Shopify Flow இல் அட்டவணைகள், தரவைப் பெறுதல் மற்றும் லூப்பிங் பணிப்பாய்வுகள்
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஒரு நிகழ்வு நடக்கும்போது இயங்கும் தூண்டுதலுடன் பல நிபந்தனைகளையும் செயல்களையும் இணைப்பதன் மூலம் நீங்கள் ஒரு பணிப்பாய்வை உருவாக்கலாம். மிகவும் சிக்கலான பயன்பாட்டு நிகழ்வுகளில், நீங்கள் செய்ய வேண்டியதற்கான எந்தத் தூண்டுதலும் இல்லை என்பதை நீங்கள் கண்டறியலாம், குறிப்பிட்ட நேரத்தில் அது இயங்க வேண்டியிருக்கலாம் அல்லது தரவுகளின் பட்டியலுடன் நீங்கள் வேலை செய்ய வேண்டியிருக்கலாம். இந்தச் சந்தர்ப்பங்களில், மேம்பட்ட பணிப்பாய்வுகளை உருவாக்கத் திட்டமிடப்பட்ட நேரத் தூண்டுதல்கள், தரவைப் பெறும் செயல்கள் மற்றும் லூப்களைப் பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக, நிறைவேற்றப்படாத ஆர்டர்களின் தினசரிச் சுருக்கம் உங்களுக்குத் தேவை என வைத்துக்கொள்வோம். இந்த அம்சங்களின் குழுவுடன், ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இயங்கும், அந்த ஆர்டர்களைப் பெறும், பின்னர் அவற்றின் சுருக்கத்தை உங்களுக்கு அனுப்பும் பணிப்பாய்வை நீங்கள் இயக்கலாம். இந்தத் தூண்டுதல்கள் மற்றும் செயல்களைப் பயன்படுத்தும் பல எடுத்துக்காட்டுகள் மற்றும் வார்ப்புருக்களை நீங்கள் ஆராயலாம்.
இந்தப் பக்கத்தில்
திட்டமிடப்பட்ட நேரத் தூண்டுதல்
ஒரு நிகழ்வின் காரணமாகப் பணிப்பாய்வைத் தொடங்குவதற்குப் பதிலாக, திட்டமிடப்பட்ட நேரம் என்ற தூண்டுதல், நீங்கள் குறிப்பிடும் குறிப்பிட்ட நேரம் மற்றும் தேதியில் ஒரு பணிப்பாய்வைத் தொடங்குகிறது. மணிநேரம், தினசரி, வாராந்திரம் அல்லது மாதாந்திரம் எனத் திரும்பத் திரும்ப நிகழும் வகையிலும் நீங்கள் பணிப்பாய்வைத் திட்டமிடலாம். ஒரு திட்டமிடலில் இருந்து இயங்குவதன் விளைவாக, வாடிக்கையாளர்கள், ஆர்டர்கள் அல்லது தயாரிப்புகள் போன்ற தரவைப் பயன்படுத்த, அந்தத் தரவைப் பெறுவதற்கான ஒரு செயலை நீங்கள் பயன்படுத்த வேண்டும். தரவைப் பெறு என்ற செயல்களைப் பயன்படுத்துவதன் மூலம் இதை நீங்கள் செய்யலாம்.
திட்டமிடப்பட்ட நேரத் தூண்டுதல் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை என அடிக்கடி இயங்கலாம்.
தரவைப் பெறுதல் செயல்கள்
பெரும்பாலான செயல்கள் உங்கள் ஸ்டோரில் ஏதேனும் மாற்றத்தைச் செய்யும், எடுத்துக்காட்டாக, வாடிக்கையாளருக்கு டேக்குகளைச் சேர்ப்பது அல்லது வாடிக்கையாளருக்குப் புஷ் அறிவிப்பை அனுப்புமாறு செயலிக்கு அறிவுறுத்துவது போன்ற கட்டளையை ஒரு செயலிக்கு அனுப்புவது.
Flow இல் பயன்படுத்துவதற்காக தரவைப் பெறு செயல்கள் உங்கள் ஸ்டோரிலிருந்து தரவைப் பெறுகின்றன. இந்தச் செயல்கள், கடந்த நாளில் புதுப்பிக்கப்பட்டவற்றை மட்டும் பெறுவது போன்ற வடிப்பான்களின் தொகுப்புடன் ஒரு வினவலை அழைக்கின்றன. இந்தச் செயல், அந்தத் தரவுடன் பொருந்தும் தரவின் பட்டியலை வழங்கும். எடுத்துக்காட்டாக, ஆர்டர் தரவைப் பெறு செயல் Admin API இல் உள்ள ஆர்டர் வினவலை அழைக்கும் மற்றும் உங்கள் வினவலுடன் பொருந்தும் ஆர்டர்களின் பட்டியலை வழங்கும்.
தரவைப் பெறு செயல்கள், 100 உருப்படிகள் வரை கொண்ட பட்டியல்களில் மட்டுமே இயங்கும்.
உங்கள் பணிப்பாய்வில் பயன்படுத்த, பின்வரும் செயல்கள் உங்கள் ஸ்டோரிலிருந்து தகவலை மீட்டெடுக்கின்றன. தரவை எவ்வாறு வடிகட்டுவது மற்றும் எந்தத் தரவு வழங்கப்படுகிறது என்பது குறித்த விவரங்களுக்கு ஒவ்வொரு செயலையும் பார்க்கவும்:
- ரொக்கத்தின் நகர்வைத் தடமறிதல் அமர்வுத் தரவைப் பெறு
- சேகரிப்புத் தரவைப் பெறு
- நிறுவனத் தரவைப் பெறு
- நிறுவனத்தின் இருப்பிடத் தரவைப் பெறு
- வாடிக்கையாளர் தரவைப் பெறு
- தள்ளுபடித் தரவைப் பெறு
- வரைவு ஆர்டர் தரவைப் பெறு
- நிறைவேற்றல் ஆர்டர் தரவைப் பெறு
- கிஃப்ட் கார்டு தரவைப் பெறு
- இடத் தரவைப் பெறு
- மெட்டாஆப்ஜெக்ட் உள்ளீடுகளைப் பெறு
- மெட்டாஆப்ஜெக்ட் உள்ளீட்டைப் பெறு
- ஆர்டர் தரவைப் பெறு
- தயாரிப்புத் தரவைப் பெறு
- தயாரிப்பு மாறுபாட்டுத் தரவைப் பெறு
- விற்பனைத் திட்டக் குழுத் தரவைப் பெறு
- சந்தா பில்லிங் முயற்சித் தரவைப் பெறு
- சந்தா ஒப்பந்தத் தரவைப் பெறு
தரவைப் பெறு செயல்களில் உள்ள Liquid குறிச்சொற்கள்
தேதிகளுடன் தரவைப் பெறு செயலைப் பயன்படுத்தும் போது, உங்கள் வினவலில் தேதிகளை மாற்ற date_minus மற்றும் date_plus Liquid குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, பணிப்பாய்வின் திட்டமிடப்பட்ட ரன் நேரத்திற்கு 5 நாட்களுக்கு முந்தைய தேதியைக் கணக்கிட, பின்வரும் Liquid ஐப் பயன்படுத்தலாம்:
{{ scheduledAt | date_minus: "5 days" }}இந்தக் குறிச்சொற்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, Liquid மாறிகள் ஆவணத்தைப் பார்க்கவும்.
ஃபார் ஈச் லூப்கள்
தரவைப் பெறு செயலைப் பயன்படுத்தும் போது, உங்கள் வினவலுடன் பொருந்தும் தரவுகளின் பட்டியலைப் பெறுவீர்கள். அந்தப் பட்டியல் முழுவதும் லூப் செய்ய, ஃபார் ஈச் லூப் (iterate) செயலைப் பயன்படுத்தலாம். ஃபார் ஈச் லூப்பில், அந்த உருப்படிக்கு மட்டுமே பொருந்தக்கூடிய நிபந்தனைகள் மற்றும் செயல்களைப் பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் இயங்கும் பணிப்பாய்வை நீங்கள் உருவாக்குகிறீர்கள். அந்த வாரத்தில் பிளேஸ் செய்யப்பட்ட ஆர்டர்களை மீட்டெடுக்க இந்தப் பணிப்பாய்வு ஆர்டர் தரவைப் பெறு செயலைப் பயன்படுத்துகிறது. அதன் பிறகு, getOrderData பட்டியல் வழங்கும் ஒவ்வொரு ஆர்டருக்கும் New order குறிச்சொல்லை ஃபார் ஈச் லூப் (iterate) பயன்படுத்தும். பட்டியலில் உள்ள அனைத்து ஆர்டர்களுக்கும் குறிச்சொல்லிடப்பட்டதும், குறிச்சொல்லிடும் பணி முடிவடைந்ததைக் குறிக்கும் உள் மின்னஞ்சல் அனுப்பப்படும்.

திரட்டல் செயல்கள்
பட்டியல்களுடன் பணிபுரியும் போது, அடுத்தடுத்த நிபந்தனைகளிலும் செயல்களிலும் பயன்படுத்த உருப்படிகளின் எண்ணிக்கையை நீங்கள் கணக்கிட வேண்டியிருக்கலாம். எடுத்துக்காட்டாக, மின்னஞ்சலை அனுப்புவதற்கு முன், 0-ஐ விட அதிகமான முடிவுகள் உள்ளதா என்பதை நீங்கள் சரிபார்க்க விரும்பலாம். பணிப்பாய்வில் உள்ள பட்டியல் தரவில் கணக்கீடுகளைச் செய்ய Flow இந்தச் செயல்களை வழங்குகிறது:
- எண்ணிக்கை (Count) ஆனது பட்டியலில் உள்ள உள்ளீடுகளின் எண்ணிக்கையை வழங்கும்.
- கூடுதல் (Sum) ஆனது ஒரு பட்டியலில் உள்ள உள்ளீடுகளின் மதிப்புகளைச் சேர்க்கிறது.
Shopify Flow இல் உள்ள மேம்பட்ட பணிப்பாய்வுகளின் எடுத்துக்காட்டுகள்
Shopify Flow இல் நீங்கள் பயன்படுத்தக்கூடிய மேம்பட்ட பணிப்பாய்வுகளின் சில எடுத்துக்காட்டுகளை மதிப்பாய்வு செய்யவும்:
- இரண்டு நாள் நிறைவேற்றச் சாளரத்தைத் தவறவிடும் ஆர்டர்களின் தினசரிச் சுருக்கத்தைப் பெறுங்கள்.
- புதிய ஆர்டர் உருவாக்கப்படும்போது, அதே வாடிக்கையாளர் கடந்த 24 மணிநேரத்திற்குள் வேறு ஆர்டர்களைப் பிளேஸ் செய்துள்ளாரா எனச் சரிபார்க்கவும்.
- கையிருப்பில் இல்லாத தயாரிப்புகளைப் பட்டியலிடும் சுருக்க மின்னஞ்சலைத் தினமும் பெறுங்கள்.
- தினமும் ஒருமுறை, கட்டணத் திருப்பலுடன் தொடர்புடைய அனைத்து ஆர்டர்களையும் கண்டறிந்து, வாடிக்கையாளருக்குக் குறிச்சொல்லிடவும்.
- ஒரு புதிய ஆர்டர் உருவாக்கப்படும்போது, கடந்த ஆறு மாதங்களில் வாடிக்கையாளர் எத்தனை ஆர்டர்களைச் செய்துள்ளார் என்பதைக் கண்டறியவும்.
- திறந்துள்ள அனைத்து வரைவு ஆர்டர்களின் பட்டியலைத் தினமும் பெற்று Slack செய்தியை அனுப்பவும்.
இரண்டு நாள் நிறைவேற்றச் சாளரத்தைத் தவறவிடும் ஆர்டர்களின் தினசரிச் சுருக்கத்தைப் பெறுக
ஏதேனும் ஆர்டர்கள் ஷிப்பிங் உத்திரவாதக் காலத்தைத் தவறவிட்டுள்ளனவா என்பதையும், அவ்வாறு நடந்தால் அந்த ஆர்டர்களின் மதிப்பு எவ்வளவு என்பதையும் தீர்மானிக்க இந்தப் பணிப்பாய்வு பயன்படுத்தப்படலாம்.
இந்த எடுத்துக்காட்டில், பணிப்பாய்வு தினமும் மாலை 5:00 மணிக்கு இயங்கும். இரண்டு நாள் ஷிப்பிங் சாளரத்திற்குள் நிறைவேற்றப்படாத ஆர்டர்களின் பட்டியலை மீட்டெடுக்க இந்தப் பணிப்பாய்வு ஆர்டர் தரவைப் பெறு செயலைப் பயன்படுத்துகிறது. பின்னர், தாமதமான அனைத்து ஆர்டர்களுக்கும் ஃபார் ஈச் செயல் ஒரு குறிச்சொல்லைச் சேர்க்கிறது. தாமதமான ஆர்டர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்க எண்ணிக்கை (Count) செயலையும், அந்த ஆர்டர்களின் மதிப்பைத் தீர்மானிக்க கூடுதல் (Sum) செயலையும் பணிப்பாய்வு பயன்படுத்துகிறது. எண்ணிக்கை (Count) மற்றும் கூடுதல் (Sum) செயல்களால் உருவாக்கப்படும் மாறிகள் ஆர்டர்களின் எண்ணிக்கையையும் அவற்றின் மதிப்பையும் குறிக்கும் மின்னஞ்சலை அனுப்பப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தப் பணிப்பாய்வு வார்ப்புருவை உங்கள் ஸ்டோரில் நிறுவவும்.
புதிய ஆர்டர் உருவாக்கப்படும்போது, அதே வாடிக்கையாளர் கடந்த 24 மணிநேரத்திற்குள் வேறு ஆர்டர்களைப் பிளேஸ் செய்துள்ளாரா எனச் சரிபார்க்கவும்
ஒரே வாடிக்கையாளர் ஒரே நாளில் பல ஆர்டர்களைப் பிளேஸ் செய்துள்ளாரா என்பதைத் தீர்மானிக்க இந்தப் பணிப்பாய்வைப் பயன்படுத்தலாம், அவ்வாறு செய்திருந்தால், ஆர்டர்களை ஒன்றாக ஷிப்பிங் செய்வதற்கு வசதியாக நிறைவேற்றத்தை நிறுத்திவைக்கலாம்.
இந்த எடுத்துக்காட்டில், ஒவ்வொரு முறையும் புதிய ஆர்டர் உருவாக்கப்படும் போது பணிப்பாய்வு இயங்கும். கடந்த நாளில் வாடிக்கையாளர் பிளேஸ் செய்த ஆர்டர்களின் பட்டியலை மீட்டெடுக்க இந்தப் பணிப்பாய்வு ஆர்டர் தரவைப் பெறு செயலைப் பயன்படுத்துகிறது. பின்னர், வாடிக்கையாளர் பிளேஸ் செய்த ஆர்டர்களின் அளவை எண்ணிக்கை (Count) செயல் தீர்மானிக்கிறது. ஒரே வாடிக்கையாளர் ஒரே நாளில் இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட ஆர்டர்களையோ பிளேஸ் செய்திருந்தால், ஆர்டர்களின் நிறைவேற்றம் நிறுத்திவைக்கப்பட்டு ஆர்டர்களுக்குக் குறிச்சொற்கள் சேர்க்கப்படும்.

இந்தப் பணிப்பாய்வு வார்ப்புருவை உங்கள் ஸ்டோரில் நிறுவவும்.
கையிருப்பில் இல்லாத தயாரிப்புகளைப் பட்டியலிடும் சுருக்க மின்னஞ்சலைத் தினமும் பெறுங்கள்
கையிருப்பில் இல்லாத உங்கள் எல்லாத் தயாரிப்புகளின் பட்டியலையும் உருவாக்கி மின்னஞ்சலை அனுப்ப, இந்தப் பணிப்பாய்வைப் பயன்படுத்தலாம்.
இந்த உதாரணத்தில், பணிப்பாய்வு ஒவ்வொரு நாளும் இரவு 9:00 மணிக்கு இயங்குகிறது. சரக்கு இருப்பு இல்லாத தயாரிப்புகளின் பட்டியலை மீட்டெடுக்க, Get product data (தயாரிப்புத் தரவைப் பெறு) செயலைப் பணிப்பாய்வு பயன்படுத்துகிறது. கையிருப்பில் இல்லாத உருப்படிகளின் எண்ணிக்கையை Count (எண்ணிக்கை) செயல் தீர்மானிக்கிறது. Get order data (ஆர்டர் தரவைப் பெறு), Count (எண்ணிக்கை) செயல்களால் உருவாக்கப்படும் மாறிகள், தயாரிப்புகளின் எண்ணிக்கையையும் அவற்றின் பட்டியலையும் காட்டும் மின்னஞ்சலை அனுப்பப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தப் பணிப்பாய்வு வார்ப்புருவை உங்கள் ஸ்டோரில் நிறுவவும்.
ஒரு நாளைக்கு ஒருமுறை, கட்டணத் திருப்பல் தொடர்பான அனைத்து ஆர்டர்களையும் கண்டறிந்து வாடிக்கையாளருக்குக் குறிச்சொல்லிடுங்கள்
கட்டணத் திருப்பலைத் தொடங்கியுள்ள வாடிக்கையாளர்களைத் தடமறிய, இந்தப் பணிப்பாய்வைப் பயன்படுத்தலாம்.
இந்த உதாரணத்தில், பணிப்பாய்வு ஒவ்வொரு நாளும் காலை 10:00 மணிக்கு இயங்குகிறது. கட்டணத் திருப்பல்களைக் கொண்டுள்ள ஆர்டர்களின் பட்டியலை மீட்டெடுக்க, Get order data (ஆர்டர் தரவைப் பெறு) செயலைப் பணிப்பாய்வு பயன்படுத்துகிறது. பிறகு, அந்த ஆர்டர்களைச் செய்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரு குறிச்சொல்லை For each (ஒவ்வொன்றுக்கும்) செயல் சேர்க்கிறது.

இந்தப் பணிப்பாய்வு வார்ப்புருவை உங்கள் ஸ்டோரில் நிறுவவும்.
புதிய ஆர்டர் உருவாக்கப்படும்போது, கடந்த ஆறு மாதங்களில் வாடிக்கையாளர் எத்தனை ஆர்டர்களைச் செய்துள்ளார் என்பதைக் கண்டறியவும்
கடந்த ஆறு மாதங்களில் வாடிக்கையாளர் எத்தனை ஆர்டர்களைச் செய்துள்ளார் என்பதைத் தீர்மானித்து, விசுவாசக் குறிச்சொற்களைச் சேர்க்க, இந்தப் பணிப்பாய்வைப் பயன்படுத்தலாம்.
இந்த உதாரணத்தில், ஒவ்வொரு முறை புதிய ஆர்டர் உருவாக்கப்படும்போதும் பணிப்பாய்வு இயங்குகிறது. கடந்த ஆறு மாதங்களில் வாடிக்கையாளர் செய்த ஆர்டர்களின் பட்டியலை மீட்டெடுக்க, Get order data (ஆர்டர் தரவைப் பெறு) செயலைப் பணிப்பாய்வு பயன்படுத்துகிறது. பிறகு, வாடிக்கையாளர் செய்துள்ள ஆர்டர்களின் எண்ணிக்கையை Count (எண்ணிக்கை) செயல் தீர்மானிக்கிறது. மேலும் அந்த ஆர்டர்களின் மதிப்பை Sum (கூடுதல்) செயல் தீர்மானிக்கிறது. ஆர்டர்களின் எண்ணிக்கை ஐந்து அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால் வாடிக்கையாளர் குறிச்சொல் சேர்க்கப்படும், ஆர்டர்களின் மதிப்பு $100 அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால் மற்றொரு குறிச்சொல் சேர்க்கப்படும்.

இந்தப் பணிப்பாய்வு வார்ப்புருவை உங்கள் ஸ்டோரில் நிறுவவும்.
ஒவ்வொரு நாளும், திறந்திருக்கும் அனைத்து வரைவு ஆர்டர்களின் பட்டியலைப் பெற்று Slack செய்தியை அனுப்பவும்
உங்கள் ஸ்டோரில் ஏதேனும் திறந்திருக்கும் வரைவு ஆர்டர்கள் உள்ளதா என்பதையும், அப்படியானால் அவை எத்தனை என்பதையும் சுட்டிக்காட்டும் Slack செய்தியை அனுப்ப, இந்தப் பணிப்பாய்வைப் பயன்படுத்தலாம்.
இந்த உதாரணத்தில், பணிப்பாய்வு ஒவ்வொரு நாளும் மாலை 5:00 மணிக்கு இயங்குகிறது. Open (திறந்திருக்கும்) நிலையில் உள்ள வரைவு ஆர்டர்களின் பட்டியலை மீட்டெடுக்க, Get draft order data (வரைவு ஆர்டர் தரவைப் பெறு) செயலைப் பணிப்பாய்வு பயன்படுத்துகிறது. பிறகு, திறந்திருக்கும் வரைவு ஆர்டர்களின் எண்ணிக்கையை Count (எண்ணிக்கை) செயல் தீர்மானிக்கிறது. Count (எண்ணிக்கை) செயல்களால் உருவாக்கப்படும் மாறி, திறந்திருக்கும் வரைவு ஆர்டர்களின் எண்ணிக்கையைக் குறிக்க Slack செய்தியை அனுப்பப் பயன்படுத்தப்படுகிறது.
