Shopify Flow-இல் தூண்டுதல்களைப் புரிந்துகொள்ளுதல்
ஒரு தூண்டுதல் என்பது பணிப்பாய்வைத் தொடங்கும் நிகழ்வாகும், மேலும் இது பணிப்பாய்வின் நிபந்தனைகளுக்குத் தெரிவிக்க, பணிப்பாய்வு பயன்படுத்தும் தரவின் தொடக்கத் தொகுப்பைக் குறிக்கிறது. அடிப்படையில், இதுவே தானியக்கமாக்கலைத் தொடங்கும் முதல் படியாகும் அல்லது தூண்டும் நிகழ்வாகும்.
ஒவ்வொரு பணிப்பாய்வும் 1 தூண்டுதல் படியை மட்டுமே கொண்டிருக்க முடியும்.
இந்தப் பக்கத்தில்
உங்கள் பணிப்பாய்வுக்கான தூண்டுதலைத் தேர்ந்தெடுத்தல்
உங்கள் பணிப்பாய்வைத் தொடங்க தேர்ந்தெடுப்பதற்குப் பல்வேறு வகையான தூண்டுதல்கள் உள்ளன, எனவே மிகவும் பொருத்தமான தூண்டுதலைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் பணிப்பாய்வு வெற்றிகரமாகச் செயல்படுவதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கும்.
ஒரு பணிப்பாய்வைத் தொடங்கும்போது எந்தத் தூண்டுதலைத் தேர்ந்தெடுப்பது என்பதை முடிவுசெய்ய, பணிப்பாய்வு தானியக்கமாக்க வேண்டும் என நீங்கள் விரும்பும் பணியின் அடிப்படையில் பின்வரும் கருத்தாய்வுகளை மதிப்பாய்வு செய்யவும்:
- பணிப்பாய்வு எப்போது தொடங்க வேண்டும் என்பதைக் கவனியுங்கள்: நிகழ்வு எதிர் அட்டவணை.
- நீங்கள் கருதும் தூண்டுதலின் வரையறையை உறுதிப்படுத்தவும்.
- பணிப்பாய்வு எந்தத் தரவைச் சரிபார்க்க வேண்டும் என்பதைக் கவனியுங்கள்.
பணிப்பாய்வு எப்போது தொடங்க வேண்டும் என்பதைக் கவனியுங்கள்: நிகழ்வு எதிர் அட்டவணை
பெரும்பாலும் அனைத்துப் பணிப்பாய்வுத் தூண்டுதல்களுமே உங்கள் ஸ்டோரில் நடைபெறும் குறிப்பிட்ட நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டவை. இந்த நிகழ்வுகளுக்கு அமைக்கப்பட்ட அட்டவணை எதுவும் கிடையாது, மேலும் உங்கள் ஸ்டோரின் செயல்பாட்டைப் பொறுத்து இவை ஒரு நாளில் பலமுறை நிகழலாம். எடுத்துக்காட்டாக, உங்களின் அனைத்து ஆர்டர்களையும் வாரத்தின் ஒரே நாளில் நீங்கள் வழக்கமாக நிறைவேற்றினால், ஆர்டர் நிறைவேற்றப்பட்டது என்ற தூண்டுதலுடன் தொடங்கும் ஒரு பணிப்பாய்வு ஏறக்குறைய ஒரு வாரம் வரை இயங்காமலேயே இருக்கலாம், அதேசமயம் உங்கள் ஆர்டர்களை நீங்கள் நிறைவேற்றத் தொடங்கும்போது ஒரே நாளில் பலமுறை அது இயங்கலாம். பல பணிகளுக்கு, நிகழ்வு அடிப்படையிலான தூண்டுதல்களே சரியான தேர்வாகும், ஏனெனில் தொடர்புடைய நிகழ்வு நடைபெறும் போது மட்டுமே அவை இயங்கும்.
இருப்பினும், ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்குப் பதிலாக அமைக்கப்பட்ட அட்டவணையில் நிகழும் ஒரு பணியை நீங்கள் தானியக்கமாக்க விரும்பலாம். இதுபோன்ற சமயங்களில், நீங்கள் திட்டமிடப்பட்ட நேரம் தூண்டுதலைப் பயன்படுத்த வேண்டும், இது நீங்கள் குறிப்பிடும் குறிப்பிட்ட நேரத்திலும் தேதியிலும் பணிப்பாய்வைத் தொடங்கும் தனித்துவமான தூண்டுதலாகும். பணிப்பாய்வு ஒவ்வொரு மணிநேரமும், தினமும், வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் மீண்டும் செயல்படும் வகையிலும் நீங்கள் திட்டமிடலாம். கையிருப்பில் இல்லாத உங்களின் அனைத்துத் தயாரிப்புகளின் தினசரிப் பட்டியலை உருவாக்கி, அதை உங்கள் சரக்கு இருப்பு நிர்வாகிக்கு மின்னஞ்சல் அனுப்புவது போன்ற அட்டவணை அடிப்படையிலான தானியக்கமாக்கல்களை அமைக்க இந்த வகையான தூண்டுதல் பயனுள்ளதாக இருக்கும்.
இது ஏன் முக்கியமானது: உங்கள் பணிப்பாய்வுக்குச் சரியான நேரத்தைத் தேர்ந்தெடுப்பது முக்கியமானதாகும், ஏனெனில் இது உங்கள் வணிகத் தேவைகளுக்குப் பொருத்தமானதாக இருக்கும்போது மட்டுமே தானியக்கமாக்கல் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்கிறது. நிகழ்வு அடிப்படையிலான தூண்டுதலை நீங்கள் தேர்ந்தெடுத்தால், வாடிக்கையாளர் ஒரு ஆர்டரைச் செய்வது போன்று உங்கள் ஸ்டோரில் நடைபெறும் ஒரு செயலுக்கான நேரடிப் பதிலளிப்பாக உங்கள் பணிப்பாய்வு தொடங்கும். நீங்கள் திட்டமிடப்பட்ட தூண்டுதலைப் பயன்படுத்தினால், உங்கள் பணிப்பாய்வு நீங்கள் தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட நேரங்களில் இயங்கும், இதன் மூலம் வழக்கமான இடைவெளிகளில் பணிகளைத் தானியக்கமாக்க முடியும்.
நீங்கள் கருதும் தூண்டுதலின் வரையறையை உறுதிப்படுத்தவும்
Shopify Flow-இல், தூண்டுதல்கள் என்பவை கடுமையான வரையறைகளைக் கொண்ட மிகவும் நேரடியானவையாகும். எடுத்துக்காட்டாக, ஆர்டர் உருவாக்கப்பட்டது மற்றும் ஆர்டர் பரிவர்த்தனை உருவாக்கப்பட்டது ஆகிய தூண்டுதல்கள் ஒரே விஷயத்தைக் குறிப்பதைப் போலத் தோன்றலாம், ஆனால் அவை முற்றிலும் வேறுபட்ட ஆர்டர் நிகழ்வுகளைக் குறிக்கின்றன; உங்கள் ஸ்டோரில் ஒரு ஆர்டர் உருவாக்கப்படும்போது ஆர்டர் உருவாக்கப்பட்டது தூண்டப்படும், அதேசமயம் செலுத்தப்படாத ஆர்டருக்குப் பேமெண்ட்டை மேனுவலாகப் பெறுவது அல்லது வாடிக்கையாளருக்குப் பணத்தைத் திரும்பப் பெறுதலோடு வழங்குவது போன்று ஏற்கனவே உள்ள ஏதேனும் ஆர்டரில் பேமெண்ட் தொடர்பான பரிவர்த்தனை உருவாக்கப்படும்போது ஆர்டர் பரிவர்த்தனை உருவாக்கப்பட்டது தூண்டப்படும்.
இது ஏன் முக்கியமானது: பணிப்பாய்வு அதன் மீதமுள்ள ரன்னைத் தொடங்குவதற்கு முன் தேடும் முதல் விஷயம் தூண்டுதலாகும் என்பதால், சரியான தூண்டுதலைக் கொண்டிருப்பது சரியான நிகழ்வு நிகழும்போது உங்கள் பணிப்பாய்வு தொடங்குவதை உறுதி செய்கிறது. தூண்டுதல் பெயர் எதைக் குறிக்கிறது என்பது பற்றி அனுமானங்களைச் செய்ய வேண்டாம். 2 தூண்டுதல்கள் ஒரே மாதிரியாகத் தோன்றினால், உங்கள் பணிப்பாய்வுக்குப் பயன்படுத்த எது சரியானது என்பதைப் பெருமளவு பாதிக்கக்கூடிய முக்கிய வேறுபாடு அவற்றுக்கிடையே நிச்சயமாக இருக்கும்.
பணிப்பாய்வு எந்தத் தரவைச் சரிபார்க்க வேண்டும் என்பதைக் கவனியுங்கள்
பணிப்பாய்வு அதன் நிபந்தனைகளை இயக்கும்போது பயன்படுத்தக்கூடிய ஆரம்பத் தரவுத்தொகுப்பைத் தூண்டுதல்கள் தீர்மானிக்கின்றன. எடுத்துக்காட்டாக, வாடிக்கையாளர் உருவாக்கப்பட்டது என்ற தூண்டுதலுடன் ஒரு பணிப்பாய்வு தொடங்கும்போது, வாடிக்கையாளரின் தொடர்பு விவரங்கள், அவர்களின் ஆர்டர் வரலாறு மற்றும் மின்னஞ்சல் மூலம் சந்தைப்படுத்தல் உள்ளடக்கத்தைப் பெற அவர்கள் ஒப்புக்கொண்டார்களா என்பது போன்ற புதிய வாடிக்கையாளரின் தகவல்களுக்கான அணுகல் அந்தப் பணிப்பாய்வுக்குக் கிடைக்கிறது. இருப்பினும், வாடிக்கையாளர் தரவுத்தொகுப்பிற்குப் பதிலாக, ஆர்டர் தரவுத்தொகுப்பில் தகவல் சேமிக்கப்படுவதால், அவர்களின் மிக சமீபத்திய ஆர்டருக்காக அவர்கள் தேர்ந்தெடுத்த ஷிப்பிங் முறை போன்ற பிற வகையான தரவுகளுக்கான அணுகல் அதற்கு இருக்காது.
மீதமுள்ள பணிப்பாய்வில் எந்தெந்த நிபந்தனைகள், செயல்கள் மற்றும் மாறிகள் பயன்படுத்தக் கிடைக்கும் என்பதையும் தூண்டுதல்கள் நேரடியாகத் தீர்மானிக்கின்றன. ஒரு மாறி அல்லது செயல் கிடைக்கவில்லை என்றால், அது தேர்ந்தெடுக்க ஒரு விருப்பமாகக் காட்டப்படாது.
ஒரு தூண்டுதல் நிகழும்போது சில தரவுகள் உடனடியாகக் கிடைக்காது என்பதையும் கருத்தில் கொள்வது மதிப்பு. எடுத்துக்காட்டாக, பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உங்கள் பணிப்பாய்வு ஆர்டர் உருவாக்கப்பட்டது என்ற தூண்டுதலுடன் தொடங்கினால் மற்றும் உங்கள் பணிப்பாய்வு order.fulfillmentOrders மாறியைப் பயன்படுத்த முயற்சித்தால், ஆர்டர் இப்போதுதான் உருவாக்கப்பட்டது என்பதால், அதில் எந்த நிறைவேற்றங்களும் இல்லாத காரணத்தால் பணிப்பாய்வு தோல்வியடையக்கூடும். அதற்குப் பதிலாக, நிறைவேற்ற நிகழ்வு உருவாக்கப்பட்டது என்பதைப் பயன்படுத்துவது மிகவும் பொருத்தமான தூண்டுதலாக இருக்கலாம்.
இது ஏன் முக்கியமானது: தூண்டுதலில் கிடைக்கும் தரவின் அடிப்படையில் பணிப்பாய்வுகள் வெற்றிபெறலாம் அல்லது தோல்வியடையலாம். உங்கள் ஸ்டோரில் உள்ள எந்தெந்த விவரங்களை, பணிப்பாய்வின் நிபந்தனைகள் மற்றும் செயல்கள் மதிப்பாய்வு செய்ய அணுக முடியும் என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்கும் தூண்டுதல் சரியாகத் தீர்மானிக்கிறது. உங்களுக்குத் தேவையான தரவு தூண்டுதலின் தரவுத்தொகுப்பில் இல்லை என்றால், தானியக்கமாக்கல்கள் அல்லது முடிவெடுப்பதற்கு அந்தத் தகவலை உங்கள் பணிப்பாய்வு அணுகவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது. உங்கள் பணிப்பாய்வை இறுதி செய்வதற்கு முன், உங்கள் தானியக்கமாக்கல் இலக்குகளை அடைய தேவையான அனைத்து தகவல்களையும் தூண்டுதல் வழங்குகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பொதுவான பணிப்பாய்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் தூண்டுதல்களின் எடுத்துக்காட்டுகள்
பொதுவான தூண்டுதல்களின் எடுத்துக்காட்டுகளையும் Shopify Flow பணிப்பாய்வுகளில் அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் பின்வரும் அட்டவணை வழங்குகிறது.
வார்ப்புருக்களாகக் கிடைக்கும் Shopify Flow-இல் உள்ள பணிப்பாய்வுகளின் பிற எடுத்துக்காட்டுகளையும் நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம்.
| தூண்டுதல் | எடுத்துக்காட்டுப் பணிப்பாய்வுப் பயன்பாட்டுத் தொடர்கள் |
|---|---|
| ஆர்டர் உருவாக்கப்பட்டது |
|
| ஆர்டருக்குப் பணம் செலுத்தப்பட்டது |
|
| தயாரிப்பு மாறுபாட்டின் சரக்கு இருப்பு அளவு மாற்றப்பட்டது |
|
| தயாரிப்பு உருவாக்கப்பட்டது |
|
| வாடிக்கையாளர் உருவாக்கப்பட்டது |
|
| திட்டமிடப்பட்ட நேரம் |
|