ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யுனைடெட் கிங்டமிற்கான Shopify Tax அம்சங்கள்

உங்கள் ஸ்டோர் ஐரோப்பிய ஒன்றியம் (EU) அல்லது யுனைடெட் கிங்டமில் (UK) உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தால், VAT கணக்கீட்டுத் துல்லியத்தை மேம்படுத்தவும், இணக்கமான VAT விலைப்பட்டியல்களை உருவாக்கவும் Shopify Tax-ஐப் பயன்படுத்தலாம்.

VAT விலைப்பட்டியல்கள்

உங்கள் ஸ்டோர் ஐரோப்பிய ஒன்றியம் அல்லது யுனைடெட் கிங்டமில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தால், நீங்கள் Shopify நிர்வாகியில் VAT விலைப்பட்டியல்களை உருவாக்கலாம், இவை ஆர்டர் உறுதிப்படுத்தல் பக்கத்துடன் இணைக்கப்பட்டு, சர்வதேச வரித் தேவைகளுக்கு இணங்க உங்களுக்கு உதவும். முன்கூட்டிய அணுகல் திட்டத்தின் ஒரு பகுதியாக, துல்லியத்தை மேம்படுத்த VAT கணக்கீடுகளில் மேம்பாடுகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

VAT விலைப்பட்டியலுக்கான தகுதித் தேவைகள்

VAT விலைப்பட்டியல்களுக்குத் தகுதிபெற, ஆர்டருக்கான பின்வரும் நிபந்தனைகள் சரியாக இருக்க வேண்டும்:

  • ஆர்டருக்கு சுங்க வரிகள் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படவில்லை.
  • ஆர்டர் ஐரோப்பிய ஒன்றியம் அல்லது யுனைடெட் கிங்டமில் உள்ள இலக்குக்கு ஷிப் செய்யப்படுகிறது.

நீங்கள் VAT விலைப்பட்டியல்களை உருவாக்குவதற்கு முன்பு, உங்களின் மதிப்புக்கூட்டு வரிப் பதிவுகள் முழுமையாகவும் புதுப்பித்த நிலையிலும் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.

தானியங்கு VAT விலைப்பட்டியல்களைச் செயல்படுத்துதல்

உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள வரிகள் மற்றும் சுங்க வரிகள் அமைப்புகளிலிருந்து நீங்கள் தானாகவே VAT விலைப்பட்டியல்களை உருவாக்கி அனுப்பலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வரிகள் மற்றும் சுங்க வரிகள் என்பதற்குச் செல்லவும்.

  2. ஐரோப்பிய ஒன்றியம் அல்லது யுனைடெட் கிங்டம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. VAT விலைப்பட்டியல்கள் பிரிவில், ஆர்டர்கள் செய்யப்படும்போது விலைப்பட்டியல்களை உருவாக்கி அனுப்பவும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. விருப்பத்திற்குரியது: உங்கள் விலைப்பட்டியல்களில் சேர்ப்பதற்கான பிரத்தியேக லோகோவைத் தேர்ந்தெடுக்கவும். பிராந்தியம் எதுவாக இருந்தாலும் அனைத்து VAT விலைப்பட்டியல்களுக்கும் லோகோ பொருந்தும். லோகோ தேவைகளுக்கு, பிராண்ட் அசெட்களை நிர்வகித்தல் என்பதைப் பார்க்கவும்.

வாடிக்கையாளர்களுக்கு VAT விலைப்பட்டியல்களை மீண்டும் அனுப்புதல்

வாடிக்கையாளர் தங்களது VAT விலைப்பட்டியலின் மற்றொரு நகலைக் கோரினால், நீங்கள் அதை ஆர்டர் விவரங்களிலிருந்து மீண்டும் அனுப்பலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. எந்த ஆர்டருக்கு VAT இன்வாய்ஸை மீண்டும் அனுப்ப வேண்டுமோ, அந்த ஆர்டரைக் கிளிக் செய்யவும்.

  3. காலவரிசை அல்லது VAT இன்வாய்ஸ் பிரிவில், இதற்கு முன்பு வாடிக்கையாளருக்கு அனுப்பப்பட்ட பொருந்தக்கூடிய VAT இன்வாய்ஸைத் தட்டவும்.

  4. VAT இன்வாய்ஸின் PDF முன்பார்வையில், PDFஐப் பதிவிறக்கி வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் செய்யவும்.

VAT விலைப்பட்டியல்களுக்கான வாடிக்கையாளர் அனுபவம்

நீங்கள் ஒரு VAT இன்வாய்ஸை உருவாக்கிய பிறகு அல்லது அது தானாகவே உருவாக்கப்பட்ட பிறகு, அது வாடிக்கையாளரின் ஆர்டர் உறுதிப்படுத்தல் பக்கத்தின் VAT இன்வாய்ஸ் பிரிவில் காட்டப்படும். புதிய VAT இன்வாய்ஸ் தேவைப்படும் வகையில் ஒரு ஆர்டரில் நீங்கள் மாற்றங்களைச் செய்தால், VAT இன்வாய்ஸ் பிரிவில் ஒரு புதிய இன்வாய்ஸ் சேர்க்கப்படும். ஒரு வாடிக்கையாளர், டெஸ்க்டாப் சாதனத்தில் உள்ள PDF இலிருந்தோ அல்லது மொபைல் சாதனத்தில் உள்ள பகிர் ஐகானைப் பயன்படுத்தியோ தனது VAT இன்வாய்ஸின் நகலைச் சேமிக்கலாம் அல்லது அச்சிடலாம்.

VAT-க்கான தயாரிப்பு வகைகள்

உங்கள் ஸ்டோர், ஐரோப்பிய ஒன்றியம் அல்லது யுனைடெட் கிங்டமில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தால், உங்கள் VAT வீதங்களின் துல்லியத்தை மேம்படுத்த, தயாரிப்பு வகைகளைப் பயன்படுத்தலாம்.

தயாரிப்பு வகைகள் என்பவை தயாரிப்புகளுக்கோ தயாரிப்புகளின் சேகரிப்புகளுக்கோ ஒதுக்கப்படும் லேபிள்களாகும். கொள்முதலுக்குப் பொருந்தக்கூடிய வரி கடமைகளையும் விலக்குகளையும் குறிப்பிட, தயாரிப்பு வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. முன்பே வரையறுக்கப்பட்ட மற்றும் தரப்படுத்தப்பட்ட பட்டியலான Shopify-இன் நிலையான தயாரிப்பு வகைப்பாடு என்பதிலிருந்து தயாரிப்பு வகைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

தயாரிப்பு வகைகள், உங்கள் தயாரிப்புகளை நிர்வகிக்கவும் பயனுள்ளதாக இருக்கும்; மேலும், பின்வரும் பணிகளுக்கும் இவற்றைப் பயன்படுத்தலாம்:

நீங்கள் ஒரு தயாரிப்பை உருவாக்கி, அந்தத் தயாரிப்புக்கான பெயர், விளக்கம் ஆகியவற்றை உள்ளிட்டுப் படங்களைச் சேர்க்கும்போது, தயாரிப்பு வகைப் பரிந்துரையைத் தானாகவே உருவாக்க இந்தத் தகவல் பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை ஒரு பரிந்துரை மட்டுமே, இதை வரி ஆலோசனையாகக் கருதக்கூடாது.

VAT வீதங்களைத் தயாரிப்பு வகைகள் எவ்வாறு பாதிக்கின்றன

தயாரிப்பு வகை மற்றும் இலக்கு நாட்டைப் பொறுத்து பொருந்தக்கூடிய VAT வீதத்தைத் தானாகவே தீர்மானிக்கத் தயாரிப்பு வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. உணவு, புத்தகங்கள் அல்லது குழந்தைகளுக்கான உடைகள் போன்ற குறிப்பிட்ட தயாரிப்பு வகைகளுக்குப் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குறைக்கப்பட்ட VAT வீதங்களைப் பயன்படுத்துகின்றன.

பொதுவான தயாரிப்பு வகைகளின் எடுத்துக்காட்டுகளையும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அவற்றின் வழக்கமான VAT நடைமுறையையும் பின்வரும் அட்டவணை காட்டுகிறது:

தயாரிப்பு வகைபரிந்துரைக்கப்பட்ட வகைவழக்கமான VAT நடைமுறை
பெரியவர்களுக்கான ஆடைகள்ஆடைகள் & துணைக் கருவிகள் > உடைகள்பெரும்பாலான நாடுகளில் தரநிலையான வீதம்
குழந்தைகளுக்கான ஆடைகள்ஆடைகள் & துணைக் கருவிகள் > உடைகள் > கைக்குழந்தை & குறுநடை போடும் குழந்தைகளுக்கான ஆடைகள்சில நாடுகளில் குறைக்கப்பட்ட அல்லது பூஜ்ஜிய வீதம் (எடுத்துக்காட்டாக, யுனைடெட் கிங்டம்)
உணவு மற்றும் பானங்கள்உணவு, பானங்கள் & புகையிலைபல நாடுகளில் குறைக்கப்பட்ட வீதம்
புத்தகங்கள் (நேரடி)மீடியா > புத்தகங்கள்பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் குறைக்கப்பட்ட வீதம்
மின்னணுவியல்மின்னணுவியல்தரநிலையான வீதம்
சுகாதாரத் தயாரிப்புகள்உடல்நலம் & அழகுகுறிப்பிட்ட தயாரிப்பு மற்றும் நாட்டைப் பொறுத்து மாறுபடும்

தயாரிப்பு வகைகளை அமைப்பதும் நிர்வகிப்பதும்

தயாரிப்பு வகைகள் பக்கத்தில், தயாரிப்பு வகைகள் பயன்படுத்தப்படாத தயாரிப்புகள் இருந்தால் அல்லது மதிப்பாய்வு செய்யப்பட வேண்டிய தயாரிப்பு வகைகளுக்கான பரிந்துரைகள் இருந்தால் ஒரு அறிவிப்பு காட்டப்படும். மதிப்பாய்வு தேவைப்படும் தயாரிப்புகள் பின்வரும் ஏதேனும் ஒரு தாவலில் காட்டப்படும்:

  • மதிப்பாய்வில் நிலுவையில் உள்ளவை தாவல், பரிந்துரைக்கப்பட்ட தயாரிப்பு வகைகளைக் கொண்டுள்ள தயாரிப்புகளைக் காட்டும். இந்தத் தாவலில் பரிந்துரைக்கப்பட்டுள்ள தயாரிப்பு வகைகளை நீங்கள் ஏற்றால் மட்டுமே அவை பயன்படுத்தப்படும்.
  • தேர்வில் நிலுவையில் உள்ளவை தாவல், பரிந்துரைகள் ஏதுமில்லாத தயாரிப்புகளைக் காட்டும்; இவை கைமுறையாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

வகைப்படுத்தப்பட வேண்டிய தயாரிப்புகளைக் கண்டறிதல்

வகைப்படுத்தப்படாத தயாரிப்புகளை, உங்கள் வரி அமைப்புகளிலிருந்து நேரடியாக அணுகலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வரிகள் மற்றும் சுங்க வரிகள் என்பதற்குச் செல்லவும்.

  2. பிராந்திய அமைப்புகள் பிரிவில், ஐரோப்பிய ஒன்றியம் அல்லது யுனைடெட் கிங்டம் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. வரி வீத நிர்வாகம் பிரிவில், வகைப்படுத்தப்படாத தயாரிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. மதிப்பாய்வில் நிலுவையில் உள்ளவை மற்றும் தேர்வில் நிலுவையில் உள்ளவை தாவல்களில் உள்ள தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்யவும்.

தயாரிப்பு வகையைத் தனித்தனியாகத் தேர்ந்தெடுக்கவும் அல்லது ஏற்கவும்

எந்தவொரு தயாரிப்புக்குமான தயாரிப்பு வகையை, உங்கள் தயாரிப்பு அமைப்புகள் அல்லது வரி அமைப்புகளிலிருந்து எப்போது வேண்டுமானாலும் நீங்கள் சேர்க்கலாம் அல்லது புதுப்பிக்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வரிகள் மற்றும் சுங்க வரிகள் என்பதற்குச் செல்லவும்.

  2. பிராந்திய அமைப்புகள் பிரிவில், ஐரோப்பிய ஒன்றியம் அல்லது யுனைடெட் கிங்டம் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. வரி வீத நிர்வாகம் பிரிவில், வகைப்படுத்தப்படாத தயாரிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. தயாரிப்பு வகைகள் பக்கத்தில், தேர்ந்தெடுப்பதற்கு அல்லது ஏற்பதற்கான தயாரிப்பைக் கண்டறியவும்.

  5. பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    • பரிந்துரைக்கப்பட்ட தயாரிப்பு வகை வழங்கப்பட்டிருந்தால், அந்தப் பரிந்துரையை ஏற்கவும்:
      1. தயாரிப்பு வகை பெட்டியில் உள்ள சரிபார்ப்பு குறி என்பதைக் கிளிக் செய்யவும்.
      2. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஒரு வகை வழங்கப்படாவிட்டால் அல்லது திருத்தம் தேவைப்பட்டால், தயாரிப்பு வகையைத் தேடித் தேர்ந்தெடுக்கவும்:
      1. தயாரிப்பு வகை பெட்டியில் உள்ள x என்பதைக் கிளிக் செய்யவும்.
      2. தயாரிப்பு வகை பெட்டியில், தயாரிப்பின் விளக்கத்தைத் தட்டச்சு செய்யத் தொடங்கவும்.
      3. சரியான பரிந்துரை வழங்கப்படும்போது, அந்தத் தயாரிப்பு வகையைக் கிளிக் செய்யவும்.
      4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

தயாரிப்புகள் பக்கத்திலிருந்தும் தயாரிப்பு வகைகளை நீங்கள் நேரடியாக அமைக்கலாம். தயாரிப்பு வகையைத் தனித்தனியாகத் தேர்ந்தெடுப்பது அல்லது புதுப்பிப்பது குறித்து மேலும் அறிக.

தயாரிப்பு வகைகளை மொத்தமாகத் தேர்ந்தெடுக்கவும் அல்லது ஏற்கவும்

வகைப்படுத்த வேண்டிய பல தயாரிப்புகள் உங்களிடம் இருந்தால், வரி அமைப்புகளிலிருந்து அல்லது மொத்தத் திருத்தியைப் பயன்படுத்தி அவற்றை மொத்தமாகப் புதுப்பிக்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வரிகள் மற்றும் சுங்க வரிகள் என்பதற்குச் செல்லவும்.

  2. பிராந்திய அமைப்புகள் பிரிவில், ஐரோப்பிய ஒன்றியம் அல்லது யுனைடெட் கிங்டம் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. வரி வீத நிர்வாகம் பிரிவில், வகைப்படுத்தப்படாத தயாரிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. தயாரிப்பு வகைகள் பக்கத்தில், நீங்கள் தேர்ந்தெடுக்க அல்லது ஏற்க விரும்பும் அனைத்துத் தயாரிப்புகளுக்கும் அடுத்துள்ள தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்யவும்.

  5. பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    • பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துத் தயாரிப்புகளுக்கும் பரிந்துரைக்கப்பட்ட தயாரிப்பு வகையை அங்கீகரிக்கவும்:
      1. தயாரிப்புப் பட்டியலுக்கு மேலே, ஏற்றுக்கொள், சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
      2. அனைத்தையும் ஏற்றுக்கொள், சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
    • பரிந்துரைகள் வழங்கப்பட்டு, அவற்றைச் சரிசெய்ய வேண்டியிருந்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கான தயாரிப்பு வகையைத் தேடித் தேர்ந்தெடுக்கவும்:
      1. சரிசெய்ய வேண்டிய உருப்படியின் தயாரிப்பு வகை பெட்டியில், தயாரிப்பின் விளக்கத்தைத் தட்டச்சு செய்யத் தொடங்கவும்.
      2. சரியான பரிந்துரை வழங்கப்படும்போது, அந்தத் தயாரிப்பு வகையைக் கிளிக் செய்யவும்.
      3. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
    • பரிந்துரைகள் வழங்கப்படாவிட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துத் தயாரிப்புகளுக்கும் தயாரிப்பு வகையைத் தேடித் தேர்ந்தெடுக்கவும்:
      1. தயாரிப்புப் பட்டியலுக்கு மேலே, வகையைத் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
      2. வகையைத் தேர்ந்தெடு பெட்டியில், தயாரிப்பின் விளக்கத்தைத் தட்டச்சு செய்யத் தொடங்கவும்.
      3. சரியான பரிந்துரை வழங்கப்படும்போது, அந்தத் தயாரிப்பு வகையைக் கிளிக் செய்யவும்.
      4. அனைத்தையும் ஏற்றுக்கொள், சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொத்தத் திருத்தியைப் பயன்படுத்தி தயாரிப்பு வகைகளை மொத்தமாகத் தேர்ந்தெடுப்பது அல்லது புதுப்பிப்பது பற்றி மேலும் அறிக.

CSV கோப்பைப் பயன்படுத்தித் தயாரிப்பு வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்களிடம் பெரிய கேட்லாக் இருந்தால், CSV கோப்பைப் பயன்படுத்தித் தயாரிப்பு வகைகளை இறக்குமதி செய்யலாம்.

CSV தயாரிப்பு இறக்குமதியைப் பயன்படுத்தித் தயாரிப்பு வகைகளை நீங்கள் இறக்குமதி செய்யலாம். உங்கள் தயாரிப்பு வகை மதிப்புகள் Shopify இன் முன் வரையறுக்கப்பட்ட பட்டியலுடன் பொருந்துவதை உறுதிசெய்ய, Shopify இன் நிலையான தயாரிப்பு வகைப்பாட்டைப் பார்க்கவும்.

வார்ப்புருவாகப் பயன்படுத்த மாதிரித் தயாரிப்பு CSV கோப்பை நீங்கள் பதிவிறக்கிப் பார்க்கலாம்.

தயாரிப்பு வகைகளைப் பயன்படுத்தி வரிக் கணக்கீடு

உங்கள் தயாரிப்புகளை வகைப்படுத்திய பிறகு, ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் விற்கும்போது உங்கள் வரிக்கடமைகளைத் தானாகவே தீர்மானிக்க அந்த வகைகள் பயன்படுத்தப்படும். தயாரிப்பு வகைகளைப் பயன்படுத்துவது, வரிக் கணக்கீடுகளின் துல்லியத்தை அதிகரிப்பதோடு வரி ஓவர்ரைடுகளின் தேவையையும் குறைக்கிறது.

ஓவர்ரைடு உள்ள ஒரு தயாரிப்புக்குத் தயாரிப்பு வகையை அமைத்தால், தயாரிப்பு வகை வரிக் கணக்கீடுகளை விட அந்த ஓவர்ரைடே முன்னுரிமை பெறும். இதில் சேகரிப்பு அடிப்படையிலான வரி ஓவர்ரைடுகளும் அடங்கும்.

உங்கள் தயாரிப்பு வகைகளுடன் முரண்படும் தயாரிப்பு வரி ஓவர்ரைடுகளை அகற்றுவதைக் கருத்தில் கொள்ளவும். எனினும், தயாரிப்பு வகைகளால் கணக்கிடப்படாத வரி விதிகளை நீங்கள் அறிந்திருந்தால், உங்கள் தயாரிப்பு வரி ஓவர்ரைடுகளை அப்படியே வைத்திருக்கவும்.

தயாரிப்பு வகைகளை நீங்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டியதில்லை. உங்கள் தயாரிப்புகளுக்குத் தயாரிப்பு வகைகளைப் பயன்படுத்த வேண்டாம் என நீங்கள் முடிவு செய்தால், வரி ஓவர்ரைடுகளைப் பயன்படுத்தி அவற்றை நீங்களே கைமுறையாகப் புதுப்பிக்க வேண்டும்.

வரம்புகள்

சில சூழ்நிலைகளில் வரிகளைக் கணக்கிடத் தயாரிப்பு வகைகளைப் பயன்படுத்த முடியாது:

  • இ-கழிவு கட்டணங்கள் போன்று, தனி வரி வரிசை உருப்படியை உருவாக்கும் தொழில்துறை சார்ந்த அல்லது தயாரிப்பு சார்ந்த வரிகள்.
  • கலால் வரிகள் போன்ற கனஅளவு, எடை, மூலப்பொருள் அல்லது அளவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட வரிகள்.
  • ஒரு தயாரிப்பின் மாறுபாடுகள், வெவ்வேறு தயாரிப்பு வகைகளைக் கொண்டிருக்க முடியாது.
  • ஒரே தயாரிப்பாக உருவாக்கப்படும் தொகுக்கப்பட்ட பொருள்களுக்கு ஒரு தயாரிப்பு வகை மட்டுமே இருக்கும்.
  • Shopify மற்றும் Meta, Google போன்ற சந்தைகளுக்கு இடையே தயாரிப்பு வகைகள் ஒத்திசைக்கப்படாது.
  • வரி ஓவர்ரைடுகளைக் கொண்ட தயாரிப்புகளும் வகைகளும்.
  • Shopify Tax தகுதி பெறாத ஆர்டர்களுக்குத் தயாரிப்பு வகைகள் பயன்படுத்தப்படாது, அவற்றுள் பின்வரும் வகையான ஆர்டர்களும் அடங்கும்:
    • வாங்கு பொத்தான், Facebook மற்றும் Amazon ஆர்டர்கள் போன்ற மூன்றாம் தரப்புச் செயலி மற்றும் API மூலம் உருவாக்கப்பட்ட ஆர்டர்கள்.
    • தொடர்புடைய தயாரிப்பு அல்லது ஷிப்பிங் கட்டண வரி ஓவர்ரைடைக் கொண்ட ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட தயாரிப்புகளை உள்ளடக்கிய ஆர்டர்கள்.
  • Shopify Tax இன் கணக்கீடுகளில் ரிசார்ட் வரி தானாகவே சேர்க்கப்படாது. உங்கள் பரிவர்த்தனைகளில் ரிசார்ட் வரியைச் சேர்க்க வேண்டுமெனில், நீங்கள் கைமுறை வரியைப் பயன்படுத்த வேண்டும்.

பிராந்திய VAT வீத மாறுபாடுகள்

சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வெவ்வேறு VAT வீதங்களைக் கொண்ட பிராந்தியங்கள் உள்ளன, அவற்றை Shopify Tax முழுமையாக ஆதரிக்காமல் போகலாம். பின்வரும் அறியப்பட்ட பிராந்தியக் கருத்தாய்வுகளை மதிப்பாய்வு செய்யவும்:

  • ஸ்பெயின்: கேனரி தீவுகள், சியூட்டா மற்றும் மெலில்லா ஆகிய பகுதிகள் முதன்மை ஸ்பெயின் நிலப்பரப்பை விட வேறுபட்ட வரி விதிகளைக் கொண்டுள்ளன. சியூட்டா மற்றும் மெலில்லா வரியற்றவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன, ஆனால் கேனரி தீவுகளில் பொருந்தக்கூடிய உள்ளூர் வீதங்களுக்குப் பதிலாக நிலையான ஸ்பெயின் VAT வீதங்கள் வசூலிக்கப்படலாம்.
  • போர்ச்சுகல்: முதன்மை போர்ச்சுகல் நிலப்பரப்புடன் ஒப்பிடுகையில், மடீரா மற்றும் அசோரஸ் குறைக்கப்பட்ட VAT வீதங்களைக் கொண்டுள்ளன. இந்த வீதங்களை Shopify Tax அங்கீகரிக்கிறது.
  • ஜெர்மனி: ஹெலிகோலாண்ட் வேறுபட்ட வரி விதிகளைக் கொண்டுள்ளது, அவை தானாகக் கணக்கிடப்படுவதில்லை.
  • ஆஸ்திரியா: சில பிராந்தியங்களில் குறிப்பிட்ட VAT விதிகள் உள்ளன, அவை முழுமையாக ஆதரிக்கப்படாமல் போகலாம்.

சிறப்பு வரி வீதங்கள் உள்ள பிராந்தியங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் விற்றால், சரியான வீதங்களில் கட்டணம் வசூலிப்பதை உறுதிப்படுத்த வரி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

வரைவு ஆர்டர்களைப் பயன்படுத்தி வரிக் கணக்கீடுகளைச் சரிபார்க்கவும்

நேரடி ஆர்டர்களைச் செயல்படுத்துவதற்கு முன், ஒரு வரைவு ஆர்டரை உருவாக்குவதன் மூலம் உங்கள் வரி அமைப்புகள் சரியாகக் கணக்கிடுகின்றனவா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம். உண்மையான பரிவர்த்தனைகளைப் பாதிக்காமல், வரிக் கணக்கீடுகளைச் சோதிக்க இது உங்களை அனுமதிக்கிறது.

படிகள்:

  1. நீங்கள் சோதிக்க விரும்பும் தயாரிப்பைக் கொண்டு ஒரு வரைவு ஆர்டரை உருவாக்கவும்.
  2. இலக்கு நாடு அல்லது பிராந்தியத்தில் உள்ள ஒரு வாடிக்கையாளர் முகவரியைச் சேர்க்கவும்.
  3. ஆர்டர் சுருக்கத்தில் உள்ள வரி விவரங்களை மதிப்பாய்வு செய்யவும்.
  4. உங்கள் தயாரிப்பு வகைக்கு எதிர்பார்க்கப்படும் வீதங்களுடன், கணக்கிடப்பட்ட கட்டணத்தை ஒப்பிடவும்.
  5. கட்டணம் தவறாக இருந்தால், உங்கள் தயாரிப்பு வகையையும் கணக்கீட்டைப் பாதிக்கும் ஏதேனும் வரி ஓவர்ரைடுகளையும் மதிப்பாய்வு செய்யவும்.

VAT மற்றும் தயாரிப்பு வகைச் சிக்கல்களைத் தீர்த்தல்

VAT கணக்கீடுகள் அல்லது தயாரிப்பு வகைகளில் நீங்கள் சிக்கல்களைச் சந்தித்தால், பின்வரும் பொதுவான சிக்கல்களையும் தீர்வுகளையும் மதிப்பாய்வு செய்யவும்.

ஐரோப்பிய ஒன்றிய அல்லது ஐக்கிய இராச்சிய ஆர்டர்களில் VAT வசூலிக்கப்படாத சிக்கலைத் தீர்க்கவும்

ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐக்கிய இராச்சியத்தில் உள்ள வாடிக்கையாளர்களின் ஆர்டர்களுக்கு VAT வசூலிக்கப்படாவிட்டால், பின்வரும் சாத்தியமான காரணங்களை மதிப்பாய்வு செய்யவும்:

சாத்தியமான காரணம்சரிபார்ப்பது எப்படிதீர்வு
மதிப்புக்கூட்டு வரிப் பதிவு அமைக்கப்படவில்லைஅமைப்புகள் > வரிகள் மற்றும் சுங்க வரிகள் > ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐக்கிய இராச்சியம் பகுதிக்குச் செல்லவும்உங்கள் மதிப்புக்கூட்டு வரிப் பதிவைச் சேர்க்கவும்
வாடிக்கையாளருக்கு வரி விலக்கு உள்ளதுவாடிக்கையாளர் பிரிவில் உள்ள வாடிக்கையாளர் சுயவிவரத்தில் வரி விலக்குகள் உள்ளனவா எனச் சரிபார்க்கவும்வாடிக்கையாளர் வரி விலக்கு அமைப்புகளை மதிப்பாய்வு செய்து புதுப்பிக்கவும்
B2B ரிவர்ஸ் சார்ஜ் பயன்படுத்தப்பட்டுள்ளதுவாடிக்கையாளர் செல்லுபடியாகும் VAT ID-ஐக் கொண்டுள்ளார் மற்றும் வரி விலக்கு அளிக்கப்பட்டவராகக் குறிக்கப்பட்டுள்ளார்B2B பரிவர்த்தனைகளுக்கு இது எதிர்பார்க்கப்படும் செயல்பாடாகும்
வரி அமைப்புகளை சுங்க வரிகள் அம்சம் ஓவர்ரைடு செய்கிறதுசுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் செயல்படுத்தப்பட்டுள்ளதா எனச் சரிபார்க்கவும்அமைப்புகள் > வரிகள் மற்றும் சுங்க வரிகள் என்பதில் உங்கள் சுங்க வரிகள் அமைப்புகளை மதிப்பாய்வு செய்யவும்
ஐரோப்பிய ஒன்றியத்திற்காக ஷிப்பிங் மண்டலம் ஏதும் அமைக்கப்படவில்லைஐரோப்பிய ஒன்றிய ஷிப்பிங் மண்டலங்களுக்கு அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதைச் சரிபார்க்கவும்ஒரு குறிப்பிட்ட ஐரோப்பிய ஒன்றிய ஷிப்பிங் மண்டலத்தை உருவாக்கவும் (உலகின் பிற பகுதிகள் என்பதை அல்ல)
வரி வீதத்தைத் தயாரிப்பு வகை பாதிக்காதது தொடர்பான சிக்கலைத் தீர்க்கவும்

நீங்கள் ஒரு தயாரிப்பு வகையை அமைத்திருந்தும், எதிர்பார்க்கப்படும் குறைக்கப்பட்ட அல்லது விலக்கு அளிக்கப்பட்ட வீதம் பயன்படுத்தப்படவில்லை எனில், சாத்தியமான பின்வரும் காரணங்களை மதிப்பாய்வு செய்யவும்:

சாத்தியமான காரணம்சரிபார்ப்பது எப்படிதீர்வு
வகை உறுதிப்படுத்தப்படவில்லைபரிந்துரைக்கப்படும் வகைகளானது purple நிறத்தில் காட்டப்படும், அவற்றை உறுதிப்படுத்தும் வரை செயல்பாட்டுக்கு வராதுபரிந்துரைக்கப்பட்ட வகையை ஏற்கவும் அல்லது புதியதைத் தேர்ந்தெடுக்கவும்
வரி ஓவர்ரைடு செயல்பாட்டில் உள்ளதுஅமைப்புகள் > வரிகள் மற்றும் சுங்க வரிகள் என்பதில் தயாரிப்பு அல்லது சேகரிப்பு ஓவர்ரைடுகள் உள்ளனவா எனச் சரிபார்க்கவும்முரண்படும் வரி ஓவர்ரைடுகளை அகற்றவும்
தயாரிப்பானது பொருள்வடிவில் இல்லாதது எனக் குறிக்கப்பட்டுள்ளதுஇது ஒரு பொருள்வடிவிலான தயாரிப்பு என்பதற்கான தயாரிப்பு அமைப்புகளைச் சரிபார்க்கவும்பொருத்தமானதாக இருப்பின், தயாரிப்பைப் பொருள்வடிவில் உள்ளதாகக் குறிக்கப் புதுப்பிக்கவும்
ஆர்டர் வகைக்கு ஆதரவில்லைமூன்றாம் தரப்புச் செயலி ஆர்டர்கள், API ஆர்டர்கள் அல்லது ஓவர்ரைடுகள் உள்ள ஆர்டர்கள்இந்த ஆர்டர் வகைகளுக்குத் தயாரிப்பு வகைகள் பொருந்தாது
வகையானது மிகவும் பொதுவாக உள்ளதுதயாரிப்பு வகையின் பிரத்தியேகத் தன்மையை மதிப்பாய்வு செய்யவும்இன்னும் பிரத்தியேகமான துணை வகையைத் தேர்ந்தெடுக்கவும்
VAT இன்வாய்ஸ் உருவாக்கப்படாதது தொடர்பான சிக்கலைத் தீர்க்கவும்

ஒரு ஆர்டருக்காக VAT இன்வாய்ஸ் உருவாக்கப்படவில்லை எனில், சாத்தியமான பின்வரும் காரணங்களை மதிப்பாய்வு செய்யவும்:

  • உங்களின் வரி அமைப்புகளில் தானியங்கு VAT விலைப்பட்டியல்கள் முடக்கப்பட்டிருக்கலாம்.
  • அந்த ஆர்டருக்குச் சுங்க வரிகள் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட்டிருக்கலாம்.
  • ஆர்டர் இலக்கு ஐரோப்பிய ஒன்றியம் அல்லது யுனைடெட் கிங்டமில் இல்லாமல் இருக்கலாம்.
  • ஆர்டர் போர்ச்சுகலுக்கு ஷிப்பிங் செய்யப்படுகிறது (தற்போது தானியங்கு VAT விலைப்பட்டியல்களுக்கு ஆதரவில்லை).
தவறான VAT வீதம் பயன்படுத்தப்பட்டது தொடர்பான சிக்கலைத் தீர்க்கவும்

ஒரு ஆர்டருக்குப் பயன்படுத்தப்பட்ட VAT வீதம் நீங்கள் எதிர்பார்த்ததுடன் பொருந்தவில்லை எனில், சாத்தியமான பின்வரும் காரணங்களை மதிப்பாய்வு செய்யவும்:

  • முகவரிச் சரிபார்ப்பு: வாடிக்கையாளரின் முகவரி வேறு ஒரு அதிகார வரம்பில் சரிபார்க்கப்படலாம். முகவரி முழுமையாகவும் சரியாகவும் உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
  • பிராந்திய வேறுபாடுகள்: நாடுகளுக்கு உள்ளேயே சில பிராந்தியங்களில் வெவ்வேறு VAT வீதங்கள் இருக்கலாம், அவற்றுக்கு முழுமையான ஆதரவு இருக்காது. பிராந்திய ரீதியான VAT வீத வேறுபாடுகள் என்பதைப் பார்க்கவும்.
  • தயாரிப்பு வகை: தயாரிப்பு வகையானது தயாரிப்பைத் துல்லியமாகப் பிரதிபலிக்காமல் இருக்கலாம். மேலும் பிரத்தியேகமான வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
  • ஷிப்பிங் தோற்றம்: சில பதிவு வகைகளுக்கு வரிகளைக் கணக்கிடும் போது, ஆர்டர் எங்கிருந்து ஷிப்பிங் செய்யப்படுகிறது என்பதைச் சிஸ்டம் கருத்தில் கொள்ளும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனது தயாரிப்பு வகை சரியானது என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது?

உங்கள் தயாரிப்பு வகை சரியானது தானா என்பதைச் சரிபார்க்க, பின்வரும் படிகளை நிறைவுசெய்யவும்:

  1. Shopify இன் நிலையான தயாரிப்பு வகைப்பாட்டுக்கு எதிராகத் தயாரிப்பு வகையை மதிப்பாய்வு செய்யவும்.
  2. வரிக் கணக்கீட்டைச் சோதிக்க, ஒரு வரைவு ஆர்டரை உருவாக்கவும்.
  3. இலக்கு நாட்டில் உங்கள் தயாரிப்பு வகைக்காக எதிர்பார்க்கப்படும் வீதத்துடன் கணக்கிடப்பட்ட வீதத்தை ஒப்பிடவும்.
  4. உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை எனில், ஐரோப்பிய ஒன்றியம் அல்லது யுனைடெட் கிங்டம் VAT இல் நிபுணத்துவம் பெற்ற ஒரு வரி நிபுணரைத் தொடர்புகொள்ளவும்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யுனைடெட் கிங்டமில் Shopify Tax குறித்த உதவியைப் பெறவும்

பின்வரும் வகையான கேள்விகளுக்கு வரி நிபுணரைத் தொடர்புகொள்ளவும்:

  • குறிப்பிட்ட சில நாடுகளில் நீங்கள் VAT க்குப் பதிவுசெய்ய வேண்டுமா
  • உங்கள் வணிகத்திற்கு எந்த VAT பதிவு வகை (OSS, IOSS அல்லது நாடு சார்ந்தது) சரியானது
  • உங்களின் தயாரிப்புகள் குறைக்கப்பட்ட VAT வீதங்களுக்குத் தகுதி பெறுகின்றனவா
  • B2B விற்பனைகள் அல்லது டிஜிட்டல் பொருட்கள் போன்ற குறிப்பிட்ட வரிச் சூழ்நிலைகளைக் கையாள்வது எப்படி
  • VAT தாக்கல் செய்தல் மற்றும் பணம் அனுப்புதல் தொடர்பான இணக்கக் கேள்விகள்

பின்வரும் வகையான கேள்விகளுக்கு Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்:

  • Shopify இல் உங்களின் வரி அமைப்புகளை எப்படி உள்ளமைப்பது
  • தயாரிப்பு வகைகளை எப்படி அமைப்பது அல்லது புதுப்பிப்பது
  • VAT இன்வாய்ஸ் உருவாக்கத்தில் உள்ள தொழில்நுட்பச் சிக்கல்கள்
  • Shopify Tax அம்சங்கள் மற்றும் செயல்பாடு குறித்த கேள்விகள்
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விற்பனை செய்ய எனக்கு எந்தப் பதிவு வகை தேவை?

உங்களுக்குத் தேவையான பதிவு வகையானது, உங்கள் வணிக இருப்பிடம் மற்றும் நீங்கள் எதை விற்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. பொதுவான பின்வரும் வழிகாட்டுதல்களை மதிப்பாய்வு செய்யவும்:

  • OSS (ஒன்றியத் திட்டம்): பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குப் பொருள்வடிவிலான அல்லது டிஜிட்டல் பொருட்களை எல்லை தாண்டி விற்பனை செய்யும் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள வணிகர்களுக்கு
  • IOSS (Import One-Stop Shop): ஐரோப்பிய ஒன்றிய வாடிக்கையாளர்களுக்கு €150 EUR அல்லது அதற்கும் குறைவான மதிப்புள்ள பொருள்வடிவிலான பொருட்களை விற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள வணிகர்களுக்கு
  • Non-Union OSS: ஐரோப்பிய யூனியன் நுகர்வோருக்கு டிஜிட்டல் பொருட்கள் அல்லது சேவைகளை விற்பனை செய்யும் ஐரோப்பிய யூனியனுக்கு வெளியே செயல்படும் வணிகர்களுக்கு
  • குறு வணிக விலக்கு: ஆண்டுக்கு €10,000 EUR க்கும் குறைவான எல்லை தாண்டிய விற்பனை செய்யும் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள வணிகர்களுக்கு (தாய்நாட்டின் VAT வீதம் வசூலிக்கப்படும்)
  • நாடு சார்ந்த பதிவு: ஒவ்வொரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டிலும் தனித்தனி VAT அறிக்கைகளைத் தாக்கல் செய்ய வேண்டிய வணிகர்களுக்கு

Non-Union OSS என்பது ஐரோப்பிய யூனியனுக்கு வெளியே செயல்படும் வணிகர்கள், Member State of Identification என்று அழைக்கப்படும் தங்களுக்கு விருப்பமான வரி அதிகார அமைப்பிடம் பதிவுசெய்ய அனுமதிக்கும் ஒரு திட்டமாகும். ஐரோப்பிய யூனியனில் எந்த நிறுவனமும் இல்லாத வணிகர்கள், ஐரோப்பிய யூனியனில் உள்ள நுகர்வோருக்குத் தாங்கள் விற்கும் டிஜிட்டல் பொருட்கள் அல்லது சேவைகளின் வணிகர்-டு-நுகர்வோர் (B2C) விற்பனைகளுக்கான VAT-ஐக் கணக்கிட இதைப் பயன்படுத்துகின்றனர். மின்-புத்தகங்கள், தரவிறக்கக்கூடிய இசை மற்றும் திரைப்படங்கள், செயலிகள், மென்பொருள் மற்றும் கேம்கள் போன்று, மிகக் குறைவான மனித ஈடுபாட்டுடன் அல்லது மனித ஈடுபாடே இல்லாமல் இணையம் வழியாக உங்கள் வாடிக்கையாளர்களை வழக்கமாகச் சென்றடையும் வகையில் ஆன்லைனில் நீங்கள் விற்கும் தயாரிப்புகள், டிஜிட்டல் பொருட்கள் ஆகும்.

Non-Union OSS பதிவு எண் EUxxxyyyyyz என்ற வடிவமைப்பைப் பயன்படுத்தும். இந்த எண்ணை Non-Union OSS விற்பனைகளுக்கு மட்டுமே பயன்படுத்தவும்.

Non-Union OSS பதிவுக்காக உங்கள் Shopify நிர்வாகியில் தனி விருப்பத்தேர்வு எதுவும் இல்லை. உங்கள் நிறைவேற்றும் இடங்கள் EU-க்கு வெளியே இருக்கும்போது OSS பதிவு விருப்பத்தேர்வு பொருந்தாது, எனவே Non-Union OSS பதிவுக்காக அதைப் பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக, நீங்கள் டிஜிட்டல் பொருட்கள் அல்லது சேவைகளை விற்கும் ஒவ்வொரு EU நாட்டுக்கும் EU நாட்டில் VAT-ஐ வசூலி பிரிவில் ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சார்ந்த பதிவைச் சேர்த்து, ஒவ்வொன்றுக்கும் உங்களின் Non-Union OSS பதிவு எண்ணை உள்ளிடவும்.

உங்கள் வணிகத்திற்கு எந்தப் பதிவு வகை சரியானது என்பது குறித்த பிரத்தியேக வழிகாட்டுதலுக்கு, ஒரு வரி நிபுணரைத் தொடர்புகொள்ளவும்.

என்னால் OSS மற்றும் IOSS இரண்டையும் பயன்படுத்த முடியுமா?

உங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இடங்கள் (கலப்பின வணிகர்) இருந்தால், உங்களால் Shopify இல் OSS மற்றும் IOSS இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியாது. இந்தச் சூழ்நிலையில் நீங்கள் OSS ஐ அமைக்க வேண்டும், அப்போது நிறைவேற்றும் இடம் எதுவாக இருந்தாலும் ஐரோப்பிய ஒன்றிய வாடிக்கையாளர்களின் அனைத்து ஆர்டர்களுக்கும் VAT பயன்படுத்தப்படும்.

எனது டிஜிட்டல் தயாரிப்புகளுக்கு ஏன் வரி விதிக்கப்படவில்லை?

உங்கள் டிஜிட்டல் தயாரிப்புகளுக்கு வரி விதிக்கப்படவில்லை எனில், பின்வரும் காரணிகளைச் சரிபார்க்கவும்:

  • தயாரிப்பானது பொருள்வடிவில் இல்லாதது என அமைக்கப்பட்டுள்ளது (சில பிராந்தியங்களில் டிஜிட்டல் தயாரிப்புகளுக்கு வெவ்வேறு விதமாக வரி விதிக்கப்படும்).
  • டிஜிட்டல் பொருட்களுக்கான சரியான மதிப்புக்கூட்டு வரிப் பதிவை நீங்கள் பெற்றுள்ளீர்கள். நீங்கள் EU-க்கு வெளியே செயல்பட்டு, Non-Union OSS-க்குப் பதிவுசெய்திருந்தால், நீங்கள் விற்பனை செய்யும் ஒவ்வொரு EU நாட்டுக்கும் உங்களுடைய Non-Union OSS எண்ணுடன் ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சார்ந்த பதிவைச் சேர்த்துள்ளீர்கள்.
  • தயாரிப்பு வகையானது அது ஒரு டிஜிட்டல் தயாரிப்பு என்பதைத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில், வாடிக்கையாளரின் இலக்கைப் பொறுத்துப் பொதுவாக டிஜிட்டல் பொருட்களுக்கும் பொருள்வடிவிலான பொருட்களைப் போலவே வரி விதிக்கப்படும், ஆனால் பதிவுத் தேவைகள் வேறுபடலாம்.

Shopify Tax ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யுனைடெட் கிங்டம் விலை நிர்ணயம்

Shopify Tax விலை நிர்ணயம் குறித்த முழுமையான தகவலுக்கு, அனைத்துப் பிராந்தியங்களுக்குமான விலை நிர்ணய மேலோட்டப் பக்கத்தைப் பார்க்கவும்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யுனைடெட் கிங்டமில் Shopify Tax குறித்து Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளத் தயாராகுங்கள்

Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன், உங்கள் சிக்கலை விரைவாகத் தீர்க்க உதவ பின்வரும் தகவல்களைச் சேகரிக்கவும்:

  • நீங்கள் என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள் மற்றும் அதற்குப் பதிலாக என்ன நடக்கிறது என்பதற்கான விளக்கம்
  • சிக்கலைக் காட்டும் ஆர்டருக்கான நிர்வாகி இணைப்பு (ஆர்டர்கள் என்பதற்குச் சென்று, ஆர்டரைக் கிளிக் செய்து, உங்கள் உலாவியிலிருந்து URL ஐ நகலெடுக்கவும்)
  • சாத்தியமானால், ஒப்பீட்டிற்காக மதிப்புக்கூட்டு வரி சரியாகக் கணக்கிடப்பட்ட ஆர்டருக்கான நிர்வாகி இணைப்பு
  • உங்களிடம் இருந்தால் உங்கள் Non-Union OSS எண் உள்ளிட்ட உங்கள் மதிப்புக்கூட்டு வரிப் பதிவு எண்கள் மற்றும் OSS, IOSS, micro-business அல்லது குறிப்பிட்ட நாடு சார்ந்தவை போன்ற பதிவு வகைகள்
  • வாடிக்கையாளரின் ஷிப்பிங் முகவரி (நாடு மற்றும் அஞ்சல் குறியீடு)
  • பாதிக்கப்பட்ட தயாரிப்பு(களுக்கு) ஒதுக்கப்பட்ட தயாரிப்பு வகை
  • ஆர்டர் பருப்பொருள் பொருட்களுக்கானதா, டிஜிட்டல் பொருட்களுக்கானதா அல்லது இரண்டுக்குமானதா என்பது
  • ஆர்டருக்கான நிறைவேற்றும் இடம்
  • சிக்கல் எப்போது ஏற்படத் தொடங்கியது
  • சிக்கல் தீர்த்தல் பிரிவிலிருந்து நீங்கள் ஏற்கனவே முயற்சித்த படிகள்