உங்கள் வரிகளை நிர்வகியுங்கள்
அடிப்படை வரிச் சேவையைப் பயன்படுத்த உங்கள் ஸ்டோரைப் புதுப்பித்த பிறகு, உங்கள் பதிவுகள், ஓவர்ரைடுகள் மற்றும் வாடிக்கையாளர் விலக்குகள் உள்ளிட்ட வரி அமைப்புகளை நீங்கள் நிர்வகிக்கலாம்.
இந்தப் பக்கத்தில்
நீங்கள் பதிவுசெய்துள்ள பிராந்தியங்களை நிர்வகியுங்கள்
உங்கள் பதிவுகள் அல்லது கணக்கு எண்களை எந்த நேரத்திலும் நீங்கள் சேர்க்கலாம், நீக்கலாம் அல்லது மாற்றலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வரிகள் மற்றும் சுங்க வரிகள் என்பதற்குச் செல்லவும்.
வரிப் பிராந்தியங்கள் பிரிவில், உங்கள் பிராந்தியத்தைக் கிளிக் செய்யவும்.
விற்பனை வரி பிரிவில், பின்வருபவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- புதிய வரிப் பதிவை அமைக்க, விற்பனை வரியை வசூலி என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஏற்கனவே உள்ள வரிப் பதிவைத் திருத்த, நீங்கள் திருத்த விரும்பும் பிராந்தியத்திற்கு அடுத்துள்ள
பொத்தானைக் கிளிக் செய்யவும்.
உங்கள் பிராந்தியங்கள் மற்றும் கணக்கு எண்களைப் புதுப்பிக்கவும்.
விற்பனை வரியை வசூலி என்பதைக் கிளிக் செய்யவும்.
வரிகளை ஓவர்ரைடு செய்
சில நேரங்களில் குறிப்பிட்ட தயாரிப்புகளுக்கு இயல்புநிலை வரி வீதங்கள் பொருந்தாது. எடுத்துக்காட்டாக, குழந்தைகளுக்கான சில ஆடைகளுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் அல்லது குறைந்த வரி வீதம் விதிக்கப்படலாம். இயல்புநிலை வீதங்கள் பொருந்தவில்லை எனில், நீங்கள் ஒரு ஓவர்ரைடை உருவாக்க வேண்டும்.
தயாரிப்புக்கான வரி ஓவர்ரைடை உருவாக்குதல்
தயாரிப்புகளுக்கான ஓவர்ரைடை உருவாக்குவது இரண்டு-படிச் செயல்முறையாகும். முதலில், வேறுபட்ட வரி வீதத்தைக் கொண்ட தயாரிப்புகளை உள்ளடக்கிய ஒரு சேகரிப்பை உருவாக்க வேண்டும். பிறகு, எந்தப் பிராந்தியத்திற்கு இந்த ஓவர்ரைடு பொருந்தும் என்பதையும், பயன்படுத்த வேண்டிய வரி வீதத்தையும் நீங்கள் குறிப்பிட வேண்டும்.
படிகள்:
- கீழே உள்ளவற்றைச் செய்வதன் மூலம் ஒரு சேகரிப்பை உருவாக்கவும்:
- உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் > தொகுப்புகள் என்பதற்குச் செல்லவும்.
- தொகுப்பைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- தலைப்பைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, பிறகு உங்கள் சேகரிப்புக்கான தலைப்பை உள்ளிடவும்.
- இயல்புநிலை தயாரிப்புகள் மூலத்தில்,
தயாரிப்புகளைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- சேர்ப்பதற்கான தயாரிப்புகளைத் தேர்ந்தெடு உரையாடலில், நீங்கள் சேர்க்க விரும்பும் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்து, பிறகு சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
- கீழே உள்ளவற்றைச் செய்வதன் மூலம் ஓவர்ரைடை உருவாக்கவும்:
- உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வரிகள் மற்றும் சுங்க வரிகள் என்பதற்குச் செல்லவும்.
- வரிப் பிராந்தியங்கள் பிரிவில், எதற்காக ஓவர்ரைடை உருவாக்க வேண்டுமோ அந்த நாடு அல்லது பிராந்தியத்தைக் கிளிக் செய்யவும்.
- வரி ஓவர்ரைடுகள் பிரிவில், வரி ஓவர்ரைடைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- தயாரிப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- சேகரிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
- ஓவர்ரைடு பொருந்தும் பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- அந்தப் பிராந்தியத்திலுள்ள சேகரிப்புக்கான வரி வீதத்தை உள்ளிடவும்.
- ஓவர்ரைடைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் வரிக் கணக்கீடுகளை நிர்வகித்தல்
உங்கள் தயாரிப்புகளின் மீது வரி எப்படிக் கணக்கிடப்படுகிறது என்பதைத் தீர்மானிக்கும் பல்வேறு அமைப்புகளை உங்களால் நிர்வகிக்க முடியும். எடுத்துக்காட்டாக, உங்கள் விலைகளில் வரிகள் சேர்க்கப்பட்டுள்ளனவா, டிஜிட்டல் பொருட்களின் மீது VAT வசூலிக்கப்பட வேண்டுமா மற்றும் ஷிப்பிங் செலவுகளின் மீது வரியைப் பயன்படுத்த வேண்டுமா போன்றவற்றை நீங்கள் அமைக்கலாம். இந்த அமைப்புகளை வரிகள் மற்றும் சுங்க வரிகள் அமைப்புகள் பக்கத்தில் நிர்வகிக்கலாம். மேலும் அறிய, வரி ஓவர்ரைடுகள் மற்றும் விலக்குகள் என்பதைப் பார்க்கவும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வரிகள் மற்றும் சுங்க வரிகள் என்பதற்குச் செல்லவும்.
வரி எப்படி வசூலிக்கப்படுகிறது என்பதைத் தீர்மானி பிரிவில், பொருந்தக்கூடிய விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
வரி முழுமையாக்கல்
முன்பு, ஆர்டரின் துணை மொத்தத்தின் மீதான வரிகளைக் கணக்கிட்டு, பிறகு அந்த முடிவுகளை முழுமையாக்குவதன் மூலம் விலைப்பட்டியல் நிலையில் வரிகள் முழுமையாக்கப்பட்டன. அடிப்படை வரிச் சேவையைப் பயன்படுத்த உங்கள் அமைப்புகளைப் புதுப்பித்த பிறகு, வரிசை-உருப்படி அளவில் வரித் தொகைகள் முழுமையாக்கப்படும். இதில், ஆர்டரில் உள்ள ஒவ்வொரு வரிசைக்கும் வரி வீதத்தைப் பயன்படுத்தி, அதன் முடிவை முழுமையாக்கி, பின்னர் ஆர்டரின் மொத்த மதிப்பை அறிய இந்தத் துணை மொத்தங்களை ஒன்றாகச் சேர்ப்பதன் மூலம் மொத்த வரி மதிப்பு கணக்கிடப்படும்.
வரிசை அளவில் வரிகளை முழுமையாக்குவது வெவ்வேறு வரி வீதங்களின் கணக்கீட்டை மேம்படுத்துகிறது, அத்துடன் வரிக்கு உட்பட்ட மற்றும் வரிக்கு உட்படாத தயாரிப்புகள் அடங்கிய ஆர்டர்களுக்கு வரிகளைக் கணக்கிடுவதை எளிதாக்குகிறது.
வரிசை-உருப்படி அளவில் பேங்கர் முறை முழுமையாக்கல்
பதிவு-அடிப்படையிலான பிராந்தியங்களுக்கு, வரிசை-உருப்படி அளவில் பேங்கர் முறை முழுமையாக்கல் விதிகளைப் பயன்படுத்தி வரித் தொகைகள் முழுமையாக்கப்படுகின்றன. பேங்கர் முறை முழுமையாக்கல் (சமநிலைக்கு முழுமையாக்கல் எனவும் அழைக்கப்படுகிறது) என்பது இரண்டு மதிப்புகளுக்குச் சரியாக நடுவில் இருக்கும் எண்களை, அதற்கடுத்துள்ள இரட்டைப் படை எண்ணுக்கு முழுமையாக்குகிறது. எடுத்துக்காட்டாக, $2.5 என்பது $2 ஆக முழுமையாக்கப்படுகிறது, அதேநேரம் $3.5 என்பது $4 ஆக முழுமையாக்கப்படுகிறது.
விலைப்பட்டியல் அளவிலும் வரிசை-உருப்படி அளவிலும் வரி முழுமையாக்கலுக்கான எடுத்துக்காட்டு
ஒரு வாடிக்கையாளர் 42 வெவ்வேறு உருப்படிகளுக்கான ஆர்டரை வழங்குகிறார், ஒவ்வொன்றின் விலையும் $14.99 மற்றும் இது 18% வரிக்கு உட்பட்டது. ஒவ்வொரு தயாரிப்புக்குமான வரிசை உருப்படி வரியானது விலையை ($14.99) வரி வீதத்தால் (0.18) பெருக்குவதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது, இதன் முடிவு $2.6982 ஆக இருக்கும்.
முன்பு, ஒவ்வொரு வரிசை உருப்படியின் வரியும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, அந்த மொத்தம் முழுமையாக்கப்பட்டது. இந்த நிலையில், சேர்க்கப்பட்ட மொத்தம் $113.3244 ஆக இருந்தது, இது $113.32 என முழுமையாக்கப்பட்டது.
வரிசை-உருப்படி அளவிலான பேங்கர் முறை முழுமையாக்கலின் மூலம், வரித் தொகையான $2.6982 ஆனது $2.70 ஆக முழுமையாக்கப்படுகிறது ($2.6982 என்பது $2.68 ஐ விட $2.70 க்கு நெருக்கமாக இருப்பதால்). வரித் தொகை சரியாக $2.685 ஆக இருந்திருந்தால், அது $2.68 க்கும் $2.69 க்கும் சரியாகப் பாதியில் இருப்பதாலும் 68 என்பது ஒரு இரட்டைப்படை எண் என்பதாலும் அது $2.68 என முழுமையாக்கப்பட்டிருக்கும். முழுமையாக்கப்பட்ட வரிசை-உருப்படி வரியான $2.70 ஐ 42 உருப்படிகளால் பெருக்கும்போது மொத்த வரியாக $113.40 கிடைக்கும்.