இந்தியாவில் GST - FAQ

இந்தியா முழுவதும் GST என்பது ஒரு மறைமுக வரியாகும். மத்திய மற்றும் மாநில அரசுகளால் விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி (VAT), மத்திய விற்பனை வரி, கலால் வரி மற்றும் வணிக வரி உள்ளிட்ட பிற வரிகள் மற்றும் தீர்வை வரிகளுக்குப் பதிலாக இது விதிக்கப்படுகிறது.

உங்கள் தொழில் பதிவுசெய்யப்பட்டிருப்பதையும் GST-க்கு இணங்குவதையும் உறுதிசெய்ய, வரி ஆலோசகரிடம் பேசவும்.

நான் GST-க்குப் பதிவுசெய்ய வேண்டுமா?

அது சூழ்நிலையைப் பொறுத்தது. பொதுவாக, உங்கள் தொழில் பின்வரும் நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்திசெய்தால், GST பதிவு கட்டாயமாகும்:

  • ஒரு நிதியாண்டில் உங்கள் வருவாய் ரூ.20 லட்சத்தைத் (வடகிழக்கு மற்றும் மலைப்பகுதி மாநிலங்களுக்கு ரூ.10 லட்சம்) தாண்டினால்.
  • சேவை வரி அல்லது VAT போன்ற முந்தைய சட்டத்தின் கீழ் உங்கள் தொழில் பதிவுசெய்யப்பட்டிருந்தால்.
  • நீங்கள் மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு விநியோகத்தில் ஈடுபட்டிருந்தால்.
  • நீங்கள் ஆன்லைன் சந்தைகளில் விற்றால்.

இது முழுமையான பட்டியல் அல்ல. நீங்கள் பதிவுசெய்ய வேண்டுமா என்பதை அறிய வரி ஆலோசகரிடம் பேசவும்.

IGST, CGST மற்றும் SGST ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசம் என்ன?

உங்கள் தொழில் அமைந்துள்ள மாநிலத்திற்குள் வரும் ஆர்டர்களுக்கு, நீங்கள் மத்திய அரசுக்கு மத்திய GST (CGST)-யும், உங்கள் மாநில அரசுக்கு மாநில GST (SGST)-யும் செலுத்த வேண்டும். உங்கள் தொழில் அமைந்துள்ள மாநிலத்திற்கு வெளியேயுள்ள ஆர்டர்களுக்கு, ஒருங்கிணைந்த GST (IGST) எனப்படும் ஒற்றை வரியை மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டும்.

Shopify-இல் உங்களால் பல வரிசை உருப்படிகளை அமைக்க முடியாது, ஆனால் உங்கள் தொழில் அமைந்துள்ள மாநிலத்தில் சரக்குகளை விற்கும்போது SGST மற்றும் CGST ஆகியவற்றின் கூட்டுத்தொகையை வசூலிக்கும்படி உங்கள் வரிகளை அமைக்கலாம்.

பல்வேறு GST வகைகளைப் பற்றி நான் எங்கு மேலும் அறிந்துகொள்ளலாம்?

GST வகைகள் குறித்த தகவலுக்கு, மத்திய கலால் மற்றும் சுங்க வாரிய இணையதளத்தைப் பார்க்கவும்.

எனது வரிகளை நான் எப்படி அமைப்பது?

தயாரிப்பு வகையைப் பொறுத்து வரி வீதம் வேறுபடும் என்பதால், ஒரு குறிப்பிட்ட வீதத்தைத் தானாகவே அமைக்க முடியாது. மாறாக, Shopify சில இயல்புநிலைகளை அமைக்கிறது, அவற்றை உங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நீங்கள் புதுப்பிக்க வேண்டும்.

இந்தியாவில் வரிகளுக்கான ஆரம்ப அமைப்புகள்
Shopify வரி அமைப்புவரி வகைஇயல்புநிலை வரித் தொகைவரி நடத்தை
நாட்டின் வரிCGST9%
பிராந்தியங்கள் - கர்நாடகா தவிர மற்ற அனைத்து மாநிலங்களும்IGST18%9% கூட்டாட்சி வரிக்குப் பதிலாக
பிராந்தியங்கள் - கர்நாடகாSGST9%9% கூட்டாட்சி வரியுடன் சேர்க்கப்படும்

உங்கள் வரிகளை அமைப்பதற்கான தொடக்கப் புள்ளியாக இயல்புநிலை வரி வீதங்களைப் பயன்படுத்தவும்.

உதாரணமாக, 28% GST பொருந்தும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நீங்கள் இருப்பதாகக் கொள்வோம். சரியான வரி சதவீதங்களை வசூலிக்க, இயல்புநிலை வரி அமைப்புகளில் பின்வரும் மாற்றங்களைச் செய்யவும்:

  1. நாட்டின் வரி வீதத்தை 14% ஆக அமைக்கவும்.
  2. பிராந்தியங்கள் பிரிவில், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா தவிர மற்ற அனைத்து மாநிலங்களுக்கும், IGST வரி வீதத்தை 28% ஆக அமைக்கவும்.
  3. கர்நாடகாவுக்கு:
    1. வரி வீதத்தை 28% ஆக அமைக்கவும்.
    2. வரியின் பெயரை IGST என மாற்றவும்.
    3. வரி நடத்தையை 14% கூட்டாட்சி வரிக்குப் பதிலாக என அமைக்கவும்.
  4. மகாராஷ்டிராவுக்கு:
    1. வரி வீதத்தை 14% ஆக அமைக்கவும்.
    2. வரியின் பெயரை SGST என மாற்றவும்.
    3. வரி நடத்தையை 14% கூட்டாட்சி வரியுடன் சேர்க்கப்பட்டது என அமைக்கவும்.

வெவ்வேறு தயாரிப்பு வகைகளுக்கு வெவ்வேறு வீதங்களைப் பயன்படுத்த, ஒவ்வொரு வரி வகைக்கும் மறைக்கப்பட்ட சேகரிப்புகளை உருவாக்கி, உங்கள் தயாரிப்புகளை இந்தச் சேகரிப்புகளுக்கு ஒதுக்கி, அதன் பிறகு ஒவ்வொரு சேகரிப்புக்குமான வரி வீதங்களை மேலெழுதலாம்.

என் வரி அமைப்புகள் சரியாக உள்ளனவா என்பதை எப்படி உறுதிசெய்வது?

உங்கள் வரிகளைத் தானியங்குமுறையாக்க Shopify உதவுகிறது, ஆனால் உங்களுக்கான வரியைப் பணம் அனுப்புவதோ தாக்கல் செய்வதோ இல்லை. நீங்கள் சரியான வீதங்களில் வரியை வசூலிக்கிறீர்களா என்பதை உறுதிசெய்ய, உள்ளூர் வரி அதிகாரிகளிடமோ உள்ளூர் வரி சார்ந்த வல்லுநரிடமோ சரிபார்க்க வேண்டியது உங்கள் பொறுப்பாகும்.

நீங்கள் எதை வசூலிக்க வேண்டும் எனத் தெரிந்துகொண்டு, உங்கள் வரி வீதங்களை உள்ளிட்ட பிறகு, வரிகள் சரியாக வசூலிக்கப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்ய, சில சோதனை ஆர்டர்களைச் செய்து பார்க்கலாம். மேலும் அறிய, சோதனை ஆர்டரைச் செய்தல் என்பதைப் பார்க்கவும்.

நான் எதிர்பார்க்கும் வரி வீதங்களை ஏன் பார்க்க முடியவில்லை?

உங்கள் வாடிக்கையாளர்களிடம் வரி வசூலிக்கப்படும் முறையைப் பாதிக்கக்கூடிய ஒருசில வேறுபட்ட அமைப்புகள் உள்ளன. நீங்கள் எதிர்பார்க்கும் முடிவுகளைப் பெறவில்லை எனில், பின்வருவனவற்றை மதிப்பாய்வு செய்யவும்:

  • பிராந்திய வரிகள் வசூலிக்கப்படாவிட்டால், இதைத் தடுக்கும் அமைப்புகள் எதையும் நீங்கள் அறிமுகப்படுத்தவில்லை என்பதை உறுதிசெய்யவும். வாடிக்கையாளருக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தால், அவரது ஆர்டர்களுக்கு வரி வசூலிக்கப்படாது. ஒரு தயாரிப்புக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தால், அந்தத் தயாரிப்புக்கு வரி வசூலிக்கப்படாது.
  • வசூலிக்கப்படும் வரி மிக அதிகமாக இருந்தால், உங்கள் பிராந்திய வரி வீதங்கள் அவற்றின் நடத்தைக்குச் சரியான அமைப்பைக் கொண்டுள்ளனவா என்பதை உறுதிசெய்துகொள்ளவும். உங்கள் ஸ்டோரில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் இயல்பாக இதற்குப் பதிலாக என அமைக்கப்பட்டிருக்கும், இதனால் அந்த மாநிலத்துக்கான அடிப்படை வரிச் சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படும். இதனுடன் சேர்க்கப்பட்டது, இதன்மீது கூட்டப்பட்டது போன்ற வரி நடத்தைகள், பயன்படுத்தப்படும் வரியின் அளவை அதிகரிக்கின்றன. மேலும் அறிய, வரிகள் இரட்டிப்பாக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்தல் என்பதைப் பார்க்கவும்.
  • உங்கள் தயாரிப்பு விலைகளில் வரியையும் சேர்த்திருந்தால், வரி வசூலிக்கப்படாதது போல் தோன்றலாம். இந்த அமைப்பானது நீங்கள் தயாரிப்புக்குப் பட்டியலிட்டுள்ள சரியான விலையை வாடிக்கையாளர்களிடம் வசூலித்துவிட்டு, அந்த விலையில் வரிக்கான பகுதி எவ்வளவு எனக் கணக்கிடும். மேலும் அறிய, தயாரிப்பு விலைகளில் வரிகளைச் சேர்த்தல் என்பதைப் பார்க்கவும்.

எனது தயாரிப்புகளில் HSN குறியீட்டை எப்படி அமைப்பது?

HSN குறியீட்டைச் சேமிக்க, தயாரிப்புகளுக்கான HS கட்டணக் குறியீட்டைப் பயன்படுத்தலாம். இந்தப் புலம், தயாரிப்புப் பக்கத்தின் ஷிப்பிங் பிரிவில் இருக்கும்.

இந்தப் புலத்தில் குறியீடுகள் குறைந்தபட்சம் 6 இலக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் குறுகிய HSN குறியீடுகளைப் பயன்படுத்த விரும்பினால், உங்கள் HS குறியீடுகளை மெட்டாஃபீல்டுகள் அல்லது தயாரிப்பு டேக்குகளாகச் சேர்க்கவும்.

Shopify, GST-இணக்கமான பில்லை வழங்குமா?

இல்லை. Shopify, GST-இணக்கமான பில்லை உருவாக்காது. GST-இணக்கமான பில்லை உருவாக்க, உள்ளூர் மூன்றாம் தரப்பு GST இன்வாய்ஸ் சேவையைப் பயன்படுத்தவும் அல்லது Shopify App Store இலிருந்து ஒரு செயலியைப் பயன்படுத்தவும்.