மின்னஞ்சல் அறிவிப்புகளைப் புதுப்பித்தல்

மின்னஞ்சல் அறிவிப்புகளுக்கான இயல்புநிலை வார்ப்புருக்கள், அமெரிக்க ஆர்டர்களுக்கான Shopify-இன் சமீபத்திய வரிச் சேவையைப் பயன்படுத்தும் வணிகர்களுக்காக உகந்ததாக்கப்பட்டுள்ளன. நீங்கள் இயல்புநிலை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால், உங்கள் மின்னஞ்சல் அறிவிப்பு வார்ப்புருக்கள் உங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த வாங்கும் அனுபவத்தைத் தொடர்ந்து வழங்கும்.

உங்கள் அறிவிப்பு வார்ப்புருக்களைத் தனிப்பயனாக்கியிருந்தால், அவற்றை நீங்கள் மேனுவலாக மாற்ற வேண்டியிருக்கலாம். அனைத்துத் தனிப்பயனாக்கப்பட்ட வார்ப்புருக்களையும் தானாகவே புதுப்பிக்க முடியாது. மதிப்பிடப்பட்ட வரியைக் காட்ட தேவையான மாற்றங்களுடன், உங்கள் வார்ப்புருக்களில் சில கூடுதல் மாற்றங்களும் தேவைப்படலாம். வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டில் இருப்பதை உறுதிசெய்யப்பட்ட பேமெண்ட்டான அங்கீகரிக்கப்பட்ட பேமெண்ட் என்பதற்கும், இறுதி செய்யப்பட்டு வாடிக்கையாளரின் கார்டிலிருந்து கட்டணம் வசூலிக்கப்பட்ட பேமெண்ட்டான பெறப்பட்ட பேமெண்ட் என்பதற்கும் இடையிலான வித்தியாசத்தைத் துல்லியமாக விவரிக்கவும் காட்டவும் இந்த மாற்றங்கள் உங்கள் வார்ப்புருக்களை அனுமதிக்கின்றன.

ஒவ்வொரு வகையான அறிவிப்பு வார்ப்புருவையும் புதுப்பிப்பதற்கான குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்வரும் இணைப்புகள் வழங்குகின்றன. எந்தெந்த வார்ப்புருக்களைப் புதுப்பிக்க வேண்டும் என்பதைக் கண்காணிக்க இந்தச் சரிபார்ப்புப் பட்டியலையும் நீங்கள் பயன்படுத்தலாம்:

இந்தப் பிரிவில்