தயாரிப்பு மாறுபாட்டின் சரக்கு இருப்பு அளவு மாற்றப்பட்டது
குறிப்பிட்ட தயாரிப்பு மாறுபாட்டிற்கான சரக்கு இருப்பு மாறும்போதெல்லாம், தயாரிப்பு மாறுபாட்டின் சரக்கு இருப்பு அளவு மாற்றப்பட்ட தூண்டுதல் ஒரு பணிப்பாய்வைத் தொடங்கும். சரக்கு இருப்பின் இந்த மாற்றமானது, ஒரு ஆர்டராகவோ, சரக்கு இருப்பில் செய்யப்பட்ட மேனுவல் மாற்றமாகவோ அல்லது சரக்கு இருப்பு அளவுகளை மாற்றும் செயலியாகவோ இருக்கலாம்.
இந்தப் பக்கத்தில்
வழங்கப்பட்ட தரவு
தயாரிப்பு மாறுபாட்டின் சரக்கு இருப்பு அளவு மாற்றப்பட்ட தூண்டுதலுடன் தொடங்கும் பணிப்பாய்வுகளுக்குப் பின்வரும் தரவு வழங்கப்படுகிறது.
| தரவு | விளக்கம் |
|---|---|
product | சரக்கு இருப்பு அளவு மாற்றப்பட்ட தயாரிப்பு. |
productVariant | சரக்கு இருப்பு அளவு மாற்றப்பட்ட தயாரிப்பு மாறுபாடு. |
inventoryQuantityPrior | தயாரிப்பு மாறுபாட்டிற்கான முந்தைய சரக்கு இருப்பு அளவு. |
தயாரிப்பு மாறுபாட்டின் சரக்கு இருப்பு அளவு மாற்றப்பட்ட தூண்டுதலைச் சோதித்தல்
இந்தத் தூண்டுதலுடன் தொடங்கும் பணிப்பாய்வைச் சோதிக்க, தயாரிப்பின் சரக்கு இருப்பை மாற்றவும்.
கவனிக்க வேண்டியவை
- தயாரிப்புக்கான சரக்கு இருப்பு கண்காணிப்பு முடக்கப்பட்டிருந்தாலும், தயாரிப்பு மாறுபாட்டின் சரக்கு இருப்பு அளவு மாற்றப்பட்ட தூண்டுதல் ஒரு பணிப்பாய்வைத் தொடங்கும்.
- தயாரிப்புகளையும் மாறுபாடுகளையும் பாதிக்கும் செயல்களைப் பயன்படுத்த இந்தத் தூண்டுதல் அனுமதிக்கிறது. சரக்கு உருப்படிகளைப் பாதிக்கும் பணிப்பாய்வுகளுக்கு, இதற்குப் பதிலாக சரக்கு உருப்படி உருவாக்கப்பட்ட தூண்டுதலைப் பயன்படுத்தவும்.
- வரைவு ஆர்டர்கள், ஆர்டர்களாக மாற்றப்படும் வரை கிடைக்கும் சரக்கு இருப்பைப் பாதிக்காது.
- ஓர் இடத்தில் உள்ள சரக்கு இருப்பு அளவைச் சரிபார்க்க,
productVariant / inventoryItem / inventoryLevels / availableமாறியைப் பயன்படுத்தி அளவின் தகவலை நீங்கள் கண்டறியலாம்.productVariant / inventoryItem / inventoryLevels / location / nameஅல்லதுproductVariant / inventoryItem / inventoryLevels / location / idமாறிகளைப் பயன்படுத்தி இடத்தின் பெயர் அல்லது ID-யைச் சரிபார்க்கலாம்.
செயல்கள்
மாறுபாடு அல்லது தயாரிப்பு தேவைப்படும் எந்தவொரு செயலையும் தயாரிப்பு மாறுபாட்டின் சரக்கு இருப்பு அளவு மாற்றப்பட்ட தூண்டுதலுடன் பயன்படுத்தலாம். அவற்றில் அடங்குபவை:
API விவரங்கள்
தயாரிப்பு மாறுபாட்டின் சரக்கு இருப்பு அளவு மாற்றப்பட்ட தூண்டுதல் Product Graphql API object மூலம் செயல்களை மேற்கொள்ள அனுமதிக்கிறது.
வார்ப்புருக்கள்
மாறுபாடுகள் கையிருப்பில் இல்லாதபோது அல்லது மீண்டும் கையிருப்புக்கு வரும்போது தயாரிப்பு வார்ப்புருவை மாற்று
தயாரிப்பு மாறுபாடுகளின் சரக்கு இருப்பின் அடிப்படையில் தயாரிப்பு வார்ப்புருவைப் புதுப்பிக்கவும். கையிருப்பில் இருக்கும் (ஸ்டோரின் இயல்புநிலை வார்ப்புரு), கையிருப்பில் இல்லாத மற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாறுபாடுகள் கையிருப்பில் இல்லாத நிலையில் வார்ப்புருக்களுக்கு இடையில் மாற இந்தப் பணிப்பாய்வு உங்களை அனுமதிக்கிறது. வார்ப்புருவைப் பார்
அனைத்து இடங்களிலும் ஒரே ஒரு மாறுபாடு அல்லது அனைத்துத் தயாரிப்பு மாறுபாடுகளும் கையிருப்பில் இல்லையா என்பதைச் சரிபார்
அனைத்து இடங்களிலும் ஒரு மாறுபாடு அல்லது அனைத்து மாறுபாடுகளுமே கையிருப்பில் இல்லாதபோது ஆன்லைன் ஸ்டோரிலிருந்து தயாரிப்புகளை மறைத்துவிடலாம். இதன்மூலம் கிடைக்கக்கூடிய உருப்படிகளை மட்டுமே வாடிக்கையாளர்கள் பார்க்க முடியும் என்பது உறுதிசெய்யப்படுவதால், அவர்களின் ஷாப்பிங் அனுபவம் மேம்படுகிறது. வார்ப்புருவைப் பார்
தயாரிப்பின் சரக்கு இருப்பு குறையும்போது Trello கார்டை உருவாக்கு
மாறுபாடுகளின் சரக்கு இருப்பு குறிப்பிட்ட அளவுக்குக் கீழே குறையும்போது Trello போர்டில் கார்டைச் சேர்க்கவும். வார்ப்புருவைப் பார்
தயாரிப்பின் சரக்கு இருப்பு குறையும்போது Asana இல் பணியை உருவாக்கு
மாறுபாடுகளின் சரக்கு இருப்பு குறிப்பிட்ட அளவுக்குக் கீழே குறையும்போது Asana திட்டத்தில் பணியைச் சேர்க்கவும். வார்ப்புருவைப் பார்
தயாரிப்பு மாறுபாட்டின் சரக்கு இருப்பு குறையும்போது மின்னஞ்சல் மூலம் அறிவிப்பைப் பெறு
குறைந்த சரக்கு இருப்பு தொடர்பான இந்த அறிவிப்பில், உங்களின் எந்தவொரு மாறுபாட்டின் சரக்கு இருப்பு குறையும்போதும் மின்னஞ்சல் மூலம் அறிவிப்பைப் பெறலாம். வார்ப்புருவைப் பார்
சரக்கு இருப்பு குறையும்போது அறிவிப்பைப் பெறுவதுடன் கையிருப்பில் இல்லாதபோது தயாரிப்புகளை மறைத்துவிடு
தயாரிப்பு சரக்கு இருப்பு குறிப்பிட்ட வரம்பிற்குக் கீழே குறையும் போது மின்னஞ்சல் மற்றும் Slack வழியாகக் குழு உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கவும், அத்துடன் ஆன்லைன் ஸ்டோரில் சரக்குகள் முழுவதுமாகத் தீர்ந்துவிட்டால் அங்கிருந்து தயாரிப்புகளைத் தானாகவே மறைக்கவும். வார்ப்புருவைப் பார்
சரக்கு இருப்பு குறையும்போது விற்பனையாளரிடம் மீண்டும் ஆர்டரைத் தொடங்கு
ஒரு தயாரிப்பின் சரக்கு இருப்பு குறைவாக இருக்கும்போது, மீண்டும் ஆர்டர் செய்யத் தொடங்கி உங்களது விற்பனையாளருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும். வார்ப்புருவைப் பார்
குறைந்த சரக்கு இருப்புத் தயாரிப்புகளைச் சேகரிப்பில் சேர்ப்பதன் மூலம் அவற்றை வியாபாரம் செய்
குறைந்த சரக்கு இருப்புள்ள தயாரிப்புகளை ஒரு விற்பனைச் சேகரிப்பில் சேர்த்து, கையிருப்பில் இல்லாத தயாரிப்புகளை ஆன்லைன் ஸ்டோரிலிருந்து அகற்றலாம். இந்த வார்ப்புரு பின்வரும் நோக்கங்களுக்காகப் பயன்படலாம்: குறைந்த சரக்கு இருப்புள்ள உருப்படிகளை விளம்பரப்படுத்தி விற்பனையை அதிகரிப்பது, கையிருப்பில் இல்லாத உருப்படிகளை ஆன்லைன் ஸ்டோரிலிருந்து அகற்றி வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவது, மற்றும் குறைந்த சரக்கு இருப்புள்ள தயாரிப்புகளைக் கண்காணிப்பதன் மூலம் சரக்கு மேலாண்மையை எளிதாக்குவது. வார்ப்புருவைக் காண்க
சரக்கு இருப்பின் அடிப்படையில் தேடல் முடிவுகளில் ஒரு தயாரிப்பு மாறுபாட்டை முன்னிலைப்படுத்துங்கள் அல்லது பின்னுக்குத் தள்ளுங்கள்
தயாரிப்பின் சரக்கு இருப்பு நிலையின் அடிப்படையில் Klevu Search இல் ஒரு தயாரிப்பு மாறுபாட்டை முன்னிலைப்படுத்துங்கள் அல்லது பின்னுக்குத் தள்ளுங்கள். வார்ப்புருவைக் காண்க
சரக்கு இருப்பு நிலையின் அடிப்படையில் தயாரிப்புகளை வெளியிடுங்கள் மற்றும் வெளியிடுவதை ரத்துசெய்யுங்கள்
உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் கையிருப்பில் இல்லாத தயாரிப்புகளை மறைத்து, அவற்றுக்குக் குறைந்தது ஒரு மாறுபாடாவது சரக்கு இருப்புடன் இருக்கும்போது மீண்டும் வெளியிடுங்கள். வார்ப்புருவைக் காண்க
ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாறுபாட்டின் சரக்கு இருப்பு கையிருப்பில் இல்லாதபோது Slack மெசேஜை அனுப்புங்கள்
சரக்கு இருப்பு அளவு மாறும்போது, குறிப்பிட்ட இடத்தில் மாறுபாட்டிற்கான சரக்கு இருப்பைச் சரிபார்க்கவும். அளவு 0 அல்லது அதற்குக் குறைவாக இருந்தால், ஒரு Slack அறிவிப்பை அனுப்பவும். வார்ப்புருவைக் காண்க
ஒரு குறிப்பிட்ட இடத்தில் கையிருப்பில் இல்லாத மாறுபாடுகளுக்கான அறிவிப்புகளை அனுப்புங்கள்
ஆன்லைன் ஆர்டர்களை நிறைவேற்ற ஒரேயொரு இடத்தைப் பயன்படுத்துகிறீர்களா? கையிருப்பில் இல்லாத மாறுபாடுகளுக்கான அறிவிப்புகளைப் பெறுங்கள். வார்ப்புருவைக் காண்க
ஒரேயொரு இடத்தில் மட்டும் கையிருப்பில் இல்லாத தயாரிப்புகளுக்கு டேக் சேருங்கள்
ஆன்லைன் ஆர்டர்களை நிறைவேற்ற ஒரேயொரு இடத்தைப் பயன்படுத்துகிறீர்களா? ஒரு இடத்தில் ஒரு தயாரிப்பின் அனைத்து மாறுபாடுகளும் கையிருப்பில் இல்லாதபோது, இந்தப் பணிப்பாய்வு ஒரு தயாரிப்பு டேக்கைச் சேர்க்கும், அதை ஸ்டோர்ஃபிரண்டில் காட்டுவதைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தலாம். வார்ப்புருவைக் காண்க