சந்தா ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது
உங்கள் நிறுவனத்தில் உள்ள பயனரோ மூன்றாம் தரப்புச் செயலியோ சந்தா ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும்போது Subscription contract updated தூண்டுதலானது, பணிப்பாய்வைத் தொடங்கும்.
இந்தப் பக்கத்தில்
புலங்கள்
Subscription contract updated தூண்டுதலில் பின்வரும் புலங்கள் உள்ளன. நிபந்தனைகள் மற்றும் செயல்களிலும் பணிப்பாய்வில் தரவைப் பெறவும் இவற்றைப் பயன்படுத்தலாம்:
| புலம் | விளக்கம் |
|---|---|
| சந்தா ஒப்பந்தம் | புதுப்பிக்கப்பட்ட சந்தா ஒப்பந்தம். |
| வாடிக்கையாளர் | புதுப்பிக்கப்பட்ட சந்தா ஒப்பந்தம் எந்த வாடிக்கையாளருடையதோ அவர். |
| கடை | ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்ட கடை. |
செயல்கள்
இந்தத் தூண்டுதல், வாடிக்கையாளர் அணுகலை வழங்குகிறது. இதனைப் பின்வரும் செயல்களுடன் பயன்படுத்தலாம்:
Subscription contract updated தூண்டுதலைச் சோதித்தல்
இந்தத் தூண்டுதலுடன் தொடங்கும் பணிப்பாய்வைச் சோதிக்க, ஸ்டோர்ஃபிரண்ட் வழியாக சந்தாவை உருவாக்குங்கள். அதன் பிறகு நீங்கள் நிறுவியுள்ள சந்தாச் செயலியைக் கொண்டு, உருவாக்கப்பட்ட சந்தா ஒப்பந்தத்தைத் திருத்துங்கள்.
நீங்கள் மூன்றாம் தரப்புச் சந்தாச் செயலியைப் பயன்படுத்தினால், ஒப்பந்தத்தைத் திருத்துவது குறித்த செயலியின் ஆவணப்படுத்தலைப் பார்க்கவும்.
இலவச முதல் தரப்பு Shopify Subscriptions செயலியை நீங்கள் பயன்படுத்தினால், ஒப்பந்தத்தைத் திருத்துவது குறித்த அதன் ஆவணப்படுத்தலைப் பார்க்கவும்.
API விவரங்கள்
Subscription contract updated தூண்டுதலானது, SubscriptionContract Graphql API object மூலம் செயல்களை மேற்கொள்ள அனுமதிக்கிறது.
வார்ப்புருக்கள்
தயாரிப்புச் சந்தா முடக்கப்படும்போது வாடிக்கையாளர் குறிச்சொல்லை/குறிச்சொற்களை அகற்றுதல்
சந்தா ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும்போது, அதன் நிலை "Active" ஆக இல்லையா எனச் சரிபார்த்து, அதன்பின் வாடிக்கையாளர் குறிச்சொல்லை/குறிச்சொற்களை அகற்றுதல். வார்ப்புருவைக் காட்டு