வாடிக்கையாளர் உருவாக்கப்பட்டது

உங்கள் ஸ்டோரில் புதிய வாடிக்கையாளர் ஆர்டர் செய்யும்போது அல்லது உங்கள் நிறுவனத்தில் உள்ள பயனர் ஒருவர் வாடிக்கையாளர் சுயவிவரத்தை மேனுவலாக உருவாக்கும்போது வாடிக்கையாளர் உருவாக்கப்பட்டது எனும் தூண்டுதல் பணிப்பாய்வைத் தொடங்கும்.

செயல்கள்

வாடிக்கையாளர் உருவாக்கப்பட்டது தூண்டுதலுடன் தொடங்கும் பணிப்பாய்வுகளில் பின்வரும் செயல்களைப் பயன்படுத்தலாம்.

வாடிக்கையாளர் உருவாக்கப்பட்டது தூண்டுதலைச் சோதித்தல்

இந்தத் தூண்டுதலுடன் தொடங்கும் பணிப்பாய்வைச் சோதிக்க, வாடிக்கையாளரை உருவாக்கவும்.

API விவரங்கள்

வாடிக்கையாளர் உருவாக்கப்பட்டது தூண்டுதலானது, Customer Graphql API ஆப்ஜெக்ட்டைப் பயன்படுத்திச் செயல்களை எடுக்க அனுமதிக்கிறது.

வார்ப்புருக்கள்

3 நாட்களுக்குப் பிறகு நிறுவனத்தில் சேர்க்கப்படாவிட்டால் D2C வாடிக்கையாளரை அகற்று

வாடிக்கையாளர் உருவாக்கப்பட்டு, 3 நாட்களுக்குள் நிறுவனத்தில் சேர்க்கப்படாமல் இருந்தால், வாடிக்கையாளர் நீக்கப்படுவார். வார்ப்புருவைக் காண்க

செய்திமடலுக்குச் சந்தாதாரராகும் வாடிக்கையாளர்களுக்கு லாயல்டி பாயிண்ட்டுகளை வழங்கி குறிச்சொல்லிடு

வாடிக்கையாளர்கள் செய்திமடலுக்குச் சந்தாதாரராகும்போது, Rivo-வில் லாயல்டி பாயிண்ட்டுகளை வழங்கி, அவர்களுக்குக் குறிச்சொல்லிடுங்கள். வார்ப்புருவைக் காண்க

மின்னஞ்சல் முகவரியின் அடிப்படையில் கல்வித் தள்ளுபடிக்குத் தகுதியான வாடிக்கையாளர்களுக்குக் குறிச்சொல்லிடு

அந்த வாடிக்கையாளர் குழுவிற்குக் கல்வித் தள்ளுபடியை வழங்க, மின்னஞ்சல் முகவரியில் ".edu" உள்ள வாடிக்கையாளர்களைப் பிரிக்கவும். வார்ப்புருவைக் காண்க

மின்னஞ்சல் டொமைன் மூலம் பணியாளரின் வாடிக்கையாளர் கணக்குகளுக்குக் குறிச்சொல்லிடு

விற்பனையை எளிதாகத் தடமறிய அல்லது அந்த வாடிக்கையாளர் குழுவிற்குப் பணியாளர் தள்ளுபடிகளை வழங்க, பணியாளர் கணக்குகளைப் பிரிக்கவும். வார்ப்புருவைக் காண்க