நிறுவனத்தின் தரவைப் பெறுதல்
நிறுவனத் தரவைப் பயன்படுத்தும் பணிப்பாய்வுகளில், உங்கள் ஸ்டோரிலிருந்து நிறுவனத் தகவல்களை மீட்டெடுக்க Get company data செயலைப் பயன்படுத்தலாம்.
இந்தப் பக்கத்தில்
உள்ளமைவு
புலங்கள்
Get company data செயலில் கீழ்க்காணும் புலங்கள் உள்ளன, இவை வினவலை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன:
| புலம் | விளக்கம் |
|---|---|
| தரவை வரிசைப்படுத்தும் முறை | தேவை. தேடல் வினவல் மூலம் கிடைக்கும் தரவை வரிசைப்படுத்தும் அளவுருக்கள். |
| முடிவுகளின் அதிகபட்ச எண்ணிக்கை | தேவை. நீங்கள் தேர்ந்தெடுக்கும் தேடல் வினவல் மூலம் திரும்பப் பெறக்கூடிய முடிவுகளின் அதிகபட்ச எண்ணிக்கை. ஒரு நேரத்தில் 100 முடிவுகள் வரை நீங்கள் பெறலாம். |
| வினவல் | தேவை. பொதுவான வினவல்களிலிருந்து தேர்வுசெய்யவும் அல்லது உங்களுக்கான சொந்த வினவலை உருவாக்க Advanced என்பதைத் தேர்ந்தெடுக்கவும். |
வினவல் சரம்
கடந்த நாளில் புதுப்பிக்கப்பட்ட நிறுவனங்களைப் பெறுவதற்கான எடுத்துக்காட்டு வினவல் இது:
updated_at:<='{{ scheduledAt }}' AND updated_at:>'{{ scheduledAt | date_minus: "1 day" }}'updated_at மாறியானது நிறுவனங்கள் வினவலில் கிடைக்கும் ஒரு வடிப்பானாகும், மேலும் இதனைப் பலமுறை பயன்படுத்தலாம் அல்லது பிற மாறிகளுடன் இணைத்துப் பயன்படுத்தலாம். scheduledAt Liquid மாறியானது Scheduled time தூண்டுதலைப் பயன்படுத்திய பணிப்பாய்வுகளில் கிடைக்கும். date_minus Liquid டேக் என்பது பிரத்தியேகமான ஒரு Flow டேக் ஆகும், ஒரு தேதியிலிருந்து நேரத்தைக் கழிக்க இது உங்களை அனுமதிக்கிறது.
தரவை வினவும்போது, பின்வருவனவற்றை அறிந்துகொள்வது உதவியாக இருக்கும்:
- கிடைக்கக்கூடிய நிறுவன வடிப்பான்களின் பட்டியல்
- வினவல்கள் குறிப்பிட்டத் தொடரியலைப் பின்பற்ற வேண்டும்
- வினவல் புல மதிப்புகள் எப்போதும் ஆவணப்படுத்தப்படுவதில்லை. சில சமயங்களில், API ஆவணங்களைப் பார்ப்பதன் மூலம் இம்மதிப்புகளைக் கண்டறியலாம். மாற்றாக, நீங்கள் வடிகட்டும்போது நிர்வாகப் பலகத்திலுள்ள URLகளில் உள்ள புல மதிப்புகளை அடிக்கடி கண்டறியலாம். எடுத்துக்காட்டாக, சில ஆர்டர் வினவல் மதிப்புகளைக் கண்டறிய, நிர்வாகப் பலகத்தில் ஆர்டர்கள் பக்கத்தை வடிகட்டி, அதன்பின் URLஐச் சரிபார்க்கவும்.
- Shopify GraphiQL செயலியைப் பயன்படுத்தி உங்கள் கடையில் ஒரு வினவலை இயக்கலாம் அல்லது சோதிக்கலாம்.
- உங்கள் வினவல் தோல்வியடைந்தால் என்ன நடக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். பெரும்பாலும் API ஆனது (எதுவுமில்லாததற்குப் பதிலாக) எல்லா முடிவுகளையும் வழங்கும்.
திரும்பப் பெறப்பட்ட தரவு
அனைத்து Get data செயல்களும் 0 முதல் 100 ஆதாரங்கள் வரையிலான பட்டியலை வழங்கும். உங்களின் பயன்பாட்டு வகையைப் பொறுத்து, இந்தத் தரவைப் பல்வேறு வழிகளில் பயன்படுத்த நீங்கள் விரும்பலாம்:
- ஒவ்வொன்றுக்கும் ஒரு டேக் சேர்ப்பது போன்று, ஒவ்வொரு பட்டியல் உருப்படியையும் நீங்கள் தனித்தனியாகக் கையாள வேண்டும் எனில், For each செயலை நீங்கள் பயன்படுத்தலாம்.
- எத்தனை முடிவுகள் கிடைத்தன என்பதைக் கணக்கிடுவது போன்று, தரவை நீங்கள் ஒருங்கிணைக்க வேண்டும் எனில், Count அல்லது Sum செயல்களைப் பயன்படுத்தலாம்.
- எல்லா உருப்படிகளுடனும் மின்னஞ்சலை அனுப்புவது போன்று, உங்களுக்குப் பட்டியலின் வெளியீடு தேவைப்பட்டால், திரும்பப் பெறப்பட்ட தரவை அடுத்தடுத்த செயல்களில் நீங்கள் நேரடியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தச் செயலைத் தொடரும் படிகளில் உள்ள திரும்பப் பெறப்பட்ட தரவை அணுக, நிறுவனங்களின் பட்டியலாக உள்ள Get company data என்ற மாறியைப் பயன்படுத்தவும். நிபந்தனைகள் மற்றும் செயல்கள் இரண்டிலும் இந்த மாறியை நீங்கள் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, இது போன்றதொரு Send internal email செயலில் உள்ள நிறுவனங்களின் பட்டியலை நீங்கள் அனுப்பலாம்:
{% for single_company in GetCompanyData %}
* {{ single_company.name }}
{% endfor %}தூண்டுதல்கள்
நீங்கள் இந்தச் செயலை Scheduled time தூண்டுதல் உட்பட எந்தவொரு பணிப்பாய்விலும் பயன்படுத்தலாம். Scheduled time தூண்டுதலைப் பயன்படுத்தும் பணிப்பாய்வில், பணிப்பாய்வானது ஒரு நிகழ்வின் முடிவாக இல்லாமல், நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கும். உங்கள் ஸ்டோரிலோ செயலியிலோ பணிப்பாய்வைத் தொடங்கும் குறிப்பிட்ட நிகழ்வு எதுவும் இல்லாததால், தரவு எதுவும் தானாகவே சேர்க்கப்படாது.