தயாரிப்பு விலைகளில் வரிகளைச் சேர்ப்பது
யுனைடெட் கிங்டம் போன்ற சில நாடுகளில், பெரும்பாலான வகையான வியாபாரப் பொருட்களுக்குக் காட்டப்படும் விலைகளில் நீங்கள் விற்பனை வரியைச் சேர்க்க வேண்டும்.
நீங்கள் இந்த அம்சத்தைச் செயல்படுத்தும்போது, வரி = (வரி வீதம் X விலை) / (1 + வரி வீதம்) என்ற சூத்திரத்தைப் பயன்படுத்தி வரி கணக்கிடப்படும். வரிகள் சேர்க்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றாலும், உங்களுக்கும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் வரி ஒரு வரிசை உருப்படியாகக் காண்பிக்கப்படும். துணை மொத்தம் மற்றும் மொத்தத் தொகை ஆகியவை ஒன்றாகவே இருக்கும், ஆனால் ஆர்டருக்காக நீங்கள் பணம் அனுப்ப வேண்டிய வரித் தொகையும் சுட்டிக்காட்டப்படும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, அமைப்புகள் > வரிகள் மற்றும் சுங்க வரிகள் பகுதிக்குச் செல்லவும்.
தயாரிப்பு விலை மற்றும் ஷிப்பிங் கட்டணத்தில் விற்பனை வரியைச் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்களின் சொந்த வரி வீதத்திற்குப் பதிலாக உங்கள் வாடிக்கையாளரின் உள்ளூர் வரி வீதத்தைப் பயன்படுத்த, நீங்கள் விற்பனை செய்யும் ஒவ்வொரு சந்தைக்கும் வரி உள்ளடக்க விலை நிர்ணயத்தை அமைக்கவும்.
உங்கள் விலைகளில் வரியைச் சேர்ப்பதற்கான அமைப்புகளைச் செய்த பிறகு, காட்டப்படும் விலையில் வரியும் இணைக்கப்பட்டிருப்பதற்கு உங்கள் தயாரிப்புப் பக்கங்களில் உள்ள இந்தத் தயாரிப்புக்கு வரி விதி என்பதைத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையிலேயே விடவும். செக்அவுட்டின் போது, வாடிக்கையாளர்களுக்கு மொத்தத் தொகைக்கு அடுத்ததாக, சேர்க்கப்பட்ட வரித் தொகை காட்டப்படும்.
வரிகளைச் சேர்க்குமாறு உங்களின் விலைகளை அமைப்பது உங்கள் வரி அறிக்கையிடலைப் பாதிக்காது.
எடுத்துக்காட்டாக, மாயா மற்றும் கேப்ரியல் ஆகிய இருவரும் ஒரே பிராந்தியத்தில் வசித்து, இருவருமே ஆன்லைன் ஸ்டோர்களை வைத்துள்ளார்கள். இந்தப் பிராந்தியத்தில் 10% வரி வீதம் உள்ளது, மேலும் விலையில் வரிகளைச் சேர்க்க வேண்டுமா வேண்டாமா என்பதை வணிக உரிமையாளர்களே தேர்வுசெய்யவும் இது அனுமதிக்கிறது.
மாயா தனது விலைகளில் வரிகளைச் சேர்க்கவில்லை. ஒரு தயாரிப்பின் விலையை அவர் $100 எனப் பட்டியலிட்டால், அதற்கான வரியாக $10 கணக்கிடப்பட்டு, மொத்த விற்பனை விலை $110 என ஆகும். இதற்கான சூத்திரம் மொத்தம் = பட்டியல் விலை X (1 + வரி வீதம்) ஆகும்:
$100 X (1 + 0.1) = $100 X 1.1 = $110
பட்டியலிடப்படும் விலைகளில் அனைத்து வரிகளையும் சேர்ப்பதற்குக் கேப்ரியல் முடிவுசெய்கிறார். வரி உள்பட மொத்தம் $100 பட்டியல் விலையைப் பெறுவதற்கு, வரித் தொகையைக் கணக்கிட வரி உள்ளிட்ட சூத்திரம் பயன்படுத்தப்படும். இதற்கான சூத்திரம் வரி = (வரி வீதம் X விலை) / (1 + வரி வீதம்) ஆகும்:
விலையில் வரியின் பங்கு = (0.1 X $100) / (1 + 0.1) = $10 / 1.1 = $9.09
விலையில் தயாரிப்பின் பங்கு = $100 - $9.09 = $90.91
இந்தக் கணக்கீடுகள் தானாகவே செயல்படும். கேப்ரியல் மற்றும் அவரது வாடிக்கையாளர்கள் என இருவருக்கும் வசூலிக்கப்படும் உண்மையான வரித் தொகை காண்பிக்கப்படும் வகையில், அனைத்து ஆர்டர்களின் விவரங்களிலும் வரித் தொகை காட்டப்படும்.
வாடிக்கையாளரின் நாட்டைப் பொறுத்து வரியைச் சேர்ப்பது அல்லது தவிர்ப்பது
நீங்கள் சர்வதேச அளவில் விற்பனை செய்தால், வாடிக்கையாளரின் இருப்பிடத்தைப் பொறுத்துத் தயாரிப்பு விலைகளில் நீங்கள் வரியைச் சேர்க்கலாம் அல்லது தவிர்க்கலாம். யுனைடெட் கிங்டம் போன்ற நாடுகள் அல்லது பிராந்தியங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் உள்ளூர் மதிப்புக்கூட்டு வரி (VAT) சேர்க்கப்பட்டு விலைகள் காட்டப்படும். அமெரிக்கா போன்ற நாடுகள் அல்லது பிராந்தியங்களில், செக்அவுட்டின் போது வரிகள் சேர்க்கப்படுவதை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள், அதனால் வரிகள் சேர்க்கப்படாமல் விலைகள் காட்டப்படும்.
நீங்கள் விற்பனை செய்யும் ஒவ்வொரு சந்தைக்கும் வரி சேர்ப்பை அமைக்கிறீர்கள். அது எப்படி என்பதை அறிந்துகொள்ள, வரி உள்ளடக்க விலை நிர்ணயம் மற்றும் சந்தைகளில் குறிப்பிட்ட சந்தைகளுக்கான சுங்க வரிகள் மற்றும் வரிகளை அமைத்தல் என்பதைப் பார்க்கவும்.
குறிப்பிட்ட தயாரிப்புகள் அல்லது தயாரிப்புகளின் சேகரிப்புகளுக்கு நீங்கள் வரி ஓவர்ரைடுகளைப் பயன்படுத்தினால், உங்களின் லாப வரம்புகள் பாதிக்கப்படக்கூடும். வாடிக்கையாளரின் நாட்டைப் பொறுத்து வரியைச் சேர்ப்பது அல்லது தவிர்ப்பது தொடர்பான பரிசீலனைகளைப் பற்றி மேலும் அறிக.
எடுத்துக்காட்டாக, 10% வரி இருக்கும் பிராந்தியத்தில் வசிக்கும் கேப்ரியல், தனது விலைகளை வரியுடன் சேர்த்தே அமைத்திருக்கிறார், மேலும் தனது சொந்தப் பிராந்தியத்திற்கு வெளியே பல பிராந்தியங்களுக்கும் விற்பனை செய்கிறார். வாடிக்கையாளரின் இருப்பிடத்தைப் பொறுத்து அவரது சந்தைகளில் வரியைச் சேர்க்கும்படி அல்லது தவிர்க்கும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. அவர் ஒரு தயாரிப்பை $100க்கு விற்பனை செய்கிறார்.
- அவரது சொந்தப் பிராந்தியத்தில் தயாரிப்பின் விலை $100 ஆகும். வரி = (வரி வீதம் X விலை) / (1 + வரி வீதம்) என்ற சூத்திரத்தைப் பயன்படுத்தும்போது, விலையில் தயாரிப்பின் பங்கு $90.91 மற்றும் விலையில் வரியின் பங்கு $9.09 ஆகும்.
- கேப்ரியல் வரி வசூலிக்கத் தேவையில்லாத பிராந்தியங்களில், செக்அவுட்டின் போது தயாரிப்பின் விலை $90.91 (விலையில் தயாரிப்பின் பங்கு) என இருக்கும்.
- கேப்ரியல் 20% வரி வீதத்தில் வரி வசூலிக்க வேண்டிய பிராந்தியங்களில், செக்அவுட்டின் போது தயாரிப்பின் விலை $109.09 என இருக்கும். விலையில் உள்ள தயாரிப்பின் பங்கிற்கு, அந்தப் பிராந்தியத்தின் 20% வரி வீதத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த விலை கணக்கிடப்படுகிறது.
Shopify நிர்வாகியில் உள்ள உங்கள் ஸ்டோர் முகவரி உங்கள் பிரதான வரி வீதத்தைத் தீர்மானிக்கப் பயன்படுகிறது, வரியை உள்ளடக்கிய பிற நாடு அல்லது பிராந்தியத்திற்கு நீங்கள் விற்கும்போது, வரியை உள்ளடக்கிய உங்கள் விலைகளிலிருந்து இது கழிக்கப்படும். நிர்வாகியில் உங்கள் ஸ்டோரின் முகவரியைப் பிற நாடு அல்லது பிராந்தியத்திற்கு மாற்றுவது பிரதான வரி வீதத்தை மாற்றும்.
உங்கள் வாடிக்கையாளரின் நாட்டின் அடிப்படையில் வரியைச் சேர்ப்பது அல்லது விலக்குவது தொடர்பான கவனத்தில் கொள்ள வேண்டியவை
உங்கள் வாடிக்கையாளரின் இருப்பிடத்தின் அடிப்படையில் வரியைச் சேர்ப்பதற்கு அல்லது விலக்குவதற்கு முன், பின்வரும் கவனத்தில் கொள்ள வேண்டியவற்றைப் பரிசீலிக்கவும்.
- பின்வரும் நிகழ்வுகளில் உங்கள் வாடிக்கையாளரின் நாடு அல்லது பிராந்தியத்தின் அடிப்படையில் வரியைச் சேர்ப்பது அல்லது விலக்குவது ஆதரிக்கப்படாது:
- வாங்கியதற்குப் பிந்தைய கூடுதல் விற்பனையை வழங்கும் மூன்றாம் தரப்புச் செயலிகளைப் பயன்படுத்தும் ஸ்டோர்கள்.
- Shopify Payments ஐப் பயன்படுத்தும் வணிகர்களுக்கு மட்டுமே Google Pay அல்லது Apple Pay போன்ற விரைவான கட்டண முறைகள் ஆதரிக்கப்படுகின்றன. பிற கட்டண நுழைவாயில்களைப் பயன்படுத்தும் வணிகர்களுக்கு விரைவான கட்டண முறைகள் ஆதரிக்கப்படாது.
- வாடிக்கையாளரின் நாட்டின் அடிப்படையில் வரியைச் சேர்ப்பது அல்லது விலக்குவது ஆகியவற்றுடன் விரைவான செக்அவுட் பொத்தான்களைப் பயன்படுத்துவதற்கு ஆதரவில்லை. வாடிக்கையாளரின் இருப்பிடத்தின் அடிப்படையில் விலைகளில் வரியைச் சேர்க்க அல்லது விலக்க விரும்பினால், உங்கள் விரைவான செக்அவுட் பொத்தான்களை முடக்கவும்.
- உங்கள் ஸ்டோரின் முகவரியால் பிரதான வரி வீதம் தீர்மானிக்கப்படுகிறது. இது உங்கள் வரி ஓவர்ரைடுகளைப் பாதிக்கலாம். உதாரணமாக, 10% வரி வீதத்தைக் கொண்ட தயாரிப்புக்கு ஓவர்ரைடு அமைத்து, ஆனால் உங்கள் ஸ்டோரின் பிரதான வரி வீதம் அதிகமாக இருந்தால், சர்வதேச அளவில் ஷிப்பிங் செய்யும்போது இந்தத் தயாரிப்புகளிலிருந்து அதிக பிரதான வரி வீதம் கழிக்கப்படும். இது உங்களின் லாபத்தைப் பாதிக்கலாம். அதுபோன்ற உருப்படிகளைச் சர்வதேச அளவில் ஷிப்பிங் செய்வதைத் தடுக்க விரும்பினால், ஷிப்பிங் சுயவிவரங்களைப் பயன்படுத்தவும்.
- செக்அவுட்டில் விலையைக் கணக்கிட உங்களின் பிரதான வரி வீதம் பயன்படுத்தப்படுகிறது. வேறுபட்ட வரி வீதங்களைக் கொண்ட பிராந்தியங்களில் நிறைவேற்றும் இடங்கள் இருந்தால், இது துல்லியமின்மைகளை ஏற்படுத்தலாம்.
- உங்கள் வாடிக்கையாளரின் இருப்பிடத்தின் அடிப்படையில் வரியைச் சேர்க்கும்போது அல்லது விலக்கும்போது, செக்அவுட்டில் விலைகள் சரியாகக் காட்டப்படும். எனினும், பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்று உண்மையாக இருந்தாலொழிய, தயாரிப்புப் பக்கங்களிலோ கார்ட்டிலோ விலைகள் சரியாகக் காட்டப்படாது:
- நீங்கள் பல நாணயங்களில் விற்பனை செய்து Shopify Payments ஐப் பயன்படுத்துகிறீர்கள். இந்நிலையில், செக்அவுட், தயாரிப்புப் பக்கங்கள் மற்றும் கார்ட்டில் விலைகள் சரியாகக் காட்டப்படும்.
- விலை மாற்றியமைப்பிற்குத் தகுதிபெறும் பிராந்தியத்தில் உள்ள முகவரியைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களின் கொள்முதல்களைச் செய்கிறார்கள், அவர்கள் குக்கீகளைச் செயல்படுத்தியுள்ளனர், தங்களின் உலாவித் தேக்ககத்தை அழிக்கவில்லை, அத்துடன் மறைநிலை (incognito) பயன்முறையைப் பயன்படுத்தி ஸ்டோரைப் பார்வையிடவில்லை. இந்நிலையில், செக்அவுட்டிலும் தயாரிப்புப் பக்கங்களிலும் கார்ட்டிலும், ஸ்டோருக்கான பிந்தைய பார்வைகளிலும் விலைகள் சரியாகக் காட்டப்படும்.
வரி அடங்கிய விலைகளைக் கொண்ட வரி விலக்குகளுக்கு கவனத்தில் கொள்ள வேண்டியவை
தயாரிப்பு விலைகளில் வரிகளைச் சேர்த்தால், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு வெளியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கான GST விலக்குகள் போன்ற சில வாடிக்கையாளர்களுக்கான வரி விலக்கு அளிக்கப்பட்ட விலையை உங்களால் காட்ட முடியாது.
குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு வரி விலக்கு வழங்க வேண்டுமெனில், உங்கள் விலைகளில் வரிகளைச் சேர்க்க வேண்டாம்.