நிலுவையில் உள்ள பேமெண்ட் வெற்றி மின்னஞ்சல் அறிவிப்பைப் புதுப்பித்தல்
உங்கள் ஸ்டோர் தனிப்பயனாக்கப்பட்ட அறிவிப்பு வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால், அது Shopify Tax உடன் செயல்படுவதை உறுதிசெய்ய, நிலுவையில் உள்ள பேமெண்ட் வெற்றி அறிவிப்பை நீங்கள் கைமுறையாகப் புதுப்பிக்க வேண்டியிருக்கலாம்.
இந்த மாற்றங்களைச் செய்வதற்கு, Shopify-இன் அறிவிப்பு வார்ப்புருக்களில் பயன்படுத்தப்பட்டுள்ள குறியீடு குறித்த பரிச்சயம் தேவை. உங்கள் வார்ப்புருக்கள் அதிகளவில் தனிப்பயனாக்கப்பட்டிருந்து, அவசியமான மாற்றங்களை எப்படிச் செயல்படுத்துவது என்று உங்களுக்குத் தெரியவில்லை எனில், அந்த மாற்றங்களைச் செய்த டெவெலப்பரைத் தொடர்புகொள்ளவும் அல்லது உங்கள் வார்ப்புருவை அதன் அசல் நிலைக்கு மீட்டமைக்க, இயல்புநிலைக்கு மாற்று என்பதைக் கிளிக் செய்யவும். இயல்புநிலைக்கு மாற்றுவது நீங்கள் செய்த எந்தவொரு தனிப்பயனாக்கங்களையும் அகற்றிவிடும், ஆனால் உங்கள் வார்ப்புருக்கள் சமீபத்திய பதிப்பில் இருப்பதை அது உறுதிசெய்கிறது.
நீங்கள் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன்பு, உங்கள் வார்ப்புருவை Google Docs போன்ற வேறொரு ஆவணத்தில் நகலெடுத்து ஒட்டுவதன் மூலம் காப்புப் பிரதி எடுக்கவும். மாற்றங்களைச் செய்த பிறகு, சேமி என்பதைக் கிளிக் செய்யும் முன், உங்கள் மாற்றங்களை மதிப்பாய்வு செய்து அவை எதிர்பார்த்தபடி செயல்படுவதை உறுதிசெய்ய முன்னோட்டம் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
வாடிக்கையாளர் அறிவிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
பேமெண்ட்டுகள் பிரிவில், நிலுவையில் உள்ள பேமெண்ட் வெற்றி என்பதைக் கிளிக் செய்யவும்.
குறியீட்டைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
<span>Tip</span>எனத் தொடங்கும் குறியீட்டுப் பகுதியைக் கண்டறியவும்.{% unless transaction.kind == "capture" or transaction.kind == "void" %}என்ற குறியீட்டுத் துணுக்கைக் கண்டறியவும். இயல்புநிலை வார்ப்புருவில், இந்தத் துணுக்கு 351-ஆவது வரியில் உள்ளது.- குறியீட்டை
{% unless transaction.kind == "authorization" or transaction.kind == "void" %}என மாற்றவும். - சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
<span>Total</span>எனத் தொடங்கும் குறியீட்டுப் பகுதியைக் கண்டறியவும்.{% if transaction.status == "success" and transaction.kind == "authorization" or transaction.kind == "sale" %}என்ற குறியீட்டுத் துணுக்கைக் கண்டறியவும். இயல்புநிலை வார்ப்புருவில், இந்தத் துணுக்கு 414-ஆவது வரியில் உள்ளது.- குறியீட்டை
{% if transaction.status == "success" and transaction.kind == "capture" or transaction.kind == "sale" %}என மாற்றவும். - சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
<h4>Shipping method</h4>எனத் தொடங்கும் குறியீட்டுப் பகுதியைக் கண்டறியவும்.{% if transaction_count > 0 %}என்ற குறியீட்டுத் துணுக்கைக் கண்டறியவும். இயல்புநிலை வார்ப்புருவில், இந்தத் துணுக்கு 513-ஆவது வரியில் உள்ளது.- குறியீட்டை
{% if transaction_size > 0 %}என மாற்றவும். - சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
<h4>Payment method</h4>எனத் தொடங்கும் குறியீட்டுப் பகுதியைக் கண்டறியவும்.{% if transaction.kind == "authorization" or transaction.kind == "sale" %}என்ற குறியீட்டுத் துணுக்கைக் கண்டறியவும். இயல்புநிலை வார்ப்புருவில், இந்தத் துணுக்கு 518-வது வரியில் இடம்பெற்றுள்ளது.- குறியீட்டை
{% if transaction.kind == "capture" or transaction.kind == "sale" %}என மாற்றவும். - சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்தேர்வு: முன்னோட்டம் என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் மாற்றங்களை முன்னோட்டமிடலாம்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.