செக்அவுட்டின் போது கூடுதல் கட்டணங்களை வசூலித்தல்

குறிப்பிட்ட தயாரிப்புகள், மாறுபாடுகள் அல்லது சேகரிப்புகளுக்குச் செக்அவுட்டின் போது கூடுதல் கட்டணங்களை நீங்கள் வசூலிக்கலாம். கட்டணமானது எல்லா வாடிக்கையாளர்களுக்கும் அல்லது நீங்கள் தேர்ந்தெடுக்கும் சந்தைகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் அமைக்கப்படலாம். எடுத்துக்காட்டாக, ஓன்டாரியோவில் லேப்டாப்புகளுக்குச் சூழலியல் கட்டணம் (இதைச் சுற்றுச்சூழல் கையாளுதல் கட்டணம் என்றும் அழைக்கலாம்) அல்லது கலிபோர்னியாவில் குளிர்பானங்களுக்கு பாட்டில் வைப்புத்தொகையை வசூலிக்க சட்டம் கோரலாம்.

உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள வரிகள், சுங்க வரிகள் மற்றும் கட்டணங்கள் பக்கம் அல்லது சந்தைகள் பக்கத்தில் கட்டணங்களை நிர்வகிக்கலாம்.

கூடுதல் கட்டணங்களைப் புரிந்துகொள்ளுதல்

கட்டணம் என்பது செக்அவுட்டின் போது தானாகவே சேர்க்கப்படும் ஒரு கட்டாய வரிசை உருப்படியாகும். வாடிக்கையாளர்களால் கட்டணத்தைச் சேர்க்க, மாற்ற அல்லது அகற்ற முடியாது. இந்தக் காரணங்களுக்காக, டிக்கெட்டுகள் அல்லது சேவை முன்பதிவுகள் போன்ற தயாரிப்புகளுக்கோ வாரண்டிகள் அல்லது தயாரிப்புத் தனிப்பயனாக்கங்கள் போன்ற விருப்பமான ஆட்-ஆன்களுக்கோ கட்டணங்களைப் பயன்படுத்த வேண்டாம். கட்டணத்திற்கு எந்தச் சரக்கு இருப்பும் இல்லை, இது நிறைவேற்றப்படுவதோ அல்லது ஷிப் செய்யப்படுவதோ இல்லை, மேலும் இதைத் தனியாக வாங்க முடியாது.

கூடுதல் கட்டணங்கள் Shopify POS இல் உள்ள பிரத்தியேகக் கட்டணங்களிலிருந்தும் வேறுபட்டவை, இவற்றை ஸ்மார்ட் கிரிட் டைலில் இருந்து ஆர்டரில் பணியாளர்கள் கைமுறையாகச் சேர்ப்பார்கள்.

உங்கள் ஸ்டோரின் நாணயத்தில் கட்டணம் அமைக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளுக்கு மட்டுமே கட்டணம் பொருந்தும் என்றால், அதற்குப் பதிலாக நீங்கள் சந்தையின் நாணயத்தில் அதை அமைக்கலாம். கட்டணத்தின் அதே நாணயத்தைப் பயன்படுத்தும் செக்அவுட்களில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணங்கள் வேறு நாணயங்களுக்கு மாற்றப்படாது.

வாடிக்கையாளர்கள் செக்அவுட்டை அடையும்போது, அவர்களின் கார்ட்டில் உள்ள தயாரிப்புகளுக்குப் பொருந்தக்கூடிய ஒவ்வொரு கட்டணமும் பின்வரும் வழிகளில் பயன்படுத்தப்படும்:

  • ஒவ்வொரு யூனிட்டிற்கும்: எந்தத் தயாரிப்புக்குக் கட்டணம் பொருந்துகிறதோ, அதன் ஒவ்வொரு யூனிட்டிற்கும் ஒருமுறை கட்டணம் வசூலிக்கப்படும். எடுத்துக்காட்டாக, ஒரு தயாரிப்புக்கு $2 USD கட்டணம் பயன்படுத்தப்படும்போது, ஒரு வாடிக்கையாளர் 3 யூனிட்களை வாங்கினால் $6 USD சேர்க்கப்படும்.
  • உருப்படி வாரியாக: செக்அவுட்டின் போது, ஆர்டர் சுருக்கத்தில் வரிகளிலிருந்து தனியாக கட்டணங்கள் வரி காட்டப்படும், அது ஒவ்வொரு கட்டணத்தின் பெயரையும் தொகையையும் பட்டியலிடும். வாங்கிய பிறகு, நன்றிப் பக்கம், ஆர்டர் நிலை பக்கம் மற்றும் ஆர்டர் உறுதிப்படுத்தல் மின்னஞ்சல்களில் கட்டண வரிகள் காட்டப்படும்.
  • அடுக்கப்பட்டவை: ஒரு தயாரிப்புக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கட்டணங்கள் பொருந்தும்போது, பொருந்தக்கூடிய ஒவ்வொரு கட்டணத்தையும் வாடிக்கையாளர் செலுத்துவார்.
  • தள்ளுபடி செய்ய முடியாதவை: தள்ளுபடிகள் கட்டணங்களைக் குறைக்காது. கட்டணங்கள் துணை மொத்தத்திலும் சேர்க்கப்படாது, எனவே தள்ளுபடிக்கான குறைந்தபட்சக் கொள்முதல் தொகையில் அவை கணக்கிடப்படாது.

Shop Pay உள்ளிட்ட உங்கள் ஆன்லைன் ஸ்டோர் செக்அவுட்டிலும், AI சேனல்களில் உள்ள Shopify வழங்கும் நேரடி செக்அவுட்களிலும் கட்டணங்கள் வசூலிக்கப்படும். உங்கள் ஆன்லைன் ஸ்டோர் கார்ட்டில் கட்டணங்கள் காட்டப்படாது. செக்அவுட்டின் போது மட்டுமே வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு கட்டணத்தையும் முதல் முறையாகப் பார்ப்பார்கள்.

வாடிக்கையாளர் ஒரு ஆர்டரைச் செய்த பிறகு, வாடிக்கையாளர் செலுத்திய ஒவ்வொரு கட்டணத்தின் பெயரையும் தொகையையும் ஆர்டர் வைத்திருக்கும்.

செக்அவுட்டின் போது கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதற்கான பரிசீலனைகள்

நீங்கள் எந்தெந்தக் கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதற்கும், அவற்றைப் பணம் அனுப்புவதற்கும் நீங்களே பொறுப்பாவீர்கள். உங்கள் வணிகத்திற்கு ஒரு கட்டணம் பொருந்துமா என்று உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றால், கட்டணத்தைக் கோரும் அதிகார அமைப்பைத் தொடர்புகொள்ளவும் அல்லது வரி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும்.

கட்டணங்களை வசூலிக்கத் தொடங்குவதற்கு முன், பின்வரும் பரிசீலனைகளை மதிப்பாய்வு செய்யவும்:

  • கட்டணங்கள் என்பவை ஒரு நிலையான தொகை. கட்டணம் என்பது சதவீதமாக இருக்க முடியாது, அத்துடன் முழு ஆர்டருக்கும் அது பொருந்தாது.
  • ஒரு கட்டணம் தயாரிப்புகள் மற்றும் மாறுபாடுகளுக்கு அல்லது சேகரிப்புகளுக்குப் பொருந்தலாம், ஆனால் இரண்டிற்கும் பொருந்தாது. தயாரிப்புகளுக்குப் பொருந்தும் ஒரு கட்டணத்தில், ஒவ்வொரு தயாரிப்பு அல்லது மாறுபாட்டிற்கும் ஒரேயொரு கட்டணத் தொகை மட்டுமே இருக்க முடியும்.
  • உங்கள் ஸ்டோரில் 100 செயலில் உள்ள கட்டணங்கள் வரை இருக்கலாம்.
  • வாடிக்கையாளரின் கட்டண முறையின் அடிப்படையில் நீங்கள் கட்டணத்தை வசூலிக்க முடியாது.
  • வாடிக்கையாளர் கட்டணத்தின் நாணயத்தைத் தவிர்த்து வேறு நாணயத்தில் செக்அவுட் செய்தால், கட்டணம் வசூலிக்கப்படாது. உங்கள் ஸ்டோரிலிருந்து வேறுபட்ட நாணயத்தைப் பயன்படுத்தும் சந்தையில் கட்டணத்தை வசூலிக்க, அந்த நாணயத்தைப் பயன்படுத்தும் சந்தைகளுக்கு மட்டுமே கட்டணத்தைப் பொருத்தி, அந்த நாணயத்தில் கட்டணத்தை அமைக்கவும்.
  • கட்டணங்களுக்கு வரிகள் வசூலிக்கப்படாது. நீங்கள் ஒரு கட்டணத்தின் மீது வரியை வசூலிக்க வேண்டும் என்றால், அந்தக் கட்டணத்திற்கான உங்கள் தற்போதைய அமைப்பையே வைத்திருக்கவும்.
  • கொலராடோவில் உள்ள ரீடெய்ல் டெலிவரி கட்டணம் மற்றும் மினசோட்டாவில் உள்ள ரீடெய்ல் டெலிவரி கட்டணம் போன்ற சில மாநிலக் கட்டணங்கள், Shopify Tax மூலம் வசூலிக்கப்படுகின்றன. இந்தக் கட்டணங்களில் ஒன்றை Shopify Tax மூலம் நீங்கள் வசூலித்தால், அதைக் கூடுதல் கட்டணமாகச் சேர்க்க வேண்டாம்.
  • ஒரு செயலி மூலமாகவோ வேறு வகையிலோ நீங்கள் ஏற்கனவே கார்ட்டில் கட்டணத் தயாரிப்பைச் சேர்த்திருந்தால், அந்தத் தயாரிப்புக்கு பதிலாகக் கூடுதல் கட்டணத்தைச் சேர்க்கவும். வாடிக்கையாளர்களிடம் இருமுறை கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தவிர்க்க, கூடுதல் கட்டணத்தைச் சேர்த்த பிறகு, கட்டணத் தயாரிப்பு மற்றும் அதைச் சேர்த்த செயலி அல்லது UI நீட்டிப்பை அகற்றவும்.
  • ஒரு ஆர்டரில் உள்ள கட்டணங்களை உங்களால் திருத்த முடியாது.
  • நீங்கள் ஆர்டருக்கான பணத்தைத் திரும்பப்பெறும்போது, முழுக் கட்டணத்தை மட்டுமே திரும்பப்பெற முடியும். பகுதி கட்டணத்தைத் திரும்பப்பெறும் வசதி இல்லை.

கட்டணத்தைச் சேர்

குறிப்பிட்ட தயாரிப்புகள், மாறுபாடுகள் அல்லது சேகரிப்புகளுக்குப் பொருந்தக்கூடிய ஒரு கட்டணத்தை நீங்கள் சேர்க்கலாம். இந்தக் கட்டணம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தலாம் அல்லது நீங்கள் தேர்ந்தெடுக்கும் சந்தைகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருந்தலாம். வெவ்வேறு தயாரிப்புகளுக்கு வெவ்வேறு கட்டணத் தொகைகள் தேவைப்பட்டால், ஒரு கட்டணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டணத் தொகைகளை நீங்கள் சேர்க்கலாம். நீங்கள் ஒரு கட்டணத்தைச் சேமித்த பிறகு, அது செயல்பாட்டுக்கு வந்து புதிய செக்அவுட்டுகளுக்குப் பொருந்தும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > வரிகள், சுங்க வரிகள் மற்றும் கட்டணங்கள் என்பதற்குச் செல்லவும்.
  2. கட்டணங்கள் பிரிவில், கட்டணத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பெயர் புலத்தில், செக்அவுட்டில் வாடிக்கையாளர்களுக்குக் காட்டப்படும் பெயரை உள்ளிடவும்.
  4. இதற்குப் பொருந்தும் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, குறிப்பிட்ட தயாரிப்புகள் அல்லது குறிப்பிட்ட சேகரிப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. விருப்பத்திற்குரியது: குறிப்பிட்ட சந்தைகளில் மட்டும் கட்டணத்தை வசூலிக்க, பின்வருவனவற்றைச் செய்யவும்:
    1. அனைத்து வாடிக்கையாளர்கள் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, சந்தைகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    2. சந்தைகளைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் சந்தைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
    3. சந்தைகள் உங்கள் ஸ்டோரில் உள்ளதைவிட வேறு நாணயத்தைப் பயன்படுத்தினால், கட்டணத் தொகையை அமை கீழ்தோன்றும் மெனுவிலிருந்து அந்த நாணயத்தைத் தேர்ந்தெடுக்கவும். கட்டணத்தில் உள்ள நாணயத்தைத் தவிர்த்து வேறு நாணயத்தில் செக்அவுட் செய்யும் வாடிக்கையாளர்கள் கட்டணத்தைச் செலுத்த மாட்டார்கள்.
  6. கட்டணத் தொகைகளைச் சேர்க்கவும்:
    • குறிப்பிட்ட தயாரிப்புகளுக்குக் கட்டணத் தொகைகளைச் சேர்க்க, பின்வருவனவற்றைச் செய்யவும்:
      1. தொகை புலத்தில், கட்டணத் தொகையை உள்ளிட்டு, தயாரிப்புகளைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
      2. தயாரிப்புகள் அல்லது மாறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து, சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
      3. விருப்பத்திற்குரியது: பிற தயாரிப்புகளுக்கு வேறு தொகையை வசூலிக்க, மற்றொரு கட்டணத் தொகையைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, அந்தத் தொகைக்கு முந்தைய படிகளை மீண்டும் செய்யவும்.
    • குறிப்பிட்ட சேகரிப்புகளுக்குக் கட்டணத் தொகையைச் சேர்க்க, பின்வருவனவற்றைச் செய்யவும்:
      1. தொகை புலத்தில், கட்டணத் தொகையை உள்ளிட்டு, சேகரிப்புகளைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
      2. சேகரிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. விருப்பத்திற்குரியது: தயாரிப்பைத் திருப்பியளிக்கும்போது இயல்புநிலையாகக் கட்டணத்தை மீண்டும் வழங்க, திருப்பியளிக்கும்போது திரும்பப் பெறக்கூடியது என்பதை இயக்கவும்.
  8. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

கட்டணத்தைத் திருத்து

நீங்கள் கட்டணத்தைத் திருத்தும்போது, அந்த மாற்றங்கள் புதிய செக்அவுட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். வாடிக்கையாளர்கள் ஏற்கனவே செய்த ஆர்டர்களுக்கு அவர்கள் செலுத்திய கட்டணமே தொடரும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > வரிகள், சுங்க வரிகள் மற்றும் கட்டணங்கள் என்பதற்குச் செல்லவும்.
  2. கட்டணங்கள் பிரிவில், நீங்கள் திருத்த விரும்பும் கட்டணத்தைக் கிளிக் செய்யவும்.
  3. உங்கள் கட்டணத்தில் வேண்டிய மாற்றங்களைச் செய்யவும்.
  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

கட்டணத்தை நீக்கு

நீங்கள் கட்டணத்தை நீக்கும்போது, அது புதிய செக்அவுட்டுகளுக்குப் பொருந்தாது. வாடிக்கையாளர்கள் ஏற்கனவே செய்த ஆர்டர்களுக்கு அவர்கள் செலுத்திய கட்டணமே தொடரும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > வரிகள், சுங்க வரிகள் மற்றும் கட்டணங்கள் என்பதற்குச் செல்லவும்.
  2. கட்டணங்கள் பிரிவில், நீங்கள் நீக்க விரும்பும் கட்டணத்தைக் கிளிக் செய்யவும்.
  3. மேலும் செயல்கள் என்பதைக் கிளிக் செய்து, நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. உரையாடல் பெட்டியில், கட்டணத்தை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

கட்டணங்கள் குறித்த அறிக்கையிடல்

நீங்கள் வசூலிக்கும் மற்றும் திரும்பப்பெறும் கட்டணங்களை மதிப்பாய்வு செய்யலாம், எடுத்துக்காட்டாக, நீங்கள் செலுத்த வேண்டிய தொகைகளைக் கணக்கிட இது உதவும். திரும்பப்பெறப்பட்ட கட்டணம் ஆர்டரின் பதிவிலேயே இருக்கும் என்பதால், நீங்கள் வசூலித்த கட்டணங்களும் திரும்பப்பெற்ற கட்டணங்களும் உங்கள் அறிக்கைகளில் அடங்கும். உங்கள் Shopify நிர்வாகியில், இந்தக் கட்டணங்கள் செக்அவுட் கட்டணங்கள் என்று அழைக்கப்படுகின்றன, மேலும் அவை பின்வரும் பகுதிகளில் காட்டப்படும்:

  • நிதி அறிக்கைகள்: செக்அவுட் கட்டண அறிக்கைகளில் கட்டணம் வாரியாகவும் சந்தை வாரியாகவும் வசூலிக்கப்பட்ட மற்றும் திரும்பப்பெறப்பட்ட கட்டணங்கள் அடங்கும்.
  • பகுப்பாய்வு: செக்அவுட் கட்டணங்கள் அளவீடு என்பது வசூலிக்கப்பட்ட கட்டணங்களிலிருந்து திரும்பப்பெறப்பட்ட கட்டணங்களைக் கழித்துப் பெறப்படுவதாகும். இது மொத்த விற்பனையில் (total sales) சேர்க்கப்படும், ஆனால் மொத்த விற்பனையிலோ (gross sales) நிகர விற்பனையிலோ சேர்க்கப்படாது.
  • ஆர்டர் ஏற்றுமதிகள்: ஒரு ஆர்டர் ஏற்றுமதியில் உள்ள செக்அவுட் கட்டணங்கள் நெடுவரிசை, உங்கள் ஸ்டோரின் நாணயத்தில் ஒவ்வொரு ஆர்டரின் மொத்தக் கட்டணங்களையும் உள்ளடக்கியது. இதில் திரும்பப்பெறப்பட்ட தொகைகள் கழிக்கப்படாது.