EU வரிக்கான குறிப்பு
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்குள் உள்ள நாடுகள் மதிப்புக்கூட்டு வரியை (அதாவது VAT) வசூலிக்கின்றன. இலக்கை அடிப்படையாகக் கொண்ட மூலத்தின்படி EU VAT கணக்கிடப்படுகிறது; அதாவது வாடிக்கையாளரின் இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு வரி வசூலிக்கப்படும். இந்த வரியின் குறைந்தபட்ச மதிப்பு 15% ஆகும், ஆனால் ஒவ்வொரு உறுப்பு நாடும் அவற்றின் சொந்த வீதங்களை அமைக்கின்றன.
VAT-ஐ வசூலிக்க, மதிப்புக்கூட்டு வரி அடையாள எண் (VATIN) என்றும் குறிப்பிடப்படும் VAT எண் தேவை. உறுப்பு நாட்டின் வரி அதிகாரியிடம் நீங்கள் பதிவுசெய்த பிறகு அது உங்களுக்கு வழங்கப்படும்.
ஜூலை 1, 2021 முதல், தனிப்பட்ட நாடுகளுக்கான தொலைதூர விற்பனை வரம்புகள் இனிப் பொருந்தாது. அதற்குப் பதிலாக, முழு EU-க்கும் ஒரேயொரு தொலைதூர விற்பனை வரம்பு மட்டுமே பொருந்தும்.
- உங்கள் சொந்த நாட்டிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு, உங்கள் உள்ளூர் VAT வீதம் வசூலிக்கப்படுகிறது.
- உங்கள் நாடு அல்லாத பிற EU நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, நீங்கள் பதிவு வரம்பைத் தாண்டிவிட்டீர்களா என்பதைக் கொண்டு வீதம் தீர்மானிக்கப்படும்.
- பிற EU உறுப்பு நாடுகள் அனைத்திற்கும் உங்கள் ஒருங்கிணைந்த விற்பனையானது மொத்தம் €10,000 EUR-க்குக் குறைவாக இருந்தால், பிற EU நாடுகளுக்கு உங்கள் சொந்த நாட்டின் VAT வீதத்தை வசூலிக்கவும், உங்கள் சொந்த நாட்டு அரசாங்கத்திற்கு VAT-ஐ அனுப்பவும் நீங்கள் தேர்வுசெய்யலாம். அனைத்து EU விற்பனைகளுக்கும் உங்கள் சொந்த நாட்டின் VAT வீதத்தை வசூலிக்க நீங்கள் தேர்வுசெய்தால், உங்கள் உள்ளூர் வரி அதிகாரியிடம் நுண்வணிக விலக்குக்குப் (micro-business exemption) விண்ணப்பிக்க வேண்டியிருக்கலாம். நீங்கள் விண்ணப்பிக்க வேண்டுமா என்று உறுதியாகத் தெரியவில்லை எனில், உங்கள் உள்ளூர் வரி அதிகாரி அல்லது ஒரு வரி நிபுணரிடம் கலந்தாலோசிக்கவும்.
- பிற EU உறுப்பு நாடுகள் அனைத்திற்கும் உங்கள் ஒருங்கிணைந்த விற்பனை மொத்தம் €10,000 EUR ஆக அல்லது அதைவிட அதிகமாக இருந்தால், பிற நாடுகளுக்கான அனைத்து விற்பனைகளுக்கும் உங்கள் வாடிக்கையாளரின் இருப்பிடத்திற்குரிய VAT வீதத்தை நீங்கள் வசூலிக்க வேண்டும்.
புதிய One-Stop Shop திட்டம் (OSS) ஜூலை 1, 2021 முதல் கிடைக்கிறது. ஒவ்வொரு உறுப்பு நாட்டிற்கும் தனித்தனியாகப் பதிவுசெய்வதற்குப் பதிலாக, அனைத்து EU உறுப்பு நாடுகளிலும் விற்பனை செய்வதற்கான VAT-ஐ வசூலிக்கவும் அனுப்பவும் OSS திட்டம் வணிகர்களை அனுமதிக்கிறது.
இந்தப் பக்கத்தில்
EU உறுப்பு நாடுகள் மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கான வரிக் குறிப்பு
ஐரோப்பா
யுனைடெட் கிங்டம்
| நாடு | வரி அதிகாரி |
|---|---|
| யுனைடெட் கிங்டம் | எச்.எம். வருவாய் மற்றும் சுங்கத்துறை |
ஒருமுனைச் சேவைத் திட்டங்கள்
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கான விற்பனைக்கு VAT தொகையை வசூலிப்பதையும் பணம் அனுப்புவதையும் எளிதாக்க ஒருமுனைச் சேவைத் திட்டங்கள் வணிகர்களை அனுமதிக்கின்றன.
- ஒருமுனைச் சேவை (OSS) திட்டமானது, யூனியன் OSSஎன்றும் அழைக்கப்படுகிறது. மற்ற EU உறுப்பு நாடுகளுக்கு விற்பனை செய்யும் போது, இலக்கு நாடுகளின் அடிப்படையில் VAT தொகையை வசூலித்து பணம் அனுப்ப வேண்டியிருக்கும் EU-வில் உள்ள வணிகர்களுக்கானது இது. ஜூலை 1, 2021-க்குப் பிறகு, மற்ற அனைத்து EU உறுப்பு நாடுகளுக்கான உங்கள் வருடாந்திர விற்பனை €10,000 EUR அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால், நீங்கள் OSS திட்டத்தைப் பயன்படுத்தலாம்.
- மற்ற அனைத்து ஐரோப்பிய ஒன்றிய (EU) உறுப்பு நாடுகளுக்கான உங்கள் வருடாந்திர விற்பனை €10,000 EUR-க்கும் குறைவாக இருந்தால், உங்களின் உள்ளூர் VAT வீதத்தை வசூலிக்கக் குறுவணிக விலக்கைப் பயன்படுத்தலாம். அல்லது உங்கள் வாடிக்கையாளர்களின் இருப்பிடத்தின் அடிப்படையில் VAT வசூலிக்க விரும்பினால் OSS-க்கு பதிவுசெய்யலாம்.
- Import One-Stop Shop (IOSS) திட்டமானது எந்தவொரு EU உறுப்பு நாட்டிலும் அமைந்துள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் EU-க்கு வெளியே உள்ள வணிகர்களுக்கானது. நீங்கள் EU-க்கு வெளியே இருந்து, ஒரு EU உறுப்பு நாட்டில் அமைந்துள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து, டெலிவரியின் போது உங்கள் வாடிக்கையாளர்களிடம் வரி வசூலிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை எனில், IOSS திட்டத்தைப் பயன்படுத்தலாம்.
- IOSS-ஐப் பயன்படுத்தி, செக்அவுட்டின் போது €150 EUR அல்லது அதற்கும் குறைவான ஆர்டர்களுக்கான VAT-ஐ வசூலிக்க நீங்கள் தேர்வுசெய்யலாம், இதன் மூலம் உங்கள் வாடிக்கையாளர்கள் டெலிவரியின்போது வரிகளைச் செலுத்த வேண்டியிருக்காது.
- EU-க்கு வெளியே செயல்படும் வணிகர்கள், EU-இல் உள்ள நுகர்வோருக்குத் தாங்கள் விற்கும் டிஜிட்டல் பொருட்கள் அல்லது சேவைகளின் வணிகர்-டு-நுகர்வோர் (B2C) விற்பனைகளுக்கான VAT-ஐக் கணக்கிட Non-Union OSS திட்டம் அனுமதிக்கிறது. வணிகர்கள், Member State of Identification என்று அழைக்கப்படும் தங்களுக்கு விருப்பமான வரி அதிகார அமைப்பிடம் பதிவுசெய்துகொள்வார்கள். Non-Union OSS பதிவு எண் EUxxxyyyyyz என்ற வடிவமைப்பைப் பயன்படுத்துகிறது, மேலும் நீங்கள் இதை Non-Union OSS விற்பனைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். Non-Union OSS பதிவுக்காக உங்கள் Shopify நிர்வாகியில் தனி விருப்பத்தேர்வு எதுவும் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட நிறைவேற்றும் இடம் EU-க்கு வெளியே இருக்கும்போது OSS பதிவுகள் பொருந்தாது.
- உங்களின் நிறைவேற்றும் இடம் EU-க்கு வெளியே இருக்கும்போது டிஜிட்டல் தயாரிப்புகளுக்கு VAT கட்டணத்தை விதிக்க, நீங்கள் விற்பனை செய்யும் ஒவ்வொரு EU நாட்டுக்கும் ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சார்ந்த பதிவைச் சேர்த்து, ஒவ்வொன்றுக்கும் உங்களின் Non-Union OSS பதிவு எண்ணை உள்ளிடவும்.
எடுத்துக்காட்டாக, உங்களுக்கு ஸ்வீடனில் ஒரு இடமும் யுனைடெட் ஸ்டேட்ஸில் ஒரு இடமும் உள்ளது. ஸ்வீடனிலிருந்து EU-வில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் ஆர்டர்களுக்கு OSS திட்டத்தையும், யுனைடெட் ஸ்டேட்ஸிலிருந்து EU-வில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் ஆர்டர்களுக்கு IOSS திட்டத்தையும் பயன்படுத்துகிறீர்கள்.
உங்கள் Shopify நிர்வாகியில், உங்கள் OSS பதிவை உள்ளிடுவீர்கள். OSS மற்றும் IOSS ஆகியவற்றை ஒரே நேரத்தில் பயன்படுத்துவது ஆதரிக்கப்படாது, எனவே IOSS-ஐப் பயன்படுத்தி EU-க்கு வெளியிலிருந்து EU-க்குள் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் ஆர்டர்களுக்கு VAT வசூலிப்பதற்கான விருப்பம் முடக்கப்பட்டுள்ளது.
OSS மூலம் VAT-ஐ வசூலித்து, தெரிவித்து, பணம் அனுப்பவும்
படிகள்:
- உங்கள் சொந்த நாட்டில் உள்ள வரி ஆணையத்தில் OSS-க்குப் பதிவுசெய்யவும்.
- உங்கள் வரிப் பதிவுகளைப் புதுப்பிக்கவும்.
- தனிப்பட்ட EU உறுப்பு நாடுகளில் VAT எண்ணுக்குப் பதிவுசெய்வதற்குப் பதிலாக, விற்பனையைத் தெரிவித்து OSS-க்கு VAT தொகையை அனுப்பவும்.
OSS-க்குப் பதிவுசெய்வது விருப்பத்தேர்வாகும். நீங்கள் OSS-க்குப் பதிவுசெய்யவில்லை எனில், தனிப்பட்ட EU உறுப்பு நாடுகளில் VAT-க்குப் பதிவுசெய்வதைத் தொடர்வீர்கள்.
ec.europa.eu என்ற இணையதளத்தில் OSS பற்றி மேலும் அறிக.
IOSS மூலம் VAT-ஐ வசூலித்து, தெரிவித்து, பணம் அனுப்பவும்
தற்போது, நீங்கள் EU-க்கு வெளியே இருந்து, EU-க்குள் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தால், €22 EUR-க்கு குறைவான ஆர்டர்களுக்கு VAT வசூலிக்க வேண்டியதில்லை. ஜூலை 1, 2021-க்குப் பிறகு, €150 EUR அல்லது அதற்கும் குறைவான ஆர்டர்களுக்கு VAT விதிக்கப்படும். மேலும் €150 EUR-க்கு அதிகமான ஆர்டர்களுக்கு இறக்குமதி VAT மற்றும் சுங்க வரிகள் விதிக்கப்படும்.
ஆர்டர் தொகைகள் எதுவாக இருந்தாலும் VAT வசூலிக்க வேண்டிய அவசியமில்லை. IOSS-ஐப் பயன்படுத்தி, செக்அவுட்டின்போது €150 EUR அல்லது அதற்கும் குறைவான ஆர்டர்களுக்கு VAT-ஐ வசூலிக்க நீங்கள் தேர்வுசெய்யலாம். இதன் மூலம் உங்கள் வாடிக்கையாளர்கள் டெலிவரியின்போது வரிகளைச் செலுத்த வேண்டியிருக்காது.
படிகள்:
- ஒரு EU உறுப்பு நாட்டில் உள்ள வரி ஆணையத்தில் IOSS-க்குப் பதிவுசெய்யவும்.
- இலக்கு நாட்டின் அடிப்படையில் VAT வசூலிக்கவும்.
- விற்பனையை அறிக்கையிட்டு, IOSS-க்கு VAT-ஐப் பணம் அனுப்பவும்.
IOSS-க்கு பதிவு செய்வது விருப்பத்திற்குரியது, ஆனால் செக்அவுட் செயல்முறையின்போது VAT-ஐ வசூலிக்க விரும்பினால் இது அவசியமாகும். செக்அவுட்டில் இந்த வரிகளை நீங்கள் வசூலிக்கவில்லை எனில், டெலிவரியின்போது ஷிப்பிங் கேரியரிடம் உங்கள் வாடிக்கையாளர் அவற்றைச் செலுத்த வேண்டியிருக்கும்.
ec.europa.eu தளத்தில் IOSS குறித்து மேலும் அறியவும்.
IOSS மற்றும் டிராப்ஷிப்பிங்
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியிலிருந்து நேரடியாக ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள உங்கள் வாடிக்கையாளர்களுக்கு உங்கள் சப்ளையர் பொருட்களை அனுப்பும் டிராப்ஷிப்பிங் நிறைவேற்ற முறையை நீங்கள் பயன்படுத்தினால், Import One-Stop Shop (IOSS) திட்டத்தில் பதிவு செய்வதைப் பரிசீலிக்கவும். ஒரு டிராப்ஷிப்பிங் ஏற்பாட்டில், சுங்க இறக்குமதி மதிப்பு (அதாவது உங்கள் சப்ளையருக்கு நீங்கள் செலுத்தும் விலை), பொதுவாக உங்கள் வாடிக்கையாளர் செலுத்தும் சில்லறை விலையை விடக் குறைவாகவே இருக்கும். IOSS இல்லை எனில், இந்த விலை வித்தியாசம் கூடுதல் VAT பொறுப்புகளை உருவாக்கலாம்.
உதாரணமாக, பிரான்ஸ் நாட்டு விதிமுறைகளின்படி மார்ச் 2026-க்குப் பிறகு பிரான்ஸுக்குள் டெலிவரி செய்யப்படும் பொருட்களின் சுங்க இறக்குமதி மதிப்பானது சில்லறை விற்பனை விலையிலிருந்து வேறுபடும்போது, விற்பனையாளர் பிரெஞ்சு VAT-க்காகப் பதிவுசெய்து, இறக்குமதி VAT மற்றும் மறுவிற்பனைக்கான உள்நாட்டு பிரெஞ்சு VAT ஆகிய இரண்டையும் அறிவிக்க வேண்டும். பிற ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் இதே போன்ற அமலாக்க அணுகுமுறைகளைப் பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் டிராப்ஷிப்பிங் செய்வதற்கான VAT கடமைகள் குறித்து மேலும் அறியவும்.
| சூழல் | என்ன நிகழும் |
|---|---|
| IOSS-உடன் | இலக்கு நாட்டின் VAT வீதத்தின் அடிப்படையில், €150 அல்லது அதற்குக் குறைவான மதிப்புடைய ஆர்டர்களுக்கான VAT-ஐச் செக்அவுட்டில் நீங்கள் வசூலிக்கிறீர்கள். டெலிவரியின்போது வாடிக்கையாளர்கள் எதிர்பாராத VAT அல்லது சுங்கக் கட்டணங்களைச் செலுத்த வேண்டியதில்லை. IOSS போர்ட்டல் மூலம் நீங்கள் மாதாந்திர VAT அறிக்கையைத் தாக்கல் செய்யலாம். |
| IOSS இல்லாமல் | உங்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரியின்போது இறக்குமதி VAT மற்றும் உள்நாட்டு VAT ஆகிய இரண்டும் வசூலிக்கப்படலாம். பிரான்ஸ் போன்ற தனிப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் நீங்கள் VAT-க்காகப் பதிவுசெய்ய வேண்டியிருக்கலாம். நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருந்தால், தொடர்புடைய உறுப்பு நாட்டில் ஒரு நிதியியல் பிரதிநிதியை நியமிக்க வேண்டியிருக்கலாம், இதற்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான யூரோக்கள் செலவாகலாம். |
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யுனைடெட் கிங்டமில் உள்ள பதிவுச் செயல்பாடுகள்
VAT சட்டத்தை இன்னும் சிறப்பாகப் பிரதிபலிக்கும் வகையில் 2024 செப்டம்பர் 23 அன்று Shopify-இன் வரிப் பதிவுகள் புதுப்பிக்கப்படும். இணக்கமின்மை மற்றும் அபராதங்களைத் தவிர்ப்பதற்காக, பொருந்துக்கூடிய பதிவுகளுக்கு உட்பட்ட நாடுகளில் மட்டுமே Shopify VAT-ஐ வசூலிக்கும்.
இந்தத் புதுப்பிப்புச் செயல்பாடு கீழே தரப்பட்டுள்ளது:
| பதிவு வகை: | செயல்பாடு/கவரேஜ்: | உதாரணம் |
|---|---|---|
| உள்ளூர் | உள்ளூர் நாட்டிற்குள் வரும் ஆர்டர்களுக்கு (ஆனால் பிற நாடுகளுக்கு இல்லை) VAT-ஐ வசூலிக்கவும். OSS பயன்படுத்தப்பட்டால், உள்ளூர் நாட்டில் VAT-ஐ வசூலிக்க ஒரு உள்ளூர் பதிவு இன்னும் தேவைப்படுகிறது. | ஒரு ஜெர்மன் பதிவு ஜெர்மனிக்குள் உள்ள ஆர்டர்களையும் ஜெர்மனிக்கு வரும் ஆர்டர்களையும் உள்ளடக்கும், ஆனால் பிற நாடுகளுக்குச் செல்லும் ஆர்டர்களை உள்ளடக்காது. |
| உள்ளூர் யுகே பதிவு | உங்களின் ஐரோப்பிய ஒன்றிய இடங்களில் இருந்து வடக்கு அயர்லாந்திற்கு ஷிப்பிங் செய்யப்படும் ஆர்டர்களுக்கு யுகே VAT-ஐ வசூலிக்கவும். | ஜெர்மனியில் இருந்து வடக்கு அயர்லாந்திற்கு ஷிப்பிங் செய்யப்படும் ஆர்டர்களை ஒரு யுகே பதிவு உள்ளடக்கும். |
| ஒருமுனைச் சேவை (OSS) | அனைத்து எல்லை தாண்டிய ஆர்டர்களுக்கும் (ஆனால் உள்ளூர் ஆர்டர்களுக்கு இல்லை) VAT-ஐ வசூலிக்கவும். | ஜெர்மனியிலிருந்து பிற ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மற்றும் வடக்கு அயர்லாந்திற்கான ஆர்டர்களை ஒரு ஜெர்மன் OSS பதிவு உள்ளடக்கும், ஆனால் ஜெர்மனிக்குள் அல்லது வேறு ஏதேனும் நாட்டிற்குள் உள்ள ஆர்டர்களை உள்ளடக்காது. |
| குறு-வணிக விலக்கு | எல்லை தாண்டிய ஆர்டர்கள் மற்றும் உள்ளூர் ஆர்டர்கள் அனைத்திற்கும், குறு-வணிகப் பதிவுசெய்யப்பட்ட நாட்டின் VAT வீதத்தில் VAT-ஐ வசூலிக்கவும் (குறு-வணிகப் பதிவுசெய்த நாட்டிலிருந்து அல்லது அந்நாட்டிற்கு ஷிப்பிங் செய்யப்படாத ஆர்டர்கள் சேர்க்கப்படாது). உங்களிடம் குறு-வணிக விலக்கு இருந்தால் உள்ளூர் பதிவுகளையும் சேர்க்க முடியும். | ஒரு ஜெர்மன் குறு-வணிகப் பதிவானது ஜெர்மனிக்குள் ஷிப்பிங் செய்யப்படும் ஆர்டர்களையும், ஜெர்மனியிலிருந்து பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஷிப்பிங் செய்யப்படும் ஆர்டர்களையும் உள்ளடக்கும். இந்த ஆர்டர்கள் ஜெர்மன் VAT-ஐ வசூலிக்கும். ஜெர்மனிக்கு வெளியே உள்ள இடங்களில் இருந்து ஷிப்பிங் செய்யப்படும் எந்தவொரு ஆர்டர்களுக்கும் இந்தக் குறு-வணிகப் பதிவு ஜெர்மன் VAT-ஐப் பயன்படுத்தாது, எனவே அந்த நாடுகளில் உள்ளூர் பதிவு தேவைப்படுகிறது. |
இந்தப் புதுப்பிப்பிற்கான காலவரிசை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
- செப்டம்பர் 16, 2024: முந்தைய அட்டவணையில் விடுபட்ட நாடுகளுக்கு VAT பதிவுகள் சேர்க்கப்படும்.
- செப்டம்பர் 23, 2024: நீங்கள் விற்பனை செய்திருந்தாலும் அவசியமான பதிவுகள் இல்லாத ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், வெற்றிடமாக உள்ள VAT எண்களுடன் VAT பதிவுகள் சேர்க்கப்படும்.
விதிமுறைகளின்படி நீங்கள் VAT-ஐ வசூலிப்பதற்கு இந்த மாற்றங்கள் அனுமதிக்கும்.
சில அல்லது அனைத்து VAT பதிவுகளையும் நீங்களே புதுப்பிக்க விரும்பினால், இந்தத் தேதிகளுக்கு முன்பாக நீங்கள் அவ்வாறு செய்யலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வரிகள் மற்றும் சுங்க வரிகள் பகுதிக்குச் செல்லவும்.
பிராந்திய அமைப்புகள் பிரிவில், ஐரோப்பிய ஒன்றியம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஷிப்பிங் செய்தல் பிரிவில், புதிய பதிவுகளைச் சேர்க்க அல்லது உங்கள் தற்போதைய பதிவுகளைத் திருத்த VAT-ஐ வசூலி என்பதைக் கிளிக் செய்யவும்.