Shopify Tax மூலம் தானியங்கு தாக்கலை அமைத்தல்

தானியங்கு தாக்கலுக்கான பரிசீலனைகளை மதிப்பாய்வு செய்த பிறகு, உங்கள் அறிக்கைகளை அமைப்பதைத் தொடங்கலாம். வரிகளைத் தானாகவே தாக்கல் செய்யத் தொடங்க, முதலில் உங்கள் கணக்கு விவரங்களை நிறைவுசெய்ய வேண்டும், அதன்பிறகு உங்கள் மாநில வரி அறிக்கைகளை அமைக்க வேண்டும்.

கணக்கு விவரங்களை நிறைவுசெய்தல்

பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்ய, ஒரு பணியாளருக்கு வரிகள் மற்றும் சுங்க வரிகள் அனுமதியும், குறைந்தபட்சம் ஒரு நிதி அனுமதியும் இருக்க வேண்டும்:

  • தானியங்கு தாக்கல் பக்கத்தை அணுகுதல்
  • தாக்கல் தொடர்பான அறிவிப்புகளுக்கான தொடர்பாளராகச் செயல்படுதல்
  • வரி மற்றும் பிற சட்டபூர்வ ஆவணங்களுக்கான சட்டபூர்வ கையொப்பமிடுபவராகச் செயல்படுதல்

விரும்பிய பணியாளரால் இந்தச் செயல்களில் எதையும் செய்ய முடியவில்லை எனில், தேவையான அனுமதிகளை உள்ளடக்கிய பங்கை அவர்களுக்குப் புதுப்பிக்கவும் அல்லது ஒதுக்கவும்.

உங்கள் வரி அறிக்கைகளைத் தாக்கல் செய்ய, நீங்கள் விற்பனை வரியை வசூலிக்கும் ஒவ்வொரு மாநிலத்திற்குமான அமைவை நிறைவுசெய்யவும். உங்கள் அடுத்த தாக்கல் தேதிக்கான முந்தைய மாதத்தின் 20 ஆம் தேதிக்குள் அறிக்கைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் காலாண்டு அல்லது ஆண்டு அறிக்கைகளைத் தாக்கல் செய்ய வேண்டும் எனில், அந்த விற்பனைக் காலத்தின் கடைசி மாதத்தின் 20 ஆம் தேதிதான் அதற்கான கடைசி நாளாகும்.

படிகள்:

  1. தாக்கல் செய்வதற்கான கடைசி நாளுக்கு முன்பாக உங்கள் கணக்கு விவரங்களை நிறைவுசெய்து, உங்கள் வரி அறிக்கைகளை அமைப்பதை உறுதிசெய்யவும். உங்களின் அடுத்த தாக்கல் தேதிக்கான முந்தைய மாதத்தின் 20 ஆம் தேதிக்குள் உங்கள் அமைவு நிறைவடையாது எனில், உங்கள் அறிக்கையை நீங்களே சுயமாகத் தாக்கல் செய்வதைப் பரிசீலிக்கவும்.
  2. Shopify நிர்வாகியிலிருந்து, நிதி > வரித் தாக்கல் என்பதற்குச் செல்லவும்.
  3. செயல்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. உங்கள் கணக்கு விவரங்களை வழங்கவும்:
    1. உங்கள் வணிக விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த, அவற்றை மதிப்பாய்வு செய்யவும். உங்கள் வணிக விவரங்களைப் புதுப்பிக்க வேண்டியிருந்தால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
    2. ஒரு கட்டண முறையைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் வரி அறிக்கைகளுடன் தொடர்புடைய பேமெண்ட்டுகள் அல்லது பணத்தைத் திரும்பப்பெறுதல் ஆகியவற்றுக்காகப் பொருத்தமான மாநில வரி அதிகாரிகளுடன் இந்தக் கணக்கு பகிரப்படும். ஏற்கெனவே உள்ள ஏதேனும் Shopify Payments அல்லது Shopify Balance கணக்குத் தகவலிலிருந்து கிடைக்கும் கணக்குகளின் பட்டியல் பெறப்படும்.
    3. ஒரு தொடர்பாளரைத் தேர்ந்தெடுக்கவும். மதிப்பாய்வுக் காலங்கள் அல்லது சரியான நேரத்தில் தாக்கல் செய்யத் தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்கள் குறித்த அறிவிப்புகள் போன்ற தாக்கல் தொடர்பான ஏதேனும் அறிவிப்புகளைப் பெறும் பணியாளரே தொடர்பாளர் ஆவார். கிடைக்கக்கூடிய தொடர்பாளர்களின் பட்டியல், உங்கள் ஸ்டோரில் உள்ள பணியாளர் கணக்குகளிலிருந்து பெறப்படும்.
    4. சட்டபூர்வமாக கையொப்பமிடுபவரைத் தேர்ந்தெடுக்கவும். வரி மற்றும் பிற சட்டபூர்வ ஆவணங்களில் கையொப்பமிடுவதற்குப் பொறுப்பான பணியாளரே சட்டபூர்வமாக கையொப்பமிடுபவர் ஆவார். உங்கள் ஸ்டோரில் உள்ள பணியாளர் கணக்குகளில் இருந்து கிடைக்கும் தொடர்பாளர்களின் பட்டியல் பெறப்படும்.
  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. தானியங்கு தாக்கலைப் பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைக் கவனமாக மதிப்பாய்வு செய்து, ஏற்கிறேன் என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் கட்டண முறையாக நீங்கள் உள்ளிடும் கணக்குத் தகவலானது, தாக்கல் செய்யும் நேரத்தில் மாநில வரி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும், மேலும் இந்தக் கணக்கிலிருந்தே வரி செலுத்தும் தொகை கழிக்கப்படும். உங்கள் வரிகள் தாக்கல் செய்யப்படும் மாதத்தின் 8 ஆம் தேதிக்கும் குறிப்பிட்ட மாநிலத்திற்கான கடைசி நாளுக்கும் இடையில் பேமெண்ட்டுகள் செய்யப்படும்.

தானியங்கு தாக்கலை அமைத்த பிறகு, நீங்கள் வரி செலுத்தும் மாநிலங்களுக்கான வரி அறிக்கைகளை அமைக்கலாம்.

வரி அறிக்கைகளை அமைத்தல்

பெரும்பாலான மாகாண வரிக் கணக்குத் தாக்கல்கள் நிலையான சில படிகளைப் பயன்படுத்தி அமைக்கப்படுகின்றன. பின்வரும் மாகாணங்களுக்கு வரிக் கணக்குத் தாக்கல் அமைவை மேற்கொள்ள வேண்டியிருந்தால், அந்தந்த மாகாணங்களுக்கு உரிய படிகளைப் பின்பற்றவும்:

உங்கள் வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்ய, நீங்கள் விற்பனை வரியை வசூலிக்கும் ஒவ்வொரு மாகாணத்திற்கும் உரிய அமைவை நிறைவுசெய்ய வேண்டும். மேலும் தானியங்கு தாக்கல் முறைக்கான இருபடிச் சரிபார்ப்பை அமைக்கவும் வேண்டும். உங்கள் அடுத்தத் தாக்கலுக்கான இறுதி நாளுக்கு முந்தைய மாதத்தின் 20 ஆம் தேதிக்குள் வரிக் கணக்குத் தாக்கல்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். காலாண்டு அல்லது வருடாந்திரக் கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டியிருந்தால், அந்த விற்பனைக் காலத்தின் கடைசி மாதத்தின் 20 ஆம் தேதி இறுதி நாளாகக் கருதப்படும்.

நிலையான வரிக் கணக்குத் தாக்கலை அமைத்தல்

  1. தாக்கல் செய்வதற்கான இறுதி நாளுக்கு முன்னதாக உங்கள் அமைவு நிறைவடைந்துள்ளதை உறுதிசெய்யவும். உங்கள் அடுத்தத் தாக்கலுக்கான இறுதி நாளுக்கு முந்தைய மாதத்தின் 20 ஆம் தேதிக்குள் அமைவை நிறைவுசெய்ய முடியவில்லை எனில், நீங்களே நேரடியாக வரிக் கணக்கைத் தாக்கல் செய்து கொள்ளவும்.
  2. Shopify நிர்வாகியிலிருந்து, நிதி > வரித் தாக்கல் என்பதற்குச் செல்லவும்.
  3. வரிக் கணக்குத் தாக்கல்களை அமை என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஒரு மாகாணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. படிவங்கள் பிரிவில், அமை என்பதைக் கிளிக் செய்து படிவ விவரங்களைச் சேர்த்த பிறகு தாக்கல் செய்யும் நிகழ்வெண்ணைத் தேர்ந்தெடுக்கவும். பல படிவங்கள் காட்டப்பட்டு, உங்கள் வரிக் கணக்குத் தாக்கலுக்கு எந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று உறுதியாகத் தெரியவில்லை எனில், வரி நிபுணர் ஒருவரையோ மாகாண வரி ஆணையத்தையோ தொடர்புகொள்ளவும். மாகாண வாரியான வரிப் படிவங்களின் பட்டியலுக்கு, மாகாண வரிப் படிவங்கள் மற்றும் IDகள் என்பதைப் பார்க்கவும்.
  6. ஒன்றுக்கு மேற்பட்ட படிவங்கள் இருந்தால், படிவங்களைச் சேர் என்பதைக் கிளிக் செய்து ஒவ்வொரு படிவத்திற்கும் தாக்கல் செய்யும் நிகழ்வெண்ணைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. விற்பனை வரி ID பிரிவில், உங்கள் மாகாண விற்பனை வரி ID ஐ உள்ளிடவும். அந்த ID-ஐ ஒவ்வொரு மாகாணமும் எப்படிக் குறிப்பிடுகிறது என்பது குறித்த விவரங்களுக்கு, மாகாண வரிப் படிவங்கள் மற்றும் IDகள் என்பதைப் பார்க்கவும்.
  8. உள்நுழைவுச் சான்றுகள் பிரிவில், மாகாண வரி ஆணையத்திலுள்ள உங்கள் கணக்கை அணுகப் பயன்படுத்தும் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  9. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

வரிக் கணக்குத் தாக்கலை அமைத்த பிறகு, உங்கள் கணக்கில் Shopify-க்குப் பாதுகாப்பான அணுகலை வழங்க, உங்கள் மாகாணத் தாக்கல் போர்ட்டலில் இருபடிச் சரிபார்ப்பை அமைக்க வேண்டும்.

தானியங்கு தாக்கல் முறைக்கான இருபடிச் சரிபார்ப்பை அமைத்தல்

படிகள்:

  1. Shopify நிர்வாகியில் உங்கள் மாகாண வரிக் கணக்குத் தாக்கல் தொடர்பான பக்கத்திற்குச் சென்று, இருபடிச் சரிபார்ப்பு பிரிவில் உள்ள மின்னஞ்சல் முகவரியை நகலெடுக்கவும்.
  2. மாகாணத்தின் வரி இணையதளத்தில் உள்நுழையவும்.
  3. Manage my profile (எனது சுயவிவரத்தை நிர்வகி) என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. Profile (சுயவிவரம்) என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. Security (பாதுகாப்பு) பிரிவில், Change Two-Step Setting (இருபடி அமைப்பை மாற்று) என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. Email (மின்னஞ்சல்) பிரிவில், Add Email (மின்னஞ்சலைச் சேர்) என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. Shopify நிர்வாகியில் வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை, மின்னஞ்சல் புலத்தில் ஒட்டவும்.
  8. Save (சேமி) என்பதைக் கிளிக் செய்யவும். இதனால் ஒரு பாதுகாப்புக் குறியீடு உருவாக்கப்படும். உங்கள் வரிக் கணக்குத் தாக்கலுக்குக் கட்டளைத் தொடர்பு நபராக இருப்பவர் மட்டுமே இந்தக் குறியீட்டை மின்னஞ்சல் மூலம் பெறுவார். கடையின் உரிமையாளரோ பிற பணியாளர்களோ இதைப் பெற முடியாது. நீங்கள் தொடர்பு நபராக இல்லை எனில், அந்த நபரிடமிருந்து பாதுகாப்புக் குறியீட்டைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளவும்.
  9. இந்தக் குறியீட்டை நகலெடுத்து, Verify Security Code (பாதுகாப்புக் குறியீட்டைச் சரிபார்) புலத்தில் ஒட்டவும்.
  10. Confirm (உறுதிசெய்) என்பதைக் கிளிக் செய்யவும்.

விற்பனை மற்றும் பயன்பாட்டு வரிச் சுயவிவரத்தை அமைத்தல்

உங்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டு வரி (Sales and Use Tax - SUT) சுயவிவரம் செயலில் இருப்பதையும் உங்கள் மாகாணப் போர்ட்டலுடன் அது சரியாக இணைக்கப்பட்டுள்ளதையும் உறுதிசெய்யவும்.

பொதுவான சிக்கல்களில் பின்வருவனவும் அடங்கலாம்:

மூடப்பட்ட கணக்கு: உங்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டு வரிக் கணக்கை மீண்டும் செயல்படுத்தவும் அல்லது புதுப்பிக்கவும். இணைக்கப்படாத கணக்கு: உங்களிடம் ஏற்கெனவே உள்ள விற்பனை மற்றும் பயன்பாட்டு வரிச் சுயவிவரத்தை உங்கள் கணக்குடன் இணைக்கவும். சில்லறை விற்பனை டெலிவரிக் கட்டணக் கணக்கு இல்லை (Colorado): தேவைப்பட்டால், Colorado-வுக்கு உங்களின் சில்லறை விற்பனை டெலிவரிக் கட்டண (RDF) சுயவிவரத்தை அமைக்கவும்.

இந்தச் சிக்கலைத் தீர்ப்பதில் சிரமம் ஏற்பட்டால், உதவிக்கு அந்தந்த மாகாணத்தைத் தொடர்புகொள்ளவும்.

ஒரு மாகாணத்தை அமைத்த பிறகு, நீங்கள் விற்பனை வரியை வசூலிக்கும் கூடுதல் மாகாணங்களை அமைப்பதற்கு, தேவைக்கேற்ப இதே முறையை மீண்டும் பின்பற்றலாம்.

California வரிக் கணக்குத் தாக்கலை அமைத்தல்

  1. தாக்கல் செய்வதற்கான இறுதி நாளுக்கு முன்னதாக உங்கள் அமைவு நிறைவடைந்துள்ளதை உறுதிசெய்யவும். உங்கள் அடுத்தத் தாக்கலுக்கான இறுதி நாளுக்கு முந்தைய மாதத்தின் 20 ஆம் தேதிக்குள் அமைவை நிறைவுசெய்ய முடியவில்லை எனில், நீங்களே நேரடியாக வரிக் கணக்கைத் தாக்கல் செய்து கொள்ளவும்.
  2. Shopify நிர்வாகியிலிருந்து, நிதி > வரித் தாக்கல் என்பதற்குச் செல்லவும்.
  3. வரிக் கணக்குத் தாக்கல்களை அமை என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஒரு மாகாணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. படிவங்கள் பிரிவில், அமை என்பதைக் கிளிக் செய்து படிவ விவரங்களைச் சேர்த்த பிறகு தாக்கல் செய்யும் நிகழ்வெண்ணைத் தேர்ந்தெடுக்கவும். பல படிவங்கள் காட்டப்பட்டு, உங்கள் வரிக் கணக்குத் தாக்கலுக்கு எந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று உறுதியாகத் தெரியவில்லை எனில், வரி நிபுணர் ஒருவரையோ மாகாண வரி ஆணையத்தையோ தொடர்புகொள்ளவும். மாகாண வாரியான வரிப் படிவங்களின் பட்டியலுக்கு, மாகாண வரிப் படிவங்கள் மற்றும் IDகள் என்பதைப் பார்க்கவும்.
  6. ஒன்றுக்கு மேற்பட்ட படிவங்கள் இருந்தால், படிவங்களைச் சேர் என்பதைக் கிளிக் செய்து ஒவ்வொரு படிவத்திற்கும் தாக்கல் செய்யும் நிகழ்வெண்ணைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. விற்பனை வரி ID பிரிவில், உங்கள் மாகாண விற்பனை வரி ID ஐ உள்ளிடவும். அந்த ID-ஐ ஒவ்வொரு மாகாணமும் எப்படிக் குறிப்பிடுகிறது என்பது குறித்த விவரங்களுக்கு, மாகாண வரிப் படிவங்கள் மற்றும் IDகள் என்பதைப் பார்க்கவும்.
  8. உள்நுழைவுச் சான்றுகள் பிரிவில், மாகாண வரி ஆணையத்திலுள்ள உங்கள் கணக்கை அணுகப் பயன்படுத்தும் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  9. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

வரிக் கணக்குத் தாக்கலை அமைத்த பிறகு, உங்கள் கணக்கில் Shopify-க்குப் பாதுகாப்பான அணுகலை வழங்க, California-இன் தாக்கல் போர்ட்டலில் இருபடிச் சரிபார்ப்பை அமைக்க வேண்டும்.

California-இல் தானியங்கு தாக்கல் முறைக்கான இருபடிச் சரிபார்ப்பை அமைத்தல்

  1. Shopify நிர்வாகியில் உங்கள் மாகாண வரிக் கணக்குத் தாக்கல் தொடர்பான பக்கத்திற்குச் சென்று, இருபடிச் சரிபார்ப்பு பிரிவில் உள்ள மின்னஞ்சல் முகவரியை நகலெடுக்கவும்.
  2. California DOR இணையதளத்திற்குச் சென்று உங்கள் கணக்கில் உள்நுழையவும்.
  3. Settings (அமைப்புகள்) ஐகானைக் கிளிக் செய்யவும்.
  4. Logon (உள்நுழைவு) பிரிவில், Edit (திருத்து) என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. Authentication (அங்கீகரிப்பு) பிரிவிலுள்ள Authentication type (அங்கீகரிப்பு வகை) கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, Send text or email (உரை அல்லது மின்னஞ்சலை அனுப்பு) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. Shopify நிர்வாகியில் நகலெடுத்த மின்னஞ்சல் முகவரியை Email (மின்னஞ்சல்) புலத்தில் உள்ளிடவும்.
  7. Country (நாடு), Wireless Carrier (வயர்லெஸ் கேரியர்) மற்றும் Wireless Phone (வயர்லெஸ் ஃபோன்) புலங்களில் உங்களின் தொடர்பு விவரங்களைச் சேர்க்கவும்.
  8. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒரு மாகாணத்தை அமைத்த பிறகு, நீங்கள் விற்பனை வரியை வசூலிக்கும் கூடுதல் மாகாணங்களை அமைப்பதற்கு, தேவைக்கேற்ப இதே முறையை மீண்டும் பின்பற்றலாம்.

Colorado வரிக் கணக்குத் தாக்கலை அமைத்தல்

  1. தாக்கல் செய்வதற்கான இறுதி நாளுக்கு முன்னதாக உங்கள் அமைவு நிறைவடைந்துள்ளதை உறுதிசெய்யவும். உங்கள் அடுத்தத் தாக்கலுக்கான இறுதி நாளுக்கு முந்தைய மாதத்தின் 20 ஆம் தேதிக்குள் அமைவை நிறைவுசெய்ய முடியவில்லை எனில், நீங்களே நேரடியாக வரிக் கணக்கைத் தாக்கல் செய்து கொள்ளவும்.
  2. Shopify நிர்வாகியிலிருந்து, நிதி > வரித் தாக்கல் என்பதற்குச் செல்லவும்.
  3. வரிக் கணக்குத் தாக்கல்களை அமை என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஒரு மாகாணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. படிவங்கள் பிரிவில், அமை என்பதைக் கிளிக் செய்து படிவ விவரங்களைச் சேர்த்த பிறகு தாக்கல் செய்யும் நிகழ்வெண்ணைத் தேர்ந்தெடுக்கவும். பல படிவங்கள் காட்டப்பட்டு, உங்கள் வரிக் கணக்குத் தாக்கலுக்கு எந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று உறுதியாகத் தெரியவில்லை எனில், வரி நிபுணர் ஒருவரையோ மாகாண வரி ஆணையத்தையோ தொடர்புகொள்ளவும். மாகாண வாரியான வரிப் படிவங்களின் பட்டியலுக்கு, மாகாண வரிப் படிவங்கள் மற்றும் IDகள் என்பதைப் பார்க்கவும்.
  6. ஒன்றுக்கு மேற்பட்ட படிவங்கள் இருந்தால், படிவங்களைச் சேர் என்பதைக் கிளிக் செய்து ஒவ்வொரு படிவத்திற்கும் தாக்கல் செய்யும் நிகழ்வெண்ணைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. விற்பனை வரி ID பிரிவில், உங்கள் மாகாண விற்பனை வரி ID ஐ உள்ளிடவும். அந்த ID-ஐ ஒவ்வொரு மாகாணமும் எப்படிக் குறிப்பிடுகிறது என்பது குறித்த விவரங்களுக்கு, மாகாண வரிப் படிவங்கள் மற்றும் IDகள் என்பதைப் பார்க்கவும்.
  8. உள்நுழைவுச் சான்றுகள் பிரிவில், மாகாண வரி ஆணையத்திலுள்ள உங்கள் கணக்கை அணுகப் பயன்படுத்தும் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  9. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

வரிக் கணக்குத் தாக்கலை அமைத்த பிறகு, உங்கள் கணக்கில் Shopify-க்குப் பாதுகாப்பான அணுகலை வழங்க, Colorado-இன் தாக்கல் போர்ட்டலில் இருபடிச் சரிபார்ப்பை அமைக்க வேண்டும்.

Colorado-இல் தானியங்கு தாக்கல் முறைக்கான இருபடிச் சரிபார்ப்பை அமைத்தல்

  1. உங்கள் கணக்கை அணுக Shopify Tax-க்கு அங்கீகாரம் வழங்குதல்:
    1. Shopify நிர்வாகியில் உங்கள் மாகாண வரிக் கணக்குத் தாக்கல் தொடர்பான பக்கத்திற்குச் சென்று, இருபடிச் சரிபார்ப்பு பிரிவில் உள்ள மின்னஞ்சல் முகவரியை நகலெடுக்கவும்.
    2. Colorado DOR இணையதளத்திற்குச் சென்று உங்கள் கணக்கில் உள்நுழையவும்.
    3. Manage My Profile (எனது சுயவிவரத்தை நிர்வகி) என்பதைக் கிளிக் செய்யவும்.
    4. Security (பாதுகாப்பு) பிரிவில், Change Two-Step Settings (இருபடி அமைப்புகளை மாற்று) என்பதைக் கிளிக் செய்யவும்.
    5. Email (மின்னஞ்சல்) பிரிவில், Add Email (மின்னஞ்சலைச் சேர்) என்பதைக் கிளிக் செய்யவும்.
    6. Shopify நிர்வாகியில் உள்ள மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு, Save (சேமி) என்பதைக் கிளிக் செய்யவும்.
    7. தொடர்பு நபருக்கான மின்னஞ்சல் முகவரிக்குப் பாதுகாப்புக் குறியீட்டைக் கொண்ட ஒரு மின்னஞ்சல் வரும். அந்தப் பாதுகாப்புக் குறியீட்டை நகலெடுக்கவும்.
    8. Colorado DOR இணையதளத்தில் உள்ள Verify Security Code (பாதுகாப்புக் குறியீட்டைச் சரிபார்) புலத்தில் பாதுகாப்புக் குறியீட்டை உள்ளிடவும்.
    9. Confirm (உறுதிசெய்) என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. விற்பனை வரி வசூலிக்கும் இடங்களை அமைத்தல்:
    1. Colorado DOR இணையதளத்திற்குச் சென்று உங்கள் கணக்கில் உள்நுழையவும்.
    2. Add or close sales tax locations (விற்பனை வரி வசூலிக்கும் இடங்களைச் சேர் அல்லது மூடு) என்பதைக் கிளிக் செய்யவும்.
    3. Add non-physical locations (பருநிலை அல்லாத இடங்களைச் சேர்) என்பதைக் கிளிக் செய்யவும்.
    4. Select all (அனைத்தையும் தேர்ந்தெடு) என்பதைக் கிளிக் செய்யவும்.
    5. Submit (சமர்ப்பி) என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. Colorado DOR தளத்திலிருந்து TXT கோப்பைப் பதிவேற்றவும்.
    1. Colorado DOR இணையதளத்திலிருந்து, Sales and Use Tax என்பதற்குச் செல்லவும்
    2. Find Sales and Use Tax rates என்பதைக் கிளிக் செய்யவும்.
    3. View Business Location rates என்பதைக் கிளிக் செய்யவும்.
    4. இடங்களின் முழுப் பட்டியலைக் காண, உங்கள் Colorado கணக்கு எண்ணை உள்ளிடவும்.
    5. உங்கள் கணினியில் .txt கோப்பைப் பதிவிறக்க, Export என்பதைக் கிளிக் செய்யவும்.
    6. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வரித் தாக்கல் (Tax Filing) பிரிவுக்குச் சென்று, உங்கள் Colorado மாநில அமைவைக் கண்டறியவும்.
    7. கோப்பைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் பதிவிறக்கிய .txt கோப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒரு மாகாணத்தை அமைத்த பிறகு, நீங்கள் விற்பனை வரியை வசூலிக்கும் கூடுதல் மாகாணங்களை அமைப்பதற்கு, தேவைக்கேற்ப இதே முறையை மீண்டும் பின்பற்றலாம்.

Maryland வரி ரிட்டர்னை அமைக்கவும்

  1. தாக்கல் செய்வதற்கான இறுதி நாளுக்கு முன்னதாக உங்கள் அமைவு நிறைவடைந்துள்ளதை உறுதிசெய்யவும். உங்கள் அடுத்தத் தாக்கலுக்கான இறுதி நாளுக்கு முந்தைய மாதத்தின் 20 ஆம் தேதிக்குள் அமைவை நிறைவுசெய்ய முடியவில்லை எனில், நீங்களே நேரடியாக வரிக் கணக்கைத் தாக்கல் செய்து கொள்ளவும்.
  2. Shopify நிர்வாகியிலிருந்து, நிதி > வரித் தாக்கல் என்பதற்குச் செல்லவும்.
  3. வரிக் கணக்குத் தாக்கல்களை அமை என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஒரு மாகாணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. படிவங்கள் பிரிவில், அமை என்பதைக் கிளிக் செய்து படிவ விவரங்களைச் சேர்த்த பிறகு தாக்கல் செய்யும் நிகழ்வெண்ணைத் தேர்ந்தெடுக்கவும். பல படிவங்கள் காட்டப்பட்டு, உங்கள் வரிக் கணக்குத் தாக்கலுக்கு எந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று உறுதியாகத் தெரியவில்லை எனில், வரி நிபுணர் ஒருவரையோ மாகாண வரி ஆணையத்தையோ தொடர்புகொள்ளவும். மாகாண வாரியான வரிப் படிவங்களின் பட்டியலுக்கு, மாகாண வரிப் படிவங்கள் மற்றும் IDகள் என்பதைப் பார்க்கவும்.
  6. ஒன்றுக்கு மேற்பட்ட படிவங்கள் இருந்தால், படிவங்களைச் சேர் என்பதைக் கிளிக் செய்து ஒவ்வொரு படிவத்திற்கும் தாக்கல் செய்யும் நிகழ்வெண்ணைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. விற்பனை வரி ID பிரிவில், உங்கள் மாகாண விற்பனை வரி ID ஐ உள்ளிடவும். அந்த ID-ஐ ஒவ்வொரு மாகாணமும் எப்படிக் குறிப்பிடுகிறது என்பது குறித்த விவரங்களுக்கு, மாகாண வரிப் படிவங்கள் மற்றும் IDகள் என்பதைப் பார்க்கவும்.
  8. உள்நுழைவுச் சான்றுகள் பிரிவில், மாகாண வரி ஆணையத்திலுள்ள உங்கள் கணக்கை அணுகப் பயன்படுத்தும் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  9. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் வரி ரிட்டர்னை அமைத்த பிறகு, உங்கள் கணக்கிற்கான பாதுகாப்பான அணுகலை Shopify-க்கு வழங்க, Maryland-இன் தாக்கல் செய்யும் போர்ட்டலில் இரு-படிச் சரிபார்ப்பை அமைக்க வேண்டும்.

Maryland-இல் தானியங்கு தாக்கலுக்கான இரு-படிச் சரிபார்ப்பை அமைக்கவும்

  1. Shopify நிர்வாகியில் உங்கள் மாகாண வரிக் கணக்குத் தாக்கல் தொடர்பான பக்கத்திற்குச் சென்று, இருபடிச் சரிபார்ப்பு பிரிவில் உள்ள மின்னஞ்சல் முகவரியை நகலெடுக்கவும்.
  2. Maryland DOR இணையதளத்திற்குச் சென்று உங்கள் கணக்கில் உள்நுழையவும்.
  3. வழிசெலுத்தல் பட்டியில், Profile information என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. User Profile என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. Contact Information பிரிவில், Daytime Phone, Extension மற்றும் Mobile Phone புலங்களில் உங்கள் தொடர்புத் தகவலைச் சேர்க்கவும்.
  6. Email மற்றும் Confirm email புலங்களில், Shopify நிர்வாகியிலிருந்து நீங்கள் நகலெடுத்த மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.
  7. Save Profile என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒரு மாகாணத்தை அமைத்த பிறகு, நீங்கள் விற்பனை வரியை வசூலிக்கும் கூடுதல் மாகாணங்களை அமைப்பதற்கு, தேவைக்கேற்ப இதே முறையை மீண்டும் பின்பற்றலாம்.

New York வரி ரிட்டர்னை அமைக்கவும்

  1. தாக்கல் செய்வதற்கான இறுதி நாளுக்கு முன்னதாக உங்கள் அமைவு நிறைவடைந்துள்ளதை உறுதிசெய்யவும். உங்கள் அடுத்தத் தாக்கலுக்கான இறுதி நாளுக்கு முந்தைய மாதத்தின் 20 ஆம் தேதிக்குள் அமைவை நிறைவுசெய்ய முடியவில்லை எனில், நீங்களே நேரடியாக வரிக் கணக்கைத் தாக்கல் செய்து கொள்ளவும்.
  2. Shopify நிர்வாகியிலிருந்து, நிதி > வரித் தாக்கல் என்பதற்குச் செல்லவும்.
  3. வரிக் கணக்குத் தாக்கல்களை அமை என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஒரு மாகாணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. படிவங்கள் பிரிவில், அமை என்பதைக் கிளிக் செய்து படிவ விவரங்களைச் சேர்த்த பிறகு தாக்கல் செய்யும் நிகழ்வெண்ணைத் தேர்ந்தெடுக்கவும். பல படிவங்கள் காட்டப்பட்டு, உங்கள் வரிக் கணக்குத் தாக்கலுக்கு எந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று உறுதியாகத் தெரியவில்லை எனில், வரி நிபுணர் ஒருவரையோ மாகாண வரி ஆணையத்தையோ தொடர்புகொள்ளவும். மாகாண வாரியான வரிப் படிவங்களின் பட்டியலுக்கு, மாகாண வரிப் படிவங்கள் மற்றும் IDகள் என்பதைப் பார்க்கவும்.
  6. ஒன்றுக்கு மேற்பட்ட படிவங்கள் இருந்தால், படிவங்களைச் சேர் என்பதைக் கிளிக் செய்து ஒவ்வொரு படிவத்திற்கும் தாக்கல் செய்யும் நிகழ்வெண்ணைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. விற்பனை வரி ID பிரிவில், உங்கள் மாகாண விற்பனை வரி ID ஐ உள்ளிடவும். அந்த ID-ஐ ஒவ்வொரு மாகாணமும் எப்படிக் குறிப்பிடுகிறது என்பது குறித்த விவரங்களுக்கு, மாகாண வரிப் படிவங்கள் மற்றும் IDகள் என்பதைப் பார்க்கவும்.
  8. உள்நுழைவுச் சான்றுகள் (Login credentials) பிரிவில், Shopify-க்காக உருவாக்கப்பட்ட இரண்டாம் நிலை பயனரின் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். மாநில வரி அதிகாரிகளிடம் உங்கள் சார்பாகத் தாக்கல் செய்ய, இது Shopify-ஐ அனுமதிக்கிறது.
  9. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் வரி ரிட்டர்னை அமைத்த பிறகு, உங்கள் கணக்கிற்கான பாதுகாப்பான அணுகலை Shopify-க்கு வழங்க, New York-இன் தாக்கல் செய்யும் போர்ட்டலில் இரு-படிச் சரிபார்ப்பை அமைக்க வேண்டும்.

New York-இல் தானியங்கு தாக்கலுக்கான இரண்டாம் நிலை பயனரை அமைக்கவும்

  1. உங்கள் கணக்கை அணுக Shopify Tax-க்கு அங்கீகாரம் வழங்குதல்:
    1. Shopify நிர்வாகியில் உங்கள் மாகாண வரிக் கணக்குத் தாக்கல் தொடர்பான பக்கத்திற்குச் சென்று, இருபடிச் சரிபார்ப்பு பிரிவில் உள்ள மின்னஞ்சல் முகவரியை நகலெடுக்கவும்.
    2. New York DOR இணையதளத்திற்குச் சென்று உங்கள் கணக்கில் உள்நுழையவும்.
    3. Services என்பதைக் கிளிக் செய்யவும்.
    4. Business பிரிவில், User Summary என்பதைக் கிளிக் செய்யவும்.
    5. Add user என்பதைக் கிளிக் செய்யவும்.
    6. Shopify நிர்வாகியிலிருந்து நீங்கள் நகலெடுத்த மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி, User information பிரிவை நிரப்பவும்.
    7. Login information பிரிவில், ஒரு பயனர்பெயரையும் தற்காலிகக் கடவுச்சொல்லையும் உருவாக்கவும். அடுத்தடுத்த படிகளில் பயன்படுத்துவதற்காக, இந்தக் கடவுச்சொல்லைச் சேமிப்பதை உறுதிசெய்யவும்.
    8. Yes என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் பயனர் அனுமதிகளுக்கு அங்கீகாரமளிக்கவும்.
    9. Yes என்பதைக் கிளிக் செய்து, Sales Tax File & Pay என்பதற்கு அடுத்துள்ள தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.
    10. Save & Continue என்பதைக் கிளிக் செய்யவும்.
    11. முதல் பெட்டியில் Not manage users என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    12. இரண்டாவது பெட்டியில் Manage tax professionals' access to tax information for your business but not delegate this right to other Users என்பதைத் தேர்ந்தெடுத்து, Save & Continue என்பதைக் கிளிக் செய்யவும்.
    13. ஒரு பயனர் வெற்றிகரமாகச் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதை உறுதிசெய்து, உங்கள் பயனர்பெயரைக் கிளிக் செய்து வெளியேறவும்.
  2. புதிய பயனருக்கான நிரந்தரச் சான்றுகளை உருவாக்கிப் பகிரவும்:
    1. புதிய பயனர்பெயர் மற்றும் தற்காலிகக் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, New York DOR இணையதளத்திற்குச் சென்று நீங்கள் புதிதாக உருவாக்கிய இரண்டாம் நிலை பயனர் கணக்கில் உள்நுழையவும்.
    2. மூன்று பாதுகாப்பு வினாக்களை உருவாக்கி, Save & Continue என்பதைக் கிளிக் செய்யவும்.
    3. ஒரு புதிய நிரந்தரக் கடவுச்சொல்லை உருவாக்கவும்.
    4. புதிய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை நகலெடுக்கவும்.
    5. Shopify நிர்வாகியில், தானியங்கு தாக்கலுக்கான New York ரிட்டர்ன் அமைவுப் பக்கத்தில் புதிய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.

ஒரு மாகாணத்தை அமைத்த பிறகு, நீங்கள் விற்பனை வரியை வசூலிக்கும் கூடுதல் மாகாணங்களை அமைப்பதற்கு, தேவைக்கேற்ப இதே முறையை மீண்டும் பின்பற்றலாம்.

Rhode Island வரி ரிட்டர்னை அமைக்கவும்

  1. தாக்கல் செய்வதற்கான இறுதி நாளுக்கு முன்னதாக உங்கள் அமைவு நிறைவடைந்துள்ளதை உறுதிசெய்யவும். உங்கள் அடுத்தத் தாக்கலுக்கான இறுதி நாளுக்கு முந்தைய மாதத்தின் 20 ஆம் தேதிக்குள் அமைவை நிறைவுசெய்ய முடியவில்லை எனில், நீங்களே நேரடியாக வரிக் கணக்கைத் தாக்கல் செய்து கொள்ளவும்.
  2. Shopify நிர்வாகியிலிருந்து, நிதி > வரித் தாக்கல் என்பதற்குச் செல்லவும்.
  3. வரிக் கணக்குத் தாக்கல்களை அமை என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஒரு மாகாணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. படிவங்கள் பிரிவில், அமை என்பதைக் கிளிக் செய்து படிவ விவரங்களைச் சேர்த்த பிறகு தாக்கல் செய்யும் நிகழ்வெண்ணைத் தேர்ந்தெடுக்கவும். பல படிவங்கள் காட்டப்பட்டு, உங்கள் வரிக் கணக்குத் தாக்கலுக்கு எந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று உறுதியாகத் தெரியவில்லை எனில், வரி நிபுணர் ஒருவரையோ மாகாண வரி ஆணையத்தையோ தொடர்புகொள்ளவும். மாகாண வாரியான வரிப் படிவங்களின் பட்டியலுக்கு, மாகாண வரிப் படிவங்கள் மற்றும் IDகள் என்பதைப் பார்க்கவும்.
  6. ஒன்றுக்கு மேற்பட்ட படிவங்கள் இருந்தால், படிவங்களைச் சேர் என்பதைக் கிளிக் செய்து ஒவ்வொரு படிவத்திற்கும் தாக்கல் செய்யும் நிகழ்வெண்ணைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. விற்பனை வரி ID பிரிவில், உங்கள் மாகாண விற்பனை வரி ID ஐ உள்ளிடவும். அந்த ID-ஐ ஒவ்வொரு மாகாணமும் எப்படிக் குறிப்பிடுகிறது என்பது குறித்த விவரங்களுக்கு, மாகாண வரிப் படிவங்கள் மற்றும் IDகள் என்பதைப் பார்க்கவும்.
  8. உள்நுழைவுச் சான்றுகள் பிரிவில், மாகாண வரி ஆணையத்திலுள்ள உங்கள் கணக்கை அணுகப் பயன்படுத்தும் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  9. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் வரி ரிட்டர்னை அமைத்த பிறகு, உங்கள் கணக்கிற்கான பாதுகாப்பான அணுகலை Shopify-க்கு வழங்க, Rhode Island-இன் தாக்கல் செய்யும் போர்ட்டலில் இரு-படிச் சரிபார்ப்பை அமைக்க வேண்டும்.

Rhode Island-இல் தானியங்கு தாக்கலுக்கான இரு-படிச் சரிபார்ப்பை அமைக்கவும்

  1. Shopify நிர்வாகியில் உங்கள் மாகாண வரிக் கணக்குத் தாக்கல் தொடர்பான பக்கத்திற்குச் சென்று, இருபடிச் சரிபார்ப்பு பிரிவில் உள்ள மின்னஞ்சல் முகவரியை நகலெடுக்கவும்.
  2. Rhode Island DOR இணையதளத்திற்குச் சென்று உங்கள் கணக்கில் உள்நுழையவும்.
  3. வழிசெலுத்தல் பட்டியில், Profile information என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. User Profile என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. Contact Information பிரிவில், Daytime Phone, Extension மற்றும் Mobile Phone புலங்களில் உங்கள் தொடர்புத் தகவலைச் சேர்க்கவும்.
  6. Email மற்றும் Confirm email புலங்களில், Shopify நிர்வாகியிலிருந்து நீங்கள் நகலெடுத்த மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.
  7. Save Profile என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒரு மாகாணத்தை அமைத்த பிறகு, நீங்கள் விற்பனை வரியை வசூலிக்கும் கூடுதல் மாகாணங்களை அமைப்பதற்கு, தேவைக்கேற்ப இதே முறையை மீண்டும் பின்பற்றலாம்.

Tennessee வரி ரிட்டர்னை அமைக்கவும்

  1. தாக்கல் செய்வதற்கான இறுதி நாளுக்கு முன்னதாக உங்கள் அமைவு நிறைவடைந்துள்ளதை உறுதிசெய்யவும். உங்கள் அடுத்தத் தாக்கலுக்கான இறுதி நாளுக்கு முந்தைய மாதத்தின் 20 ஆம் தேதிக்குள் அமைவை நிறைவுசெய்ய முடியவில்லை எனில், நீங்களே நேரடியாக வரிக் கணக்கைத் தாக்கல் செய்து கொள்ளவும்.
  2. Shopify நிர்வாகியிலிருந்து, நிதி > வரித் தாக்கல் என்பதற்குச் செல்லவும்.
  3. வரிக் கணக்குத் தாக்கல்களை அமை என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. Tennessee என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. படிவங்கள் (Forms) பிரிவில், படிவ விவரங்களைச் சேர்க்க அமை என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் தாக்கல் செய்யும் அதிர்வெண்ணைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. விற்பனை வரி ID பிரிவில், உங்கள் மாநில விற்பனை வரி ID-ஐ உள்ளிடவும், இது Tennessee-ஆல் உங்கள் Sales and Use Account Number எனக் குறிக்கப்படுகிறது.
  7. உள்நுழைவுச் சான்றுகள் பிரிவில், மாகாண வரி ஆணையத்திலுள்ள உங்கள் கணக்கை அணுகப் பயன்படுத்தும் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  8. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

குறிப்பு: Tennessee DoR-இல் ஒன்றுக்கு மேற்பட்ட இட ID-கள் பதிவுசெய்யப்பட்டிருக்கும் ரிட்டர்ன்களைத் தானியங்கு தாக்கல் ஆதரிக்காது.

உங்கள் வரி ரிட்டர்னை அமைத்த பிறகு, உங்கள் கணக்கிற்கான பாதுகாப்பான அணுகலை Shopify-க்கு வழங்க, Tennessee-இன் தாக்கல் செய்யும் போர்ட்டலில் இரு-படிச் சரிபார்ப்பை அமைக்க வேண்டும்.

Tennessee-இல் தானியங்கு தாக்கலுக்கான இரு-படிச் சரிபார்ப்பை அமைக்கவும்

  1. Shopify நிர்வாகியில் உள்ள உங்கள் மாநில வரி ரிட்டர்னுக்கான பக்கத்தில், இரு-படிச் சரிபார்ப்புப் பிரிவில் உள்ள shopify.com மின்னஞ்சல் முகவரியை நகலெடுக்கவும்.
  2. Tennessee Taxpayer Access Point (TNTAP) என்பதில் உள்நுழையவும்.
  3. Manage my profile (எனது சுயவிவரத்தை நிர்வகி) என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. Profile தாவலில் இருப்பதை உறுதிசெய்யவும்.
  5. Security பிரிவுக்குச் சென்று, Change Two-Step Settings என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. ​ Email பிரிவில், Add Emailஎன்பதைக் கிளிக் செய்யவும்.
    1. Add Email விருப்பம் கிடைக்கவில்லை எனில், கணக்கில் ஒரு மின்னஞ்சலை மட்டுமே பட்டியலிட அனுமதிக்கப்படுவதே அதற்குக் காரணமாக இருக்கலாம். X என்பதைக் கிளிக் செய்து, ஏற்கனவே உள்ள மின்னஞ்சல் முகவரியை அகற்றிவிட்டு, Add Email என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. Email புலத்தில், வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை ஒட்டவும்.
  8. Save (சேமி) என்பதைக் கிளிக் செய்யவும். இதனால் ஒரு பாதுகாப்புக் குறியீடு உருவாக்கப்படும். உங்கள் வரிக் கணக்குத் தாக்கலுக்குக் கட்டளைத் தொடர்பு நபராக இருப்பவர் மட்டுமே இந்தக் குறியீட்டை மின்னஞ்சல் மூலம் பெறுவார். கடையின் உரிமையாளரோ பிற பணியாளர்களோ இதைப் பெற முடியாது. நீங்கள் தொடர்பு நபராக இல்லை எனில், அந்த நபரிடமிருந்து பாதுகாப்புக் குறியீட்டைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளவும்.
  9. இந்தக் குறியீட்டை நகலெடுத்து, Verify Security Code (பாதுகாப்புக் குறியீட்டைச் சரிபார்) புலத்தில் ஒட்டவும்.
  10. Confirm என்பதைக் கிளிக் செய்யவும்

ஒரு மாகாணத்தை அமைத்த பிறகு, நீங்கள் விற்பனை வரியை வசூலிக்கும் கூடுதல் மாகாணங்களை அமைப்பதற்கு, தேவைக்கேற்ப இதே முறையை மீண்டும் பின்பற்றலாம்.

Washington வரி ரிட்டர்னை அமைக்கவும்

  1. தாக்கல் செய்வதற்கான இறுதி நாளுக்கு முன்னதாக உங்கள் அமைவு நிறைவடைந்துள்ளதை உறுதிசெய்யவும். உங்கள் அடுத்தத் தாக்கலுக்கான இறுதி நாளுக்கு முந்தைய மாதத்தின் 20 ஆம் தேதிக்குள் அமைவை நிறைவுசெய்ய முடியவில்லை எனில், நீங்களே நேரடியாக வரிக் கணக்கைத் தாக்கல் செய்து கொள்ளவும்.
  2. Shopify நிர்வாகியிலிருந்து, நிதி > வரித் தாக்கல் என்பதற்குச் செல்லவும்.
  3. வரிக் கணக்குத் தாக்கல்களை அமை என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஒரு மாகாணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. படிவங்கள் பிரிவில், அமை என்பதைக் கிளிக் செய்து படிவ விவரங்களைச் சேர்த்த பிறகு தாக்கல் செய்யும் நிகழ்வெண்ணைத் தேர்ந்தெடுக்கவும். பல படிவங்கள் காட்டப்பட்டு, உங்கள் வரிக் கணக்குத் தாக்கலுக்கு எந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று உறுதியாகத் தெரியவில்லை எனில், வரி நிபுணர் ஒருவரையோ மாகாண வரி ஆணையத்தையோ தொடர்புகொள்ளவும். மாகாண வாரியான வரிப் படிவங்களின் பட்டியலுக்கு, மாகாண வரிப் படிவங்கள் மற்றும் IDகள் என்பதைப் பார்க்கவும்.
  6. ஒன்றுக்கு மேற்பட்ட படிவங்கள் இருந்தால், படிவங்களைச் சேர் என்பதைக் கிளிக் செய்து ஒவ்வொரு படிவத்திற்கும் தாக்கல் செய்யும் நிகழ்வெண்ணைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. விற்பனை வரி ID பிரிவில், உங்கள் மாகாண விற்பனை வரி ID ஐ உள்ளிடவும். அந்த ID-ஐ ஒவ்வொரு மாகாணமும் எப்படிக் குறிப்பிடுகிறது என்பது குறித்த விவரங்களுக்கு, மாகாண வரிப் படிவங்கள் மற்றும் IDகள் என்பதைப் பார்க்கவும்.
  8. உள்நுழைவுச் சான்றுகள் பிரிவில், மாகாண வரி ஆணையத்திலுள்ள உங்கள் கணக்கை அணுகப் பயன்படுத்தும் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  9. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் வரி ரிட்டர்னை அமைத்த பிறகு, உங்கள் கணக்கிற்கான பாதுகாப்பான அணுகலை Shopify-க்கு வழங்க, Washington-இன் தாக்கல் செய்யும் போர்ட்டலில் இரு-படிச் சரிபார்ப்பை அமைக்க வேண்டும்.

Washington-இல் தானியங்கு தாக்கலுக்கான இரு-படிச் சரிபார்ப்பை அமைக்கவும்

  1. Shopify நிர்வாகியில் உங்கள் மாகாண வரிக் கணக்குத் தாக்கல் தொடர்பான பக்கத்திற்குச் சென்று, இருபடிச் சரிபார்ப்பு பிரிவில் உள்ள மின்னஞ்சல் முகவரியை நகலெடுக்கவும்.
  2. Washington DOR இணையதளத்திற்குச் சென்று உங்கள் கணக்கில் உள்நுழையவும்.
  3. Update your SAW profile என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. Profile (சுயவிவரம்) என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. Additional Contact Information for Security பிரிவில், Shopify நிர்வாகியிலிருந்து நீங்கள் நகலெடுத்த மின்னஞ்சல் முகவரியை Additional Email Address புலத்தில் உள்ளிடவும்.
  6. விருப்பத்திற்குரியது: Mobile Phone Number புலத்தில் உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்.
  7. Update என்பதைக் கிளிக் செய்யவும்.