கனேடிய வரி விலக்குகளை அமைத்தல்
உங்கள் வாடிக்கையாளர்களிடம் குறிப்பிட்ட வரிகள் வசூலிக்கப்படுவதைத் தவிர்க்க, அவர்களுக்கு நீங்கள் விலக்குகளை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, First Nations தகுதிபெற்ற நபர்களுக்கோ குறிப்பிட்ட மாகாணங்களில் உள்ள மறுவிற்பனையாளர்களுக்கோ விலக்குகளை அமைக்கலாம்.
இந்தப் பக்கத்தில்
கனடாவில் வாடிக்கையாளர் வரி விலக்குகள்
Shopify-இல் உள்ள உங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பின்வரும் வரி விலக்குகளை நீங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் வரிகளுக்காகப் பதிவுசெய்துள்ள மாகாணங்களுக்கு விலக்குகள் கிடைக்கும். நீங்கள் இதுவரை பதிவுசெய்யவில்லை எனில், கனேடிய வரிகளை அமைத்தல் என்பதைப் பார்க்கவும்.
| விலக்கு | விளக்கம் |
|---|---|
| கனடா ஸ்டேட்டஸ் கார்டு | செல்லுபடியாகும் Certificate of Indian Status (HST, PST, RST மற்றும் QST) வைத்துள்ள கனடாவின் First Nations மக்களுக்குப் பொருந்தும். இந்த விலக்கு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகிய இரு தரப்பினருக்கான வரிகளின் மாகாணப் பகுதிக்குப் பொருந்தும். அனைத்து மாகாணங்களிலும் விலக்குகள் இருப்பதால், கூடுதல் விவரங்களுக்கு உங்கள் மாகாண வரி முகமையிடம் சரிபார்க்க வேண்டும். |
| கனடா தூதரக அதிகாரி | Manitoba (GST, RST) மற்றும் Nova Scotia (HST) ஆகிய பகுதிகளில் உள்ள கனேடியத் தூதரக அதிகாரிகளுக்குப் பொருந்தும். ஒவ்வொரு மாகாணத்திற்கும் விலக்குகள் வேறுபடும் என்பதால், கூடுதல் விவரங்களுக்கு உங்கள் மாகாண வரி முகமையிடம் சரிபார்க்க வேண்டும். |
| மறுவிற்பனையாளர் | British Columbia (PST), Manitoba (RST) மற்றும் Saskatchewan (PST) ஆகிய மாகாணங்களில் மறுவிற்பனை செய்யவோ குத்தகைக்கு விடவோ பொருட்களைக் கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களுக்குப் பொருந்தும். |
| மீன்வளம் | British Columbia (PST), Manitoba (RST), Nova Scotia (HST), Prince Edward Island (HST) மற்றும் Saskatchewan (PST) ஆகிய பகுதிகளில் வணிகரீதியான மீன்பிடித்தலில் பயன்படுத்துவதற்குப் பொருட்களைக் கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களுக்குப் பொருந்தும். |
| உற்பத்தி மற்றும் இயந்திரங்கள் | British Columbia (PST) மற்றும் Saskatchewan (PST) ஆகிய பகுதிகளில் உற்பத்தி இயந்திரங்களைக் கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களுக்குப் பொருந்தும். |
| ஒப்பந்ததாரர் | British Columbia (PST) மற்றும் Saskatchewan (PST) ஆகிய பகுதிகளில் உள்ள ஒப்பந்ததாரர்களுக்குப் பொருந்தும். |
| துணை ஒப்பந்ததாரர் | British Columbia (PST) மற்றும் Saskatchewan (PST) ஆகிய பகுதிகளில் உள்ள துணை ஒப்பந்ததாரர்களுக்குப் பொருந்தும். |
| Ontario கொள்முதல் | Ontario (RST) பகுதியில் வாகனங்களைக் கொள்முதல் செய்யப் பொருந்தும். |
| விவசாயி | Manitoba (RST), Nova Scotia (HST) மற்றும் Saskatchewan (PST) ஆகிய பகுதிகளில் விவசாய உபகரணங்களைக் கொள்முதல் செய்யப் பொருந்தும். |
வரிகளில் இருந்து விலக்கு பெறத் தகுதியுள்ள வாடிக்கையாளர்கள், அவர்களின் தகுதிநிலையை நிரூபிக்க ஒரு சான்றிதழையோ பிற ஆவணங்களையோ கொண்டிருப்பார்கள். ஒரு வாடிக்கையாளர் தங்களிடம் வரி விலக்கு இருப்பதாகக் கூற உங்களைத் தொடர்புகொள்ளும்போது, இந்த ஆவணத்தின் நகலை நீங்கள் அவர்களிடம் கேட்கலாம். உங்கள் வாடிக்கையாளருக்குத் தகுதியுள்ளதா என்று உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை எனில், நீங்கள் ஆவணங்களைக் கேட்டு வாங்கித் தொடர்புடைய வரி அதிகாரியிடம் சரிபார்க்க வேண்டும்.
கனடாவில் வாடிக்கையாளர் வரி விலக்கை அமைத்தல்
கிடைக்கக்கூடிய வரி விலக்குகள் குறித்து மேலும் அறிய, கனடாவில் வாடிக்கையாளர் வரி விலக்குகள் என்பதைப் பார்க்கவும்.
உங்கள் Shopify நிர்வாகியில், வாடிக்கையாளர்கள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் வரி விலக்குகளை அமைக்க விரும்பும் வாடிக்கையாளரைக் கிளிக் செய்யவும்.
வாடிக்கையாளர் பிரிவில்,
என்பதைக் கிளிக் செய்து, வரி விவரங்களைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
வரி அமைப்புகள் பிரிவில், வரியை வசூலிப்பதா என்பதைத் தேர்ந்தெடுக்கவும்:
- வரியை வசூலிக்க, வரியை வசூலி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- வரியை வசூலிக்க வேண்டாம் எனில், வரியை வசூலிக்காதே என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- பொருந்தக்கூடிய விலக்குகளைத் தவிர்த்து வரியை வசூலிக்க, விலக்குகள் பொருந்தாவிட்டால் வரியை வசூலி என்பதைத் தேர்ந்தெடுத்து, விலக்குகளைத் தேர்ந்தெடு கீழ்தோன்றும் மெனுவில் பொருந்தக்கூடிய விலக்கைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது தேடவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
இந்த விலக்குகளைப் பெற உங்கள் வாடிக்கையாளர்கள் தகுதியானவர்களா என்பதைச் சரிபார்க்க வேண்டியது உங்கள் பொறுப்பாகும். Shopify நிர்வாகியிலிருந்து விலக்குகளைச் சரிபார்க்க முடியாது.
தயாரிப்பு மற்றும் ஷிப்பிங் வரி ஓவர்ரைடுகள்
குறிப்பிட்ட தயாரிப்புகள் மற்றும் ஷிப்பிங் கட்டணங்களுக்கான உங்கள் வரி வீதங்களை நீங்கள் ஓவர்ரைடு செய்ய வேண்டுமானால், சேகரிப்புகளைப் பயன்படுத்தி வரி விலக்குகளை அமைக்கலாம். மேலும் அறிய, வரி ஓவர்ரைடுகள் மற்றும் விலக்குகள் என்பதைப் பார்க்கவும்.
நீங்கள் Shopify Tax ஐப் பயன்படுத்தினால், வரி கணக்கீடுகளின் துல்லியத்தை மேம்படுத்த தயாரிப்பு வகைககள் பயன்படுத்தப்படும். வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட தயாரிப்புகளை வாங்கும் போது அவர்களுக்கு உள்ள வரி பொறுப்புகள் மற்றும் விலக்குகள் இதில் அடங்கும், இதனால் வரி ஓவர்ரைடுகளின் தேவை குறையும். ஏற்கனவே ஒரு ஓவர்ரைடு உள்ள தயாரிப்புக்கு ஒரு தயாரிப்பு வகையை அமைக்கும் போது, தயாரிப்பு வகை வரி கணக்கீடுகளை விட ஓவர்ரைடே முன்னுரிமை பெறும். நீங்கள் Shopify Tax ஐப் பயன்படுத்தினால், உங்கள் தயாரிப்பு வகைகளுடன் முரண்படும் ஏதேனும் தயாரிப்பு வரி ஓவர்ரைடுகளை அகற்றுவதைக் கருத்தில் கொள்ளவும். எனினும், தயாரிப்பு வகைகளால் கணக்கிடப்படாத வரி விதிகள் உங்களுக்குத் தெரிந்திருந்தால், உங்கள் தயாரிப்பு வரி ஓவர்ரைடுகளை அப்படியே வைத்திருக்கவும்.
POS இல் வரி விலக்குகள்
Shopify POS செயலியைப் பயன்படுத்தும்போது நீங்கள் அமைத்துள்ள வரி விலக்குகள் ஏதேனும் இருந்தால் அவை பயன்படுத்தப்படும். நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தைப் பொறுத்து, POS செயலியில் வரி விலக்குகள் பின்வருமாறு காண்பிக்கப்படும்:
- Android சாதனங்களில், வரி விலக்கு அளிக்கப்பட்ட வாடிக்கையாளரைத் தேர்ந்தெடுத்தவுடன் புதிய வரித் தொகையைப் பிரதிபலிக்கும் வகையில் துணை மொத்தம் புதுப்பிக்கப்படும்.
- iOS சாதனங்களில், கட்டணம் பொத்தானைத் தட்டும் வரை துணை மொத்தம் அப்படியே இருக்கும். பொத்தானைத் தட்டிய பிறகு, புதிய விலையைக் குறிக்கும் பிராம்ட் காட்டப்படும்.