ஐரோப்பிய ஒன்றிய வரிகளை அமைத்தல்
நீங்கள் Shopify-க்கு புதியவராக இருந்தால், விற்பனையைத் தொடங்கும் முன்பு, நீங்கள் வரி வசூலிக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். நீங்கள் பல்வேறு VAT உறுப்பு நாடுகளில் பதிவுசெய்ய வேண்டியிருக்கலாம். அதன்பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்தில் எங்கு விற்றாலும் சரியான வீதங்களை வசூலிப்பதை உறுதிப்படுத்த, Shopify-இல் உங்கள் வரிகளை அமைக்கலாம்.
இந்தப் பக்கத்தில்
Shopify-இல் ஐரோப்பிய ஒன்றிய வரிகளை அமைப்பதைத் தொடங்கும் முன்பு
நீங்கள் வரி வசூலிக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை எனில், உள்ளூர் வரி அதிகாரிகளையோ ஒரு வரி நிபுணரையோ கலந்தாலோசிக்கவும். பொதுவாக, ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள பிற நாடுகளுக்கு நீங்கள் விற்க விரும்பினால், VAT-ஐ வசூலிக்க உங்களின் சொந்த நாட்டிலுள்ள வரி அதிகாரிகளிடம் நீங்கள் பதிவுசெய்ய வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மற்றொரு நாட்டுக்கு நீங்கள் செய்யும் விற்பனை ஒரு குறிப்பிட்ட வரம்பைத் தாண்டினால் அல்லது அங்கு உங்களுக்குக் கணிசமான வணிக இருப்பு இருந்தால், ஒருமுனைச் சேவை (OSS) திட்டத்தில் நீங்கள் பதிவுசெய்ய வேண்டியிருக்கலாம் அல்லது தொடர்புடைய ஒவ்வொரு நிறுவனத்தையும் தொடர்புகொண்டு அவர்களிடம் பதிவுசெய்ய வேண்டும். உங்கள் வணிகம் அமைந்துள்ள இடம், நீங்கள் விற்பனை செய்யும் இடம் மற்றும் தனிப்பட்ட அரசுத் தேவைகளைப் பொறுத்து இந்தச் செயல்முறை மாறுபடும். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் வசூலிக்கும் வீதங்களை, VAT வசூலிப்பதற்காக நீங்கள் பதிவுசெய்துள்ள இடமே தீர்மானிக்கிறது.
- உங்கள் சொந்த நாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, உங்களின் உள்ளூர் VAT வீதம் வசூலிக்கப்படும்.
- உங்கள் நாட்டைத் தவிர பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, நீங்கள் €10,000 EUR என்ற பதிவு வரம்பைத் தாண்டுகிறீர்களா என்பதைப் பொறுத்து வீதம் தீர்மானிக்கப்படும்.
- நீங்கள் வரம்பைத் தாண்டவில்லை எனில், உங்கள் உள்ளூர் VAT வீதம் வசூலிக்கப்படும்.
- நீங்கள் வரம்பைத் தாண்டினால், உங்கள் வாடிக்கையாளரின் நாட்டின் VAT வீதம் வசூலிக்கப்படும். இலக்கு நாட்டின் VAT வீதத்தை வசூலிக்க, ஒருமுனைச் சேவை (OSS) அல்லது அந்த நாட்டில் நீங்கள் VAT எண்ணுக்குப் பதிவுசெய்ய வேண்டும்.
ஒரு நாட்டில் உங்களுக்குக் குறிப்பிடத்தக்க அளவில் வணிகம் இருந்தால், வரிகளை வசூலிக்க நீங்கள் பதிவுசெய்ய வேண்டுமா என்பதை உறுதிப்படுத்த அந்த நாட்டின் வரி அதிகாரியைத் தொடர்புகொள்ள வேண்டும். உங்கள் வணிகம் VAT பதிவு வரம்பைத் தாண்டியுள்ளதா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது உங்கள் பொறுப்பாகும்.
OSS மூலம் VAT-ஐ வசூலியுங்கள்
Union OSS என்றும் அழைக்கப்படும் ஒருமுனைச் சேவைத் திட்டம் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் இடங்களைக் கொண்டுள்ள வணிகர்களுக்கானது. அவர்கள் பிற ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்குச் செய்யும் விற்பனைக்காக இலக்கு நாடுகளின் அடிப்படையில் VAT-ஐ வசூலித்துச் செலுத்த வேண்டும். வட அயர்லாந்தின் இரட்டை அந்தஸ்து காரணமாக, வட அயர்லாந்தில் இடங்களைக் கொண்ட வணிகர்களும் OSS-ஐப் பயன்படுத்தலாம்.
பிற ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அனைத்திற்குமான உங்களின் வருடாந்திர விற்பனை €10,000 EUR-க்குக் குறைவாக இருந்தால், உங்கள் உள்ளூர் VAT வீதத்தை வசூலிக்கச் சிறு-வணிக விலக்கைப் பயன்படுத்தலாம் அல்லது உங்கள் வாடிக்கையாளர்களின் இருப்பிடத்தின் அடிப்படையில் VAT-ஐ வசூலிக்க விரும்பினால் OSS-க்கு பதிவுசெய்யலாம்.
உங்கள் ஸ்டோரின் வரிச் சேவையாக Shopify Tax அல்லது அடிப்படை வரியைப் பயன்படுத்தினால் மட்டுமே உங்களால் OSS-ஐப் பயன்படுத்த முடியும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள உங்களின் வரிக் கணக்கீட்டிற்கு இந்தச் சேவைகள் எதையும் நீங்கள் பயன்படுத்தவில்லை எனில், கைமுறை வரி வீதங்களைப் பயன்படுத்தி உங்கள் வரி வீதங்களைக் கைமுறையாகப் புதுப்பிக்கவும்.
உங்கள் VAT பதிவுகளை அமைத்தல்
VAT உறுப்பு நாடுகளில் பதிவுசெய்து, உங்கள் EU VAT எண்ணைப் பெற்ற பிறகு உங்கள் வரிகளை அமைக்கலாம். Shopify-ஆல் சரியான VAT-ஐ வசூலிக்கவும், இணக்கமான VAT இன்வாய்ஸ்களை உருவாக்கவும், உங்கள் வரிப் பொறுப்புகளைத் துல்லியமாக உங்களுக்குத் தெரிவிக்கவும் முடியும் என்பதை உறுதிசெய்ய உங்கள் VAT பதிவுகளைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்கவும். நீங்கள் தொடங்குவதற்கு முன், உங்கள் VAT பதிவை எவ்வாறு உள்ளிடுவது என்பதைத் தீர்மானிக்கவும்:
- VAT வசூலிப்பதற்காகக் குறிப்பிட்ட நாடுகளில் நீங்கள் பதிவுசெய்திருந்தால், உள்ளூர் VAT பதிவை அமைக்கவும்.
- உங்கள் நாட்டிற்கு வெளியே நீங்கள் விற்பனை செய்து, OSS திட்டத்திற்குப் பதிவுசெய்து, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்குச் செய்யும் அனைத்து விற்பனைக்கும் ஒரே VAT அறிக்கையைச் சமர்ப்பிக்கத் திட்டமிட்டால், OSS VAT பதிவை அமைக்கவும்.
- உங்கள் நாட்டிற்கு வெளியே மொத்தம் €10,000 EUR அல்லது அதற்குக் குறைவான தொகையில் விற்பனை செய்து, உங்கள் உள்ளூர் வரி அதிகாரிக்கு VAT அறிக்கையைச் சமர்ப்பிக்கத் திட்டமிட்டால், சிறு-வணிக VAT பதிவை அமைக்கவும்.
Shopify-இன் வரிப் பதிவுகள் எவ்வாறு VAT-ஐ வசூலிக்கின்றன என்பது குறித்து மேலும் அறிய, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள வரிப் பதிவு நடத்தைகள் என்பதைப் பார்க்கவும்.
உள்ளூர் VAT பதிவை அமை
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து அமைப்புகள் > வரிகள் மற்றும் சுங்க வரிகள் என்பதற்குச் செல்லவும்.
பிராந்திய அமைப்புகள் பிரிவில், ஐரோப்பிய ஒன்றியம் என்பதைக் கிளிக் செய்யவும்.
ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் VAT வசூலி பிரிவில், VAT-ஐ வசூலி என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் VAT பதிவுசெய்துள்ள நாட்டைத் தேர்ந்தெடுத்து, உங்கள் VAT எண்ணை உள்ளிடவும்.
VAT-ஐ வசூலி என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்திற்குரியது: நீங்கள் கூடுதல் நாடுகளில் VAT வசூலிக்கப் பதிவுசெய்திருந்தால், கூடுதல் VAT எண்களைச் சேர்க்க வேறொரு இடத்தில் வசூலி என்பதைக் கிளிக் செய்யவும்.
OSS VAT பதிவை அமை
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து அமைப்புகள் > வரிகள் மற்றும் சுங்க வரிகள் என்பதற்குச் செல்லவும்.
பிராந்திய அமைப்புகள் பிரிவில், ஐரோப்பிய ஒன்றியம் என்பதைக் கிளிக் செய்யவும்.
எல்லை தாண்டி VAT-ஐ வசூலி பிரிவில், VAT-ஐ வசூலி என்பதைக் கிளிக் செய்யவும்.
ஒருமுனைச் சேவை (OSS) பதிவைப் பயன்படுத்தி வசூலி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் OSS பதிவுசெய்துள்ள நாட்டைத் தேர்ந்தெடுத்து, உங்கள் VAT எண்ணை உள்ளிடவும்.
VAT-ஐ வசூலி என்பதைக் கிளிக் செய்யவும்.
சிறு-வணிக VAT பதிவை அமை
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து அமைப்புகள் > வரிகள் மற்றும் சுங்க வரிகள் என்பதற்குச் செல்லவும்.
பிராந்திய அமைப்புகள் பிரிவில், ஐரோப்பிய ஒன்றியம் என்பதைக் கிளிக் செய்யவும்.
எல்லை தாண்டி VAT-ஐ வசூலி பிரிவில், VAT-ஐ வசூலி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் சொந்த நாட்டின் பதிவைப் பயன்படுத்தி வசூலி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் பதிவுசெய்துள்ள நாட்டைத் தேர்ந்தெடுத்து, உங்கள் VAT எண்ணை உள்ளிடவும்.
VAT-ஐ வசூலி என்பதைக் கிளிக் செய்யவும்.