நிறுவனத்தின் மெட்டாஃபீல்டைப் புதுப்பித்தல்
நிறுவனத்தின் மெட்டாஃபீல்டைப் புதுப்பிக்கும் செயல், பணிப்பாய்வைத் தூண்டும் நிறுவனத்தில் ஒரு மெட்டாஃபீல்டைச் சேர்க்கும் அல்லது அந்த நிறுவனத்தில் ஏற்கெனவே இருக்கும் மெட்டாஃபீல்டைப் புதுப்பிக்கும்.
இந்தப் பக்கத்தில்
புலங்கள்
நிறுவனத்தின் மெட்டாஃபீல்டைப் புதுப்பிக்கும் செயலில் பின்வரும் புலங்கள் உள்ளன.
| புலம் | விளக்கம் |
|---|---|
| மெட்டாஃபீல்டு | கட்டாயம். இந்த டிராப்டவுன், ஒரு மெட்டாஃபீல்டை பெயர் அல்லது பெயர்வெளி மற்றும் கீ மூலம் தேர்ந்தெடுக்கிறது. |
| பெயர்வெளி | கட்டமைக்கப்படாத மெட்டாஃபீல்டைத் தேர்ந்தெடுக்கும்போது இது கட்டாயம். பெயர்வெளி என்பது, மெட்டாஃபீல்டு வரையறைகளின் ஒரு குழுவிற்கான கொள்கலனாகும். ஒரு பெயர்வெளியினுள் மெட்டாஃபீல்டுகளைக் குழுவாக்குவது, உங்களின் மெட்டாஃபீல்டுகள் மற்ற மெட்டாஃபீல்டுகளுடன் முரண்படுவதைத் தடுக்கும். |
| கீ | கட்டமைக்கப்படாத மெட்டாஃபீல்டைத் தேர்ந்தெடுக்கும்போது இது கட்டாயம். கீ என்பது மெட்டாஃபீல்டு வரையறைக்கான ஓர் அடையாளங்காட்டியாகும். |
| வகை | கட்டமைக்கப்படாத மெட்டாஃபீல்டைத் தேர்ந்தெடுக்கும்போது இது கட்டாயம். மெட்டாஃபீல்டு மதிப்பின் தரவு வகை. |
| மதிப்பு | மதிப்பானது மெட்டாஃபீல்டில் சேமிக்கப்பட வேண்டிய தகவலாகும். பணிப்பாய்வு ரன் ஆகும்போதான பிழைகளைத் தவிர்க்க, அதன் தரவு வகைக்கு ஏற்ப மதிப்பை வடிவமைக்கவும். |
தூண்டுதல்கள்
நிறுவனத்தின் மெட்டாஃபீல்டைப் புதுப்பிக்கும் செயலுக்கு நிறுவனத்தின் ID தேவைப்படுகிறது, இது பணிப்பாய்வின் அடிப்படையில் தானாகவே சேர்க்கப்படும் (பொதுவாகத் தூண்டுதலிலிருந்து). எனவே, பின்வரும் தூண்டுதல்களுடன் தொடங்கும் பணிப்பாய்வுகளில் நிறுவனத்தின் மெட்டாஃபீல்டைப் புதுப்பிக்கும் செயலைப் பயன்படுத்தலாம்:
API விவரங்கள்
மேலும் அறிய, MetafieldInput உள்ளீட்டு ஆப்ஜெக்ட்டைப் பார்க்கவும்.