சந்தைத் தரவைப் பெறு
சந்தைத் தரவு தேவைப்படும் பணிப்பாய்வுகளில், உங்கள் Shopify ஸ்டோரிலிருந்து சந்தைத் தகவலைப் பெற சந்தைத் தரவைப் பெறு செயலைப் பயன்படுத்தலாம். சந்தைகள் என்பவை நீங்கள் விற்பனைக்காகக் குறிவைக்கும் பிராந்தியங்கள் அல்லது இடங்களின் குழுக்களாகும்.
இப்பக்கத்தில்
கட்டமைப்பு
புலங்கள்
சந்தைத் தரவைப் பெறு செயல் பின்வரும் புலங்களைக் கொண்டுள்ளது:
| புலம் | விளக்கம் |
|---|---|
| தரவை வரிசைப்படுத்தும் முறை | கட்டாயமானது. தேடல் வினவல் மூலம் பெறப்பட்ட தரவை வரிசைப்படுத்துவதற்கான அளவுருக்கள். |
| முடிவுகளின் அதிகபட்ச எண்ணிக்கை | கட்டாயமானது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் தேடல் வினவல் வழங்கக்கூடிய முடிவுகளின் அதிகபட்ச எண்ணிக்கை. ஒரே நேரத்தில் 100 முடிவுகள் வரை பெறலாம். |
| வினவல் | கட்டாயமானது. பொதுவான வினவல்களில் இருந்து தேர்ந்தெடுக்கவும் அல்லது உங்கள் சொந்த வினவலை உருவாக்க மேம்பட்டது என்பதைத் தேர்ந்தெடுக்கவும். |
வினவல் சரம்
செயலில் உள்ள அனைத்து சந்தைகளையும் பெறுவதற்கான எடுத்துக்காட்டு வினவல் இது:
status:ACTIVEstatus மாறியானது சந்தைகள் வினவலில் கிடைக்கும் ஒரு வடிப்பானாகும், மேலும் இதனைப் பலமுறை பயன்படுத்தலாம் அல்லது பிற மாறிகளுடன் இணைத்துப் பயன்படுத்தலாம்.
தரவை வினவும்போது பின்வருபவை தெரிந்திருப்பது உதவியாக இருக்கும்:
வினவல்கள் குறிப்பிட்ட தொடரியலைப் பின்பற்ற வேண்டும்
வினவல் புலத்தின் மதிப்புகள் எப்போதும் ஆவணப்படுத்தப்படுவதில்லை. சில சமயங்களில், API ஆவணங்களைப் பார்ப்பதன் மூலம் இந்த மதிப்புகளைக் கண்டறியலாம். மாற்றாக, நீங்கள் வடிகட்டும்போது நிர்வாகியில் உள்ள URLகளிலும் புல மதிப்புகளைக் கண்டறியலாம். எடுத்துக்காட்டாக, சில ஆர்டர் வினவல் மதிப்புகளைக் கண்டறிய, நிர்வாகியில் உள்ள ஆர்டர்கள் பக்கத்தை வடிகட்டி, அதன்பின் URLஐச் சரிபார்க்கவும்.
Shopify GraphiQL செயலியைப் பயன்படுத்தி உங்கள் ஷாப்பில் வினவலை ரன் செய்யலாம் அல்லது சோதிக்கலாம்.
உங்கள் வினவல் தோல்வியடைந்தால் என்ன நடக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். பெரும்பாலும் API (எதுவுமே இல்லை என்பதற்குப் பதிலாக) அனைத்து முடிவுகளையும் வழங்கும்.
பெறப்பட்ட தரவு
அனைத்து தரவைப் பெறு செயல்களும் 0 முதல் 100 வரையான ஆதாரங்களின் பட்டியலை வழங்குகின்றன. உங்களின் பயன்பாட்டு வகையைப் பொறுத்து, இந்தத் தரவைப் பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம்:
- ஒவ்வொன்றுக்கும் டேக் சேர்ப்பது போன்று, பட்டியலிலுள்ள ஒவ்வொரு உருப்படியையும் தனித்தனியாகக் கையாள வேண்டுமெனில், நீங்கள் ஃபார் ஈச் செயலைப் பயன்படுத்தலாம்.
- எத்தனை முடிவுகள் பெறப்பட்டன என்பதைக் கணக்கிடுவது போலத் தரவைத் திரட்ட வேண்டுமெனில், நீங்கள் எண்ணிக்கை (Count) அல்லது கூடுதல் (Sum) செயல்களைப் பயன்படுத்தலாம்.
- அனைத்து உருப்படிகளையும் கொண்டு மின்னஞ்சல் அனுப்புவது போன்று பட்டியலை வெளியிட வேண்டுமெனில், பெறப்பட்ட தரவை அடுத்தடுத்த செயல்களில் நேரடியாகப் பயன்படுத்தலாம்.
இந்தச் செயலைத் தொடர்ந்து வரும் படிகளில் பெறப்பட்ட தரவை அணுக, சந்தைகளின் பட்டியலான சந்தைத் தரவைப் பெறு என்ற மாறியைப் பயன்படுத்தவும். நிபந்தனைகள் மற்றும் செயல்கள் இரண்டிலும் இந்த மாறியைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, சந்தைகளின் பட்டியலை இதுபோன்று உள் மின்னஞ்சலை அனுப்பு (Send internal email) செயலில் அனுப்பலாம்:
{% for single_market in GetMarketData %}
* {{ single_market.name }}
{% endfor %}தூண்டுதல்கள்
திட்டமிடப்பட்ட நேரம் தூண்டுதல் உட்பட எந்தவொரு பணிப்பாய்விலும் இந்தச் செயலைப் பயன்படுத்தலாம். திட்டமிடப்பட்ட நேரம் தூண்டுதலைப் பயன்படுத்தும் பணிப்பாய்வில், நிகழ்வின் விளைவாக இல்லாமல் நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில்தான் பணிப்பாய்வு தொடங்கும். உங்கள் ஸ்டோரில் அல்லது செயலியில் பணிப்பாய்வைத் தொடங்கும் குறிப்பிட்ட நிகழ்வு எதுவும் இல்லாததால், தரவு எதுவும் தானாகவே சேர்க்கப்படாது.
API குறிப்பு
இந்தச் செயலில் பயன்படுத்தப்படும் API குறித்த கூடுதல் தகவலுக்கு, சந்தைகள் வினவல் என்பதைப் பார்க்கவும்.