Shopify செயலியைப் பயன்படுத்தி உங்கள் சரக்கு இருப்பை ஸ்கேன் செய்யவும்
பின்வரும் வழிகளில் உங்கள் மொபைல் அல்லது டேப்லெட் சாதனத்தில் தயாரிப்புப் பார்கோடுகளை ஸ்கேன் செய்யவும், உங்கள் ஸ்டோரின் சரக்கு இருப்பை நிர்வகிக்கவும் சரக்கு இருப்பு ஸ்கேனரைப் பயன்படுத்தலாம்:
- உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் ஏற்கனவே உள்ள ஒரு தயாரிப்புக்குத் தயாரிப்புப் பார்கோட்டை ஒதுக்குதல்
- உங்கள் தயாரிப்புச் சரக்கு இருப்பு அளவை ஒன்றாக அதிகரித்தல்
- தயாரிப்புச் சரக்கு இருப்பு நிலையைச் சரிசெய்தல் அல்லது அமைத்தல்
இந்தப் பக்கத்தில்
சரக்கு இருப்பு ஸ்கேனரைப் பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
சரக்கு இருப்பு ஸ்கேனரைப் பயன்படுத்தத் தொடங்கும் முன், பின்வரும் பரிசீலனைகளைச் சரிபார்க்கவும்:
- சரக்கு இருப்பு ஸ்கேனர் iOS, iPadOS மற்றும் Android சாதனங்களில் மட்டுமே செயல்படும்.
- உங்கள் மொபைல் அல்லது டேப்லெட் சாதனத்தில் Shopify செயலி நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
சரக்கு இருப்பை ஸ்கேன் செய்யும் போது ஏற்படும் பிழைச் செய்திகள்
உங்கள் பார்கோடுகளை ஸ்கேன் செய்யும் போது பின்வரும் பிழைச் செய்திகள் வரலாம்:
- Stock item at current location? - இந்த பார்கோடு ஒரு தயாரிப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் தற்போதைய இடத்தில் ஸ்டாக் செய்யப்படவில்லை. தற்போதைய இடத்தில் தயாரிப்பை ஸ்டாக் செய்ய, உருப்படியை ஸ்டாக் செய் என்பதைத் தட்டவும்.
- Not tracking inventory - தற்போதைய இடத்தில் ஸ்டாக் செய்யப்பட்டுள்ள ஒரு தயாரிப்புக்கு இந்த பார்கோடு ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் சரக்கு இருப்பைத் தடமறியக் கூடாது என அமைக்கப்பட்டுள்ளது. பொருந்தினால், தயாரிப்புக்கான சரக்கு இருப்பைத் தடமறிதலை அமைக்க தயாரிப்பைத் திருத்து என்பதைத் தட்டவும்.
- Barcode assigned to multiple products - இந்த பார்கோடு பல தயாரிப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சரக்கு இருப்பை மேனுவலாகச் சரிசெய்ய அல்லது தயாரிப்புக்கு வேறொரு பார்கோட்டை ஒதுக்க, உருப்படிகளைக் காட்டு என்பதைத் தட்டவும்.
- Select product to apply barcode? - இந்த பார்கோடு எந்தவொரு தயாரிப்புக்கும் ஒதுக்கப்படவில்லை. ஒரு தயாரிப்புக்குப் பார்கோட்டை ஒதுக்க, தேர்ந்தெடு என்பதைத் தட்டவும்.
ஏற்கனவே உள்ள தயாரிப்புக்குத் தயாரிப்புப் பார்கோட்டை ஒதுக்குதல்
நீங்கள் ஒரு தயாரிப்புப் பார்கோட்டை ஸ்கேன் செய்து, பிறகு அந்தப் பார்கோட்டை உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் ஏற்கனவே உள்ள தயாரிப்புக்கு ஒதுக்கலாம்.
படிகள்:
Shopify செயலியில்,
ஐகானைத் தட்டவும்.
தயாரிப்புகள் மெனுவில்,
ஐகானைத் தட்டி, பிறகு சரக்கு இருப்பை ஸ்கேன் செய் என்பதைத் தட்டவும்.
விருப்பத்தேர்வு: உங்கள் சரக்கு இருப்பு இடத்தை தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் தயாரிப்பின் பார்கோட்டை ஸ்கேன் செய்யவும்.
தேர்ந்தெடு என்பதைத் தட்டவும்.
புதிய பார்கோட்டை ஒதுக்க விரும்பும் தயாரிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் தயாரிப்புக்கு ஏற்கனவே பார்கோடு இருந்தால், பார்கோட்டை மாற்று என்பதைத் தட்டவும்.
ஸ்கேனைச் சரிபார் என்பதைத் தட்டவும்.
மாற்றங்களைப் பயன்படுத்து என்பதைத் தட்டவும்.
தயாரிப்புச் சரக்கு இருப்பு அளவை ஒன்றாக அதிகரித்தல்
உங்கள் தயாரிப்புச் சரக்கு இருப்பு அளவை ஒன்றாக அதிகரிக்க விரும்பினால், உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உள்ள ஒரு தயாரிப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள தயாரிப்புப் பார்கோட்டை நீங்கள் ஸ்கேன் செய்யலாம்.
படிகள்:
Shopify செயலியில்,
ஐகானைத் தட்டவும்.
தயாரிப்புகள் மெனுவில்,
ஐகானைத் தட்டி, பிறகு சரக்கு இருப்பை ஸ்கேன் செய் என்பதைத் தட்டவும்.
விருப்பத்தேர்வு: உங்கள் சரக்கு இருப்பு இடத்தை தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் தயாரிப்பின் பார்கோட்டை ஸ்கேன் செய்யவும்.
ஸ்கேனைச் சரிபார் என்பதைத் தட்டவும்.
மாற்றங்களைப் பயன்படுத்து என்பதைத் தட்டவும்.
தயாரிப்புச் சரக்கு இருப்பு அளவைச் சரிசெய்தல்
உங்கள் தயாரிப்புச் சரக்கு இருப்பு அளவைச் சரிசெய்ய விரும்பினால், உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உள்ள ஒரு தயாரிப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள தயாரிப்புப் பார்கோட்டை ஸ்கேன் செய்து, பிறகு உங்கள் தயாரிப்பின் சரக்கு இருப்பு அளவைச் சரிசெய்ய வேண்டும்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் உங்கள் தயாரிப்புச் சரக்கு இருப்பு அளவை 300-இல் இருந்து 500-க்குச் சரிசெய்யலாம்.
படிகள்:
Shopify செயலியில்,
ஐகானைத் தட்டவும்.
தயாரிப்புகள் மெனுவில்,
ஐகானைத் தட்டி, பிறகு சரக்கு இருப்பை ஸ்கேன் செய் என்பதைத் தட்டவும்.
விருப்பத்தேர்வு: உங்கள் சரக்கு இருப்பு இடத்தை தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் தயாரிப்பின் பார்கோட்டை ஸ்கேன் செய்யவும்.
உங்கள் தயாரிப்பைத் தட்டவும்.
சரக்கு இருப்பு அளவு எண்ணைத் தட்டவும்.
உங்கள் தயாரிப்பின் இருப்பிலுள்ள சரக்கு இருப்பு அளவைச் சரிசெய்ய + அல்லது - என்பதைத் தட்டவும் அல்லது அளவு எண்ணைத் தட்டி, எண்ணைத் திருத்தவும்.
விருப்பத்தேர்வு: கையிருப்பிலுள்ள அளவைச் சரிசெய்ய, கையிருப்பைத் திருத்து என்பதைத் தட்டவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
ஸ்கேனைச் சரிபார் என்பதைத் தட்டவும்.
மாற்றங்களைப் பயன்படுத்து என்பதைத் தட்டவும்.