சரக்கு உருப்படித் தரவைப் பெறுதல்
சரக்கு உருப்படித் தரவு தேவைப்படும் பணிப்பாய்வுகளில், உங்கள் கடையிலிருந்து சரக்கு உருப்படித் தகவலை மீட்டெடுக்க Get inventory item data செயலை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தயாரிப்பு மாறுபாடுகளுக்காகக் கண்காணிக்கப்படும் உண்மையான ஸ்டாக் யூனிட்களை சரக்கு இருப்பு உருப்படிகள் குறிக்கின்றன.
இந்தப் பக்கத்தில்
அமைவாக்கம்
புலங்கள்
Get inventory item data செயல் பின்வரும் புலங்களைக் கொண்டுள்ளது:
| புலம் | விளக்கம் |
|---|---|
| தரவை இதன்மூலம் வரிசைப்படுத்து | கட்டாயமானது. தேடல் வினவல் வழங்கும் தரவை வரிசைப்படுத்துவதற்கான அளவுருக்கள். |
| முடிவுகளின் அதிகபட்ச எண்ணிக்கை | கட்டாயமானது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் தேடல் வினவல் வழங்கக்கூடிய முடிவுகளின் அதிகபட்ச எண்ணிக்கை. ஒரே நேரத்தில் 100 முடிவுகள் வரை நீங்கள் பெறலாம். |
| வினவல் | கட்டாயமானது. பொதுவான வினவல்களிலிருந்து தேர்வுசெய்யவும் அல்லது உங்களுக்கென சொந்தமாக ஒன்றை உருவாக்க Advanced என்பதைத் தேர்ந்தெடுக்கவும். |
வினவல் சரம்
கண்காணிக்கப்படும் சரக்கு உருப்படிகளைப் பெறுவதற்கான எடுத்துக்காட்டு வினவல் இது:
tracked:truetracked என்பது Inventory items query-இல் கிடைக்கும் ஒரு வடிப்பானாகும், மேலும் இதனைப் பலமுறை பயன்படுத்தலாம் அல்லது மற்ற மாறிகளுடன் இணைத்துப் பயன்படுத்தலாம்.
தரவை வினவும்போது, பின்வருவனவற்றைத் தெரிந்துகொள்வது உதவியாக இருக்கும்:
வினவல்கள் குறிப்பிட்ட தொடரியலைப் பின்பற்ற வேண்டும்
வினவல் புலத்தின் மதிப்புகள் எப்போதுமே ஆவணப்படுத்தப்பட்டிருக்காது. சில சமயங்களில், API ஆவணங்களைப் பார்ப்பதன் மூலம் இந்த மதிப்புகளைக் கண்டறிய முடியும். மாற்றாக, நீங்கள் வடிகட்டும்போது நிர்வாகியிலுள்ள URL-களில் பெரும்பாலும் புலத்தின் மதிப்புகளைக் கண்டறியலாம். எடுத்துக்காட்டாக, சில ஆர்டர் வினவல் மதிப்புகளைக் கண்டறிய, நிர்வாகியில் உள்ள ஆர்டர்கள் பக்கத்தை வடிகட்டி, அதன்பின் URL-ஐச் சரிபார்க்கவும்.
Shopify GraphiQL app-ஐப் பயன்படுத்தி உங்கள் கடையில் ஒரு வினவலை இயக்கலாம் அல்லது சோதிக்கலாம்.
உங்கள் வினவல் தோல்வியடைந்தால் என்ன நடக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். பெரும்பாலும் API (எந்த முடிவையும் வழங்காததற்குப் பதிலாக) எல்லா முடிவுகளையும் வழங்கும்.
வழங்கப்படும் தரவு
எல்லா தரவைப் பெறு செயல்பாடுகளும் 0 முதல் 100 வரையிலான வளங்களின் பட்டியலை வழங்கும். உங்களின் பயன்பாட்டு வகையைப் பொறுத்து, இந்தத் தரவைப் பல்வேறு வழிகளில் நீங்கள் பயன்படுத்த விரும்பலாம்:
- ஒவ்வொரு பட்டியல் உருப்படியையும் நீங்கள் தனித்தனியாகக் கையாள வேண்டும் எனில் (எடுத்துக்காட்டாக, ஒவ்வொன்றுக்கும் ஒரு டேக்கைச் சேர்ப்பது), For each செயல்பாட்டைப் பயன்படுத்தலாம்.
- நீங்கள் தரவை ஒருங்கிணைக்க வேண்டும் எனில் (அதாவது, எத்தனை முடிவுகள் வழங்கப்பட்டன என்பதை எண்ணுவதற்கு), Count அல்லது Sum செயல்பாடுகளைப் பயன்படுத்தலாம்.
- நீங்கள் பட்டியலை வெளியிட வேண்டும் எனில் (அதாவது, எல்லா உருப்படிகளையும் சேர்த்து ஒரு மின்னஞ்சலை அனுப்புதல்), அடுத்துவரும் செயல்பாடுகளில் நேரடியாக வழங்கப்பட்ட தரவைப் பயன்படுத்தலாம்.
இந்தச் செயல்பாட்டைத் தொடர்ந்து வரும் படிகளில் வழங்கப்பட்ட தரவை அணுகுவதற்கு, சரக்கு உருப்படிகளின் பட்டியலாக உள்ள Get inventory item data என்ற மாறியைப் பயன்படுத்தவும். இந்த மாறியை நிபந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் இரண்டிலும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, இது போன்ற உள் மின்னஞ்சலை அனுப்பு செயல்பாட்டில் நீங்கள் சரக்கு உருப்படிகளின் பட்டியலை அனுப்பலாம்:
{% for single_inventory_item in getInventoryItemData %}
* SKU: {{ single_inventory_item.sku }} - Cost: {{ single_inventory_item.unitCost.amount }}
{% endfor %}தூண்டுதல்கள்
திட்டமிடப்பட்ட நேரம் தூண்டுதல் உட்பட எந்தவொரு பணிப்பாய்விலும் இந்தச் செயல்பாட்டை நீங்கள் பயன்படுத்தலாம். திட்டமிடப்பட்ட நேரம் தூண்டுதலைப் பயன்படுத்தும் பணிப்பாய்வானது, ஒரு நிகழ்வின் முடிவாக அல்லாமல் நீங்கள் குறிப்பிட்டுள்ள நேரத்தில் தொடங்கும். உங்கள் ஸ்டோரில் அல்லது ஒரு செயலியில் இருந்து பணிப்பாய்வைத் தொடங்க எந்தவொரு குறிப்பிட்ட நிகழ்வும் இல்லாததால், இதில் எந்தத் தரவும் தானாகவே சேர்க்கப்படாது.
API குறிப்பு
இந்தச் செயல்பாட்டில் பயன்படுத்தப்பட்ட API குறித்து மேலும் தகவலுக்கு, சரக்கு உருப்படிகள் வினவல் என்பதைப் பார்க்கவும்.