உங்கள் கனடா வரிப் பொறுப்புகளைச் சரிபார்க்கவும்

கனடாவில் உள்ள வரிப் பொறுப்பு கனடிய மற்றும் கனடிய அல்லாத ஸ்டோர்கள் இரண்டையும் பாதிக்கும்.

ஒரு ஸ்டோரின் முகவரி கனடாவில் அமைந்திருந்தால் அது கனடிய ஸ்டோராகக் கருதப்படும். வேறு விதத்தில் வணிகம் கனடாவில் அமையாவிட்டாலும், நேரடி சில்லறை விற்பனை முகவரி ஒரு ஸ்டோரைக் கனடிய ஸ்டோராகத் தகுதிபெறச் செய்யும். ஒரு ஸ்டோரின் முகவரி கனடாவில் அமையாவிட்டாலோ அதற்கு நேரடி சில்லறை விற்பனை முகவரிகள் எதுவும் கனடாவில் இல்லாவிட்டாலோ அது கனடிய அல்லாத ஸ்டோராகக் கருதப்படும். மூன்றாம் தரப்புக் கிடங்குகள் அல்லது நிறைவேற்றும் இடங்கள் ஒரு ஸ்டோரைக் கனடிய ஸ்டோராகத் தகுதிபெறச் செய்யாது.

உங்கள் ஸ்டோர் விற்பனை வரம்பை மீறினால், கனடாவின் சரக்கு மற்றும் சேவை வரியை (GST) வசூலித்துச் செலுத்த நீங்கள் பதிவு செய்ய வேண்டியிருக்கலாம். சில பிராந்தியங்களில், ஒருங்கிணைந்த விற்பனை வரியில் (HST) GST சேர்க்கப்பட்டுள்ளது. நீங்கள் GST ஐ வசூலிக்கப் பதிவுசெய்திருந்தால், HST ஐ வசூலிக்கவும் நீங்கள் பதிவுசெய்திருப்பீர்கள். நடைமுறையில், நீங்கள் GST-க்குப் பதிவு செய்திருந்தால், HST மாகாணங்களில் முழு HST-ஐயும் வசூலிக்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும். நீங்கள் கனடாவுக்குள் ஷிப் செய்யும் ஆர்டர்களுக்கான ஷிப்பிங் கட்டணங்களுக்கும் HST பொருந்தும். கனடிய வரிகள் குறித்து மேலும் அறிக.

வரிப் பொறுப்பு நுண்ணறிவு என்றால் என்ன

வரிப் பொறுப்பு நுண்ணறிவுகள் கனடாவிலும் ஒவ்வொரு கனடிய மாகாணத்திலும் உங்கள் Shopify ஸ்டோரிலிருந்து நடக்கும் விற்பனையைப் பயன்படுத்துகின்றன. அந்த விற்பனையானது பதிவு செய்யப்பட வேண்டிய நிலையை எட்டும்போது வரிப் பொறுப்பு நுண்ணறிவுகள் பிரிவு ஒரு நுண்ணறிவைக் காண்பிக்கும். நுண்ணறிவு அது பொருந்தும் பிராந்தியத்தைக் குறிக்கிறது: ஃபெடரல் GST/HST-க்குக் கனடா அல்லது அந்த மாகாணத்தின் விற்பனை வரிக்கு ஒரு தனிப்பட்ட மாகாணம்.

நுண்ணறிவு என்பது சரிபார்ப்பதற்கான ஒரு தூண்டுதல், உங்களைப் பற்றி எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இது மதிப்பாய்வின் தொடக்கமே தவிர, அதன் முடிவல்ல.

இவையனைத்தும் நுண்ணறிவு ஆகும்:

  • உங்கள் Shopify ஸ்டோர் மூலம் நடந்த விற்பனையை அடிப்படையாகக் கொண்ட ஒரு கணக்கீடு.
  • அந்தப் பிராந்தியத்தில் நீங்கள் பதிவு செய்ய வேண்டுமா என்பதைச் சரிபார்க்கும் ஒரு சிக்னல்.

இவற்றில் எதுவும் நுண்ணறிவு ஆகாது:

  • சட்டப்பூர்வ உத்தரவு, அபராதம் அல்லது வரி அதிகாரியிடமிருந்து வரும் அறிவிப்பு.
  • நீங்கள் வரி செலுத்த வேண்டும் என்பதற்கான உறுதிப்படுத்தல்.
  • Shopify அமைத்த காலக்கெடு.

நீங்கள் பதிவு செய்ய வேண்டுமா என்பதை ஒரு வரி அதிகாரியால் மட்டுமே தீர்மானிக்க முடியும். நுண்ணறிவுகள், நீங்கள் Shopify-க்கு வெளியே செய்யும் விற்பனையைச் சேர்க்காது என்பதாலும், நீங்கள் விற்கும் குறிப்பிட்ட தயாரிப்புகளுக்கு அந்தப் பிராந்தியத்தில் வரி விதிக்கப்படுமா என்பதைக் கணக்கில் கொள்ளாது என்பதாலும் நுண்ணறிவு பரிந்துரைப்பதில் இருந்து உங்கள் நிலைமை வேறுபடலாம்.

வரி அதிகாரியால் அமைக்கப்பட்ட காலக்கெடு இன்னும் பொருந்தும், எனவே நீங்கள் ஏற்கனவே ஒரு வரம்பைக் கடந்திருந்தால், அந்த அதிகாரியின் பதிவு காலக்கெடுவை உடனடியாகச் சரிபார்க்கவும்.

நீங்கள் ஒரு நுண்ணறிவைப் பார்க்கும்போது என்ன செய்ய வேண்டும்

  1. கனடாவில் பதிவு செய்வதற்கான வரம்புகள் என்பதில், நுண்ணறிவில் குறிப்பிடப்பட்டுள்ள பிராந்தியத்திற்கான பதிவு விதிகளைச் சரிபார்க்கவும். கனடா முழுவதுமான உங்கள் விற்பனையை ஃபெடரல் GST/HST வரம்பு கணக்கிடுகிறது. ஒரு மாகாண வரம்பு அந்த மாகாணத்தில் உங்களின் விற்பனையைக் கணக்கிடுகிறது, மேலும் பிரிட்டிஷ் கொலம்பியா, மானிடோபா மற்றும் சஸ்காட்செவன் ஆகியவை குறைந்தபட்ச விற்பனை வரம்பை அமைப்பதில்லை.
  2. அந்தப் பிராந்தியத்தில் நீங்கள் விற்கும் தயாரிப்புகளுக்கு வரி விதிக்கப்படுகிறதா என்பதைச் சரிபார்க்கவும். கனடாவும் மாகாணங்களும் சில மளிகைப் பொருட்கள், விவசாயப் பொருட்கள் போன்ற வெவ்வேறு தயாரிப்புகளுக்கு வரி விலக்கு அளிக்கின்றன.
  3. Shopify-க்கு வெளியே நீங்கள் செய்த ஏதேனும் விற்பனையை உங்கள் Shopify மொத்தங்களில் சேர்த்து, அந்த மொத்தத்தை வரம்புடன் ஒப்பிடவும்.
  4. பதிவு செய்வதன் மூலம் நீங்கள் எதற்கு உறுதியளிக்கிறீர்கள் என்பதைச் சரிபார்க்கவும். நீங்கள் பதிவு செய்வதற்கு முன் என்பதைப் பார்க்கவும்.
  5. நீங்கள் பதிவு செய்ய வேண்டுமானால், அந்தப் பிராந்தியத்தின் வரி அதிகாரியிடம் பதிவுசெய்து, பின்னர் Shopify-இல் வரி வசூலிப்பை அமைக்கவும்.

நீங்கள் சரிபார்த்து, அந்தப் பிராந்தியத்தில் நீங்கள் பதிவு செய்ய வேண்டியதில்லை என்று கண்டறிந்தால், நீங்கள் Shopify-இல் எதையும் மாற்றத் தேவையில்லை.

எந்தக் கட்டத்திலாவது உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை எனில், அந்தப் பிராந்தியத்திற்கான வரி அதிகாரியை அல்லது வரி வல்லுநரைத் தொடர்புகொள்ளவும். ஒவ்வொரு கனடிய வரி அதிகாரியுடனான பதிவு இணைப்புகள் கனடிய வரிகள் குறிப்பில் பட்டியலிடப்பட்டுள்ளன.

கனடாவில் வரம்பு காலங்கள்

வரிப் பொறுப்பைக் கணக்கிடும்போது கருத்தில் கொள்ளப்படும் கால அளவே வரம்புக் காலமாகும். கனடாவில், ஒரு காலாண்டில் அல்லது மூன்று மாதக் காலப்பகுதியில் செய்யப்பட்ட விற்பனையைத் தீர்மானிப்பதன் மூலம் வரம்புக் காலங்கள் கணக்கிடப்படுகின்றன. ஓர் ஆண்டின் காலாண்டுகள் பின்வருமாறு:

  • ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச்
  • ஏப்ரல், மே மற்றும் ஜூன்
  • ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர்
  • அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர்

உங்கள் ஸ்டோர் கனடாவில் அமைந்திருந்தால், பின்வரும் இரண்டும் உண்மையாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் பொதுவாக ஒரு GST/HST கணக்கிற்குப் பதிவுசெய்ய வேண்டும்:

  • நீங்கள் வரிக்குட்பட்ட தயாரிப்புகள் அல்லது சேவைகளை விற்பனை செய்கிறீர்கள் அல்லது குத்தகைக்கு விடுகிறீர்கள்.
  • கனடாவில் வரிக்குட்பட்ட விற்பனையிலிருந்து கிடைக்கும் உங்கள் வருவாய், கடந்த நான்கு தொடர்ச்சியான காலண்டர் காலாண்டுகளில் 30,000 CAD-ஐ விட அதிகமாக உள்ளது அல்லது தற்போதைய காலண்டர் காலாண்டில் 30,000 CAD-ஐ விட அதிகமாக உள்ளது.

உங்கள் ஸ்டோர் கனடாவில் அமையவில்லை எனில், பின்வரும் இரண்டும் உண்மையாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் பொதுவாக ஒரு GST/HST கணக்கிற்குப் பதிவுசெய்ய வேண்டும்:

  • கனடாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வரிக்குட்பட்ட தயாரிப்புகள் அல்லது சேவைகளை நீங்கள் விற்பனை செய்வதுடன், கனடாவில் அமைந்துள்ள கிடங்கிலிருந்து அந்த ஆர்டர்களை நிறைவேற்றுகிறீர்கள்.
  • கனடாவில் வரிக்குட்பட்ட விற்பனையிலிருந்து கிடைக்கும் உங்கள் வருவாய், கடந்த பன்னிரண்டு மாதங்களில் 30,000 CAD-ஐ விட அதிகமாக உள்ளது.

முந்தைய நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று உங்களுக்குப் பொருந்தினால், உங்கள் விற்பனைக்கு வரிகளை வசூலித்து, அந்த வரிகளை உரிய வரி அமைப்புக்கு (tax authority) அனுப்பி, அந்த அமைப்புக்குத் தவறாமல் அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கலாம். உங்கள் விற்பனை வரம்பை விடக் குறைவாக இருந்தால், நீங்கள் GST/HST கணக்கிற்குப் பதிவுசெய்ய வேண்டியதில்லை, அதோடு வரிகளை வசூலிக்கவோ பணத்தை அனுப்பவோ தேவையில்லை.

கனடாவில் பதிவு வரம்புகள்

ஒவ்வொரு வரி அமைப்பும் அதற்கான சொந்தப் பதிவு விதிகளை அமைக்கிறது, மேலும் எல்லா அமைப்புகளும் குறைந்தபட்ச விற்பனை வரம்பை அமைப்பதில்லை. பின்வரும் அட்டவணை அவற்றைச் சுருக்கிக் கூறுகிறது. வரம்பு என்பது பலவற்றில் ஒரு நிபந்தனையாகும், எனவே நீங்கள் பதிவுசெய்வதற்கு முன் அந்த அமைப்பின் சொந்த விதிகளைச் சரிபார்க்கவும்.

கனடியக் கூட்டாட்சி மற்றும் மாகாண வரி அமைப்புகளுக்கான விற்பனை வரிப் பதிவு வரம்புகள் மற்றும் விதிகள்
வரி அமைப்புபதிவு வரம்புஅதிகாரப்பூர்வத் தகவல்
கனடா வருவாய் முகமை (GST/HST)கடந்த நான்கு தொடர்ச்சியான காலண்டர் காலாண்டுகளில் $30,000 CAD-க்கும் அதிகமான வரிக்குட்பட்ட விற்பனை அல்லது ஒற்றைக் காலண்டர் காலாண்டில் $30,000 CAD-க்கும் அதிகமான விற்பனை.GST/HST-க்குப் பதிவுசெய்து வசூலிக்கத் தொடங்குவது எப்போது
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண விற்பனை வரி (PST)பொதுவான குறைந்தபட்ச விற்பனை வரம்பு இல்லை, எனவே உங்களின் முதல் வரிக்குட்பட்ட விற்பனையிலிருந்தே சாத்தியமான வரிப் பொறுப்பை அடையாளம் காண முடியும். அந்த மாகாணத்தில் நிலையான வணிக இடத்தை வைத்திருக்காத பிரிட்டிஷ் கொலம்பியா குடியிருப்பாளராக நீங்கள் இருந்தால், $10,000 CAD சிறு-விற்பனையாளர் வரம்பு பொருந்தக்கூடும்.PST-ஐ வசூலிக்கப் பதிவுசெய்க
மனிடோபா சில்லறை விற்பனை வரி (RST)குறைந்தபட்ச விற்பனை வரம்பு ஏதுமில்லை, எனவே மனிடோபாவின் பிற நிபந்தனைகளை நீங்கள் பூர்த்திசெய்தால், உங்களின் முதல் வரிக்குட்பட்ட விற்பனையிலிருந்தே சாத்தியமான வரிப் பொறுப்பை அடையாளம் காண முடியும்.மனிடோபா சில்லறை விற்பனை வரி
சஸ்காட்செவன் மாகாண விற்பனை வரி (PST)குறைந்தபட்ச விற்பனை வரம்பு ஏதுமில்லை, எனவே நீங்கள் விற்பனை செய்வது சஸ்காட்செவனில் வரிக்குட்பட்டதாக இருந்தால், உங்களின் முதல் வரிக்குட்பட்ட விற்பனையிலிருந்தே சாத்தியமான வரிப் பொறுப்பை அடையாளம் காண முடியும்.PST எண்ணுக்கு விண்ணப்பிக்கவும்

கியூபெக் அதன் சொந்த QST பதிவு விதிகளை அமைக்கிறது, இது உங்கள் வணிகம் எங்கு அமைந்துள்ளது மற்றும் நீங்கள் எதை விற்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அமையும். GST மற்றும் QST-க்கு பதிவுசெய்தல் என்பதைப் பார்க்கவும்.

ஆல்பர்ட்டா, நார்த்வெஸ்ட் டெரிடரிஸ், நுனாவுட் மற்றும் யூக்கான் ஆகிய மாகாணங்களுக்கு விற்பனை வரி இல்லை. அந்தப் பிராந்தியங்களில் நீங்கள் GST-ஐ மட்டுமே வசூலிப்பீர்கள்.

ஒவ்வொரு பிராந்தியத்திலும் விற்பனையை வரிக்குட்பட்டதாக்குவது உட்பட, கூட்டாட்சி மற்றும் மாகாண நிபந்தனைகள் முழுமைக்கும், கனடிய வரிகள் குறிப்பைப் பார்க்கவும்.

சில விற்பனைகளுக்குப் பிறகே உங்களால் ஒரு நுண்ணறிவைப் பார்க்க முடிவது ஏன்

பிரிட்டிஷ் கொலம்பியா, மனிடோபா மற்றும் சஸ்காட்செவன் ஆகியவை பொதுவான குறைந்தபட்ச விற்பனை வரம்பை அமைக்கவில்லை. அந்த மாகாணங்களில் உங்களின் முதல் வரிக்குட்பட்ட விற்பனையிலிருந்தே சாத்தியமான வரிப் பொறுப்பை அடையாளம் காண முடியும், எனவே உங்களின் விற்பனை அங்கு குறைவாக இருக்கும்போது, அவற்றில் ஒன்றிற்கான நுண்ணறிவு தோன்றக்கூடும். இது எதிர்பார்க்கப்படக்கூடிய ஒன்றுதான், எதுவும் தவறாகிவிட்டது என்பதற்கான அறிகுறி அல்ல.

அந்த மாகாணங்களில் தோன்றும் நுண்ணறிவுக்கும் பிற இடங்களில் தோன்றுவதற்கும் வேறுபாடில்லை: உங்கள் பொறுப்புகளைச் சரிபார்க்க வேண்டும் என்பதுதான் அதன்பொருள். நீங்கள் பதிவுசெய்ய வேண்டும் என்ற முடிவல்ல அது. ஒவ்வொரு மாகாணமும், யார் பதிவுசெய்ய வேண்டும் என்பது குறித்த தனது சொந்த நிபந்தனைகளை அமைப்பதுடன், வெவ்வேறு தயாரிப்புகளுக்கு விலக்களிக்கின்றன, மேலும் உங்கள் வணிகத்திற்குப் பொருந்தக்கூடிய சிறு-விற்பனையாளர் விதியையும் கொண்டிருக்கலாம். பதிவுசெய்வதற்கு முன் அந்தந்த மாகாணத்தில் உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

உங்களின் கனடிய வரிப் பொறுப்புகளைச் சரிபார்க்கவும்

உங்கள் ஸ்டோர் திறக்கப்பட்டு விற்பனை தொடங்கப்பட்ட பிறகு, உங்களுக்கு வரிப் பொறுப்புகள் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க உங்கள் விற்பனைகளும் இடங்களும் தானாகவே கண்காணிக்கப்படும்.

Shopify-இல் உங்களின் வரிப் பொறுப்புகளைச் சரிபார்ப்பதற்கு முன், கீழ்க்காணும் அம்சங்களைக் கவனத்தில் கொள்ளவும்:

  • Shopify-க்குள் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே வரிப் பொறுப்பு காட்டப்படும். நீங்கள் Shopify-க்கு வெளியே விற்பனை செய்தால், அவை சேர்க்கப்பட மாட்டா.
  • வரிப் பொறுப்பானது நிகர விற்பனையைப் பயன்படுத்திக் கணக்கிடப்படுகிறதே தவிர, மொத்த விற்பனையை வைத்து அல்ல. நிகர விற்பனை என்பது பணத்தைத் திரும்பப்பெறுதல்களையும் வரியையும் கழித்த பிறகு கிடைக்கும் விற்பனையாகும்.
  • விற்பனையானது உங்களின் வரிப் பொறுப்புகளில் உடனடியாகப் பிரதிபலிக்காது, புதுப்பிக்கப்படுவதற்குச் சில நாட்கள் ஆகலாம்.

பதிவு விதிகள் பிராந்தியத்தைப் பொறுத்து மாறுபடும். பிரிட்டிஷ் கொலம்பியா, மனிடோபா மற்றும் சஸ்காட்செவன் ஆகியவை பொதுவான குறைந்தபட்ச விற்பனை வரம்பை அமைக்கவில்லை, அதாவது அந்த மாகாணங்களில் உங்கள் முதல் வரிக்குட்பட்ட விற்பனையிலிருந்தே சாத்தியமான வரிப் பொறுப்பை அடையாளம் காண முடியும். கனடாவில் பதிவு வரம்புகள் மற்றும் சில விற்பனைகளுக்குப் பிறகே உங்களால் ஒரு நுண்ணறிவைப் பார்க்க முடிவது ஏன் ஆகியவற்றைப் பார்க்கவும்.

கனடிய வரிப் பொறுப்பு

உங்கள் வணிகத்தை நீங்கள் விரிவுபடுத்தும்போது, விதிமுறைகளுக்கு இணங்கப் புதிய பதிவுகள் உங்களுக்குத் தேவைப்படலாம். நீங்கள் Shopify Tax-ஐப் பயன்படுத்தினால், கனடாவில் அல்லது குறிப்பிட்ட மாகாணங்களில் உங்களுக்கு வரிப் பொறுப்புகள் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க உங்கள் விற்பனையும் இடங்களும் தானாகவே கண்காணிக்கப்படும். உங்களின் ஸ்டோரில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், உங்களுக்கு நிலுவையில் உள்ள வரிப் பொறுப்புகள் ஏதேனும் உள்ளதா என்பதைத் தெரிவிக்கும் அறிவிப்புகளைப் பெறுவீர்கள்.

உங்களின் Shopify நிர்வாகியில் எந்த நேரத்திலும் இந்தத் தகவலை நீங்கள் சரிபார்க்கலாம்.

படிகள்:

  1. உங்களின் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வரிகள் மற்றும் சுங்க வரிகள் என்பதற்குச் செல்லவும்.

  2. கனடா என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. வரிப் பொறுப்பு நுண்ணறிவுகள் பிரிவில், அறிவிப்புகளுக்கான உங்களின் செயல்பாட்டைச் சரிபார்க்கவும்.

நீங்கள் பதிவு வரம்பிற்குக் கீழ் உள்ளீர்களா, நெருங்கிவிட்டீர்களா அல்லது தாண்டிவிட்டீர்களா என்பதைக் குறிக்கும் நிலை உங்களின் பதிவுக்கு அடுத்து காட்டப்படும். நீங்கள் விற்பனை வரம்பை நெருங்கினால் அல்லது தாண்டிவிட்டால், அந்த இடத்தில் வரியை வசூலிக்கப் பதிவுசெய்வதைக் கருத்தில் கொள்ளவும். நீங்கள் பதிவுசெய்ய வேண்டுமா என்று உறுதியாகத் தெரியவில்லை என்றால், உள்ளூர் வரி நிபுணர் அல்லது சம்பந்தப்பட்ட வரி அமைப்பைக் கலந்தாலோசிக்கவும்.

அடிப்படை வரியுடன்கூடிய கனடிய வரிப் பொறுப்பு

நீங்கள் அடிப்படை வரியைப் பயன்படுத்தினால், உங்கள் Shopify நிர்வாகிக்குச் சென்று, அமைப்புகள் > வரிகள் மற்றும் சுங்க வரிகள் என்பதற்குச் சென்று, Canada என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் வரிப் பொறுப்புகளை மதிப்பாய்வு செய்யலாம். வரி வசூலிக்க நீங்கள் பதிவுசெய்துள்ள பிராந்தியங்களுக்கு மேலே உங்கள் வரிப் பொறுப்பு காட்டப்படும். கனடாவில் வரி வசூலிப்பதற்கான வரம்பை மீறுவதற்கு நீங்கள் எவ்வளவு நெருக்கமாக உள்ளீர்கள் என்பதைக் குறிக்க ஒரு முன்னேற்றப் பட்டி காட்டப்படுகிறது.

கனடாவில் உங்கள் விற்பனை சாத்தியமான வரிப் பொறுப்பைக் குறித்தால், முன்னேற்றப் பட்டி சிவப்பு நிறமாக மாறும். GST/HST வசூலிப்பதை அமைத்த பிறகு, கனேடிய வரிப் பொறுப்பு டிராக்கர் காட்டப்படாது.

நீங்கள் பதிவுசெய்வதற்கு முன்

பதிவுசெய்தல் என்பது வரி வசூலைத் தொடங்குவது மட்டுமன்று. நீங்கள் விற்பனை எதையும் செய்யாத காலகட்டங்கள் உட்பட, பதிவை ரத்துசெய்யும் வரை தொடரும் பொறுப்புகளை அது உருவாக்குகிறது.

நீங்கள் பதிவுசெய்யும்போது, இந்தப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்:

  • உங்களின் பதிவுத் தேதி முதல் ஒவ்வொரு வரிவிதிக்கக்கூடிய விற்பனைக்கும் வரியை வசூலித்தல்.
  • வரி ஆணையம் உங்களுக்கு ஒதுக்கும் அட்டவணையில் வரிப் படிவங்களைத் தாக்கல் செய்தல். நீங்கள் விற்பனை செய்யாத மற்றும் வரி வசூலிக்காத காலகட்டங்கள் உட்பட, ஒவ்வொரு காலகட்டத்திற்கும் வரிப் படிவத்தைத் தாக்கல் செய்ய பெரும்பாலான ஆணையங்கள் கோருகின்றன.
  • ஒவ்வொரு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவிற்குள்ளும் நீங்கள் வசூலிக்கும் பணத்தை அனுப்புதல். நீங்கள் வசூலிக்கும் வரி வருவாய் அல்ல. வரி ஆணையத்தின் சார்பாக அதை நீங்கள் வைத்திருக்கிறீர்கள்.
  • நீங்கள் தாக்கல் செய்ததை ஆதரிக்கும் பதிவேடுகளைப் பராமரித்தல்.
  • நீங்கள் ரத்துசெய்யும் வரை தொடர்ந்து பதிவுசெய்த நிலையில் இருத்தல். GST/HSTக்கு நீங்கள் தானாக முன்வந்து பதிவுசெய்தால், பொதுவாக நீங்கள் குறைந்தபட்சம் ஓராண்டுக்காவது பதிவுசெய்த நிலையில் இருக்க வேண்டும்.

பொறுப்பு ஏதுமில்லாத நிலையில் பதிவுசெய்வது காரணமில்லாமல் தாக்கல் செய்யும் கடமைகளை ஏற்கும் நிலையை உருவாக்குகிறது. கடமை இருந்தும் தாமதமாகப் பதிவுசெய்வது, நீங்கள் வசூலிக்காத வரியைச் செலுத்த வேண்டிய நிலையை ஏற்படுத்தலாம். நீங்கள் எந்த நிலையில் உள்ளீர்கள் என்பதைச் சரிபார்க்கச் சில நிமிடங்கள் ஒதுக்கலாம். நீங்கள் பதிவுசெய்ய வேண்டிய கட்டாயம் வருவதற்கு முன்பே GST/HSTக்கு பதிவுசெய்வது ஒரு தனிப்பட்டச் செயலாகும், ஏனெனில் தாக்கல் செய்யும் கடமைகளுக்குப் பதிலாக உள்ளீட்டு வரிக் கிரெடிட்களைக் கோர இது உங்களை அனுமதிக்கிறது.

பதிவுசெய்வதற்கு முன் பின்வருவனவற்றைச் சரிபார்க்கவும்:

  • நீங்கள் வரம்பை அடைந்துவிட்டீர்களா? Shopify இல்லாத உங்கள் விற்பனையை உங்கள் Shopify விற்பனையுடன் சேர்த்து, மொத்த மதிப்பை கனடாவில் உள்ள பதிவு வரம்புகள் என்பதில் உள்ள வரம்புடன் ஒப்பிடவும்.
  • உங்களின் தயாரிப்புகளுக்கு அங்கு வரி விதிக்கப்படுமா? கனடாவும் அதன் மாகாணங்களும் வெவ்வேறு தயாரிப்புகளுக்கு வரி விலக்களிக்கின்றன. ஒரு பிராந்தியத்தில் நீங்கள் விற்கும் அனைத்திற்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டால், உங்கள் மொத்த விற்பனை மட்டுமே பதிவுசெய்யும் தேவையை உருவாக்காது.
  • மற்ற நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்கிறீர்களா? சில மாகாணங்களில் ஆர்டர்களைக் கோரி பொருட்களை அங்கு டெலிவரி செய்தால் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும். கனேடிய வரிகளின் குறிப்பைச் சரிபார்க்கவும்.
  • நீங்கள் வேண்டுமென்றே முன்கூட்டியே பதிவுசெய்ய விரும்புகிறீர்களா? நீங்கள் பதிவுசெய்ய வேண்டிய கட்டாயம் வருவதற்கு முன்பே GST/HSTக்குப் பதிவுசெய்வது உள்ளீட்டு வரிக் கிரெடிட்களைக் கோர உங்களை அனுமதிக்கிறது. கனடாவில் தானாக முன்வந்து GST/HST பதிவுசெய்தல் என்பதைப் பார்க்கவும்.

இந்தச் சரிபார்ப்புகளுக்குப் பிறகும் உங்களுக்குத் தயக்கம் இருந்தால், நீங்கள் பதிவுசெய்வதற்கு முன் அந்தப் பிராந்தியத்தின் வரி ஆணையம் அல்லது வரி நிபுணரைத் தொடர்புகொள்ளவும்.

உங்களின் சாத்தியமான கனேடிய வரிப் பொறுப்புகளைக் கையாளுதல்

நீங்கள் பதிவுசெய்ய வேண்டும் என்பதை உறுதிசெய்த பிறகு, பொருந்தக்கூடிய பதிவு வழியைப் பயன்படுத்தவும்:

பதிவுசெய்யச் சில நாட்கள் ஆகலாம். உங்கள் வரி எண் வருவதற்கு முன்பே உங்கள் பிராந்தியத்தை Shopify-இல் சேர்க்கலாம், அதைப் பெற்றவுடன் எண்ணை உள்ளிடலாம்.

படிகள்:

  1. உங்களின் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வரிகள் மற்றும் சுங்க வரிகள் என்பதற்குச் செல்லவும்.

  2. கனடா என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. புதிய பிராந்தியத்தில் வசூலி என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. நீங்கள் பதிவுசெய்துள்ள பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. விற்பனை வரி ID என்பதில், உங்கள் வரி எண்ணை உள்ளிடவும். நீங்கள் வரி எண்ணுக்கு விண்ணப்பித்தும் இதுவரை அதைப் பெறவில்லை என்றால், இந்தப் புலத்தைக் காலியாக விடவும். உங்கள் எண்ணைப் பெறும்போது அதைப் புதுப்பித்துக்கொள்ளலாம்.

  6. விற்பனை வரியை வசூலி என்பதைக் கிளிக் செய்யவும்.

கனடாவில் தானாக முன்வந்து GST/HST பதிவுசெய்தல்

நீங்கள் பதிவுசெய்வதற்கான வரம்பை அடையவில்லை என்றாலும், தானாக முன்வந்து வரிகளுக்குப் பதிவுசெய்யலாம். பதிவுசெய்ய வேண்டிய கட்டாயம் வருவதற்கு முன்பே GST/HSTக்குப் பதிவுசெய்வதன் மூலம் நீங்கள் GST/HST வசூலித்துச் செலுத்த வேண்டும், ஆனால் உங்கள் வணிக வரிப் படிவங்களில் உள்ளீட்டு வரிக் கிரெடிட்களைக் கோர இது உங்களை அனுமதிக்கிறது.

கனேடிய ஸ்டோர்கள் வரிவிதிக்கக்கூடிய தயாரிப்புகள் அல்லது சேவைகளை விற்றாலோ குத்தகைக்கு விட்டாலோ, GST/HSTக்குத் தானாக முன்வந்து பதிவுசெய்யலாம்.

கனடாவில் இல்லாத ஸ்டோர்கள் பின்வருவனவற்றில் ஏதேனும் உண்மையாக இருந்தால், தானாக முன்வந்து GST/HSTக்குப் பதிவுசெய்யலாம்:

  • நீங்கள் கனடாவில் வணிக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால்.
  • நீங்கள் வழக்கமாக கனடாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அல்லது டெலிவரி செய்யப்படும் பொருட்களுக்கான ஆர்டர்களைக் கோருகிறீர்கள்.
  • கனடாவில் செய்ய வேண்டிய சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் நீங்கள் ஈடுபடுகிறீர்கள்.
  • பின்வரும் அளவுகோல்களில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்யும் கண்ணுக்குப் புலப்படாத தனிப்பட்டச் சொத்தை (அறிவுசார் சொத்து போன்றவை) வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் நீங்கள் ஈடுபடுகிறீர்கள்:
    • கனடாவில் பயன்படுத்தப்பட வேண்டியவை
    • கனடாவில் அமைந்துள்ள அசையாச் சொத்து தொடர்பானவை
    • பொதுவாக கனடாவில் அமைந்துள்ள பொருட்கள் தொடர்பானவை
    • கனடாவில் செய்ய வேண்டிய சேவைகள் தொடர்பானவை

GST/HST வசூலிக்க நீங்கள் தானாக முன்வந்து பதிவுசெய்தால், பின்வரும் அனைத்தையும் செய்ய வேண்டும்:

  • GST/HST வரியை வசூலித்துச் செலுத்துதல்
  • GST/HST வரிப் படிவங்களைத் தாக்கல் செய்தல்
  • நீங்கள் வணிக நடவடிக்கைகளை நிறுத்தினால் ஒழிய, குறைந்தது ஒரு வருடமாவது பதிவுசெய்த நிலையில் இருத்தல்
  • உங்களுக்குக் கனடாவில் நிரந்தர நிறுவனம் இல்லை என்றால், டெபாசிட் தொகையை வழங்குதல்

GST/HSTக்குத் தானாக முன்வந்து பதிவுசெய்வதைப் பற்றி மேலும் அறிய, GST/HST கணக்கிற்குத் தானாக முன்வந்து பதிவுசெய்தல் என்பதைப் பார்க்கவும்.