அவற்றை CSV கோப்புகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். நேரடி இணைப்புகளைக் கண்டறிய உங்கள் டொமைனையோ http என்பதையோ தேடவும். அவற்றை உள்ளக இணைப்புகளாகப் புதுப்பித்து, பின்னர் புதுப்பிக்கப்பட்ட CSV கோப்புகளை மீண்டும் உங்கள் ஸ்டோரில் இறக்குமதி செய்யலாம்.