ஜப்பானில் வரிகள்

ஜப்பானைத் தளமாகக் கொண்ட ஸ்டோர்களுக்கான வரிகளை அமைத்தல்

ஜப்பான் இருப்பிட அடிப்படையிலான வரிகளைப் பயன்படுத்துகிறது, அதாவது உங்கள் முகவரி மற்றும் உங்கள் வாடிக்கையாளரின் முகவரியைப் பயன்படுத்தி வரிகள் கணக்கிடப்படுகின்றன. வாடிக்கையாளர்களிடம் வரி வசூலிக்க, நீங்கள் வரிப் பதிவு எண்களை உள்ளிட வேண்டிய அவசியமில்லை, ஆனால் வரி வீதங்களைக் கைமுறையாக அமைக்க வேண்டியிருக்கலாம்.

வரி-உள்ளடக்கிய விலைகளைச் செயல்படுத்து

ஜப்பானில், வணிகர்கள் வரி-உள்ளடக்கிய விலை நிர்ணயத்தைப் பயன்படுத்த வேண்டும். புதிய வணிகர்களுக்கு, தயாரிப்பு விலைகளில் இயல்பாகவே வரி சேர்க்கப்பட்டிருக்கும். நீங்கள் இன்னும் வரி-உள்ளடக்கிய விலைகளுடன் விற்பனை செய்யவில்லை எனில், Shopify நிர்வாகியில் உள்ள தயாரிப்பு விலை மற்றும் ஷிப்பிங் கட்டணத்தில் விற்பனை வரியைச் சேர் என்ற அமைப்பைச் செயல்படுத்தவும்.

படிகள்

  1. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > வரிகளும் சுங்க வரிகளும் என்பதற்குச் செல்லவும்.

  2. தயாரிப்பு விலை மற்றும் ஷிப்பிங் கட்டணத்தில் விற்பனை வரியைச் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

இந்த அமைப்பை நீங்கள் செயல்படுத்திய பிறகு, உங்கள் ஸ்டோரில் உள்ள விலைகளில் வரி சேர்க்கப்பட்டிருக்கும். ஒரு தயாரிப்புக்குப் பட்டியலிடப்பட்டுள்ள விலையானது வாடிக்கையாளர் செலுத்தும் தொகையாகும், மேலும் விலையில் உள்ள வரிக்கான பகுதி Tax = (Tax Rate X Price) / (1 + Tax Rate) என்ற சூத்திரத்தைப் பயன்படுத்திக் கணக்கிடப்படும். தயாரிப்பு விலைகளில் வரியைச் சேர்ப்பது குறித்து மேலும் அறிக.

உங்கள் தயாரிப்பு விலைகளை மாற்றுதல்

நீங்கள் ஏற்கெனவே வரியின்றித் தயாரிப்பு விலைகளை அமைத்திருந்து, அவற்றை வரி-உள்ளடக்கிய விலை நிர்ணயத்திற்கு மாற்ற விரும்பினால், உங்கள் விலைகளைக் கைமுறையாக மாற்றலாம்:

  1. வரி சேர்க்கப்பட்ட பிறகு உங்கள் தயாரிப்புகளின் விலையைக் கணக்கிடுங்கள்.
  2. உங்கள் Shopify நிர்வாகியில் வரி-உள்ளடக்கிய விலைகளைச் செயல்படுத்தவும்.
  3. உங்கள் தயாரிப்பு விலைகளை வரி-உள்ளடக்கிய மதிப்பாக மாற்றவும். உங்களின் அனைத்துத் தயாரிப்புகளையும் ஒரே நேரத்தில் மாற்ற மொத்தச் செயல்களைப் பயன்படுத்தலாம் அல்லது தயாரிப்புகளின் CSV கோப்பைப் பதிவேற்றி, தயாரிப்பு விலைகளைப் புதுப்பிக்கலாம்.

தயாரிப்பு விலைகளை அமைத்து நிர்வகிப்பது குறித்து மேலும் அறிக.