தயாரிப்பு டேக்களைச் சேர்க்கவும்
தயாரிப்பு டேக்களைச் சேர் செயல், பணிப்பாய்வைத் தூண்டும் தயாரிப்பில் டேக்கைச் சேர்க்கிறது.
இந்தப் பக்கத்தில் உள்ளவை
புலங்கள்
தயாரிப்பு டேக்குகளைச் சேர் செயலில் பின்வரும் புலங்கள் உள்ளன.
| புலம் | விளக்கம் |
|---|---|
| டேக்குகள் | ஒரு தயாரிப்பில் சேர்க்க வேண்டிய டேக்குகள். டேக்குகள் எழுத்து வடிவ உணர்திறன் கொண்டவை (case-sensitive). பல டேக்குகளைச் சேர்க்க, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
|
தூண்டுதல்கள்
தயாரிப்பு டேக்குகளைச் சேர் செயலில் தூண்டுதலால் ஒரு மறைக்கப்பட்ட புலம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு ID புலம், எந்தத் தயாரிப்பில் டேக்குகளைச் சேர்க்க வேண்டும் என்பதை அடையாளப்படுத்துகிறது. தயாரிப்பு ID இயல்பாகவே அமைக்கப்படும், மேலும் இதைத் தயாரிப்புகள் அல்லது மாறுபாடுகளைக் கொண்டுள்ள தூண்டுதல்களுடன் பயன்படுத்தலாம், எடுத்துக்காட்டாக:
API விவரங்கள்
மேலும் அறிய, tagsAdd மியூடேஷனைப் பார்க்கவும்.
பொதுவான சிக்கல்கள்
Flow ஒரு டேக்கைச் சேர்த்துள்ளதாகக் கூறுகிறது, ஆனால் அந்த டேக் நிர்வாகியில் கிடைக்கவில்லை.
காரணம்: ஒரு செயலியோ (பொதுவாக) அல்லது நிர்வாகப் பயனரோ டேக்கை மேலெழுதியிருக்கலாம். Flow-ஐப் போலவே பல செயலிகளும் 'ஆர்டர் உருவாக்கப்பட்டது' போன்ற ஒரே நிகழ்வுகளைப் பயன்படுத்துவதே இதற்குச் காரணம். Flow பெரும்பாலும் முதலில் முடிவடையும், அதன்பிறகு பிற செயலிகள் புதிய டேக்குகளைக் கணக்கில் கொள்ளாமல் மாற்றங்களைச் செய்யும்.
தீர்வு: Flow ரன் ஆன பிறகு நீங்கள் அழைக்கக்கூடிய ஒரு செயல் அந்தச் செயலியில் இருப்பதே சிறந்த தீர்வாக இருக்கும். அத்தகைய செயல் இல்லை எனில், உங்கள் டேக்குகள் மேலெழுதப்படுவதை எவ்வாறு தவிர்ப்பது என்று கேட்க, அந்தச் செயலியைத் தொடர்புகொள்ள வேண்டும். செயலியைக் கொண்டு உங்களால் சிக்கலைத் தீர்க்க முடியாவிட்டால், Flow எப்போது டேக்குகளைச் சேர்க்க வேண்டும் என்பதைத் தாமதப்படுத்த, Flow-இல் "காத்திரு" (Wait) படியைச் செருகிப் பார்க்கலாம்.
வார்ப்புருக்கள்
சரக்கு இருப்பு குறையும்போது அறிவிப்பைப் பெறுக மற்றும் கையிருப்பில் இல்லாதபோது தயாரிப்புகளை மறைக்கவும்
தயாரிப்புச் சரக்கு இருப்பு குறிப்பிட்ட வரம்புகளுக்குக் கீழே குறையும்போது மின்னஞ்சல் மற்றும் Slack வழியாகக் குழு உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கவும், தயாரிப்புகள் முற்றிலும் கையிருப்பில் இல்லாதபோது அவற்றை ஆன்லைன் ஸ்டோரில் இருந்து தானாகவே மறைக்கவும். வார்ப்புருவைப் பார்க்கவும்
குறைந்த இருப்புள்ள தயாரிப்புகளை ஒரு சேகரிப்பில் சேர்ப்பதன் மூலம் விற்பனை மேம்பாடு செய்யவும்
குறைந்த இருப்புள்ள தயாரிப்புகளை விற்பனைச் சேகரிப்பில் சேர்க்கவும் மற்றும் கையிருப்பில் இல்லாத தயாரிப்புகளை ஆன்லைன் ஸ்டோரில் இருந்து வெளியிடுவதை ரத்துசெய்யவும். இந்த வார்ப்புருவைப் பின்வருவனவற்றிற்குப் பயன்படுத்தலாம்: குறைந்த இருப்புள்ள உருப்படிகளை விளம்பரப்படுத்துவதன் மூலம் விற்பனையை அதிகரிக்க, ஆன்லைன் ஸ்டோரில் இருந்து கையிருப்பில் இல்லாத உருப்படிகளை அகற்றுவதன் மூலம் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த, மற்றும் குறைந்த இருப்புள்ள தயாரிப்புகளைத் தடமறிவதன் மூலம் சரக்கு மேலாண்மையைச் சீரமைக்க. வார்ப்புருவைப் பார்க்கவும்
கிஃப்ட் கார்டுகளை ஒரு குறிப்பிட்ட சேகரிப்பில் ஒழுங்கமைக்கவும்
கிஃப்ட் கார்டுகளை டேக் செய்து, ஒரு குறிப்பிட்ட சேகரிப்பில் ஒழுங்கமைக்கவும். வார்ப்புருவைப் பார்க்கவும்
சரக்கு இருப்பு நிலையின் அடிப்படையில் தயாரிப்புகளை வெளியிடவும் மற்றும் வெளியிடுவதை ரத்துசெய்யவும்
உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் கையிருப்பில் இல்லாத தயாரிப்புகளை மறைத்து, அவற்றின் ஒரு மாறுபாடாவது இருப்பில் உள்ளபோது மீண்டும் வெளியிடவும். வார்ப்புருவைப் பார்க்கவும்
குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, சேகரிப்புகளிலிருந்து தயாரிப்புகளை அகற்றி, தயாரிப்பு டேக்குகளையும் அகற்றவும்
குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, சேகரிப்புகளிலிருந்து தயாரிப்புகளை அகற்றி, தயாரிப்பு டேக்குகளையும் அகற்றவும். வார்ப்புருவைப் பார்க்கவும்
புதிய தயாரிப்புகளுக்கு டேக் இடுவதைத் தரப்படுத்தவும்
தலைப்பு, SKU, நிறம் மற்றும் பிறவற்றின் அடிப்படையில் புதிதாகச் சேர்க்கப்பட்ட அல்லது இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்புகளுக்கு டேக் இட்டு ஒழுங்கமைக்கவும். வார்ப்புருவைப் பார்க்கவும்
SKU மூலம் புதிய தயாரிப்புகளுக்கு டேக் இட்டு ஒழுங்கமைக்கவும்
SKU-இன் அடிப்படையில் புதிய தயாரிப்புகளுக்கு டேக் இடுவதையும் விற்பனை மேம்பாட்டையும் தரப்படுத்தவும். வார்ப்புருவைப் பார்க்கவும்
நிறத்தின் அடிப்படையில் புதிய தயாரிப்புகளுக்கு டேக் இட்டு ஒழுங்கமைக்கவும்
ஸ்டோர்ஃபிரண்டில் துல்லியமாகக் கண்டறிய, நிற மாறுபாடுகளின் அடிப்படையில் புதிய தயாரிப்புகளுக்கு டேக்குகளைச் சேர்க்கவும். வார்ப்புருவைப் பார்க்கவும்
விலைப்புள்ளி மூலம் புதிய தயாரிப்புகளுக்கு டேக் இட்டு ஒழுங்கமைக்கவும்
விலைப்புள்ளி மூலம் புதிய தயாரிப்புகளுக்கு டேக் இட்டு ஒழுங்கமைக்கவும். வார்ப்புருவைப் பார்க்கவும்
தலைப்பின் அடிப்படையில் புதிய தயாரிப்புகளுக்கு டேக் இட்டு ஒழுங்கமைக்கவும்
தயாரிப்புத் தலைப்பின் அடிப்படையில் புதிய தயாரிப்புகளுக்கு டேக் இடுதல், விற்பனை மேம்பாடு செய்தல் மற்றும் பராமரிப்பு வழிமுறைகளைத் தரப்படுத்தவும். வார்ப்புருவைப் பார்க்கவும்
வகை மூலம் புதிய தயாரிப்புகளுக்கு டேக் இட்டு ஒழுங்கமைக்கவும்
தயாரிப்பு வகையின் அடிப்படையில் புதிய தயாரிப்புகளுக்கு டேக் இடுவதையும் விற்பனை மேம்பாட்டையும் தரப்படுத்தவும். வார்ப்புருவைப் பார்க்கவும்
தயாரிப்பு விளக்கத்திலிருந்து டேக்குகளை உருவாக்க OpenAI-ஐப் பயன்படுத்தி புதிய தயாரிப்புகளுக்கு டேக் இடவும்
ஸ்டோரில் ஒரு தயாரிப்பு சேர்க்கப்படும்போது, தயாரிப்பு விளக்கம் மற்றும் தெரிந்த டேக்குகளின் தொகுப்பின் (ஒரே சேகரிப்புகளிலிருந்து) அடிப்படையில் டேக்குகளை உருவாக்க OpenAI-ஐப் பயன்படுத்தவும். இதற்கு OpenAI கனெக்டர் மற்றும் API விசை தேவை. வார்ப்புருவைப் பார்க்கவும்
ஒரே ஒரு இடத்திற்கு மட்டும் கையிருப்பில் இல்லாத தயாரிப்புகளுக்கு டேக் இடவும்
ஆன்லைன் ஆர்டர்களை நிறைவேற்ற ஒரே ஒரு இடத்தை மட்டும் பயன்படுத்துகிறீர்களா? ஒரு தயாரிப்பின் அனைத்து மாறுபாடுகளும் ஒரு இடத்தில் கையிருப்பில் இல்லாதபோது, இந்தப் பணிப்பாய்வு ஒரு தயாரிப்பு டேக்கைச் சேர்க்கிறது; இது ஸ்டோர்ஃபிரண்டில் எதைக் காட்ட வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தப் பயன்படும். வார்ப்புருவைப் பார்க்கவும்
படம் இல்லாமல் உருவாக்கப்படும் தயாரிப்புகளுக்கு டேக் இடவும்
ஸ்டோரில் ஒரு தயாரிப்பு சேர்க்கப்படும்போது, தயாரிப்பில் படம் உள்ளதா என்பதைப் பணிப்பாய்வு சரிபார்க்கும் (ஆரம்பத் திருத்தங்களுக்காகக் காத்திருக்கச் சிறிது தாமதத்திற்குப் பிறகு). தயாரிப்பில் படம் இல்லை எனில், வார்ப்புரு தயாரிப்புக்கு டேக் இடும். வார்ப்புருவைப் பார்க்கவும்