Shopify POS-க்கான வரி வீதங்களை அமைத்தல்

உங்கள் POS சாதனத்திற்கு நீங்கள் ஒதுக்கும் கடை இருப்பிடத்தின்படியே Shopify POS செயலி வரிகளைப் பயன்படுத்துகிறது. வரிகளைச் சரியாகக் கணக்கிட, கடை இருப்பிடங்கள் உங்கள் ஷிப்பிங் மண்டலங்களில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

அமெரிக்காவில் விற்பனை செய்யும் ஸ்டோர்கள் Shopify POS செயலி மூலம் தங்களின் நேரடி விற்பனைகளுக்கு Shopify Tax-ஐச் செயல்படுத்தலாம். Shopify Tax-ஐச் செயல்படுத்துவதற்கான கவனிக்க வேண்டியவைகளைப் பரிசீலிக்கவும்.

உங்கள் அமெரிக்க விற்பனை வரியானது Shopify ஆல் நிர்வகிக்கப்பட்டால், விரைவான விற்பனை உட்பட உங்கள் விற்பனைப் புள்ளி ஆர்டர்களுக்கான விற்பனை வரி உங்களுக்காக நிர்வகிக்கப்படாது. உங்கள் நேரடி விற்பனைகளுக்கான விற்பனை வரியைப் பதிவுசெய்தல், வசூலித்தல் மற்றும் செலுத்துதலுக்கு நீங்களே பொறுப்பாவீர்கள். இந்த ஆர்டர்களுக்கான வரியை வசூலிக்க, உங்கள் அமெரிக்க விற்பனை வரியைச் சுயமாக நிர்வகிக்கும்படி அமைக்க வேண்டும், பின்னர் நீங்கள் பதிவுசெய்துள்ள மாகாணங்களில் வரி வசூலிப்பை அமைக்க வேண்டும்.

உங்கள் வரி அமைப்புகள் உள்ளமைக்கப்பட்டதும், Shopify POS கார்ட்டிலிருந்து பரிவர்த்தனையின்போது தனிப்பட்ட ஆர்டர்கள் அல்லது தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் வரிகளை நீங்கள் சரிசெய்யலாம்.

புதிய POS இடத்திற்கான வரி வீதத்தை அமைக்கவும்

உங்கள் POS சாதனத்திற்கு நீங்கள் ஒதுக்கும் கடை இருப்பிடத்தின்படியே Shopify POS செயலி வரிகளைப் பயன்படுத்துகிறது.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. வரிகளைச் சரியாகக் கணக்கிடுவதற்கு வசதியாக உங்கள் ஷிப்பிங் மண்டலங்களில் புதிய இடம் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யவும். நீங்கள் உங்கள் தயாரிப்புகளை எப்போதும் ஷிப்பிங் செய்யாவிட்டாலும் (எடுத்துக்காட்டாக, நீங்கள் Shopify POS-ஐ மட்டுமே இயக்குகிறீர்கள் எனில்) இந்தப் படியைச் செய்ய வேண்டும்.

  2. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வரிகள் மற்றும் சுங்க வரிகள் என்பதற்குச் செல்லவும்.

  3. விற்பனை வரி வசூலிப்பை நிர்வகி என்பதில், உங்கள் POS அமைந்துள்ள நாடு/பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. வரி வீதங்கள் பிரிவில், வரிப் பிராந்தியத்தைக் கிளிக் செய்து வரி வீதத்தை அமைக்கவும், பிறகு சேமி என்பதைக் கிளிக் செய்யவும்:

    • நீங்கள் அமெரிக்காவில் இருந்தால், தானியங்கி வரி அமைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது ஷிப்பிங் வரிகள் உட்பட மாநில, மாவட்ட மற்றும் நகராட்சி வரிகளுக்கான வீதங்களை மேனுவலாகக் குறிப்பிடவும். நீங்கள் Shopify Tax போன்ற வரிச் சேவையையும் செயல்படுத்தலாம். Shopify Tax-ஐச் செயல்படுத்துவதற்கான கவனிக்க வேண்டியவைகளைப் பரிசீலிக்கவும்.
    • நீங்கள் அமெரிக்காவில் இல்லை எனில், இயல்புநிலை மதிப்புகளைப் பயன்படுத்தவும் அல்லது நாடுகள் மற்றும் அவற்றின் பிராந்தியங்களுக்கான வீதங்களை மேனுவலாகக் குறிப்பிடவும். ஷிப்பிங்கிற்கு வரி வசூலிப்பீர்களா என்பதையும் நீங்கள் குறிப்பிட வேண்டும்.
  5. உங்கள் Shopify நிர்வாகியில் ஒரு இடமாக உங்கள் புதிய கடை இருப்பிடத்தைச் சேர்க்கவும்.

  6. புதிய இடத்திற்கு உங்கள் Shopify POS சாதனத்தை ஒதுக்கவும. புதிய இடம் காட்டப்படவில்லை எனில், உங்கள் சாதனத்தில் உள்ள முகப்புப் பொத்தானை அழுத்துவதன் மூலம் செயலியை பின்னணிக்கு மாற்றவும். Shopify POS செயலியை மீண்டும் திறக்கவும், இப்போது உங்கள் புதிய இடம் கிடைக்கும்.

மொபைல்
  1. வரிகளைச் சரியாகக் கணக்கிடுவதற்கு வசதியாக உங்கள் ஷிப்பிங் மண்டலங்களில் புதிய இடம் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யவும். நீங்கள் உங்கள் தயாரிப்புகளை எப்போதும் ஷிப்பிங் செய்யாவிட்டாலும் (எடுத்துக்காட்டாக, நீங்கள் Shopify POS-ஐ மட்டுமே இயக்குகிறீர்கள் எனில்) இந்தப் படியைச் செய்ய வேண்டும்.
  2. Shopify செயலியிலிருந்து, Menu > அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  3. ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், வரிகள் மற்றும் சுங்க வரிகள் என்பதைத் தட்டவும்.
  4. விற்பனை வரி வசூலிப்பை நிர்வகி என்பதில், உங்கள் POS அமைந்துள்ள நாடு/பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. இதில் வரி வீதங்கள் பிரிவில், வரிப் பிராந்தியத்தைத் தட்டி வரி வீதத்தை அமைக்கவும், பிறகு சேமிஎன்பதைத் தட்டவும்:
    • நீங்கள் அமெரிக்காவில் இருந்தால், தானியங்கி வரி அமைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது ஷிப்பிங் வரிகள் உட்பட மாநில, மாவட்ட மற்றும் நகராட்சி வரிகளுக்கான வீதங்களை மேனுவலாகக் குறிப்பிடவும். நீங்கள் Shopify Tax போன்ற வரிச் சேவையையும் செயல்படுத்தலாம். Shopify Tax-ஐச் செயல்படுத்துவதற்கான கவனிக்க வேண்டியவைகளைப் பரிசீலிக்கவும்.
    • நீங்கள் அமெரிக்காவில் இல்லை எனில், இயல்புநிலை மதிப்புகளைப் பயன்படுத்தவும் அல்லது நாடுகள் மற்றும் அவற்றின் பிராந்தியங்களுக்கான வீதங்களை மேனுவலாகக் குறிப்பிடவும். ஷிப்பிங்கிற்கு வரி வசூலிப்பீர்களா என்பதையும் நீங்கள் குறிப்பிட வேண்டும்.
  6. உங்கள் Shopify நிர்வாகியில் ஒரு இடமாக உங்கள் புதிய கடை இருப்பிடத்தைச் சேர்க்கவும்.
  7. புதிய இடத்திற்கு உங்கள் Shopify POS சாதனத்தை ஒதுக்கவும. புதிய இடம் காட்டப்படவில்லை எனில், உங்கள் சாதனத்தில் உள்ள முகப்புப் பொத்தானை அழுத்துவதன் மூலம் செயலியை பின்னணிக்கு மாற்றவும். Shopify POS செயலியை மீண்டும் திறக்கவும், இப்போது உங்கள் புதிய இடம் கிடைக்கும்.

Shopify Tax-ஐச் செயல்படுத்துவதற்கு கவனிக்க வேண்டியவை

Shopify Tax-ஐ நீங்கள் செயல்படுத்துவது இதுவே முதல் முறை எனில், மிகத் துல்லியமான வரி கணக்கீடுகளைப் பெற நீங்கள் சில பகுதிகளைப் புதுப்பிக்க வேண்டியிருக்கும். Shopify Tax-ஐச் செயல்படுத்துவதற்கு முன், பின்வரும் கவனிக்க வேண்டியவைகளைப் பரிசீலிக்கவும்:

  • Shopify Tax ஆனது, தயாரிப்பு வகைகளின் அடிப்படையில் தயாரிப்பு விலக்குகளைத் தானியங்குபடுத்தும் திறனுடன் இணைந்து, விற்பனை வரியை மிக உயர்ந்த அளவிலான துல்லியத்துடன் கணக்கிடுகிறது. நீங்கள் இனி மாகாண அல்லது நகர அளவிலான ஓவர்ரைடுகளை அமைக்க வேண்டியதில்லை.
  • தயாரிப்பு வீத விலக்குகளைத் தானாகப் பயன்படுத்த, Shopify Tax உங்கள் தயாரிப்பு வகைகளைப் பயன்படுத்துகிறது. Shopify Tax ஐச் செயலாக்குவதற்கு முன், உங்கள் தயாரிப்பு வகைகளை மதிப்பாய்வு செய்யவும், ஏனெனில் அவை உங்கள் ஆர்டர்களில் வசூலிக்கப்படும் வீதத்தைப் பாதிக்கத் தொடங்கும்.
  • டிஜிட்டல் பொருட்களாக இல்லாவிட்டால், உங்கள் தயாரிப்புப் பக்கத்திற்குள் உங்கள் தயாரிப்புகளுக்கு பருப்பொருள் சார்ந்த தயாரிப்பு என்ற அமைப்பு செயலாக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். சரக்குகளை ஷிப்பிங் செய்வதைத் தடைசெய்ய இந்த அமைப்பை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் எனில், ஒவ்வொரு தயாரிப்புப் பக்கத்திலும் விற்பனைச் சேனல்களை நிர்வகிக்கவும்.