ஜெர்மனியில் TSE இணக்கம்
ஏப்ரல் 1, 2021 முதல், ஜெர்மன் சில்லறை வணிகர்கள் அனைவரும் ஜெர்மனியில் உள்ள புதிய KassenSichV கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும். நேரிலோ அல்லது ரொக்கப் பேமெண்ட்டுகளை ஏற்கும் டிஜிட்டல் பணப் பதிவேட்டைக் கொண்ட ஜெர்மனியில் விற்கும் அனைத்து வணிகர்களையும் இந்தக் கட்டுப்பாடு பாதிக்கிறது. இந்தக் கட்டுப்பாட்டின் கீழ், தணிக்கை நோக்கங்களுக்காக மின்னணுப் பணப் பதிவேடுகளை வணிகர்கள் தொழில்நுட்பப் பாதுகாப்பு அமைப்புடன் (TSE) இணைக்க வேண்டியது அவசியமாகும்.
TSE கட்டுப்பாட்டுக்கு இணங்க, Shopify App Store இல் உள்ள TSE (KassenSichV) செயலியை நீங்கள் பயன்படுத்தலாம். மாதாந்திரச் சந்தாக் கட்டணத்தில், நிதி தொடர்பான அனைத்து ஸ்டோர் பரிவர்த்தனைகளையும் வெளிப்புற கிளவுட் சேமிப்பக இடத்தில் TSE (KassenSichV) செயலி சேமிக்கிறது. வெளிப்புற கிளவுட் சேமிப்பகத் தீர்வினை மூன்றாம் தரப்பு இணக்கச் சேவை வழங்குநரான Fiskaly வழங்குகிறது.
உங்கள் வரித் தகவல் மற்றும் தொடர்புடைய சில்லறை விற்பனை ஸ்டோர் இடங்களுடன் TSE (KassenSichV) செயலியை அமைத்த பிறகு, வரி அதிகாரிகளால் தணிக்கை நோக்கங்களுக்குத் தேவைப்படும்போது உங்கள் TSE தரவை நீங்கள் ஏற்றுமதி செய்யலாம்.
இந்தப் பக்கத்தில்
- சான்றிதழ்
- சந்தா விலை நிர்ணயம்
- செக்அவுட்கள் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல்களுக்கான Shopify POS ஒருங்கிணைப்பு
- TSE (KassenSichV) செயலியை நிறுவுதல்
- TSE (KassenSichV) செயலியை அமைத்தல்
- உங்கள் TSE (KassenSichV) செயலி அமைப்புகளை மாற்றியமைத்தல்
- செயலில் உள்ள உங்கள் இருப்பிடங்களை நிர்வகித்தல்
- TSE (KassenSichV) செயலியைப் பயன்படுத்தி TSE மற்றும் DSFinV-K தரவை ஏற்றுமதி செய்தல்
- மின்னணுப் பணப் பதிவேடு அறிவிப்பை ஏற்றுமதி செய்தல்
சான்றிதழ்
TSE (KassenSichV) செயலி ஒரு இணக்கமான தீர்வாகும், மேலும் இது சான்றளிக்கப்பட்ட TSE-களை ஆதரிக்கிறது. TSE கிளவுட் தீர்வு Fiskaly ஆல் வழங்கப்படுகிறது, மேலும் BSI சான்றிதழ் விவரங்கள் Fiskaly இணையதளத்தில் கிடைக்கின்றன.
சந்தா விலை நிர்ணயம்
TSE (KassenSichV) செயலிக்காக, ஒவ்வொரு கடை இருப்பிடத்திற்கும் $9 USD மாதாந்திரச் சந்தாக் கட்டணத்தை வணிகர்கள் செலுத்துகிறார்கள். இந்தக் கட்டணமானது உங்கள் POS சந்தாக் கட்டணங்களுடன் கூடுதலாகச் செலுத்தப்பட வேண்டியதாகும்.
Shopify App Store பில்லிங் சிஸ்டத்தின் மூலம், நிறுவிய தேதியின் அடிப்படையில் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
செக்அவுட்கள் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல்களுக்கான Shopify POS ஒருங்கிணைப்பு
பணம் செலுத்தும் அனைத்து Shopify திட்டங்களிலும் TSE (KassenSichV) செயலி ஆதரிக்கப்படுகிறது. TSE (KassenSichV) செயலியுடனான ஒருங்கிணைப்பைச் செயல்படுத்த, உங்கள் POS செயலியைச் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்க வேண்டும்.
சில்லறை விற்பனை ஸ்டோர் இடங்கள் TSE ஆதரவைச் செயல்படுத்தியிருக்கும் போது, TSE தகவல் வாடிக்கையாளர் ரசீதுகளில் அச்சிடப்படும். உங்களின் முற்றிலும் புதிய Shopify POS-இல் எந்தவொரு ஆதரிக்கப்படும் ரசீது அச்சுப்பொறியையும் பயன்படுத்தலாம்.
சில்லறை விற்பனை ஸ்டோர் இடத்தில் உள்ள கிடைக்கும் சாதனங்களுடன் ஒருங்கிணைக்க TSE (KassenSichV) செயலிக்கு நீங்கள் அனுமதி அளித்தால், உங்கள் ஸ்டோர் பதிவேடுகள் எதிலும் பொருந்தக்கூடிய TSE தகவலுடன் நீங்கள் ரசீதுகளை அச்சிடலாம்.
TSE (KassenSichV) செயலியை நிறுவுதல்
Shopify App Store-இல் இருந்து TSE (KassenSichV) செயலியை நீங்கள் நிறுவலாம்.
படிகள்:
- TSE (KassenSichV) செயலி பக்கத்திற்குச் செல்லவும்.
- செயலியைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் Shopify கணக்கில் நீங்கள் உள்நுழையவில்லை என்றால், உங்களை உள்நுழையக் கேட்கும்.
- செயலியை நிறுவு என்பதைக் கிளிக் செய்யவும்.
TSE (KassenSichV) செயலியை அமைத்தல்
TSE (KassenSichV) செயலியை நிறுவிய பிறகு, உங்கள் VAT ID மற்றும் வரி எண்ணை (TIN) நீங்கள் வழங்க வேண்டும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, செயலிகள் > TSE (KassenSichV) என்பதற்குச் செல்லவும்.
TSE-ஐ அமை என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் VAT ID மற்றும் வரி எண்ணை (TIN) உள்ளிடவும். வரி எண் என்பது உங்கள் உள்ளூர் வரி அலுவலகத்தால் வழங்கப்படும் 13-இலக்க Steuernummer ஆகும்.
அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
பணத்தைத் திரும்பப்பெறுதல்கள் மற்றும் பரிமாற்றங்கள் உட்பட, சில்லறைப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் அனைத்துக் கடை இருப்பிடங்களையும் தேர்ந்தெடுக்கவும். TSE பதிவுக்கு முகவரி தேவைப்படுவதால், ஒவ்வொரு இருப்பிடத்திலும் முழுமையான முகவரி இருப்பதை உறுதிசெய்யவும்.
உறுதிசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.
சந்தாவை அனுமதி பக்கத்தில், உங்களின் சந்தாக் கட்டணங்களையும் பில்லிங் சுழற்சியையும் மதிப்பாய்வு செய்யவும்.
உங்கள் சந்தாவை உறுதிசெய்ய, சந்தாவை அனுமதி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் TSE (KassenSichV) செயலி அமைப்புகளை மாற்றியமைத்தல்
தேவையெனில், உங்கள் VAT ID மற்றும் வரி எண்ணை (TIN) நீங்கள் மாற்றியமைக்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, செயலிகள் > TSE (KassenSichV) என்பதற்குச் செல்லவும்.
அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
வரி அடையாளங்காட்டி பிரிவில், உங்களின் VAT ID மற்றும் வரி எண்ணைப் (TIN) (13-இலக்க Steuernummer) புதுப்பிக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் செயலில் உள்ள இருப்பிடங்களை நிர்வகித்தல்
உங்களின் TSE இணக்க ஏற்றுமதிகளில் பயன்படுத்துவதற்கான செயலில் உள்ள கடை இருப்பிடங்களின் பட்டியலை நீங்கள் நிர்வகிக்கலாம். பணத்தைத் திரும்பப்பெறுதல்கள் மற்றும் பரிமாற்றங்கள் உட்பட நீங்கள் சில்லறைப் பரிவர்த்தனைகளைச் செய்யும் அனைத்து இருப்பிடங்களையும் நீங்கள் செயல்படுத்த வேண்டும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, செயலிகள் > TSE (KassenSichV) என்பதற்குச் செல்லவும்.
உங்கள் இருப்பிடங்கள் பிரிவில், TSE-ஐ நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
கடை இருப்பிடங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் அவற்றின் தேர்வினை நீக்குவதன் மூலமும் செயலில் உள்ள இருப்பிடங்களைச் சேர்க்கலாம் அல்லது அகற்றலாம். ஒவ்வொரு கடை இருப்பிடத்திற்கும் சந்தாக் கட்டணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
சந்தாவை அனுமதி பக்கத்தில், உங்களின் சந்தாக் கட்டணங்களையும் பில்லிங் சுழற்சியையும் மதிப்பாய்வு செய்யவும்.
உங்கள் சந்தாவை உறுதிசெய்ய, சந்தாவை அனுமதி என்பதைக் கிளிக் செய்யவும்.
TSE (KassenSichV) செயலியைப் பயன்படுத்தி TSE மற்றும் DSFinV-K தரவை ஏற்றுமதி செய்தல்
வரி அதிகாரிகளின் தணிக்கை நோக்கங்களுக்குத் தேவையானபடி, உங்கள் Shopify ஸ்டோருக்கான பின்வரும் தரவை ஏற்றுமதி செய்ய TSE (KassenSichV) செயலி உங்களை அனுமதிக்கிறது:
- TSE சான்றிதழ்கள்
- தற்போது மற்றும் முன்பு செயலில் உள்ள அனைத்து இருப்பிடங்களிலும் உள்ள விற்பனைப் புள்ளி (POS) சாதனங்களுக்கான பரிவர்த்தனைத் தரவு
- முழுமையான DSFinV-K (Digitale Schnittstelle der Finanzverwaltung für Kassensysteme) ஏற்றுமதி
தரவு உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக அனுப்பப்படும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, செயலிகள் > TSE (KassenSichV) என்பதற்குச் செல்லவும்.
TSE தரவை ஏற்றுமதி செய் பிரிவில், ஏற்றுமதி செய்வதற்கான தேதியம்பைத் தேர்ந்தெடுத்து, செயல்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
ஏற்றுமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
மின்னணுப் பணப் பதிவேட்டு அறிவிப்பை ஏற்றுமதி செய்தல்
ஜனவரி 1, 2025 முதல், அனைத்து ஜெர்மனியச் சில்லறை வணிகர்களும் தங்களின் மின்னணுப் பணப் பதிவேடுகளை வரி அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். வரி செலுத்துவோர் சுயவிவரத்தை உருவாக்கி, உங்களின் தேவையான அறிவிப்பின் XML (Extensible Markup Language) ஏற்றுமதியை உருவாக்க, நீங்கள் TSE (KassenSichV) செயலியைப் பயன்படுத்தலாம்.
குறிப்பிட்ட இருப்பிடத்தில் எந்த POS சாதனங்கள் இயங்குகின்றன, சாதனங்களை வைத்திருக்கும் வரி செலுத்துபவர் மற்றும் ஒவ்வொரு சாதனமும் இணைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பப் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்பான மெட்டாடேட்டா பற்றிய தகவல்கள் இந்த அறிவிப்பில் அடங்கும்.
வரி செலுத்துவோர் சுயவிவரத்தை உருவாக்குதல்
நீங்கள் பயன்படுத்தும் மின்னணுப் பணப் பதிவேடுகளின் XML அறிவிப்பை ஏற்றுமதி செய்யும் முன், நீங்கள் வரி செலுத்துவோர் சுயவிவரத்தை உருவாக்க வேண்டும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, செயலிகள் > TSE (KassenSichV) என்பதற்குச் செல்லவும்.
அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
வரி செலுத்துவோர் சுயவிவரத்தை உருவாக்கு அல்லது புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் 13-இலக்க வரி அடையாள எண் (Steuernummer) மற்றும் ஒவ்வொரு செயலில் உள்ள இருப்பிடத்திற்கான முகவரிகள் உட்பட, உங்கள் வரி செலுத்துவோர் சுயவிவரத்திற்கான தேவையான விவரங்களை உள்ளிடவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
XML அறிவிப்பை ஏற்றுமதி செய்தல்
உங்கள் வரி செலுத்துவோர் சுயவிவரத்தை உருவாக்கிய பிறகு, ஜெர்மனிய வரி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க, நீங்கள் பயன்படுத்தும் மின்னணுப் பணப் பதிவேடுகளின் XML அறிவிப்பை ஏற்றுமதி செய்யலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, செயலிகள் > TSE (KassenSichV) என்பதற்குச் செல்லவும்.
அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
வரி செலுத்துவோர் சுயவிவரத்தை உருவாக்கு அல்லது புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
XML அறிவிப்பை ஏற்றுமதி செய் பிரிவில், ஏற்றுமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
XML ஆவணங்களைக் கொண்ட ஜிப் கோப்பைப் பதிவிறக்குவதற்கான இணைப்பைக் கொண்ட மின்னஞ்சலை 24 மணிநேரத்திற்குள் பெறுவீர்கள்.