Shopify செயலியில் Quick Sale-களை நிர்வகித்தல்

உங்களின் Quick Sale வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் அல்லது SMS ரசீதுகளை வழங்கவும், கட்டணம் செலுத்தப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள Quick Sale ஆர்டர்களை மதிப்பாய்வு செய்யவும், தேவைப்படும்போது பணத்தைத் திரும்பப்பெறவும் Shopify செயலியைப் பயன்படுத்தலாம். டெஸ்க்டாப் சாதனத்தில் Shopify POS அல்லது Shopify நிர்வாகியைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லாமலேயே, வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கவும் Quick Sale-களை நிர்வகிக்கவும் இந்தக் கருவிகள் உங்களுக்கு உதவுகின்றன.

Quick Sale-க்காக உங்கள் வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் அல்லது SMS ரசீதை அனுப்புதல்

Quick Sale-க்கான ரசீதை உங்கள் வாடிக்கையாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது ஃபோன் எண்ணிற்கு SMS மெசேஜாக அனுப்பலாம். வாடிக்கையாளரின் மின்னஞ்சல் முகவரி அல்லது ஃபோன் எண்ணிற்கு ரசீதை அனுப்புவதன் மூலம், வாடிக்கையாளர் சுயவிவரம் ஏற்கனவே இல்லாதபோது அது புதிதாக உருவாக்கப்பட்டு, அந்த Quick Sale உடன் இணைக்கப்படும்.

ரசீதில் காட்டப்படும் தகவலை உங்களால் தனிப்பயனாக்க முடியாது.

படிகள்:

  1. Shopify செயலியில், ஒரு Quick Sale-ஐத் தொடங்கவும்:

    1. மெனு என்பதைத் தட்டி, பிரதான மெனுவில் Quick Sale என்பதைத் தட்டவும்.
    2. விருப்பத்தேர்வு: Quick Sale-க்கு வேறொரு இடத்தைத் தேர்ந்தெடுக்க, சரக்கு இருப்பு மெனுவைத் தட்டவும்.
  2. தயாரிப்புகள் அல்லது தனிப்பயன் தொகைகளைச் சேர்த்தல் போன்ற ஏதேனும் தனிப்பயனாக்கங்களை உங்கள் Quick Sale-ல் மேற்கொள்ளவும்.

  3. உங்கள் வாடிக்கையாளர் விரும்பும் கட்டண முறையைப் பயன்படுத்தி Quick Sale-க்கான பேமெண்ட்டைப் பெறவும்.

  4. ஆர்டர் உறுதிப்படுத்தல் திரையில், பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    • ரசீதை முன்னோட்டமிட, முன்னோட்டச் சாளரத்தில் காட்டப்பட்டுள்ள ரசீதைத் தட்டவும். முன்னோட்டத்திலிருந்து வெளியேற, X என்பதைத் தட்டவும்.
    • வாடிக்கையாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு ரசீதை அனுப்ப, மின்னஞ்சல் ரசீது என்பதைத் தட்டவும்.
    • வாடிக்கையாளரின் மொபைல் சாதனத்திற்கு SMS மெசேஜாக ரசீதை அனுப்ப, உரை ரசீது என்பதைத் தட்டவும்.
  5. நீங்கள் தேர்ந்தெடுக்கும் ரசீது விநியோக முறையின் அடிப்படையில், வாடிக்கையாளரின் மின்னஞ்சல் முகவரி அல்லது ஃபோன் எண்ணை உள்ளிடவும்.

  6. அனுப்பு என்பதைத் தட்டவும்.

  7. விருப்பத்தேர்வு: புதிய Quick Sale-ஐத் தொடங்க புதிய விற்பனை என்பதைத் தட்டவும்.

Quick Sale பரிவர்த்தனை வரலாற்றை மதிப்பாய்வு செய்தல்

Quick Sale அம்சத்தைப் பயன்படுத்தி, உங்களின் Quick Sale பரிவர்த்தனை வரலாற்றை எப்போது வேண்டுமானாலும் மதிப்பாய்வு செய்யலாம் மற்றும் தேடலாம். பரிவர்த்தனை வரலாறானது Quick Sale-ஆக பிளேஸ் செய்யப்பட்ட ஆர்டர்களை மட்டுமே காண்பிக்கும், மேலும் இது வெவ்வேறு சேனல்கள் மூலமாக பிளேஸ் செய்யப்பட்ட பிற ஆர்டர்கள் அனைத்தையும் தவிர்க்கும்.

பரிவர்த்தனை வரலாற்றில் 2 தாவல்கள் உள்ளன: கட்டணம் செலுத்தப்பட்டது மற்றும் நிலுவையில் உள்ள இணைப்புகள். கட்டணம் செலுத்தப்பட்டது தாவலானது பேமெண்ட்டுகள் நிறைவடைந்த Quick Sale-களைக் காண்பிக்கும், மேலும் நிலுவையில் உள்ள இணைப்புகள் தாவலானது பேமெண்ட்டுக்காகக் காத்திருக்கும் கட்டண இணைப்புகளைக் கொண்ட Quick Sale-களைக் காண்பிக்கும். நிலுவையில் உள்ள Quick Sale பேமெண்ட் செக் அவுட் செய்யப்படும்போது, அந்த Quick Sale கட்டணம் செலுத்தப்பட்டது தாவலுக்கு நகரும்.

படிகள்:

  1. Shopify செயலியில், ஒரு Quick Sale-ஐத் தொடங்கவும்:

    1. மெனு என்பதைத் தட்டி, பிரதான மெனுவில் Quick Sale என்பதைத் தட்டவும்.
    2. விருப்பத்தேர்வு: Quick Sale-க்கு வேறொரு இடத்தைத் தேர்ந்தெடுக்க, சரக்கு இருப்பு மெனுவைத் தட்டவும்.
  2. மேலும் செயல்கள் > பரிவர்த்தனைகள் என்பதைத் தட்டவும்.

  3. நீங்கள் அணுக விரும்பும் Quick Sale வரலாற்றின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்:

    • நிறைவடைந்த Quick Sale-களின் பரிவர்த்தனை வரலாற்றைக் காட்ட, கட்டணம் செலுத்தப்பட்டது என்பதைத் தட்டவும்.
    • நிலுவையில் உள்ள பேமெண்ட்டுகளுடன் கூடிய Quick Sale-களின் பரிவர்த்தனை வரலாற்றைக் காட்ட, நிலுவையில் உள்ள இணைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. விருப்பத்தேர்வு: ஆர்டரின் விவரங்களை மதிப்பாய்வு செய்ய ஒரு ஆர்டரைத் தட்டவும். கட்டணம் செலுத்தப்பட்ட ஒரு ஆர்டருக்கு, பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றையும் நீங்கள் செய்யலாம்:

Quick Sale-க்கு பணத்தைத் திரும்பப்பெறுதலை வழங்குதல்

Quick Sale அம்சத்தைப் பயன்படுத்தி அசல் ஆர்டரின் மொத்தத் தொகை அல்லது பகுதித் தொகைக்கு பணத்தைத் திரும்பப்பெறுதலை நீங்கள் வழங்கலாம். Quick Sale-களுக்கான பணத்தைத் திரும்பப்பெறுதல்கள் என்பவை, ஆன்லைன் ஸ்டோர்களுக்கான பணத்தைத் திரும்பப்பெறும் செயல்முறையின் எளிமையாக்கப்பட்ட பதிப்புகளாகும், ஏனெனில் இவற்றில் ஷிப்பிங் அல்லது வரி மற்றும் சுங்க வரிக் கட்டணங்களை மட்டும் குறிப்பாகத் திரும்பப்பெறுவதற்கான விருப்பத்தேர்வு இருக்காது. மேலும், Quick Sale ஒன்றின்போது கிஃப்ட் கார்டு அல்லது ஸ்டோர் கிரெடிட்டுக்கு பணத்தைத் திரும்பப் பெற முடியாது.

ஓர் உருப்படிக்குப் பணம் திரும்பப்பெறப்பட்ட பிறகு, அதற்கான ரிட்டர்னை உங்களால் தொடங்க முடியாது. ரிட்டர்ன்கள் மற்றும் பரிமாற்றங்கள் பற்றி மேலும் அறிக.

படிகள்:

  1. Shopify செயலியில், ஒரு Quick Sale-ஐத் தொடங்கவும்:

    1. மெனு என்பதைத் தட்டி, பிரதான மெனுவில் Quick Sale என்பதைத் தட்டவும்.
    2. விருப்பத்தேர்வு: Quick Sale-க்கு வேறொரு இடத்தைத் தேர்ந்தெடுக்க, சரக்கு இருப்பு மெனுவைத் தட்டவும்.
  2. மேலும் செயல்கள் > பரிவர்த்தனைகள் என்பதைத் தட்டவும்.

  3. நீங்கள் பணத்தைத் திரும்பப்பெற விரும்பும் ஆர்டரைத் தட்டவும்.

  4. பணத்தைத் திரும்பப்பெறு என்பதைத் தட்டவும்.

  5. உரையாடல் பெட்டியில், பணத்தைத் திரும்பப்பெறும் விவரங்களை உள்ளமைக்கவும்:

    1. விருப்பத்தேர்வு: நீங்கள் பணத்தைத் திரும்பப்பெற விரும்பும் உருப்படிகளின் அளவை உள்ளிடவும்.
    2. விருப்பத்தேர்வு: உருப்படிகளை மீளிருப்பு செய்ய விரும்பும் இடத்தை மாற்றவும்.
    3. விருப்பத்தேர்வு: பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான காரணம் புலத்தில், பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான காரணத்தை உள்ளிடவும். பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான காரணம் உங்கள் வாடிக்கையாளருக்குக் காட்டப்படாது.
    4. விருப்பத்தேர்வு: கட்டண முறைப் புலத்தில், வாடிக்கையாளருக்கு நீங்கள் திரும்பப்பெற விரும்பும் ஆர்டரின் மொத்த மதிப்பைச் சரிசெய்யவும்.
    5. பணத்தைத் திரும்பப்பெறு என்பதைத் தட்டவும்.
  6. விருப்பத்தேர்வு: பணத்தைத் திரும்பப்பெறுதலைப் பிரதிபலிக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்ட மின்னஞ்சல் அல்லது SMS ரசீதை உங்கள் வாடிக்கையாளருக்கு மீண்டும் அனுப்பவும்.