UK வரி குறிப்பு
பிரெக்சிட் மாறுதல் காலம் டிசம்பர் 31, 2020 அன்று முடிவடைந்தது. இதன் விளைவாக, ஜனவரி 1, 2021 முதல், UK மற்றும் EU இடையேயான விற்பனைகளுக்குப் புதிய சட்டங்கள் பொருந்தும். நீங்கள் பின்வருவனவற்றில் ஒன்றாக இருந்தால், இந்த மாற்றத்தால் உங்கள் வரிச் செயல்முறைகளை மதிப்பாய்வு செய்து புதுப்பிக்க வேண்டியிருக்கலாம்:
- UK வணிகர் - நீங்கள் யுனைடெட் கிங்டமில் வணிகத்தைக் கொண்டுள்ள வணிகர்.
- EU வணிகர் - நீங்கள் யுனைடெட் கிங்டம் தவிர வேறு ஏதேனும் ஐரோப்பிய ஒன்றிய (EU) உறுப்பு நாட்டில் வணிகத்தைக் கொண்டுள்ள வணிகர்.
- EU அல்லாத வணிகர் - நீங்கள் UK மற்றும் EU அல்லாத வேறொரு நாட்டில் வணிகத்தைக் கொண்டுள்ள வணிகர்.
நீங்கள் ஒரு UK வணிகராக இருந்து, EU உறுப்பு நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தாலோ, அல்லது நீங்கள் ஒரு EU வணிகராக இருந்து, UK-இல் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தாலோ, உங்கள் வணிகத்தின் பல அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்றங்கள் உள்ளன.
இந்தப் பக்கத்தில்
- VAT
- சர்வதேச வணிகர்களுக்கான சுங்க வரிகள் மற்றும் உள்நாட்டு வரி வசூலிப்பு
- உங்கள் வரி அமைப்புகளைப் புதுப்பித்தல்
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- வடக்கு அயர்லாந்தில் VAT கணக்கீடு
- Shopify-இல் EU மற்றும் UK வரிகளை அமைக்கத் தொடங்கும் முன்
- UK-க்கு உங்களின் மதிப்புக்கூட்டு வரிப் பதிவை அமையுங்கள்
- EU-க்கான உங்களின் மதிப்புக்கூட்டு வரிப் பதிவுகளை அமையுங்கள்
- உங்கள் மதிப்புக்கூட்டு வரிப் பதிவுகளை நிர்வகியுங்கள்
- தொடர்புடைய இணைப்புகள்
VAT
ஜனவரி 1, 2021 முதல் UK-இல் புதிய VAT சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்தப் புதிய சட்டங்கள் UK வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் EU மற்றும் EU அல்லாத வணிகர்கள் இருவரையும் பாதிக்கின்றன.
மற்ற உறுப்பு நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் போது, அந்த உறுப்பு மாநிலத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கான அவர்களின் விற்பனை குறிப்பிட்ட வரம்பை மீறாதவரை, VAT-க்குப் பதிவுசெய்யும் தேவையைக் குறைக்கும் எளிமையாக்கப்பட்ட நடைமுறைகளால் EU வணிகர்கள் பயனடைகின்றனர். இந்த வரம்பிற்குள், வணிகர்கள் தங்கள் சொந்த பிராந்தியங்களில் மட்டும் ஒரு VAT எண்ணுக்குப் பதிவுசெய்தால் போதுமானது, அல்லது பதிவுசெய்யவே தேவையில்லை.
மாறுதல் காலத்திற்குப் பிறகு, EU வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் UK வணிகர்களும், UK வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் EU வணிகர்களும் இந்த எளிமையாக்கப்பட்ட நடைமுறைகளைப் பயன்படுத்த முடியாது. UK மற்றும் EU நாடுகளுக்கிடையே விற்பனை செய்யும் வணிகர்களுக்குக் கூடுதல் நாடுகளில் மதிப்புக்கூட்டு வரிப் பதிவுகள் தேவைப்படலாம்.
| வணிகரின் இடம் | மாற்றங்கள் மற்றும் தேவைகள் |
|---|---|
| யுனைடெட் கிங்டம் | UK வணிகர்கள் EU வாடிக்கையாளர்களுக்குச் செய்யும் சரக்கு விற்பனையானது, அனுப்புதல்கள் (ஒரு EU உறுப்பு நாட்டிலிருந்து மற்றொரு EU உறுப்பு நாட்டிற்குச் சரக்குகளை அனுப்புதல்) என்பதற்குப் பதிலாக, ஏற்றுமதிகள் (ஒரு நாடு அல்லது சுங்க ஒன்றியத்தில் இருந்து அந்த நாடு அல்லது சுங்க ஒன்றியத்திற்கு வெளியே சரக்குகளை அனுப்புதல்) என்று மாறிவிட்டது.
UK வணிகர்கள் VAT-க்குப் பதிவுசெய்ய வேண்டியிருக்கலாம், அத்துடன் EU-இல் இறக்குமதி VAT-க்குக் கணக்குக் காட்ட வேண்டியிருக்கலாம். உங்கள் விநியோகச் சங்கிலி, வாடிக்கையாளர்களின் இருப்பிடம் மற்றும் சரக்குகள் எங்கு டெலிவரி செய்யப்படுகின்றன போன்ற பல காரணிகளைப் பொறுத்து, பல EU உறுப்பு நாடுகளில் மதிப்புக்கூட்டு வரிப் பதிவுகள் தேவைப்படலாம். |
| ஐரோப்பிய ஒன்றியம் | EU வணிகர்கள் UK வாடிக்கையாளர்களுக்குச் செய்யும் சரக்கு விற்பனையானது, இறக்குமதிகள் (வெளி நாடு அல்லது சுங்க ஒன்றியத்தில் இருந்து ஒரு நாடு அல்லது சுங்க ஒன்றியத்திற்குள் சரக்குகளைப் பெறுதல்) என மாறியுள்ளது, இதற்கு முன்பு இது கையகப்படுத்தல்கள் (ஒரு EU உறுப்பு நாட்டிலிருந்து மற்றொரு EU உறுப்பு நாட்டிற்குச் சரக்குகளைப் பெறுதல்) என இருந்தது.
ஜனவரி 1, 2021-இல் நடைமுறைக்கு வந்த UK VAT சட்டங்களின் விளைவாக, £135 GBP அல்லது அதற்கும் குறைவான விற்பனைகளுக்குப் புதிய VAT தேவைகள் ஏற்படுகின்றன.
|
| UK மற்றும் EU-க்கு வெளியே | ஜனவரி 1, 2021-இல் நடைமுறைக்கு வந்த புதிய UK VAT சட்டங்கள், EU அல்லாத வணிகர்கள் UK வாடிக்கையாளர்களுக்குச் செய்யும் சரக்கு விற்பனைக்குப் பொருந்தும். UK வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும், EU அல்லாத வணிகர்கள் UK-இல் VAT-க்குப் பதிவுசெய்ய வேண்டியிருக்கலாம்.
ஜனவரி 1, 2021-இல் நடைமுறைக்கு வந்த UK VAT சட்டங்களின் விளைவாக, £135 GBP அல்லது அதற்கும் குறைவான விற்பனைகளுக்குப் புதிய VAT தேவைகள் ஏற்படுகின்றன.
|
சர்வதேச வணிகர்களுக்கான சுங்க வரிகள் மற்றும் உள்ளூர் வரி வசூல்
நீங்கள் UK-இல் விற்பனை செய்யும் சர்வதேச வணிகராக இருந்து, சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளைச் செயலாக்கினால், UK ஆர்டர்களுக்கான வரியைச் சுங்க வரி அமைப்பு மட்டுமே வசூலிக்கும். அந்த ஆர்டர்களுக்கு Shopify-இன் உள்ளமைக்கப்பட்ட வரி வசூல் பொருந்தாது.
உங்கள் வரி அமைப்புகளைப் புதுப்பித்தல்
நீங்கள் செய்ய வேண்டிய புதுப்பிப்புகளானது, தற்போது நீங்கள் எவ்வாறு உங்கள் வரிகளை நிர்வகிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
Shopify Tax
நீங்கள் Shopify Tax-ஐப் பயன்படுத்தினால், உங்களின் தற்போதைய பதிவுகள் தானாகவே புதுப்பிக்கப்படும். புதிய பதிவுகள் தானாகவே சேர்க்கப்படாது, மேலும் பிற நாடுகளில் நீங்கள் பதிவு செய்ய வேண்டுமானால், உங்களுக்கு எச்சரிக்கை எதுவும் வழங்கப்படாது. நீங்கள் எங்குப் பதிவு செய்ய வேண்டும் என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றால், உள்ளூர் வரி வல்லுநரைத் தொடர்புகொள்ளவும்.
மேனுவல் வரி
நீங்கள் இன்னும் Shopify Tax-க்கு மாறவில்லை எனில், உங்களின் தற்போதைய வரி அமைப்புகள் புதுப்பிக்கப்படாது. உங்கள் வரி அமைப்புகளைப் புதுப்பிக்க, Shopify Tax-க்குப் புதுப்பிக்கவும் அல்லது உங்கள் வரி வீதங்களை மேனுவலாகப் புதுப்பிக்கவும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பிரெக்சிட் (Brexit) பற்றி நான் எங்கே கூடுதல் தகவல்களைப் பெறலாம்?
பிரெக்சிட் உங்கள் வணிகத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றிய தகவல்களைப் பெறுவதற்கான சிறந்த வழி, உள்ளூர் வரி வல்லுநரைத் தொடர்புகொள்வதாகும்.
நிதிப் பிரதிநிதி என்பவர் யார்? எனக்கு அது தேவையா?
உள்ளூர் வரி அதிகாரிகளுடன் கையாளுவதில், உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூர் நிறுவனங்கள் அல்லது நபர்களே நிதிப் பிரதிநிதிகள் ஆவர். உங்கள் வரி அறிக்கையிடல் மற்றும் சில சமயங்களில் VAT கடன்களை நிர்வகிப்பதற்கு அவர்கள் பொறுப்பாவார்கள்.
உங்கள் வணிகம் EU உறுப்பு நாட்டைத் தளமாகக் கொண்டிருக்காமல், அங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் விற்பனை செய்தால், உள்ளூர்ப் பிரதிநிதி ஒருவரை நீங்கள் கொண்டிருக்க வேண்டுமெனச் சில EU உறுப்பு நாடுகள் கோருகின்றன. 2021 ஜனவரி 1-க்குப் பிறகு, UK வணிகர்கள் EU வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும்போது, நிதிப் பிரதிநிதியை நியமிக்க வேண்டியிருக்கலாம். அனைத்து EU உறுப்பு நாடுகளும் நிதிப் பிரதிநிதியைக் கோருவதில்லை, ஈகாமர்ஸ் விற்பனையாளர்களுக்கான தேவைகள் குறைவாகவே இருக்கலாம்.
EU உறுப்பு நாட்டில் நீங்கள் ஒரு நிதிப் பிரதிநிதியை நியமிக்க வேண்டுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை எனில், அவர்களின் வரி அதிகாரிகளை அல்லது உள்ளூர் வரி வல்லுநரைத் தொடர்புகொள்ளவும்.
எனக்குப் புதிய EORI எண் தேவையா?
அது சூழ்நிலையைப் பொறுத்தது. Economic Operator Registration and Identification Number (EORI) என்பது சுங்க அதிகாரங்கள், ஒப்புதல்கள் மற்றும் முடிவுகளைத் தடமறியவும் பதிவு செய்யவும் பயன்படுத்தப்படும் ஒரு ID குறியீடு ஆகும். முன்பு, ஒரு EORI எண்ணை UK மற்றும் பிற EU உறுப்பு நாடுகள் இரண்டிலும் வரி அதிகாரிகளுக்குப் பயன்படுத்த முடிந்தது. 2021 ஜனவரி 1-க்குப் பிறகு, UK மற்றும் EU-க்கு தனித்தனி EORI எண்கள் தேவைப்படும்.
நீங்கள் EU-க்குள் பொருட்களை இறக்குமதி செய்து, உங்களிடம் EORI எண் இல்லை எனில் அல்லது UK மூலம் வழங்கப்பட்ட 'GB' என்று தொடங்கும் EORI எண்ணை நீங்கள் வைத்திருந்தால், EU EORI எண்ணுக்கு விண்ணப்பிக்க வேண்டும். EU உறுப்பு நாட்டுக்கான EORI எண் உங்களுக்குத் தேவைப்பட்டால், அவர்களின் வரி அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவும்.
நீங்கள் UK-க்குள் பொருட்களை இறக்குமதி செய்து, உங்களிடம் EORI எண் இல்லை எனில் அல்லது வேறொரு EU உறுப்பு நாடு மூலம் வழங்கப்பட்ட EORI எண்ணை நீங்கள் வைத்திருந்தால், UK EORI-க்குப் பதிவு செய்ய வேண்டும். UK EORI எண்ணைப் பெற HM Revenue and Customs-இல் பதிவு செய்யலாம்.
உங்களுக்குப் புதிய EORI எண் தேவையா என்பது உறுதியாகத் தெரியவில்லை எனில், உள்ளூர் வரி வல்லுநரைத் தொடர்புகொள்ளவும்.
நான் டிஜிட்டல் தயாரிப்புகளை விற்கிறேன், இது என்னைப் பாதிக்குமா?
அது சூழ்நிலையைப் பொறுத்தது. VAT Mini One Stop Shop (MOSS) திட்டத்தில் இரண்டு மாறுபாடுகள் உள்ளன. union scheme (யூனியன் திட்டம்) என்பது EU-இல் நிறுவப்பட்டுள்ள அல்லது EU உறுப்பு நாட்டில் குறைந்தபட்சம் ஒரு கிளையைக் கொண்டுள்ள வணிகங்களுக்குக் கிடைக்கிறது. non-union (யூனியன்-அல்லாத திட்டம்) என்பது EU-இல் நிறுவப்படாத மற்றும் EU உறுப்பு நாடுகளில் எந்தவொரு கிளைகளையும் கொண்டிருக்காத வணிகங்களுக்குக் கிடைக்கிறது.
நீங்கள் தற்போது டிஜிட்டல் தயாரிப்புகளை விற்க MOSS திட்டத்தைப் பயன்படுத்தினால், VAT எண்ணுக்கு எப்படிப் பதிவு செய்வது என்பதைத் தீர்மானிக்க, உங்கள் வரி அதிகாரி அல்லது உள்ளூர் வரி வல்லுநரைத் தொடர்புகொள்ளவும்.
ஆர்டர் £135 GBP-க்கு மேல் இருந்தால், UK-இல் VAT-ஐ நான் எப்படிக் கட்டணமாக விதிப்பது?
£135 GBP-க்கு மேலான ஆர்டர்களுக்கு VAT-ஐக் கட்டணமாக விதிப்பதற்கான படிப்படியான வழிமுறைகளுக்கு, UK வணிகர்களுக்கான வரிப் பதிவு என்பதைப் பார்க்கவும்.
எனது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நான் மாற்ற வேண்டுமா?
பெரும்பாலும் ஆம். 2021 ஜனவரி 1-க்குப் பிறகு, UK மற்றும் EU உறுப்பு நாடுகளுக்கு இடையே பொருட்களை இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்யும்போது, உங்கள் தயாரிப்புகளுக்கு இறக்குமதி VAT மற்றும் சுங்கவரிகள் விதிக்கப்படலாம். மிகவும் பிரபலமான இரண்டு சர்வதேச வணிக விதிமுறைகள் (அல்லது இன்கோடெர்ம்ஸ்) பின்வருமாறு:
- சுங்கவரி செலுத்தப்பட்ட டெலிவரி (DDP). பொருட்கள் எல்லைகளைக் கடக்கும்போது செலுத்த வேண்டிய VAT மற்றும் சுங்க வரிகள் போன்ற எந்தவொரு இறக்குமதிச் செலவுகளுக்கும் விற்பனையாளரே பொறுப்பு என்பதை இந்த விதிமுறை குறிக்கிறது. இந்தப் விருப்பம், பொருட்களைப் பெறும்போது வாடிக்கையாளர் எதிர்பாராத கட்டணங்கள் அல்லது வரிகளைச் செலுத்துவதைத் தடுக்கிறது. ஆனால் DDP-இன் படி நீங்கள் இறக்குமதிச் செயல்முறையை நிர்வகிக்க வேண்டும், மேலும் இது VAT பதிவு கடமைகளை உருவாக்கலாம்.
- குறிப்பிட்ட இடத்தில் டெலிவரி (DAP). தயாரிப்பை ஷிப்பிங் செய்வதற்கு மட்டுமே விற்பனையாளர் பொறுப்பேற்பார் என்றும், VAT, சுங்க வரிகள் மற்றும் அனுமதி பெற்றதற்கான கட்டணங்கள் போன்ற எந்தவொரு இறக்குமதிச் செலவுகளையும் வாடிக்கையாளர் செலுத்த வேண்டும் என்பதையும் இந்த விதிமுறை குறிக்கிறது. இந்த விருப்பம், நீங்கள் இறக்குமதிச் செயல்முறையை நிர்வகிக்க வேண்டியதில்லை என்பதை உறுதிசெய்யலாம், ஆனால் DAP உங்கள் வாடிக்கையாளருக்கு எதிர்பாராத செலவுகளை உருவாக்குவதுடன், தாமதமான அல்லது திருப்பி அனுப்பப்பட்ட ஷிப்மென்ட்களுக்கு வழிவகுக்கலாம்.
நீங்கள் எந்த இன்கோடெர்ம்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையதே, ஆனால் பெரும்பாலான EU உறுப்பு நாடுகளைப் பொறுத்தவரை, உங்கள் வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய அனைத்துக் கட்டணங்கள் மற்றும் வரிகள் குறித்து அவர்களுக்குத் தெரியப்படுத்துவதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
HS குறியீடு என்றால் என்ன? நான் எப்படி ஒன்றைச் சேர்ப்பது?
ஹார்மோனைஸ்டு சிஸ்டம் (HS) குறியீடு என்பது சர்வதேச அளவில் ஷிப் செய்யப்படும் தயாரிப்புகளை அடையாளம் காணும் ஒரு வழியாகும், இதன் மூலம் ஷிப்மென்ட்களுக்கு வரிகள் மற்றும் சுங்கவரிகளைத் துல்லியமாக விதிக்க முடியும். இந்த அமைப்பைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள உலக சுங்க அமைப்பு (World Customs Organization) ஆதாரங்களை வழங்குகிறது, மேலும் உங்கள் தயாரிப்பின் HS குறியீட்டைக் கண்டறிய நீங்கள் இங்கே தேடலாம்.
உங்கள் தயாரிப்பின் HS குறியீட்டை நீங்கள் அறிந்தவுடன், அதை உங்கள் Shopify நிர்வாகியில் சேர்க்கலாம்.
வடக்கு அயர்லாந்தில் VAT கணக்கீடு
பிரெக்சிட் (Brexit) ஒப்பந்தத்தின்கீழ், வடக்கு அயர்லாந்து (NI) இரட்டை நிலையை ஏற்றுக்கொண்டதுடன், அது EU மற்றும் UK வரி விதிப்பு ஆகிய இரண்டின் ஒரு பகுதியாகவும் கருதப்படுகிறது. சரியான எல்லை தாண்டிய VAT வசூலை உறுதிசெய்ய, EU மற்றும் UK ஆகிய இரண்டு பிராந்தியங்களுக்கும் ஒரே வரிச் சேவையைப் பயன்படுத்தவும்.
நீங்கள் Shopify Tax-ஐப் பயன்படுத்தினால், ஆர்டரின் மூல இடம் மற்றும் அதன் இலக்கு ஆகியவற்றின் அடிப்படையில் VAT கணக்கிடப்படுகிறது. UK-க்குள் இருந்து வடக்கு அயர்லாந்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்குச் செல்லும் ஆர்டர்களுக்கு UK VAT பொருந்தும். EU-க்குள் இருந்து NI-இல் உள்ள வாடிக்கையாளர்களுக்குச் செல்லும் ஆர்டர்களுக்கு EU VAT பொருந்தும்.
| ஆர்டரின் மூல இடம் | ஆர்டரின் இலக்கு | செக்அவுட்டில் விதிக்கப்படும் VAT |
|---|---|---|
| யுனைடெட் கிங்டம் | யுனைடெட் கிங்டம் | உங்களிடம் UK VAT பதிவு இருந்தால், UK VAT கட்டணமாக விதிக்கப்படும். |
| வடக்கு அயர்லாந்து | உங்களிடம் UK VAT பதிவு இருந்தால், UK VAT கட்டணமாக விதிக்கப்படும். | |
| ஐரோப்பிய ஒன்றியம் | VAT கட்டணமாக விதிக்கப்படாது. | |
| வடக்கு அயர்லாந்து | யுனைடெட் கிங்டம் | உங்களிடம் UK VAT பதிவு இருந்தால், UK VAT கட்டணமாக விதிக்கப்படும். |
| வடக்கு அயர்லாந்து | உங்களிடம் UK VAT பதிவு இருந்தால், UK VAT கட்டணமாக விதிக்கப்படும். | |
| ஐரோப்பிய ஒன்றியம் | உங்களிடம் EU மதிப்புக்கூட்டு வரிப் பதிவு (VAT) இருந்தால், EU VAT வசூலிக்கப்படும். | |
| ஐரோப்பிய ஒன்றியம் | யுனைடெட் கிங்டம் | ஆர்டரின் செலவு மற்றும் உங்களிடம் UK மதிப்புக்கூட்டு வரிப் பதிவு உள்ளதா என்பதைப் பொறுத்து VAT கட்டணங்கள் மாறுபடும்.
|
| வடக்கு அயர்லாந்து |
| |
| ஐரோப்பிய ஒன்றியம் | உங்களிடம் EU மதிப்புக்கூட்டு வரிப் பதிவு (VAT) இருந்தால், EU VAT வசூலிக்கப்படும். |
ஜூலை 1 முதல், தனிப்பட்ட நாட்டின் வரம்புகள் பொருந்தாது. மாறாக, முழு EU-க்கும் ஒற்றை வரம்பே பொருந்தும்.
- உங்கள் சொந்த நாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, உங்களின் உள்ளூர் VAT வீதம் வசூலிக்கப்படும்.
- உங்கள் நாட்டைத் தவிர்த்து பிற EU நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்குப் பதிவுக்கான வரம்பை நீங்கள் மீறுகிறீர்களா என்பதன் மூலம் வீதம் தீர்மானிக்கப்படுகிறது.
- மற்ற அனைத்து EU உறுப்பு நாடுகளுக்குமான உங்கள் ஒட்டுமொத்த விற்பனை மொத்தம் €10,000 EUR-க்கும் குறைவாக இருந்தால், உங்கள் சொந்தப் பிராந்தியத்துக்கான VAT வீதத்தை வசூலிக்கலாம்.
- மற்ற அனைத்து EU உறுப்பு நாடுகளுக்குமான உங்கள் ஒட்டுமொத்த விற்பனை மொத்தம் €10,000 EUR அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால், பிற நாடுகள் அல்லது பிராந்தியங்களுக்குச் செய்யப்படும் அனைத்து விற்பனைக்கும் உங்கள் வாடிக்கையாளர் இருக்கும் இடத்தின் VAT வீதத்தை வசூலிக்கலாம்.
2021 ஜூலை 1 முதல் புதிய ஒருமுனைச் சேவைத் திட்டம் (OSS) கிடைக்கிறது. ஒவ்வொரு உறுப்பு நாட்டிலும் தனித்தனியாகப் பதிவுசெய்வதற்குப் பதிலாக, அனைத்து EU உறுப்பு நாடுகளிலும் நடக்கும் விற்பனைக்கு வணிகர்கள் VAT-ஐ வசூலித்துப் பணம் அனுப்ப OSS திட்டம் அனுமதிக்கிறது.
வடக்கு அயர்லாந்தில் (NI) இடங்களைக் கொண்டுள்ள வணிகர்கள் Import One-Stop Shop (IOSS) திட்டத்தைப் பயன்படுத்தாமல் OSS-ஐப் பயன்படுத்துகின்றனர். பிரெக்ஸிட்டின் கீழ், வடக்கு அயர்லாந்து இரட்டை அந்தஸ்தைப் பெற்றுள்ளதுடன் EU மற்றும் UK என இரண்டு வரி விதிப்பு முறைகளின் ஒரு பகுதியாகவும் கருதப்படுகிறது.
நீங்கள் Shopify Tax-ஐப் பயன்படுத்தினால், ஆர்டரின் மூல இடம் மற்றும் அதன் இலக்கு ஆகியவற்றின் அடிப்படையில் VAT கணக்கிடப்படுகிறது. ஐக்கிய ராச்சியத்திற்குள்ளிருந்து வடக்கு அயர்லாந்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்குச் செல்லும் ஆர்டர்களுக்கும், வடக்கு அயர்லாந்திற்குள்ளிருந்து ஐக்கிய ராச்சியத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்குச் செல்லும் ஆர்டர்களுக்கும் UK VAT பொருந்தும். ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளிருந்து வடக்கு அயர்லாந்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்குச் செல்லும் ஆர்டர்களுக்கும், வடக்கு அயர்லாந்திற்குள்ளிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்குச் செல்லும் ஆர்டர்களுக்கும் EU VAT பொருந்தும்.
Shopify-இல் EU மற்றும் UK வரிகளை அமைப்பதைத் தொடங்குவதற்கு முன்
நீங்கள் வரி வசூலிக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை எனில், உள்ளூர் வரி அதிகாரிகள் அல்லது வரி நிபுணரிடம் ஆலோசனை பெறவும். பொதுவாக, நீங்கள் EU-இல் உள்ள நாடுகளுக்கு விற்க விரும்பினால், EU VAT-ஐ வசூலிக்க உங்கள் சொந்த நாட்டில் உள்ள வரி அதிகாரிகளிடம் பதிவுசெய்ய வேண்டும். UK-இல் உள்ள வாடிக்கையாளர்களுக்கான உங்களின் விற்பனை 12 மாத காலக்கட்டத்தில் £90,000 GBP அல்லது அதற்கு மேல் இருந்தால், பொதுவாக UK VAT-ஐ வசூலிக்கப் பதிவுசெய்ய வேண்டும்.
EU-இல் உள்ள ஒரு நாட்டுக்கான விற்பனையில் குறிப்பிட்ட வரம்பை நீங்கள் மீறினால் அல்லது அங்கு உங்களுக்குக் கணிசமான அளவில் வணிகம் இருந்தால், நீங்கள் ஒருமுனைச் சேவை (OSS) திட்டத்தில் பதிவுசெய்ய வேண்டியிருக்கலாம் அல்லது தொடர்புடைய ஒவ்வொரு முகமையையும் தொடர்புகொண்டு அவர்களிடம் பதிவுசெய்ய வேண்டியிருக்கலாம். உங்கள் வணிகம் அமைந்துள்ள இடம், நீங்கள் விற்பனை செய்யும் இடம் மற்றும் தனிப்பட்ட அரசாங்கத் தேவைகளைப் பொறுத்து இந்தச் செயல்முறை மாறுபடும். நீங்கள் எந்த இடத்தில் VAT வசூலிக்கப் பதிவுசெய்துள்ளீர்கள் என்பது வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் வீதங்களைத் தீர்மானிக்கிறது.
- உங்கள் சொந்த நாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, உங்களின் உள்ளூர் VAT வீதம் வசூலிக்கப்படும்.
- உங்கள் நாட்டைத் தவிர்த்து பிற EU நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்குப் பதிவிற்கான வரம்பான €10,000 EUR-ஐ நீங்கள் மீறுகிறீர்களா என்பதன் மூலம் வீதம் தீர்மானிக்கப்படுகிறது.
- நீங்கள் வரம்பை மீறவில்லை எனில், உங்களின் உள்ளூர் VAT வீதம் வசூலிக்கப்படும். EU-இல் உள்ள வாடிக்கையாளர்களிடம் உள்ளூர் வரி வீதத்தை வசூலிக்க, நீங்கள் நுண்-வணிகங்களுக்கான விலக்கைப் பயன்படுத்த வேண்டும்.
- நீங்கள் வரம்பை மீறினால், உங்கள் வாடிக்கையாளர் இருக்கும் நாட்டின் VAT வீதம் வசூலிக்கப்படும். இலக்கு நாட்டின் VAT வீதத்தை வசூலிக்க, நீங்கள் OSS-இல் அல்லது அந்த நாட்டில் VAT எண்ணுக்குப் பதிவுசெய்ய வேண்டும்.
ஒரு நாட்டில் கணிசமான அளவில் உங்களுக்கு வணிகம் இருந்தால், வரி வசூலிக்க நீங்கள் பதிவுசெய்ய வேண்டுமா என்பதை உறுதிப்படுத்த அந்த நாட்டின் வரி அதிகாரியைத் தொடர்புகொள்ள வேண்டும். தொலைதூர விற்பனை வரம்பை உங்கள் வணிகம் மீறுகிறதா என்பதைத் தீர்மானிப்பது உங்கள் பொறுப்பாகும்.
OSS கொண்டு VAT-ஐ வசூலித்தல்
யூனியன் OSS என்றும் அழைக்கப்படும் ஒருமுனைச் சேவைத் திட்டம் என்பது, பிற EU உறுப்பு நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கான விற்பனைக்கு இலக்கு நாடுகளின் அடிப்படையில் VAT வசூலித்துப் பணம் அனுப்ப வேண்டிய தேவை கொண்ட EU மற்றும் NI-இல் இடங்களைக் கொண்டுள்ள வணிகர்களுக்கானதாகும்.
பிற EU உறுப்பு நாடுகள் அனைத்திற்குமான உங்களின் வருடாந்திர விற்பனை €10,000 EUR-க்கும் குறைவாக இருந்தால், நீங்கள் பின்வருவனவற்றுள் ஏதேனும் ஒன்றைச் செய்யலாம்:
- உங்களின் உள்ளூர் VAT வீதத்தை வசூலிக்க, நுண்-வணிகங்களுக்கான விலக்கைப் பயன்படுத்தவும்.
- வாடிக்கையாளர்களின் இருப்பிடத்தின் அடிப்படையில் நீங்கள் VAT வசூலிக்க விரும்பினால், OSS-க்குக் பதிவுசெய்யவும்.
உங்கள் ஸ்டோர் அடிப்படை வரிச் சேவையைப் பயன்படுத்தினால் மட்டுமே உங்களால் OSS-ஐப் பயன்படுத்த முடியும். அடிப்படை வரிச் சேவையைப் பயன்படுத்த உங்கள் அமைப்புகளை நீங்கள் புதுப்பிக்கவில்லை எனில், கைமுறை வரி வீதங்களைப் பயன்படுத்தி உங்கள் வரி வீதங்களைக் கைமுறையாகப் புதுப்பிக்கவும்.
UK-க்கான உங்கள் மதிப்புக்கூட்டு வரிப் பதிவை அமைத்தல்
VAT எண் வடிவம், வரம்பு விதிகள் உட்பட UK VAT வசூலிப்பை அமைப்பது குறித்த படிப்படியான வழிமுறைகளுக்கு, UK வணிகர்களுக்கான வரிப் பதிவு என்பதைப் பார்க்கவும்.
உங்கள் வரிப் பிராந்தியங்களை அமைத்த பிறகு, இயல்புநிலை வரி வீதங்கள் பொருந்தாத தயாரிப்புகளுக்கு நீங்கள் வரி ஓவர்ரைடுகளை உருவாக்கலாம்.
EU-க்கான உங்கள் மதிப்புக்கூட்டு வரிப் பதிவுகளை அமைத்தல்
OSS, IOSS மற்றும் குறிப்பிட்ட நாடு சார்ந்த விருப்பங்கள் உட்பட EU மதிப்புக்கூட்டு வரிப் பதிவுகளை அமைப்பது குறித்த படிப்படியான வழிமுறைகளுக்கு, EU-இல் வரிச் சேவைகள் என்பதைப் பார்க்கவும்.
உங்கள் வரிப் பிராந்தியங்களை அமைத்த பிறகு, இயல்புநிலை வரி வீதங்கள் பொருந்தாத தயாரிப்புகளுக்கு நீங்கள் வரி ஓவர்ரைடுகளை உருவாக்கலாம்.
உங்கள் மதிப்புக்கூட்டு வரிப் பதிவுகளை நிர்வகித்தல்
உங்கள் UK மற்றும் EU மதிப்புக்கூட்டு வரிப் பதிவுகளை நிர்வகிப்பதற்கான வழிமுறைகளுக்கு, உங்கள் UK வரிகளை நிர்வகித்தல் என்பதைப் பார்க்கவும்.