மின்னஞ்சல் சந்தைப்படுத்தலுக்கு வாடிக்கையாளர் சந்தா பெற்றுள்ளார்
உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உள்ள படிவத்தைப் பயன்படுத்தி ஒரு வாடிக்கையாளர் மின்னஞ்சல் சந்தைப்படுத்தலுக்குச் சந்தா பெறும்போது, மின்னஞ்சல் சந்தைப்படுத்தலுக்கு வாடிக்கையாளர் சந்தா பெற்றுள்ளார் தூண்டுதல் ஒரு பணிப்பாய்வைத் தொடங்குகிறது.
இந்தப் பக்கத்தில்
செயல்கள்
மின்னஞ்சல் சந்தைப்படுத்தலுக்கு வாடிக்கையாளர் சந்தா பெற்றுள்ளார் தூண்டுதலுடன் தொடங்கும் பணிப்பாய்வுகளில், பின்வரும் செயல்களைப் பயன்படுத்தலாம்.
உருவாக்கப்பட்ட வாடிக்கையாளர் தூண்டுதலைச் சோதித்தல்
இந்தத் தூண்டுதலுடன் தொடங்கும் ஒரு பணிப்பாய்வைச் சோதிக்க, உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு ஒரு வாடிக்கையாளராகச் சென்று, அதன் பிறகு உங்கள் படிவத்தைப் பயன்படுத்தி மின்னஞ்சல் சந்தைப்படுத்தலுக்குச் சந்தா பெறுங்கள்.
API விவரங்கள்
மின்னஞ்சல் சந்தைப்படுத்தலுக்கு வாடிக்கையாளர் சந்தா பெற்றுள்ளார் தூண்டுதலானது Customer Graphql API object மூலம் செயல்களை மேற்கொள்ள அனுமதிக்கிறது.
வார்ப்புருக்கள்
புதிய சந்தாதாரர்களிடம் உங்கள் பிராண்ட் கதையைப் பகிருங்கள்
உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உள்ள படிவம் மூலமாகப் புதிய சந்தாதாரர்கள் சந்தா பெறும்போது, அவர்களுக்கு 4 மின்னஞ்சல்களை அனுப்பி உங்கள் பிராண்டை அறிமுகப்படுத்துங்கள்:
- உங்கள் ஸ்டோருக்கு அவர்களை வரவேற்கவும்
- உங்கள் சமூக ஊடகச் சேனல்களைப் பின்தொடர அவர்களுக்கு அழைப்பு விடுக்கவும்
- உங்கள் அதிகம் விற்பனையாகும் தயாரிப்புகளை முன்னிலைப்படுத்திக் காட்டவும்
- எந்தவொரு ஆர்டரும் செய்யப்படவில்லை எனில், அவர்களுக்குத் தள்ளுபடியை வழங்கவும்
கொள்முதல் செய்த உடனேயே தள்ளுபடியுடன் கூடிய வரவேற்பு மின்னஞ்சல் அனுப்பப்படுவதைத் தவிர்க்க, செக்அவுட்டில் சந்தா பெற்ற வாடிக்கையாளர்களுக்கு விலக்களிக்கப்படும். வார்ப்புருவைக் காண்க
தள்ளுபடிக்கான மின்னஞ்சல் மூலம் புதிய சந்தாதாரர்களை வரவேற்கவும்
உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உள்ள படிவம் மூலமாகப் புதிய சந்தாதாரர்கள் சந்தா பெறும்போது, தள்ளுபடியுடன் கூடிய வரவேற்பு மின்னஞ்சலை அவர்களுக்கு அனுப்பவும். கொள்முதல் செய்த உடனேயே தள்ளுபடியுடன் கூடிய வரவேற்பு மின்னஞ்சல் அனுப்பப்படுவதைத் தவிர்க்க, செக்அவுட்டில் சந்தா பெற்ற வாடிக்கையாளர்களுக்கு இது விலக்களிக்கும். வார்ப்புருவைக் காண்க
தள்ளுபடிக்கான தொடர் மின்னஞ்சல்கள் மூலம் புதிய சந்தாதாரர்களை வரவேற்கவும்
உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உள்ள ஒரு படிவம் மூலமாகப் புதிய சந்தாதாரர்கள் சந்தா பெறும்போது, அவர்களுக்கு வரவேற்புத் தொடராக 4 மின்னஞ்சல்களை அனுப்பவும்:
- ஒரு தள்ளுபடியை வழங்கி, அவர்களை உங்கள் ஸ்டோருக்கு வரவேற்கவும்
- உங்கள் சமூக ஊடகச் சேனல்களைப் பின்தொடர அவர்களுக்கு அழைப்பு விடுக்கவும்
- உங்கள் அதிகம் விற்பனையாகும் தயாரிப்புகளை முன்னிலைப்படுத்திக் காட்டவும்
- எந்தவொரு ஆர்டரும் செய்யப்படவில்லை எனில் தள்ளுபடிக்கான நினைவூட்டல்
கொள்முதல் செய்த உடனேயே தள்ளுபடியுடன் கூடிய வரவேற்பு மின்னஞ்சல் அனுப்பப்படுவதைத் தவிர்க்க, செக்அவுட்டில் சந்தா பெற்ற வாடிக்கையாளர்களுக்கு விலக்களிக்கப்படும். வார்ப்புருவைக் காண்க