ஆர்டர் உருவாக்கப்பட்டது
வாடிக்கையாளர் ஒரு ஆர்டரைச் செய்யும்போது அல்லது ஒரு வரைவு ஆர்டர் கட்டணம் செலுத்தப்பட்டதாகக் குறிக்கப்பட்டு ஆர்டராக மாற்றப்படும்போது ஆர்டர் உருவாக்கப்பட்டது தூண்டுதலானது, பணிப்பாய்வைத் தொடங்கும்.
இந்தப் பக்கத்தில்
வழங்கப்பட்ட தரவு
ஆர்டர் உருவாக்கப்பட்டது தூண்டுதலுடன் தொடங்கும் பணிப்பாய்வுகளுக்குப் பின்வரும் தரவு வழங்கப்படும்.
| தரவு | விளக்கம் |
|---|---|
order | உருவாக்கப்பட்ட ஆர்டர். GraphQL Admin API ஆர்டர் ஆப்ஜெக்ட்டில் (Order object) தரவை அணுக அனுமதிக்கிறது |
தூண்டுதலைச் சோதித்தல்
இந்தத் தூண்டுதலுடன் தொடங்கும் செயலில் உள்ள பணிப்பாய்வைச் சோதிக்க, நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யலாம்:
- ஸ்டோர்ஃபிரண்ட் மூலம் ஒரு ஆர்டரை உருவாக்குதல்
- ஒரு வரைவு ஆர்டரை உருவாக்கி, அதற்குக் கட்டணம் செலுத்தப்பட்டதாகக் குறித்தல்
- நிர்வாகியில் இருக்கும் ஒரு ஆர்டரைத் தேர்வுசெய்து, Flow தானியக்கமாக்கலை ரன் செய் விருப்பத்தைப் பயன்படுத்தவும்.
செயல்கள்
இந்தத் தூண்டுதல் ஒரு ஆர்டரை வழங்குகிறது, எனவே ஆர்டர் தேவைப்படும் எந்தவொரு செயலையும் பயன்படுத்த இது உங்களை அனுமதிக்கிறது, அவற்றுள் அடங்குபவை:
- ஆர்டர் வரிசை உருப்படியைச் சேர்
- ஆர்டர் டேக்குகளைச் சேர்
- ஆர்டரைக் காப்பகப்படுத்து
- ஆர்டரை ரத்துசெய்
- பேமெண்ட்டைப் பெறு
- நிறைவேற்றல் ஆர்டரை நிறுத்திவை
- ஆர்டரைக் கட்டணம் செலுத்தப்பட்டதாகக் குறி
வாடிக்கையாளர் போன்ற பிற தரவுகளை அணுக ஆர்டர்கள் உங்களை அனுமதிக்கின்றன, எனவே இது வாடிக்கையாளர் செயல்களுடன் பயன்படுத்தப்படலாம். அவற்றுள் அடங்குபவை:
- வாடிக்கையாளர் டேக்குகளைச் சேர்
- வாடிக்கையாளர் மெட்டாஃபீல்டை அகற்று
- வாடிக்கையாளர் டேக்குகளை அகற்று
- வாடிக்கையாளர் மெட்டாஃபீல்டைப் புதுப்பி
- வாடிக்கையாளர் குறிப்பைப் புதுப்பி
ஆர்டர்களில் வரிசை உருப்படிகள் போன்ற தரவுகளின் பட்டியல்களும் இருக்கும். For each (ஒவ்வொன்றுக்கும்) செயலைப் பயன்படுத்தி, நீங்கள் இந்தப் பட்டியல்கள் மூலம் லூப் செய்து ஒவ்வொரு உருப்படியிலும் செயல்களைச் செய்யலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் வரிசை உருப்படிகள் மூலம் லூப் செய்து ஒவ்வொரு தயாரிப்பிற்கும் ஒரு டேக்கைச் சேர்க்கலாம்.
வார்ப்புருக்கள்
குறிப்பிட்ட பிரிவில் உள்ள ஒரு உறுப்பினர் ஆர்டர் செய்யும்போது ஆர்டர் டேக்கைச் சேர்
ஒரு ஆர்டர் உருவாக்கப்படும்போது, உறுப்பினர் ஒரு பிரிவில் இருக்கிறாரா என்பதைச் சரிபார்த்து, அதன் பின் ஆர்டர் டேக்கைச் சேர்க்கும். "பிரிவில் உள்ள வாடிக்கையாளரைத் தேடு" (Look up customer in segment) செயலைப் பயன்படுத்துகிறது. வார்ப்புருவைக் காண்க
ஆர்டர் செய்யப்பட்ட அனைத்துத் தயாரிப்பு டேக்குகளுக்கும் வாடிக்கையாளர் டேக்குகளைச் சேர்
ஒரு ஆர்டர் உருவாக்கப்படும்போது, அந்த ஆர்டரின் வரிசை உருப்படிகளுடன் தொடர்புடைய அனைத்துத் தயாரிப்பு டேக்குகளுக்கும் வாடிக்கையாளர் டேக்குகளைச் சேர்க்கும். வார்ப்புருவைக் காண்க
ஆர்டரில் உள்ள ஒவ்வொரு தயாரிப்பிலிருந்தும் தரவை (ஹேண்டில்) ஆர்டர் டேக்காகச் சேர்
ஒவ்வொரு தயாரிப்பிற்கும் ஒரு டேக்கைச் சேர்க்க, ஆர்டரில் உள்ள lineItem-கள் (வரிசை உருப்படிகள்) மூலம் லூப் செய்கிறது. வார்ப்புருவைக் காண்க
புதிய ஆர்டர்களில் இலவச (100% தள்ளுபடியுடன்) உருப்படியைச் சேர்
உருப்படி சரக்கு இருப்பில் இருந்தால், இந்தப் வார்ப்புரு புதிய ஆர்டர்களில் தள்ளுபடியுடன் கூடிய இலவச உருப்படியைச் சேர்க்கும். இது சரக்கு இருப்பைச் சரிபார்த்து, 100% தள்ளுபடியைப் பயன்படுத்தி, வாடிக்கையாளருக்கு அறிவிக்காமல் ஆர்டரைப் புதுப்பிக்கும். (1) வாடிக்கையாளரின் ஆர்டரில் இலவச உருப்படியைச் சேர்த்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிப்பதன் மூலம் அவர்களின் திருப்தியை மேம்படுத்தவும், (2) புதிய அல்லது அதிகம் அறியப்படாத தயாரிப்புகளை ஆர்டர்களில் இலவச மாதிரிகளாகச் சேர்த்து அவற்றை விளம்பரப்படுத்தவும் அல்லது (3) இலவச உருப்படிகளைச் சேர்ப்பது மற்றும் அதற்கான தள்ளுபடியை வழங்குவது போன்றவற்றைத் தானியக்கமாக்கி விளம்பரங்களை நெறிப்படுத்தவும் இந்தத் தானியக்கமாக்கல் பயனுள்ளதாக இருக்கும். வார்ப்புருவைக் காண்க
சர்வதேச ஆர்டர்களை விரிதாளில் சேர்
ஒவ்வொரு புதிய சர்வதேச ஆர்டருக்கும் Google Sheet இல் ஒரு வரிசையைச் சேர். வார்ப்புருவைக் காண்க
ஒரு புதிய ஆர்டர் செய்யும்போது Google Sheets வரிசைகளில் வரிசை உருப்படிகளைச் சேர்
ஒரு புதிய ஆர்டர் உருவாக்கப்படும்போது, பணிப்பாய்வில் உள்ள For Each (ஒவ்வொன்றுக்கும்) படியானது, ஒவ்வொரு வரிசை உருப்படி மூலமும் லூப் செய்து, தயாரிப்புத் தரவை Google Sheet வரிசையில் சேர்க்கும். வார்ப்புருவைக் காண்க
மறுக்கப்பட்டோர் பட்டியலில் உள்ள மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து வரும் ஆர்டர்களை ரத்துசெய்து, அவற்றிற்கு டேக் இடு
மோசடிச் செயல்களுடன் முன்பு தொடர்புடைய மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து ஆர்டர்கள் வந்தால், அவற்றை ரத்துசெய்து டேக் இடும். நீங்கள் வழங்கும் நம்பகத்தன்மையற்ற மின்னஞ்சல்கள் மற்றும் டொமைன்களின் பட்டியலுடன் இது சரிபார்த்து, கண்டறியப்படும் ஆர்டர்களுக்கு ரத்துசெய்தல் மற்றும் டேக் இடுதல் செயல்களைப் பயன்படுத்தும். வார்ப்புருவைக் காண்க
அடிக்கடி ரிட்டர்ன் செய்பவர்களுக்கான ஆர்டர்களை ரத்துசெய்
கடந்த ஆறு மாதங்களில் ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட முறை உருப்படிகளை ரிட்டர்ன் செய்த வாடிக்கையாளர்களின் ஆர்டர்களை ரத்துசெய்யும். இது ஆர்டர் தரவைப் பெற்று, ரிட்டர்ன்களை எண்ணி, தற்போதைய ஆர்டரை ரத்துசெய்து, பணத்தைத் திரும்பப் பெற்று உருப்படிகளை மீண்டும் இருப்பு வைக்கும். இதற்காக இந்த வார்ப்புருவைப் பயன்படுத்தலாம்: அடிக்கடி ரிட்டர்ன் செய்பவர்களால் ஏற்படும் இழப்புகளைக் குறைக்கவும், வரக்கூடிய ரிட்டர்ன்களை முன்கூட்டியே கையாண்டு ஆர்டர் மேலாண்மையை நெறிப்படுத்தவும், அதிகப்படியான ரிட்டர்ன்களைத் தவிர்த்து லாபத்தைத் தக்கவைக்கவும். வார்ப்புருவைக் காண்க
வாடிக்கையாளர் இன்று 5 ஆர்டர்களுக்கும் மேல் செய்திருந்தால் ஆர்டர்களை ரத்துசெய்
ஒரு வாடிக்கையாளர் ஒரே நாளில் ஐந்து ஆர்டர்களுக்கும் மேல் செய்தால், அந்த ஆர்டர்களை ரத்துசெய்யும். கடந்த 24 மணிநேரத்தில் ஒரு வாடிக்கையாளர் செய்த ஆர்டர்களின் எண்ணிக்கையைச் சரிபார்த்து, இந்த வரம்பை மீறும் ஆர்டர்களை ரத்துசெய்யும், அத்துடன் மோசடி செய்திருக்கலாம் என அந்த வாடிக்கையாளருக்கு டேக் இடும். வார்ப்புருவைக் காண்க
ஆர்டரில் கிஃப்ட் கார்டு உள்ளதா எனச் சரிபார்
ஒரு ஆர்டரில் உள்ள தயாரிப்புகளில் ஏதேனும் Shopify கிஃப்ட் கார்டாக உள்ளதா எனச் சரிபார்க்கும். வார்ப்புருவைக் காண்க
கிஃப்ட் கார்டைப் பயன்படுத்தி ஆர்டருக்கான கட்டணம் செலுத்தப்பட்டதா எனச் சரிபார்
ஆர்டரில் பயன்படுத்தப்பட்ட கட்டண நுழைவாயில்களில் ஒன்று கிஃப்ட் கார்டா என்பதைச் சரிபார்க்கும். வார்ப்புருவைக் காண்க
ஆர்டரில் தயாரிப்பு மெட்டாஃபீல்டு மதிப்புகளைச் சரிபார்
ஆர்டரின் வரிசை உருப்படிகளில் தயாரிப்பு மெட்டாஃபீல்டுகளைச் சரிபார்க்கும். வார்ப்புருவைக் காண்க
$100-க்கும் அதிகமான மதிப்புள்ள ஆர்டர்களைத் திருத்தி இலவசப் பரிசைச் சேர்க்கவும்
குறிப்பிட்ட தொகைக்கும் அதிகமாக உள்ள ஆர்டர்களுக்கு ‘ஆர்டரைத் திருத்து’ என்பதன் மூலம் ஒரு ஆர்டரைத் திருத்தி இலவசப் பரிசைச் சேர்க்கவும். வார்ப்புருவைக் காண்க
தள்ளுபடிக் குறியீட்டின் அடிப்படையில் ஆர்டரைத் திருத்தி இலவசத் தயாரிப்பைச் சேர்க்கவும்
குறிப்பிட்ட தள்ளுபடிக் குறியீடு பயன்படுத்தப்பட்டால், ஆர்டரைத் திருத்தி ஒரு இலவசத் தயாரிப்பைச் சேர்க்கவும். வார்ப்புருவைக் காண்க
வழக்கத்திற்கு மாறாக அதிகளவிலான ஆர்டர் அளவுகள் குறித்து அறிவிப்பைப் பெறுக
அமைக்கப்பட்டுள்ள உருப்படியின் அளவு வரம்பை விட அதிகமாக ஆர்டர் செய்யும்போது மின்னஞ்சல் அறிவிப்பைப் பெறுங்கள். வார்ப்புருவைக் காண்க
புதிய ஆர்டர்களில் பெரிய தள்ளுபடிகள் பற்றி அறிவிப்பைப் பெறுக
ஆர்டரில் வழக்கத்திற்கு மாறாகப் பெரிய தள்ளுபடி பயன்படுத்தப்படும்போது மின்னஞ்சலைப் பெறுங்கள். வார்ப்புருவைக் காண்க
குறிப்பிட்ட டொமைனிலிருந்து வரும் ஆர்டர்கள் பற்றி அறிவிப்பைப் பெறுக
குறிப்பிட்ட மின்னஞ்சல் டொமைனிலிருந்து ஆர்டர் செய்யப்படும்போது மின்னஞ்சலைப் பெறுங்கள். வார்ப்புருவைக் காண்க
குறிப்பிட்ட தள்ளுபடிக் குறியீடு பயன்படுத்தப்படும்போது அறிவிப்பைப் பெறுக
ஆர்டரில் குறிப்பிட்ட தள்ளுபடிக் குறியீடு பயன்படுத்தப்படும்போது மின்னஞ்சலைப் பெறுங்கள். வார்ப்புருவைக் காண்க
ஒரு வாடிக்கையாளர் 24 மணிநேரத்தில் பல ஆர்டர்களைச் செய்திருந்தால் நிறைவேற்றங்களை நிறுத்திவைக்கவும்
24 மணிநேரத்திற்குள் ஒரு வாடிக்கையாளர் பல ஆர்டர்களைச் செய்துள்ளாரா எனப் பார்க்கவும். செய்திருந்தால், நிறைவேற்றங்களை நிறுத்திவைத்து ஷிப்பிங்கை ஒருங்கிணைக்கவும். வார்ப்புருவைக் காண்க
வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட டேக்கைக் கொண்டிருந்தால், ஆர்டரை நிறுத்திவைத்து ஆர்டர் டேக்கைச் சேர்க்கவும்
புதிய ஆர்டர் வரும்போது, அதிக ஆபத்து அல்லது சந்தேகம் போன்ற வாடிக்கையாளர் டேக் ஏதேனும் உள்ளதா எனப் பார்க்கவும். இருந்தால், ஆர்டரை நிறுத்திவைத்து “அதிக ஆபத்து” என்ற டேக்கைச் சேர்க்கவும். வார்ப்புருவைக் காண்க
கடந்த 24 மணிநேரத்தில் வாடிக்கையாளர் 1-க்கும் மேற்பட்ட ஆர்டரைச் செய்திருந்தால் ஆர்டர்களை நிறுத்திவைக்கவும்
ஒரு ஆர்டர் உருவாக்கப்படும்போது, கடந்த 24 மணிநேரத்தில் வாடிக்கையாளர் வேறு ஏதேனும் ஆர்டர்களைச் செய்துள்ளாரா எனச் சரிபார்க்கவும். அவ்வாறெனில், அனைத்து ஆர்டர்களையும் நிறுத்திவைக்கவும். வார்ப்புருவைக் காண்க
வாடிக்கையாளரின் 3-வது ஆர்டருக்குப் பிறகு அவருக்கு கிஃப்ட் கார்டை வழங்கவும்
வாடிக்கையாளரின் 3-வது ஆர்டருக்குப் பிறகு Rise.ai மூலம் அவர்களுக்கு ஒரு கிஃப்ட் கார்டை வழங்கி அதை மின்னஞ்சல் செய்யவும். வார்ப்புருவைக் காண்க
7 நாட்களுக்குள் கட்டணத் திருப்பல் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், உங்கள் வாடிக்கையாளர் சேவைக்குழுவிற்கு அறிவிக்கவும்
கட்டணத் திருப்பல் செயல்முறையில் உள்ளதா என்பதை அறிய, ஒரு ஆர்டர் உருவாக்கப்பட்டு 7 நாட்கள் ஆகும் வரை இந்தப் பணிப்பாய்வு காத்திருக்கும். அப்படியிருந்தால், உங்கள் வாடிக்கையாளர் சேவைக்குழுவிற்கு அறிவிக்க மின்னஞ்சலை அனுப்பும். 7 நாட்களுக்குப் பிறகு கட்டணத் திருப்பல் நடந்தால், இந்த அணுகுமுறை செயல்படாது என்பதை நினைவில்கொள்ளவும். வார்ப்புருவைக் காண்க
வாழ்நாள் செலவு அடுக்குகளின்படி வாடிக்கையாளர்களை ஒழுங்கமைக்கவும்
இலக்கிடப்பட்ட விசுவாச மற்றும் சந்தைப்படுத்தல் தகவல்தொடர்புகளுக்காக, வாழ்நாள் செலவு அடுக்குகளின் அடிப்படையில் வாடிக்கையாளர் டேக்குகளைச் சேர்க்கவும். வார்ப்புருவைக் காண்க
ஆர்டர் எண்ணிக்கையின் அடுக்குகளின்படி வாடிக்கையாளர்களை ஒழுங்கமைக்கவும்
இலக்கிடப்பட்ட விசுவாச மற்றும் சந்தைப்படுத்தல் தகவல்தொடர்புகளுக்காக, ஆர்டர் எண்ணிக்கையின் அடுக்குகளின் அடிப்படையில் வாடிக்கையாளர் டேக்குகளைச் சேர்க்கவும். வார்ப்புருவைக் காண்க
விஐபி வாடிக்கையாளர்களுக்கான ஸ்டோர் அனுபவத்தைத் தனிப்பயனாக்கவும்
வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட வரம்பைத் தாண்டி செலவு செய்யும்போது, அவரை ஒரு Nosto தனிப்பயனாக்கப் பிரிவில் சேர்க்கவும். வார்ப்புருவைக் காண்க
ஆர்டர் உருவாக்கப்படும்போது அனைத்து ஆர்டர் டேக்குகளையும் அகற்றவும்
ஆர்டரில் உள்ள அனைத்து டேக்குகளையும் அகற்றுவதன் மூலம் அவற்றைச் சுத்தப்படுத்தலாம். மற்ற டேக் செய்யும் செயல்களுக்கும் இதே முறையைப் பயன்படுத்தலாம். வார்ப்புருவைக் காண்க
டெலிவரிகள் தாமதமாகும்போது லாயல்டி புள்ளிகளை வழங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கவும்
டெலிவரிகள் தாமதமாகும்போது Yotpo-வில் லாயல்டி புள்ளிகளை வழங்கி, SMSBump மூலம் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கவும். வார்ப்புருவைக் காண்க
டிப் வழங்கும் வாடிக்கையாளர்களுக்கு லாயல்டி புள்ளிகளை வழங்கி அவர்களை டேக் செய்யவும்
ஆர்டருக்கு டிப் வழங்கும் வாடிக்கையாளர்களுக்கு LoyaltyLion மூலம் லாயல்டி புள்ளிகளைச் சேர்த்து அவர்களை டேக் செய்யவும். வார்ப்புருவைக் காண்க
மீண்டும் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு லாயல்டி புள்ளிகளை வழங்கவும்
3 அல்லது அதற்கும் அதிகமான ஆர்டர்களைச் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு Marsello-வில் லாயல்டி புள்ளிகளை வழங்கவும். வார்ப்புருவைக் காண்க
கொள்முதல் நடத்தைக்கேற்ப வாடிக்கையாளர்களைப் பிரிக்கவும்
தனிப்பயனாக்கம் மற்றும் இலக்கிடப்பட்ட சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக, வாடிக்கையாளர்களை அவர்களின் வாங்கும் விருப்பங்களின் அடிப்படையில் டேக் செய்யவும். வார்ப்புருவைக் காண்க
B2B ஆர்டர் விலைப்பட்டியலைப் பல மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பவும்
B2B ஆர்டர்களுக்கான விலைப்பட்டியல்களைப் பல மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பவும். நிறுவனத்தின் இருப்பிடத்தில் மெட்டாஃபீல்டுகளாகச் சேமிக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகள் இருந்தால் இது அவற்றைப் பயன்படுத்தும் அல்லது முதலில் மூன்று மெட்டாஃபீல்டுகளை உருவாக்கும்: extra_invoice_recipient.email1, .email2, .email3. வார்ப்புருவைக் காண்க
ஆர்டர் மற்றும் வரிசை உருப்படிகளை Google Sheets-க்கு அனுப்பவும்
For Each செயலைப் பயன்படுத்தி Google Sheets-இல் உள்ள வரிசையொன்றுக்கு ஒவ்வொரு ஆர்டர் வரிசை உருப்படியையும் அவுட்புட் எடுக்கவும். வார்ப்புருவைக் காண்க
கொள்முதல் நிறைவடையும்போது அறிவிப்பை அனுப்பவும்
கொள்முதல் நிறைவடையும்போது Line அறிவிப்பை அனுப்பவும். வார்ப்புருவைக் காண்க
டிப் வழங்கும் வாடிக்கையாளர்களுக்கு நன்றித் தகவலை அனுப்பி அவர்களை டேக் செய்யவும்
ஆர்டருக்கு டிப் வழங்கும் வாடிக்கையாளர்களுக்கு SMSBump அறிவிப்பை அனுப்பி அவர்களை டேக் செய்யவும். வார்ப்புருவைக் காண்க
வாடிக்கையாளரின் 2-வது ஆர்டருக்குப் பிறகு உலாவிப் புஷ் அறிவிப்பை அனுப்பவும்
மேலும் மீண்டும் வாங்குவதை ஊக்குவிக்க, வாடிக்கையாளரின் 2-வது ஆர்டருக்குப் பிறகு ஒரு PushOwl சந்தாதாரருக்கு உலாவிப் புஷ் அறிவிப்பை அனுப்பவும். வார்ப்புருவைக் காண்க
வாடிக்கையாளர் இரண்டாவது ஆர்டரைச் செய்த பிறகு கையால் எழுதிய குறிப்பை அனுப்பவும்
வாடிக்கையாளர் தனது இரண்டாவது ஆர்டரைச் செய்த பிறகு Scribeless மூலம் நேரடி அஞ்சலில் கையால் எழுதிய குறிப்பை அனுப்பவும். வார்ப்புருவைக் காண்க
B2B ஆர்டர் செய்யும்போது அக மின்னஞ்சலை அனுப்பவும்
B2B நிறுவனத்தால் செய்யப்பட்ட ஆர்டர்களின் விவரங்களுடன் ஒரு அக மின்னஞ்சலை அனுப்பவும். வார்ப்புருவைக் காண்க
வாடிக்கையாளர் ஒரு தயாரிப்பின் பல மாறுபாடுகளை ஆர்டர் செய்யும்போது அறிவிப்பை அனுப்பவும்
வாடிக்கையாளர் ஒரே தயாரிப்பின் பல மாறுபாடுகளை ஆர்டர் செய்யும்போது மின்னஞ்சல் அறிவிப்பைப் பெறுங்கள். வார்ப்புருவைக் காண்க
ஆர்டரில் ஒரு தொகுப்பு இருக்கும்போது அறிவிப்பை அனுப்பவும்
ஒரு ஆர்டர் உருவாக்கப்படும்போது இந்தப் பணிப்பாய்வு தொடங்கும். மேலும் ஆர்டரில் உள்ள தயாரிப்புகள் ஏதேனும் ஒரு தொகுப்பின் பகுதியாக வாங்கப்பட்டதா எனச் சரிபார்க்கும். அவ்வாறு இருந்தால், தொகுப்பு விவரங்களுடன் அக மின்னஞ்சல் அனுப்பப்படும். கூடுதலாக, ஆர்டருக்குள் ஒரு தொகுப்பு இருப்பதைக் கண்டறிய வேண்டிய எந்தவொரு பயன்பாட்டு நிலைக்கும் இந்தப் பணிப்பாய்வைத் தொடக்கப் புள்ளியாகப் பயன்படுத்தலாம். வார்ப்புருவைக் காண்க
B2B ஆர்டர்களை டேக் செய்யவும்
B2B ஆர்டர்கள் உருவாக்கப்படும்போது அவற்றில் ஒரு டேக்கைச் சேர்க்கவும். இந்த டேக்கைத் தனிப்பயனாக்கலாம். வார்ப்புருவைக் காண்க
வாடிக்கையாளரின் முதல் ஆர்டரை டேக் செய்யவும்
வாடிக்கையாளரின் முதல் ஆர்டரில் ஒரு டேக்கைச் சேர்க்கவும். வார்ப்புருவைக் காண்க
அனைத்து வாடிக்கையாளர்களையும் அவர்களின் விற்பனைப் புள்ளி இடத்துடன் டேக் செய்யவும்
விற்பனைப் புள்ளி (POS) செயலி மூலம் வாடிக்கையாளர் கொள்முதல் பதிவு செய்யப்படும்போது, இடத்தின் பெயருடன் ஒரு டேக்கைச் சேர்க்கும். சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களை இலக்காகக் கொள்ள இது பயனுள்ளதாக இருக்கும். வார்ப்புருவைக் காண்க
மாதிரிப் பொருட்களை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களின் மாற்றத்திற்கு டேக் சேர்த்து, தடமறியவும்
மாதிரியை ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களைப் பிரித்து, அவர்கள் பிற்காலத்தில் முழு விலை கொடுத்து வாங்குபவராக மாறினார்களா என்பதைத் தடமறியவும். வார்ப்புருவைக் காண்க
வரைவு ஆர்டரிலிருந்து உருவாக்கப்படும்போது வாடிக்கையாளர் மற்றும் ஆர்டருக்கு டேக் சேர்க்கவும்
புதிய ஆர்டர் உருவாக்கப்படும்போது, Draft Orders என்ற செயலியிலிருந்து அந்த ஆர்டர் வந்திருந்தால், ஆர்டருக்கும் வாடிக்கையாளருக்கும் வரைவு டேக்கைச் சேர்க்கும். வார்ப்புருவைக் காண்க
தவணைகளில் பேமெண்ட் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு டேக் சேர்த்து, லாயல்டி புள்ளிகளை வழங்கவும்
Shop Pay Installments மூலம் பேமெண்ட் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு டேக் சேர்த்து, Swell-இல் லாயல்டி புள்ளிகளை வழங்கவும். வார்ப்புருவைக் காண்க
விருப்பமான நாணயத்தின்படி வாடிக்கையாளர்களுக்கு டேக் சேர்க்கவும்
ஒவ்வொரு புதிய ஆர்டரிலும் பயன்படுத்தப்படும் பேமெண்ட் நாணயக் குறியீட்டைக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு டேக் சேர்க்கவும். வார்ப்புருவைக் காண்க
நேரில் கொள்முதல் செய்த வாடிக்கையாளர்களுக்கு டேக் சேர்க்கவும்
Shopify POS மூலம் நேரில் ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு டேக்கைச் சேர்க்கவும். வார்ப்புருவைக் காண்க
வாடிக்கையாளர்கள் கொள்முதல் செய்த சில்லறை விற்பனை இருப்பிடங்களைக் கொண்டு அவர்களுக்கு டேக் சேர்க்கவும்
வாடிக்கையாளர் கொள்முதல் செய்த ஒவ்வொரு சில்லறை விற்பனை இருப்பிடத்தின் பெயரையும் எளிதாகப் பிரிப்பதற்காக வாடிக்கையாளர் டேக்காகச் சேர்க்கவும். வார்ப்புருவைக் காண்க
முதன்முறை வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் விற்பனைப் புள்ளி இடத்தைக் கொண்டு டேக் சேர்க்கவும்
விற்பனைப் புள்ளி (POS) செயலி மூலம் முதன்முறை வாடிக்கையாளர் கொள்முதல் பதிவு செய்யப்படும்போது, இடத்தின் பெயருடன் ஒரு டேக்கைச் சேர்க்கும். சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களை இலக்காகக் கொள்ள இது பயனுள்ளதாக இருக்கும். வார்ப்புருவைக் காண்க
நாணயத்தின் அடிப்படையில் ஆர்டர்களுக்கு டேக் சேர்க்கவும்
வாடிக்கையாளர் பயன்படுத்திய பேமெண்ட் நாணயக் குறியீட்டைக் கொண்டு புதிய ஆர்டர்களுக்கு டேக் சேர்க்கவும். வார்ப்புருவைக் காண்க
கட்டண நுழைவாயிலின் அடிப்படையில் ஆர்டர்களுக்கு டேக் சேர்க்கவும்
குறிப்பிட்ட கட்டண நுழைவாயிலிலிருந்து புதிய ஆர்டர்கள் வந்தால் அவற்றுக்கு டேக் சேர்க்கும். ஒரு ஆர்டர் உருவாக்கப்படும்போது இந்தப் பணிப்பாய்வு ரன் ஆகும். குறிப்பிட்ட கட்டண நுழைவாயிலைச் சரிபார்க்க இது ஒரு நிபந்தனையைப் பயன்படுத்துகிறது. அது பொருந்தினால், பணிப்பாய்வு அந்த ஆர்டருக்கு டேக்(களை) சேர்க்கும். வார்ப்புருவைக் காண்க
விற்பனைச் சேனலின் அடிப்படையில் ஆர்டர்களுக்கு டேக் சேர்க்கவும்
புதிய ஆர்டர்கள் வந்த விற்பனைச் சேனலின் பெயரைக் கொண்டு அவற்றுக்கு டேக் சேர்க்கவும். வார்ப்புருவைக் காண்க
ஷிப்பிங் முறையின் அடிப்படையில் ஆர்டர்களுக்கு டேக் சேர்க்கவும்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஷிப்பிங் முறையின் அடிப்படையில் ஒவ்வொரு ஆர்டருக்கும் டேக் சேர்க்கவும். வார்ப்புருவைக் காண்க
நிர்வாகி மூலமாகவோ ஆன்லைன் ஸ்டோர் மூலமாகவோ உருவாக்கப்பட்ட ஆர்டர்களுக்கு டேக் சேர்க்கவும்
ஒரு ஆர்டர் உருவாக்கப்படும்போது, அந்த ஆர்டர் "Online Store" அல்லது "Draft Orders" செயலியிலிருந்து உருவானதா என்பதைச் சரிபார்க்கும். அவ்வாறெனில், ஆர்டர்களுக்கு டேக் சேர்க்கும். குறிப்பு - வேறொரு மூலத்திலிருந்து நகலெடுக்கப்பட்ட ஆர்டர்கள், அசல் ஆர்டரின் செயலியிலிருந்து உருவானதாகத் தோன்றும். வார்ப்புருவைக் காண்க
விற்பனைப் புள்ளியில் (POS) உருவாக்கப்பட்ட ஆர்டர்களுக்கு டேக் சேர்க்கவும்
விற்பனைப் புள்ளி செயலி மூலம் ஒரு ஆர்டர் உருவாக்கப்பட்டதா என்பதை எப்படிச் சரிபார்ப்பது எனத் தெரிந்துகொள்ளுங்கள். வார்ப்புருவைக் காண்க
குறிப்பிட்ட தயாரிப்பு டேக்குகள் உள்ள தயாரிப்புகளைக் கொண்ட ஆர்டர்களுக்கு டேக் சேர்க்கவும்
ஒரு ஆர்டரில் குறிப்பிட்ட வகையான தயாரிப்புகள் எப்போது உள்ளன என்பதை அறிய வேண்டுமா? இந்தத் தானியக்கமாக்கல் மூலம், ஒவ்வொரு வரிசை உருப்படியின் தயாரிப்பிலும் உள்ள டேக்குகளின் அடிப்படையில் நீங்கள் ஆர்டர்களுக்கு டேக் சேர்க்கலாம். வார்ப்புருவைக் காண்க
குறிப்பிட்ட தயாரிப்புகளைக் கொண்டுள்ள ஆர்டர்களுக்கு டேக் சேர்க்கவும்
ஆர்டர் வரிசை உருப்படிகள் எதிலேனும் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை உள்ளடக்கிய ஆர்டர்களுக்கு பிரத்தியேக டேக்கைச் சேர்க்கவும். வார்ப்புருவைக் காண்க
இலவச ஷிப்பிங் பெற்ற ஆர்டர்களுக்கு டேக் சேர்க்கவும்
செக்அவுட்டின்போது இலவச ஷிப்பிங்கிற்குத் தகுதிபெற்ற புதிய ஆர்டர்களுக்கு டேக் சேர்க்கவும். வார்ப்புருவைக் காண்க
குறிப்பிட்ட ஷிப்பிங் முறையைப் பயன்படுத்திய ஆர்டர்களுக்கு டேக் சேர்க்கவும்
குறிப்பிட்ட ஷிப்பிங் முறையின் பெயரைப் பயன்படுத்திய ஆர்டர்களுக்குப் பிரத்தியேக டேக்கைச் சேர்க்கவும். வார்ப்புருவைக் காண்க
முதல் பார்வை லேண்டிங் பக்கத்தில் குறிப்பிட்ட URL பாதை உள்ள ஆர்டர்களுக்கு டேக் சேர்க்கவும்
ஒரு ஆர்டர் உருவாக்கப்பட்டு, வாடிக்கையாளரின் லேண்டிங் பக்க URL-இல் ஒரு குறிப்பிட்ட சரம் ("fr") இருக்கும்போது, இது ஆர்டர் டேக்குகளைச் சேர்க்கும். firstVisit தரவு கிடைப்பதற்கான நேரத்தை வழங்க, இத்தானியக்கமாக்கல் காத்திருப்புப் படியைப் பயன்படுத்துகிறது. வார்ப்புருவைக் காண்க
தொடர்புடைய UTM பிரச்சாரத்தைக் கொண்ட ஆர்டர்களுக்கு டேக் சேர்க்கவும்
தொடர்புடைய UTM பிரச்சாரங்களின் பெயர்களைக் கொண்ட ஆர்டர்களுக்கு டேக்குகளைச் சேர்க்கும். வார்ப்புருவைக் காண்க
2வது ஆர்டருக்குப் பிறகு தள்ளுபடிக் குறியீட்டைக் குறுஞ்செய்தியாக அனுப்பவும்
ஒரு வாடிக்கையாளர் 2 ஆர்டர்களைச் செய்த பிறகு, SMSBump மூலம் அவர்களுக்குக் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பவும். வார்ப்புருவைக் காண்க
வாடிக்கையாளர்கள் வாங்கிய பிறகு அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும்
வாடிக்கையாளர்கள் தங்களின் முதல் மற்றும் இரண்டாவது கொள்முதல்களுக்குப் பிறகு, அவர்களுக்கு வெவ்வேறு நன்றி தெரிவிக்கும் மின்னஞ்சல்களை அனுப்பவும். வாடிக்கையாளர் ஆர்டர் செய்து 1 நாள் கழித்து, வாடிக்கையாளர் செய்துள்ள ஆர்டர்களின் எண்ணிக்கையை இந்தத் தானியக்கமாக்கல் சரிபார்க்கும்.
அது அவர்களின் முதல் ஆர்டராக இருந்தால், அவர்களை வரவேற்றும், வாங்கியதற்கு நன்றி தெரிவித்தும் ஒரு சந்தைப்படுத்தல் மின்னஞ்சல் அனுப்பப்படும். அது அவர்களின் இரண்டாவது ஆர்டராக இருந்தால், அவர்களின் தொடர்ச்சியான ஆதரவைப் பாராட்டி வேறொரு சந்தைப்படுத்தல் மின்னஞ்சல் அனுப்பப்படும். வார்ப்புருவைக் காண்க
2 நாட்களுக்குள் ஒரு ஆர்டர் ஷிப்பிங் செய்யப்படாவிட்டால், அதைத் தடமறிந்து ஒரு செய்தியை அனுப்பவும்
Google Sheets-இல் ஆர்டரைத் தடமறிந்து, 2 நாட்களுக்குள் ஷிப்பிங் செய்யப்படாவிட்டால் Slack செய்தியை அனுப்பவும். வார்ப்புருவைக் காண்க
கணக்குகள் இல்லாத வாடிக்கையாளர்களை விரிதாளில் தடமறியவும்
ஸ்டோர் கணக்குகளை உருவாக்காத வாடிக்கையாளர்களை Google Sheet-இல் சேர்க்கவும். வார்ப்புருவைக் காண்க
இறுதி விற்பனைக் கொள்முதல்களைத் தடமறியவும்
தயாரிப்பு டேக் மூலம் இறுதி விற்பனைப் பொருட்களை அடையாளம் கண்டு, இறுதி விற்பனைக் கொள்முதல்களை விரிதாளில் தடமறியவும். வார்ப்புருவைக் காண்க
அதிக மதிப்புள்ள வாடிக்கையாளர்களை லாயல்டி திட்டத்தில் தடமறியவும்
ஒரு வாடிக்கையாளர் தனது 3-வது ஆர்டரைச் செய்யும்போது Smile-க்கு ஒரு செயல்பாட்டை அனுப்பவும். வார்ப்புருவைக் காண்க
முன் ஆர்டர் கொள்முதல்களைத் தடமறிந்து, மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களைத் தொடங்கவும்
விரிதாளில் முன் ஆர்டர் கொள்முதல்களைத் தடமறிந்து, Klaviyo-இல் மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தைத் தொடங்கவும். வார்ப்புருவைக் காண்க
வலுவான நிபந்தனைகளின் அடிப்படையில் சிறப்பு ஆர்டர்களைத் தடமறியவும்
சிறப்பு ஆர்டர்கள் செய்யும்போது, அவற்றைத் தடமறிந்து, டேக் சேர்த்து, மின்னஞ்சல் ஒன்றை அனுப்பவும். வார்ப்புருவைக் காண்க
குறிப்பிட்ட தயாரிப்புக் கொள்முதல்களை லாயல்டி திட்டத்தில் தடமறியவும்
வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை வாங்கும்போது Smile-க்கு ஒரு செயல்பாட்டை அனுப்பவும். வார்ப்புருவைக் காண்க
கடந்த 6 மாதங்களில் வாடிக்கையாளர்கள் செய்த ஆர்டர்களின் அடிப்படையில் அவர்களைப் பிரிக்க டேக்குகளைப் பயன்படுத்தவும்
புதிய ஆர்டர் உருவாக்கப்படும்போது, வாடிக்கையாளரின் கடந்த 6 மாதங்களுக்கான ஆர்டர் மொத்தம் மற்றும் ஆர்டர் எண்ணிக்கையைப் பெற்று, பிறகு வாடிக்கையாளருக்கு டேக்குகளைச் சேர்க்கும். 'ஆர்டர் தரவைப் பெறு', 'எண்ணிக்கை', 'கூட்டுத்தொகை' ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. வார்ப்புருவைக் காண்க
நிபந்தனைகள் மற்றும் செயல்களில் customAttributes-ஐப் (வரிசை உருப்படியின் பண்புகள்) பயன்படுத்துதல்
உங்கள் நிபந்தனைகளில் உள்ள பண்புகள் / பிரத்தியேகப் பண்புக்கூறுகளைச் சரிபார்த்து, அவற்றை டேக்குகள் மற்றும் ஆர்டர் குறிப்புகளில் பயன்படுத்தவும். வார்ப்புருவைக் காட்டு