Shopify செயலியில் Quick Sale-ஐ உருவாக்குதல்

வேகமான பரிவர்த்தனைகளுக்கு Quick Sale-ஐ உருவாக்க Shopify செயலியை நீங்கள் பயன்படுத்தலாம். முழுமையான வரைவு ஆர்டரை உருவாக்காமலோ Shopify POS செயலியைப் பயன்படுத்தாமலோ விற்பனையை விரைவாக முடிக்க, உங்கள் ஸ்டோரிலிருந்து தயாரிப்புகளைச் சேர்க்கலாம், தனிப்பயன் தொகைகளை உள்ளிடலாம் மற்றும் தள்ளுபடிகளைப் பயன்படுத்தலாம்.

Shopify செயலியில் Quick Sale-ஐ உருவாக்குவதற்கான பரிசீலனைகள்

Shopify செயலியில் Quick Sale-ஐ உருவாக்குவதற்கு முன், பின்வரும் பரிசீலனைகளைச் சரிபார்க்கவும்.

கிடைக்கும் தன்மை மற்றும் கட்டணத் தேவைகள்

  • Shopify செயல்படும் அனைத்து நாடுகளிலும் Quick Sale கிடைக்கிறது. எந்தவொரு ஆதரிக்கப்படும் நாட்டிலும் பேமெண்ட் இணைப்புகள் அல்லது ரொக்கத்தைப் பயன்படுத்தி நீங்கள் பேமெண்ட்டுகளை ஏற்கலாம்.
  • Tap to Pay என்பது ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பின்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, நியூசிலாந்து, சிங்கப்பூர் (Android சாதனங்களில் மட்டும்), சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவில் கூடுதல் கட்டண முறையாகக் கிடைக்கிறது. Tap to Pay என்பதைப் பயன்படுத்த, நீங்கள் Shopify செயலியில் Tap to Pay என்பதற்கான தகுதித் தேவைகளைப்பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
    • கனடாவில் உள்ள Quick Sale-கள் Interac பேமெண்ட்டுகளை ஆதரிக்கின்றன.
    • ஆஸ்திரேலியாவில் உள்ள Quick Sale-கள் EFTPOS பேமெண்ட்டுகளை ஆதரிக்கின்றன.
  • Quick Sale-ஐ உருவாக்க, உங்களுக்கு ஒரு Shopify திட்டம் மற்றும் கட்டண வழங்குநர் தேவை. Shopify Payments கிடைக்கும் நாடுகளில், நீங்கள் Shopify Payments-ஐப் பயன்படுத்த வேண்டும். பிற நாடுகளில், நீங்கள் PayPal அல்லது ஆதரிக்கப்படும் ஏதேனும் ஒரு கட்டண வழங்குநரைப் பயன்படுத்தலாம்.

சாதன அணுகல் மற்றும் பணியாளர் அனுமதிகள்

  • Quick Sale-இன் போது உருப்படிகளை ஸ்கேன் செய்ய உங்கள் மொபைல் சாதனத்தின் கேமராவைப் பயன்படுத்த, உங்கள் சாதனக் கேமராவை அணுகுவதற்கான அனுமதிகளை நீங்கள் வழங்க வேண்டும்.
  • Quick Sale-ஐ உருவாக்கி Tap to Pay மூலம் பேமெண்ட்டுகளை ஏற்க, பயனர்களுக்குத் தங்களின் பங்கு சார்ந்த Quick Sale அனுமதி தேவை.
  • Quick Sale-இன் போது உங்கள் சாதனம் தொலைந்து போகும் பட்சத்தில் உங்கள் Shopify நிர்வாகியைப் பாதுகாக்க, Quick Sale-இல் வெளியேற FaceID தேவை என்ற விருப்பத்தைச் செயல்படுத்தவும். பயோமெட்ரிக்ஸைப் பயன்படுத்தி Shopify செயலியில் உள்நுழைவது குறித்து மேலும் அறிக.

தள்ளுபடிகள் மற்றும் அம்சக் கட்டுப்பாடுகள்

  • Quick Sale-க்குப் பயன்படுத்தப்படும் பிற தள்ளுபடிகளுடன் தள்ளுபடிகள் அவை பயன்படுத்தப்படும் வரிசையில் அடுக்கப்படும். Quick Sale-க்குத் தள்ளுபடிகளைப் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக.
  • Quick Sale ஆனது எளிய மற்றும் வேகமான பரிவர்த்தனைகளில் கவனம் செலுத்துகிறது, மேலும் இதில் வழக்கமான நேரடி விற்பனைக்கான ஆழமான அம்சங்களான ரொக்கத்தின் நகர்வைத் தடமறிதல் அல்லது ஆர்டரில் உள்ள குறிப்பிட்ட உருப்படிகளுக்கு மட்டும் வரி விதித்தல் போன்றவை இல்லை, இந்த அம்சங்கள் Shopify POS மூலம் விற்கும்போது கிடைக்கின்றன. Shopify நிர்வாகியில் ஒரு வரைவு ஆர்டரை உருவாக்கும்போது கிடைக்கும் விரிவான அம்சங்களான பின்வரும் விருப்பங்களும் இதில் இல்லை:
    • பரிவர்த்தனையை முடிக்கும் முன் ஆர்டருடன் வாடிக்கையாளர் சுயவிவரத்தை இணைத்தல்.
    • ஆர்டருக்குத் தானியங்கு தள்ளுபடிகளைப் பயன்படுத்துதல்.
    • ஒரு தயாரிப்பு கையிருப்பில் இல்லாத போது அல்லது அதிகமாக விற்கப்படும் போது உங்களுக்குத் தெரிவிப்பது.
    • மாற்றம் செய்து பின்னர் முடிப்பதற்காக ஆர்டரை வரைவு நிலையில் சேமித்தல்.

Quick Sale-ஐத் தொடங்குதல்

Shopify செயலியில் Quick Sale-ஐத் தொடங்க, மெனு என்பதைத் தட்டி, பின்னர் முதன்மை மெனுவில் Quick Sale என்பதைத் தட்டவும்.

உங்கள் ஸ்டோருடன் 1-க்கு மேற்பட்ட இடங்கள் இணைக்கப்பட்டிருந்தால், Quick Sale-இல் உள்ள சரக்கு இருப்பு மெனுவைப் பயன்படுத்தி எந்த இடத்திலிருந்து விற்பனையை மேற்கொள்கிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். பரிவர்த்தனையின் போது நீங்கள் விற்கும் தயாரிப்புகளின் அடிப்படையில், தனது சரக்கு இருப்பைக் காண்பிக்கும் மற்றும் புதுப்பிக்கும் இடமே Quick Sale-க்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் ஆகும். இது Quick Sale-க்குக் காட்டப்படும் மற்றும் பயன்படுத்தப்படும் வரி வீதங்களையும் பாதிக்கிறது.

Quick Sale-இல் ஏற்கனவே உள்ள தயாரிப்புகளைச் சேர்த்தல்

உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள எந்தவொரு தயாரிப்பையும் Quick Sale-இல் சேர்க்கலாம். Quick Sale-இன் போது நீங்கள் உருப்படித் தொகைகளைச் சரிசெய்யலாம் அல்லது குறிப்பிட்ட தயாரிப்பு மாறுபாடுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

படிகள்:

  1. Shopify செயலியில், Quick Sale-ஐத் தொடங்கவும்:

    1. மெனு என்பதைத் தட்டி, பின்னர் முதன்மை மெனுவில் Quick Sale என்பதைத் தட்டவும்.
    2. விருப்பத்திற்குரியது: Quick Sale-க்காக வேறு இடத்தைத் தேர்ந்தெடுக்க, சரக்கு இருப்பு மெனுவைத் தட்டவும்.
  2. தயாரிப்பைச் சேர் என்பதைத் தட்டவும்.

  3. அனைத்துத் தயாரிப்புகள் பட்டியலில், நீங்கள் Quick Sale-இல் சேர்க்க விரும்பும் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்:

    • நீங்கள் சேர்க்க விரும்பும் உருப்படிகளின் எண்ணிக்கையைத் தனிப்பயனாக்க, ஒரு தயாரிப்பிற்கு அடுத்துள்ள + ஐகானைத் தட்டவும். நீங்கள் உருப்படிகளின் எண்ணிக்கையைத் தட்டி, எண்ணிக்கையை மேனுவலாகவும் தனிப்பயனாக்கலாம்.
    • Quick Sale-இலிருந்து உருப்படியை அகற்ற, நீக்கு என்பதைத் தட்டவும்.
    • குறிப்பிட்ட தயாரிப்புகளைத் தேட தேடல் பட்டியைப் பயன்படுத்தவும்.
    • நீங்கள் சேர்க்க விரும்பும் தயாரிப்பின் பார்கோடை ஸ்கேன் செய்ய உங்கள் சாதனத்தின் கேமராவைப் பயன்படுத்த, பார்கோடை ஸ்கேன் செய் என்பதைத் தட்டவும்.
  4. தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளை Quick Sale-இல் சேர்க்க, முடிந்தது என்பதைத் தட்டவும்.

  5. விருப்பத்திற்குரியது: Quick Sale-இல் தயாரிப்புகள் சேர்க்கப்பட்ட பிறகு, Quick Sale-இல் உள்ள எந்தவொரு தயாரிப்பையும் புதுப்பிக்க அதைத் தட்டலாம்:

    • நீங்கள் சேர்க்க விரும்பும் உருப்படிகளின் எண்ணிக்கையைத் தனிப்பயனாக்க, + அல்லது - ஐகான்களைத் தட்டவும். நீங்கள் உருப்படிகளின் எண்ணிக்கையைத் தட்டி, எண்ணிக்கையை மேனுவலாகவும் தனிப்பயனாக்கலாம். பின்னர், மாற்றங்களைப் பயன்படுத்த முடிந்தது என்பதைத் தட்டவும்.
    • Quick Sale இலிருந்து உருப்படியை அகற்ற அகற்று என்பதைத் தட்டவும்.

உங்கள் Quick Sale இல் பிரத்தியேகத் தொகைகளைச் சேர்த்தல்

ஒரு Quick Sale இல் நீங்கள் எத்தனை பிரத்தியேகத் தொகைகளையும் சேர்க்கலாம். பிரத்தியேகத் தொகையைச் சேர்ப்பதன் மூலம் ஒருமுறை கட்டணங்களைச் சேர்க்க முடியும் அல்லது வழக்கமாக விற்காத ஓர் உருப்படியை விற்க முடியும்.

படிகள்:

  1. Shopify செயலியில், Quick Sale-ஐத் தொடங்கவும்:

    1. மெனு என்பதைத் தட்டி, பின்னர் முதன்மை மெனுவில் Quick Sale என்பதைத் தட்டவும்.
    2. விருப்பத்திற்குரியது: Quick Sale-க்காக வேறு இடத்தைத் தேர்ந்தெடுக்க, சரக்கு இருப்பு மெனுவைத் தட்டவும்.
  2. பிரத்தியேகத் தொகை என்பதைத் தட்டவும்.

  3. Quick Sale இல் நீங்கள் சேர்க்க விரும்பும் பிரத்தியேகத் தொகையை உள்ளமைக்கவும்:

    • விருப்பத்தேர்வு: பிரத்தியேகத் தொகைக்கு ஒரு பெயரைச் சேர்க்க, பெயர் புலத்தைத் தட்டவும். நீங்கள் பெயரிடாவிட்டால், இயல்புநிலையாக "பிரத்தியேகத் தொகை" என இருக்கும்.
    • பிரத்தியேக விலையைப் பயன்படுத்த, விலைப் புலத்தைத் தட்டவும்.
  4. Quick Sale இல் பிரத்தியேகத் தொகையைச் சேர்க்க, சேர் என்பதைத் தட்டவும்.

  5. விருப்பத்தேர்வு: Quick Sale இல் பிரத்தியேகத் தொகைகளைச் சேர்த்த பிறகு, அதைப் புதுப்பிக்க Quick Sale இல் உள்ள எந்தவொரு பிரத்தியேகத் தொகையையும் தட்டலாம்:

    • மதிப்புகளைப் புதுப்பிக்க, பெயர் அல்லது விலைப் புலங்களைத் தட்டவும். பிறகு, மாற்றங்களைப் பயன்படுத்த முடிந்தது என்பதைத் தட்டவும்.
    • Quick Sale இலிருந்து பிரத்தியேகத் தொகையை அகற்ற, அகற்று என்பதைத் தட்டவும்.

Quick Sale இல் தள்ளுபடியைப் பயன்படுத்துதல்

முழு Quick Sale-க்கும் பொருந்தும் தொகைக் குறைப்பையோ சதவீதத் தள்ளுபடிகளையோ நீங்கள் கைமுறையாகச் சேர்க்கலாம். Quick Sale-க்கு தானியங்கு தள்ளுபடிகள் பொருந்தாது; மேலும் தள்ளுபடிக் குறியீடுகள் அல்லது பரிவர்த்தனையில் குறிப்பிட்ட வரிசை உருப்படிகளுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய தள்ளுபடிகள் போன்ற பிற வகை தள்ளுபடிகளையும் நீங்கள் பயன்படுத்த முடியாது.

ஒரு Quick Sale-க்கு நீங்கள் பல கைமுறைத் தள்ளுபடிகளைப் பயன்படுத்தலாம். எனினும், ஒரு Quick Sale-க்குப் பல தள்ளுபடிகளைப் பயன்படுத்தும்போது, அவை வரிசையாகவே செயலாக்கப்படும். அதாவது முந்தைய தள்ளுபடியைப் பயன்படுத்திய பிறகு வரும் Quick Sale விலையின் அடிப்படையில்தான் ஒவ்வொரு தள்ளுபடியும் கணக்கிடப்படும்.

உதாரணமாக, நீங்கள் $100-க்கு ஒரு Quick Sale-ஐ உருவாக்கி, 10% தள்ளுபடியையும் அதன் பிறகு $10 தொகைக் குறைப்பையும் பயன்படுத்தினால், இறுதி விலை $80 ஆக இருக்கும். ஏனெனில், இங்கு (100 - 10%) - 10 = 80 என்ற சூத்திரமே பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், நீங்கள் $10 தொகைக் குறைப்பைப் பயன்படுத்தி, பின்னர் 10% தள்ளுபடியைப் பயன்படுத்தினால் (நேர்மாறான வரிசை), இறுதி விலை $81 ஆக இருக்கும். ஏனெனில் $10 தொகைக் குறைப்பைப் பயன்படுத்தியதால் கிடைத்த புதிய மொத்தத் தொகையான $90-க்கே 10% தள்ளுபடி பொருந்தும். இங்கு (100 - 10) - 10% = 81 என்ற சூத்திரம் பயன்படுத்தப்படும்.

மற்றொரு உதாரணமாக, ஒரு Quick Sale-க்கு 10% தள்ளுபடியையும் பிறகு 20% தள்ளுபடியையும் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் இறுதி விலையும், ஒரேயடியாக 30% தள்ளுபடியைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் இறுதி விலையும் ஒன்றாக இருக்காது. ஒரு Quick Sale-இன் விலை $100 ஆக இருந்து, இரண்டு வேறுபட்ட சதவீதத் தள்ளுபடிகளைப் பயன்படுத்தினால், இறுதி விலை $72 ஆக இருக்கும்; ஏனெனில் (100 - 10%) - 20% = 72. $100 Quick Sale-க்கு ஒரேயடியாக 30% தள்ளுபடியைப் பயன்படுத்தினால் இறுதி விலை $70 ஆக இருக்கும்; ஏனெனில் 100 - 30% = 70.

Quick Sale-க்குத் தள்ளுபடிகளைப் பயன்படுத்திய பிறகு அவற்றை உங்களால் மறுவரிசைப்படுத்த முடியாது.

படிகள்:

  1. Shopify செயலியில், Quick Sale-ஐத் தொடங்கவும்:

    1. மெனு என்பதைத் தட்டி, பின்னர் முதன்மை மெனுவில் Quick Sale என்பதைத் தட்டவும்.
    2. விருப்பத்திற்குரியது: Quick Sale-க்காக வேறு இடத்தைத் தேர்ந்தெடுக்க, சரக்கு இருப்பு மெனுவைத் தட்டவும்.
  2. மேலும் செயல்கள் என்பதைத் தட்டி, பின்வரும் தள்ளுபடி மாற்றிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:

    • சதவீதத் தள்ளுபடியைப் பயன்படுத்த, % தள்ளுபடியைப் பயன்படுத்து என்பதைத் தட்டவும்.
    • தொகைக் குறைப்புத் தள்ளுபடியைப் பயன்படுத்த, $ தள்ளுபடியைப் பயன்படுத்து என்பதைத் தட்டவும்.
  3. Quick Sale இல் நீங்கள் சேர்க்க விரும்பும் தள்ளுபடியை உள்ளமைக்கவும்:

    • விருப்பத்தேர்வு: தள்ளுபடிக்குப் பெயரிட, பெயர் புலத்தைத் தட்டவும். நீங்கள் பெயரிடாவிட்டால், இயல்புநிலையாக "பிரத்தியேகத் தொகை" என இருக்கும்.
    • பிரத்தியேகத் தொகைக் குறைப்பையோ சதவீத மதிப்பையோ பயன்படுத்த, தள்ளுபடிப் புலத்தைத் தட்டவும்.
  4. Quick Sale இல் தள்ளுபடியைச் சேர்க்க, சேர் என்பதைத் தட்டவும்.

  5. விருப்பத்தேர்வு: Quick Sale இல் தள்ளுபடியைச் சேர்த்த பிறகு, அதைப் புதுப்பிக்க Quick Sale இல் உள்ள அந்தத் தள்ளுபடியைத் தட்டலாம்:

    • மதிப்புகளைப் புதுப்பிக்க, பெயர் அல்லது தள்ளுபடிப் புலத்தைத் தட்டவும். பிறகு, மாற்றங்களைப் பயன்படுத்த முடிந்தது என்பதைத் தட்டவும்.
    • Quick Sale இலிருந்து தள்ளுபடியை அகற்ற, அகற்று என்பதைத் தட்டவும்.

Quick Sale இல் ஷிப்பிங்கைச் சேர்த்தல்

வாடிக்கையாளர் இப்போதே பேமெண்ட் செய்துவிட்டு, தன் உருப்படிகளைத் தன் முகவரிக்கு அனுப்புமாறு விரும்பும்போது, Quick Sale இல் நீங்கள் ஷிப்பிங்கைச் சேர்க்கலாம். நீங்கள் ஒரு பிரத்தியேக ஷிப்பிங் கட்டணத்தை உருவாக்கலாம்; அல்லது உங்கள் Shopify நிர்வாகியில் நீங்கள் அமைத்துள்ள ஷிப்பிங் கேரியர்கள் மற்றும் அமைப்புகளின் அடிப்படையில், கிடைக்கக்கூடிய ஷிப்பிங் கட்டணங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

நீங்கள் ஷிப்பிங்கைச் சேர்க்கும்போது, Quick Sale இல் ஷிப்பிங் வரிசை உருப்படி சேர்க்கப்படும். Quick Sale-இலேயே நீங்கள் ஷிப்பிங் முகவரியைக் கைமுறையாக உள்ளமைத்து ஷிப்பிங் கட்டணத்தைத் தேர்ந்தெடுக்கலாம்; அல்லது ஷிப்பிங் விவரங்களை நிரப்பாமலும் விடலாம். ஷிப்பிங் விவரங்களை நீங்கள் காலியாக விட்டால், ஆர்டர் சுருக்கத்தில் உள்ள ஷிப்பிங் கட்டணத்தில் இன்னும் கணக்கிடப்படவில்லை என்ற செய்தி காண்பிக்கப்படும். இன்னும் கணக்கிடப்படாத ஷிப்பிங் விவரங்களுடன் உங்கள் வாடிக்கையாளருக்கு நீங்கள் ஒரு பேமெண்ட் இணைப்பை அனுப்பலாம். ஆன்லைன் ஆர்டருக்கான Shopify Checkout அனுபவத்தைப் போலவே, அவர்களும் தங்களுக்கான ஷிப்பிங் விவரங்களைச் சமர்ப்பித்து, ஷிப்பிங் கட்டணத்தைத் தேர்ந்தெடுக்கலாம். பேமெண்ட் இணைப்பை அனுப்பும் முன்பே Quick Sale இல் ஷிப்பிங் விவரங்களை நீங்கள் கைமுறையாக உள்ளமைத்துவிட்டால், உங்கள் வாடிக்கையாளரால் பேமெண்ட்டின்போது ஷிப்பிங் கட்டணத்தைக் கைமுறையாகத் தேர்ந்தெடுக்க முடியாது.

Quick Sale முடிவடைந்து, வாடிக்கையாளருக்கு ஆர்டரை அனுப்ப நீங்கள் தயாரான பிறகு, ஆன்லைன் ஆர்டரை நிறைவேற்றுவதைப் போலவே உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள ஆர்டர்கள் பக்கத்திலிருந்து இந்த ஆர்டரையும் நிறைவேற்றலாம். ஆர்டர்களை நிறைவேற்றுவது குறித்து மேலும் அறிக.

Quick Sale இல் ஷிப்பிங்கைச் சேர்ப்பதற்கு முன், பின்வரும் விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவும்:

  • நீங்கள் Quick Sale இல் சேர்க்கும் முகவரி, நீங்கள் ஆதரிக்கும் ஷிப்பிங் மண்டலங்களுக்கு வெளியே இருந்தால், ஷிப்பிங் வரிசை உருப்படியில் முகவரி மண்டலத்திற்கு வெளியே உள்ளது என்ற எச்சரிக்கை காண்பிக்கப்படும். இருப்பினும் உங்களால் Quick Sale-ஐ முடிக்க முடியும். ஆனால் கேரியரால் கணக்கிடப்பட்ட விருப்பத்தேர்வுகள் எதுவும் கிடைக்காததால், நீங்கள் பிரத்தியேக ஷிப்பிங் கட்டணத்தைச் சேர்க்க வேண்டும்.
  • உங்கள் Quick Sale-க்கு ஒரு பிரத்தியேகத் தொகையைச் சேர்த்தால், பிரத்தியேகத் தொகை வரிசை உருப்படிக்கான ஷிப்பிங் கட்டணமானது, உங்களின் இயல்புநிலைப் பொதி அமைப்புகளின் அடிப்படையில் கணக்கிடப்படும். அதற்குப் பதிலாக, பொருத்தமான ஷிப்பிங் தொகையைக் கைமுறையாக உள்ளிடுவதற்காக, நீங்கள் பிரத்தியேகக் கட்டணத்தையும் சேர்க்கலாம்.
  • வாடிக்கையாளர் தனது ஆர்டருக்கு ரொக்கமாகவோ Tap to Pay மூலமாகவோ பேமெண்ட் செய்ய விரும்பினால், நீங்கள் ஷிப்பிங் முகவரியைக் கைமுறையாக உள்ளமைத்து, ஷிப்பிங் கட்டணத்தை முன்கூட்டியே தேர்ந்தெடுக்க வேண்டும். ரொக்கம் அல்லது Tap to Pay மூலம் பேமெண்ட் செய்யும்போது ஷிப்பிங் விவரங்களைக் காலியாக விட முடியாது.

படிகள்:

  1. Shopify செயலியில், Quick Sale-ஐத் தொடங்கவும்:

    1. மெனு என்பதைத் தட்டி, பின்னர் முதன்மை மெனுவில் Quick Sale என்பதைத் தட்டவும்.
    2. விருப்பத்திற்குரியது: Quick Sale-க்காக வேறு இடத்தைத் தேர்ந்தெடுக்க, சரக்கு இருப்பு மெனுவைத் தட்டவும்.
  2. மேலும் செயல்கள் என்பதைத் தட்டி, ஷிப்பிங்கைச் சேர் என்பதைத் தட்டவும்.

  3. விருப்பத்தேர்வு: ஷிப்பிங் விவரங்களைக் கைமுறையாக உள்ளமைக்க, Quick Sale இல் உள்ள ஷிப்பிங் வரிசை உருப்படியைத் தட்டவும்:

    1. முகவரி தாவலில், முதல் மற்றும் கடைசிப் பெயர், தெரு முகவரி, அஞ்சல் குறியீடு போன்ற ஷிப்பிங் முகவரி விவரங்களைச் சேர்க்கவும். உங்களிடம் தற்போதுள்ள ஷிப்பிங் விருப்பத்தேர்வுகளின் அடிப்படையில், அந்த முகவரிக்குக் கிடைக்கக்கூடிய மிகக் குறைந்த கட்டணமாக ஷிப்பிங் கட்டணம் புதுப்பிக்கப்படும்.
    2. விருப்பத்தேர்வு: முறை தாவலில், கேரியரால் கணக்கிடப்பட்ட ஷிப்பிங் கட்டணத்தைத் தேர்ந்தெடுக்கவும்; அல்லது பிரத்தியேக ஷிப்பிங் கட்டணத்தையும் பிரத்தியேகக் கட்டணப் பெயரையும் சேர்க்க பிரத்தியேகக் கட்டணம் என்பதைத் தட்டவும்.
    3. முடிந்தது என்பதைத் தட்டவும்.
  4. விருப்பத்தேர்வு: Quick Sale இல் ஷிப்பிங்கைச் சேர்த்த பிறகு, அதைப் புதுப்பிக்க Quick Sale இல் உள்ள ஷிப்பிங் வரிசை உருப்படியைத் தட்டலாம்:

    • முகவரி அல்லது ஷிப்பிங் முறை விவரங்களைப் புதுப்பிக்க, ஷிப்பிங் வரிசை உருப்படியைத் தட்டவும். பிறகு, மாற்றங்களைப் பயன்படுத்த முடிந்தது என்பதைத் தட்டவும்.
    • முகவரி தாவலில், Quick Sale இலிருந்து ஷிப்பிங் வரிசை உருப்படியை அகற்ற நீக்கு ஐகானைத் தட்டவும்.

உங்கள் Quick Sale-இல் வரிகளைச் செயலாக்கவும் அல்லது முடக்கவும்

முழு Quick Sale-க்கும் பொருந்தும் வரிகளை நீங்கள் மேனுவலாகத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது தேர்வை நீக்கலாம். Quick Sale-இல் உள்ள குறிப்பிட்ட வரிசை உருப்படிகளுக்குப் பொருந்தும் வரிகளை உங்களால் நிர்வகிக்க முடியாது. Quick Sale-இல் காண்பிக்கப்படும் வரி வீதங்கள், Quick Sale-ஐ நீங்கள் தொடங்கியபோது தேர்ந்தெடுத்த இடம் மற்றும் உங்கள் Shopify நிர்வாகியில் நீங்கள் அமைத்துள்ள வரி அமைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். Quick Sale-இல் நீங்கள் ஷிப்பிங்கைச் சேர்த்துள்ளீர்களா என்பதன் அடிப்படையிலும் இது மீண்டும் கணக்கிடப்படுகிறது. Shopify-ஐப் பயன்படுத்தி வரிகளை வசூலிப்பது குறித்து மேலும் அறிக.

உங்கள் வாடிக்கையாளர்களிடம் சரியான விற்பனை வரி வீதங்களை வசூலிப்பதையும் வரிகளைச் சரியாகத் தாக்கல் செய்து பணம் அனுப்புவதையும் உறுதிசெய்ய, உள்ளூர் வரி ஆணையம் அல்லது வரி கணக்காளரைத் தொடர்புகொண்டு எப்போதும் சரிபார்க்க வேண்டும்.

படிகள்:

  1. Shopify செயலியில், Quick Sale-ஐத் தொடங்கவும்:

    1. மெனு என்பதைத் தட்டி, பின்னர் முதன்மை மெனுவில் Quick Sale என்பதைத் தட்டவும்.
    2. விருப்பத்திற்குரியது: Quick Sale-க்காக வேறு இடத்தைத் தேர்ந்தெடுக்க, சரக்கு இருப்பு மெனுவைத் தட்டவும்.
  2. உங்கள் Quick Sale-இல் தயாரிப்புகளை அல்லது தனிப்பயன் தொகைகளைச் சேர்க்கவும்.

  3. Quick Sale சுருக்கத்தில், வரிகள் என்பதற்கு அடுத்துள்ள Edit என்பதைத் தட்டி, ஏதேனும் வரி வீதங்களைத் தேர்ந்தெடுத்து அல்லது தேர்வை நீக்கி அவற்றை Quick Sale-இல் செயல்படுத்தவும் அல்லது அகற்றவும்.

Quick Sale-இல் ஒரு குறிப்பைச் சேர்க்கவும்

விற்பனை குறித்த குறிப்பிட்ட விவரங்களைப் பதிவுசெய்ய அல்லது வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளைச் சேர்க்க, Quick Sale-இல் நீங்கள் ஒரு குறிப்பைச் சேர்க்கலாம். குறிப்புகள் வாடிக்கையாளருக்குக் காட்டப்படாது, எனவே நீங்களும் உங்கள் பணியாளர்களும் மட்டுமே Shopify நிர்வாகியிலிருந்து குறிப்பை அணுக முடியும்.

Quick Sale குறிப்புகளுக்கு 5000 எழுத்துகள் என்ற வரம்பு உள்ளது.

படிகள்:

  1. Shopify செயலியில், Quick Sale-ஐத் தொடங்கவும்:

    1. மெனு என்பதைத் தட்டி, பின்னர் முதன்மை மெனுவில் Quick Sale என்பதைத் தட்டவும்.
    2. விருப்பத்திற்குரியது: Quick Sale-க்காக வேறு இடத்தைத் தேர்ந்தெடுக்க, சரக்கு இருப்பு மெனுவைத் தட்டவும்.
  2. More Actions > குறிப்பைச் சேர் என்பதைத் தட்டவும்.

  3. குறிப்பு உரையாடல் பெட்டியில், குறிப்பில் நீங்கள் சேர்க்க விரும்பும் உள்ளடக்கத்தை உள்ளிடவும்.

  4. Quick Sale-இல் குறிப்பைச் சேர்க்க முடிந்தது என்பதைத் தட்டவும்.

  5. விருப்பத்தேர்வு: Quick Sale-இல் குறிப்பு சேர்க்கப்பட்ட பிறகு, அதைப் புதுப்பிக்க Quick Sale-இல் உள்ள குறிப்பைத் தட்டலாம்:

    • உள்ளடக்கத்தைப் புதுப்பிக்க குறிப்பைத் தட்டவும். பிறகு, மாற்றங்களைச் செயல்படுத்த முடிந்தது என்பதைத் தட்டவும்.
    • Quick Sale-இலிருந்து குறிப்பை அகற்ற குறிப்பை அகற்று என்பதைத் தட்டவும்.

Quick Sale-இல் உள்ள கார்ட்டைக் காலியாக்கவும்

Quick Sale-ஐ வெற்றுக் நிலைக்கு மீட்டமைக்க, செயல்பாட்டில் இருக்கும் கார்ட்டை நீங்கள் எந்த நேரத்திலும் காலியாக்கலாம். இந்தச் செயல்முறையானது Quick Sale-இலிருந்து அனைத்துத் தயாரிப்புகள், தனிப்பயன் தொகைகள் மற்றும் கார்ட்டில் மாற்றியமைக்கப்பட்ட தள்ளுபடிகள் அல்லது குறிப்புகள் போன்றவற்றை அகற்றும். காலியாக்கப்பட்ட கார்ட்டை மீட்க முடியாது.

படிகள்:

  1. Shopify செயலியில், Quick Sale-ஐத் தொடங்கவும்:

    1. மெனு என்பதைத் தட்டி, பின்னர் முதன்மை மெனுவில் Quick Sale என்பதைத் தட்டவும்.
    2. விருப்பத்திற்குரியது: Quick Sale-க்காக வேறு இடத்தைத் தேர்ந்தெடுக்க, சரக்கு இருப்பு மெனுவைத் தட்டவும்.
  2. உங்கள் Quick Sale-இல் தயாரிப்புகளை அல்லது தனிப்பயன் தொகைகளைச் சேர்ப்பது போன்ற தனிப்பயனாக்கங்களைச் செய்யுங்கள்.

  3. கார்ட்டைக் காலியாக்க, More Actions > கார்ட்டைக் காலியாக்கு என்பதைத் தட்டவும்.

  4. காலியாக்கு என்பதைத் தட்டி, காலியாக்குவதை உறுதிப்படுத்தவும்.

உங்கள் Quick Sale-இல் டிப்ஸ்களைச் செயலாக்கவும் அல்லது முடக்கவும்

பேமெண்ட்டைச் செயலாக்குவதற்கு முன், வாடிக்கையாளர் Quick Sale-இல் டிப்ஸைச் சேர்ப்பதற்கான விருப்பத்தைச் செயலாக்கலாம் அல்லது முடக்கலாம். இயல்புநிலையாக, Quick Sale-ஐ உருவாக்கும்போது டிப்ஸ் முடக்கப்பட்டு, ஆஃப் எனக் காண்பிக்கப்படும். எந்த நேரத்திலும் Quick Sales-க்கு டிப்ஸைச் செயலாக்கலாம். அத்துடன் நீங்கள் அமைப்பை முடக்கும் வரை, எதிர்காலத்தில் செய்யப்படும் அனைத்து Quick Sales-க்கும் டிப்ஸ் விருப்பம் செயலாக்கத்திலேயே இருக்கும்.

டிப்ஸ் அமைப்பு செயலாக்கத்தில் இருக்கும்போது, பேமெண்ட்டின்போது வாடிக்கையாளருக்குக் காண்பிக்கப்படும் முன்பே அமைக்கப்பட்ட 3 டிப்ஸ் சதவீத விருப்பங்களை நீங்கள் தனிப்பயனாக்கலாம். இயல்புநிலையாக, 15%, 18% மற்றும் 20% ஆகியவை முன்பே அமைக்கப்பட்ட டிப்ஸ் விருப்பங்களாக இருக்கும். 3 தனிப்பயன் டிப்ஸ் சதவீத விருப்பங்கள், டிப்ஸ் அமைப்புகளில் அவை எவ்வாறு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன என்பதன் அடிப்படையில் எண்கள் வரிசையில் உங்கள் வாடிக்கையாளருக்குக் காண்பிக்கப்படும்; பேமெண்ட்டின்போது அவை மிகக் குறைந்த மதிப்பிலிருந்து அதிக மதிப்பு என்ற வரிசையில் தானாகவே மாறாது. எடுத்துக்காட்டாக, விருப்பம் 1 முதலில் காண்பிக்கப்படும், விருப்பம் 2 இரண்டாவதாகக் காண்பிக்கப்படும் மற்றும் விருப்பம் 3 மூன்றாவதாகக் காண்பிக்கப்படும்.

நீங்கள் தேர்ந்தெடுத்த முன்பே அமைக்கப்பட்ட 3 சதவீத விருப்பங்களுடன், பேமெண்ட்டின்போது தனிப்பயன் டிப்ஸைச் சேர்ப்பதற்கான விருப்பமும் டிப்ஸ் வேண்டாம் என்ற விருப்பமும் வாடிக்கையாளருக்குக் காண்பிக்கப்படும். Quick Sale-க்கு டிப்ஸ் அமைப்பு செயலாக்கத்தில் இருக்கும்போது, இந்தக் கூடுதல் விருப்பங்களை மறைக்க முடியாது.

படிகள்:

  1. Shopify செயலியில், Quick Sale-ஐத் தொடங்கவும்:

    1. மெனு என்பதைத் தட்டி, பின்னர் முதன்மை மெனுவில் Quick Sale என்பதைத் தட்டவும்.
    2. விருப்பத்திற்குரியது: Quick Sale-க்காக வேறு இடத்தைத் தேர்ந்தெடுக்க, சரக்கு இருப்பு மெனுவைத் தட்டவும்.
  2. More Actions > டிப்ஸ் என்பதைத் தட்டவும்.

  3. உங்கள் வாடிக்கையாளருக்கான டிப்ஸ் அமைப்பைச் செயலாக்க அல்லது முடக்க டிப்ஸை இயக்கு அமைப்பைத் தட்டவும்.

  4. விருப்பத்தேர்வு: முன்பே அமைக்கப்பட்ட வெவ்வேறு டிப்ஸ் விருப்பங்களைத் தட்டி, பேமெண்ட்டின்போது உங்கள் வாடிக்கையாளர்களுக்குக் காண்பிக்க வெவ்வேறு சதவீத மதிப்புகளை உள்ளிடவும்.

  5. உங்கள் மாற்றங்களைச் சேமிக்க, முடிந்தது என்பதைத் தட்டவும்.