தயாரிப்பு மெட்டாஃபீல்டைப் புதுப்பி
தயாரிப்பு மெட்டாஃபீல்டைப் புதுப்பி செயல், பணிப்பாய்வைத் தூண்டும் தயாரிப்பில் ஒரு மெட்டாஃபீல்டைச் சேர்க்கும் அல்லது அந்தத் தயாரிப்பில் உள்ள தற்போதைய மெட்டாஃபீல்டைப் புதுப்பிக்கும்.
இந்தப் பக்கத்தில்
புலங்கள்
தயாரிப்பு மெட்டாஃபீல்டைப் புதுப்பி செயல் பின்வரும் புலங்களைக் கொண்டுள்ளது.
| புலம் | விளக்கம் |
|---|---|
| மெட்டாஃபீல்டு | கட்டாயம். இந்த கீழ்தோன்றும் மெனு, பெயர் அல்லது பெயர்வெளி மற்றும் விசை அடிப்படையில் ஒரு மெட்டாஃபீல்டைத் தேர்ந்தெடுக்கிறது. |
| பெயர்வெளி | கட்டமைக்கப்படாத மெட்டாஃபீல்டைத் தேர்ந்தெடுக்கும்போது இது கட்டாயம். பெயர்வெளி என்பது மெட்டாஃபீல்டு வரையறைகளின் குழுவுக்கான ஒரு கொள்கலன் ஆகும். ஒரு பெயர்வெளியில் மெட்டாஃபீல்டுகளைக் குழுவாக்குவது, பிற மெட்டாஃபீல்டுகளுடன் அவை முரண்படுவதைத் தடுக்கும். |
| விசை | கட்டமைக்கப்படாத மெட்டாஃபீல்டைத் தேர்ந்தெடுக்கும்போது இது கட்டாயம். விசை என்பது மெட்டாஃபீல்டு வரையறைக்கான ஒரு அடையாளங்காட்டியாகும். |
| வகை | கட்டமைக்கப்படாத மெட்டாஃபீல்டைத் தேர்ந்தெடுக்கும்போது இது கட்டாயம். மெட்டாஃபீல்டு மதிப்பின் தரவு வகை. |
| மதிப்பு | மதிப்பு என்பது மெட்டாஃபீல்டில் சேமிக்கப்பட வேண்டிய தகவலாகும். பணிப்பாய்வு இயங்கும்போது பிழைகளைத் தவிர்க்க, மதிப்பின் தரவு வகைக்கு ஏற்ப அதை வடிவமைக்கவும். |
தூண்டுதல்கள்
மெட்டாஃபீல்டைச் சேர்ப்பதற்கான தயாரிப்பை அடையாளம் காட்டும் தயாரிப்பு ID புலம், தயாரிப்பு மெட்டாஃபீல்டைப் புதுப்பி செயலுக்குத் தேவை. தயாரிப்பு ID இயல்புநிலையாக அமைக்கப்பட்டுள்ளது, அதை மாற்ற முடியாது. பின்வரும் தூண்டுதல்களுடன் தொடங்கும் பணிப்பாய்வுகளில் தயாரிப்பு மெட்டாஃபீல்டைப் புதுப்பி செயலைப் பயன்படுத்தலாம்:
API விவரங்கள்
மேலும் அறிய, MetafieldInput உள்ளீட்டு ஆப்ஜெக்டை மதிப்பாய்வு செய்யவும்.
வார்ப்புருக்கள்
Run code செயலைப் பயன்படுத்தி, முன்னொட்டு உள்ள டேக்குகளை ஒரு தயாரிப்பு மெட்டாஃபீல்டாக மாற்றவும்
இந்தப் பணிப்பாய்வு 'color:' போன்ற முன்னொட்டுடன் தொடங்கும் டேக்குகளை எடுத்து, அவற்றைத் தயாரிப்பு மெட்டாஃபீல்டு பட்டியலில் சேர்க்கும். டேக்குகளையும் மெட்டாஃபீல்டு பட்டியலில் உள்ள தற்போதைய உருப்படிகளையும் பாகுபடுத்துவதற்கு இது Run code செயலைப் பயன்படுத்துகிறது. ஒரு தயாரிப்பு உருவாக்கப்படும்போது பணிப்பாய்வு இயங்கும், ஆனால் தற்போதைய தயாரிப்புகளில் இதை மேனுவலாக ரன் செய்ய முடியும். வார்ப்புருவைக் காண்க
புதிய தயாரிப்புகளைத் தலைப்பு அடிப்படையில் டேக் செய்து ஒழுங்கமைக்கவும்
தயாரிப்புத் தலைப்பின் அடிப்படையில் புதிய தயாரிப்புகளுக்கான டேக் செய்தல், விற்பனை மேம்பாடு மற்றும் பராமரிப்பு வழிமுறைகளைத் தரப்படுத்தவும். வார்ப்புருவைக் காண்க
தயாரிப்பு மெட்டாஃபீல்டைப் பயன்படுத்தி, விற்பனையில் உள்ள தயாரிப்பு மாறுபாடுகளைத் தடமறியவும்
ஒரு தயாரிப்பின் ஒரு மாறுபாடாவது விற்பனையில் இருந்தால், அந்தத் தயாரிப்பில் ஒரு மெட்டாஃபீல்டை அமைக்கும். தற்போது எந்தத் தயாரிப்புகள் விற்பனையில் உள்ளன என்பதைத் தடமறிய இது பயனுள்ளதாக இருக்கும். வார்ப்புருவைக் காண்க
ஒரு தயாரிப்பு டேக்கில் குறிப்பிட்ட முன்னொட்டு இருந்தால், தயாரிப்பு மெட்டாஃபீல்டைப் புதுப்பிக்கவும்
ஸ்டோரில் ஒரு தயாரிப்பு சேர்க்கப்படும்போது, ஏதேனும் தயாரிப்பு டேக்குகளில் "prefix_" உள்ளதா எனச் சரிபார்த்து, மீதமுள்ள டேக்கை ஒரு தயாரிப்பு மெட்டாஃபீல்டாகச் சேர்க்கவும். வார்ப்புருவைக் காண்க