உங்களின் அமெரிக்க வரிப் பொறுப்பு நுண்ணறிவுகளை மதிப்பாய்வு செய்யவும்
அமெரிக்காவில், நீங்கள் வரி வசூலிக்க வேண்டுமா என்பது நெக்ஸஸ் அடிப்படையில் அமையும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் உங்களுக்கு வணிக இடம் இருக்கும்போது, உங்களுக்குத் தானாகவே நேரடிப் பொறுப்பு உருவாகும். இது நேரடி நெக்ஸஸ் எனவும் அழைக்கப்படுகிறது. அதாவது நீங்கள் அந்த மாநிலங்களில் பதிவுசெய்து, விற்பனை வரிகளை வசூலிக்க வேண்டும் என்று அர்த்தம். உங்களுக்கு நேரடி நெக்ஸஸ் இல்லாத மாநிலங்களில், உங்கள் வணிகமானது ஒவ்வொரு மாநிலமும் அமைத்துள்ள குறிப்பிட்ட விற்பனை வரம்புகளைத் தாண்டுகிறதா என்பதைப் பொறுத்தே உங்களின் வரிப் பொறுப்பு அமையும். நீங்கள் வரம்பை அடையும்போது, பொருளாதார நெக்ஸஸைப் பெறுவீர்கள், எனவே அந்த மாநிலத்தில் நீங்கள் பதிவுசெய்து விற்பனை வரியை வசூலிக்க வேண்டும்.
உங்கள் அமெரிக்க விற்பனை வரியைச் சுயமாக நிர்வகிக்கும்போது, வரிப் பொறுப்பு நுண்ணறிவுகள் கிடைக்கும். உங்கள் அமெரிக்க விற்பனை வரி Shopify ஆல் நிர்வகிக்கப்பட்டால், தகுதியான ஆன்லைன் ஆர்டர்களுக்கான விற்பனை வரி வசூலிக்கப்பட்டு உங்களுக்காகச் செலுத்தப்படும், அத்துடன் வரிப் பொறுப்பு நுண்ணறிவுகள் பக்கம் கிடைக்காது. தகுதியற்ற ஆர்டர்களுக்கான வரிக்குத் தொடர்ந்து நீங்களே பொறுப்பாவீர்கள்.
Shopify இல் உங்களின் வரிப் பொறுப்புகளைக் கண்காணிக்கும் முன்பு, பின்வரும் விஷயங்களை மதிப்பாய்வு செய்யவும்.
- பின்வரும் பரிவர்த்தனை வகைகளுக்கு மட்டுமே வரிப் பொறுப்பு காட்டப்படும்:
- Shopify-க்குள் நடைபெறும் பரிவர்த்தனைகள். மாநிலச் சட்டத்தால் தேவைப்படுகின்ற பட்சத்தில், சந்தைப் பரிவர்த்தனைகளும் இதில் அடங்கும்.
- சரியான ஷிப்பிங் முகவரிகள் சேர்க்கப்பட்டுள்ள, Shopify-க்குள் இறக்குமதி செய்யப்பட்ட ஆர்டர்கள். வரி அதிகாரக் குறியீடுகளைத் தீர்மானிக்க, ஒரு முகவரி தேவை. இதன் காரணமாக, இறக்குமதி செய்யப்பட்ட ஆர்டரில் ஷிப்பிங் முகவரி இல்லை எனில், உங்கள் வரிப் பொறுப்புகளைத் தீர்மானிக்கும்போது அது கணக்கில் கொள்ளப்படாது.
- மாநில அளவில் பொருளாதார நெக்ஸஸ் வரிச் சட்டங்களைக் கொண்டுள்ள மாநிலங்களுக்கு வரிப் பொறுப்பு காட்டப்படும். பொருளாதார நெக்ஸஸ் சட்டங்களைக் கொண்டிருக்காத மாநிலங்கள் சேர்க்கப்படாது.
- அலாஸ்கா அல்லது கொலராடோ போன்ற சில மாநிலங்களில் உள்ளூர் வரித் தாக்கல் தேவைகள் உள்ளன, இவை மாநிலத் தாக்கல் தேவைகளிலிருந்து வேறுபட்டவை. உள்ளூர் வரிகளுக்கு நெக்ஸஸ் கண்காணிக்கப்படாது.
- அந்த மாநிலத்திற்கான வரம்பு காலத்தின்போது விற்பனை நடைபெறும் மாநிலங்களுக்கு வரிப் பொறுப்பு காட்டப்படும். வரம்பு காலத்திற்கு வெளியே நடைபெறும் விற்பனைகள் சேர்க்கப்படாது.
- மொத்த விற்பனையைப் பயன்படுத்தி அல்லாமல், நிகர விற்பனையைப் பயன்படுத்தியே வரிப் பொறுப்பு கணக்கிடப்படுகிறது. நிகர விற்பனை என்பது பணத்தைத் திரும்பப்பெறுதல், ஷிப்பிங் அல்லது வரி போக மீதமுள்ள விற்பனையாகும்.
- உங்களின் வரிப் பொறுப்புகளில் விற்பனைகள் உடனடியாகப் பிரதிபலிக்காது, அவை புதுப்பிக்கப்படச் சில நாட்கள் ஆகலாம். ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் நீங்கள் வரிகளை வசூலித்துப் பணம் அனுப்ப வேண்டியதைக் குறிக்கும் விற்பனை வரம்பை நீங்கள் கடந்தால், அந்த வரம்பை நீங்கள் கடந்த மாதம் காட்டப்படும்.
- உங்கள் ஸ்டோரின் தற்போதைய இடங்களில் நேரடி நெக்ஸஸுக்கு வரிப் பொறுப்பு காட்டப்படும். ஒரு மாநிலத்தில் உங்களுக்கு ஒரு இடம் இருந்து, அதை நீங்கள் நீக்கியிருந்தால், அது சேர்க்கப்படாது.
இந்தப் பக்கத்தில் உள்ளது
வரிப் பொறுப்பு நிலைகள்
உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > வரிகள் மற்றும் சுங்க வரிகள் என்பதற்குச் சென்று, பின்னர் United States என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் வரிப் பொறுப்புகளை நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம். நீங்கள் வரி வசூலிக்கப் பதிவுசெய்துள்ள மாநிலங்களுக்கு மேலே உங்கள் வரிப் பொறுப்புகளின் மாதிரிக்காட்சி காட்டப்படும். குறிப்பிட்ட மாநிலங்களில் உங்கள் விற்பனையானது சாத்தியமான வரிப் பொறுப்பைக் காட்டினால், வரிப் பொறுப்புகள் பிரிவில் மாநிலம், சாத்தியமான பொறுப்பிற்கான காரணம் மற்றும் சாத்தியமான பொறுப்பின் தேதி ஆகியவை காட்டப்படும்.
கூடுதல் தகவல்களை மதிப்பாய்வு செய்ய, வரிப் பொறுப்பு நுண்ணறிவுகள் (Tax liability insights) பக்கத்திற்குச் சென்று பின்வரும் இரண்டு நிலைகளைச் சரிபார்க்கவும்:
- சாத்தியமான வரிப் பொறுப்பு கண்டறியப்பட்டுள்ள மாநிலங்களை நடவடிக்கை தேவை (Action required) குறிக்கிறது, மேலும் அங்கு நீங்கள் வரியை வசூலிக்கவும் பணம் அனுப்பவும் தொடங்க வேண்டியிருக்கலாம். இங்கு பட்டியலிடப்பட்டுள்ள மாநிலங்களில் ஓரிடத்தில் இருந்து நேரடி இருப்பு நெக்ஸஸோ அல்லது அம்மாநிலத்தில் செய்த விற்பனையிலிருந்து பொருளாதார நெக்ஸஸோ உங்களுக்கு இருக்கலாம்.
- உங்களுக்கு எந்த இடமும் இல்லாத, அதேசமயம் மாநிலச் சட்டத்தின்படி தேவைப்படும் சந்தைகள் உட்பட Shopify-இல் நீங்கள் செய்த விற்பனை அந்த மாநிலத்தின் பொருளாதார நெக்ஸஸ் வரம்பில் குறைந்தபட்சம் 80% ஐ எட்டியுள்ள மாநிலங்களை கண்காணிப்பு (Monitoring) குறிக்கிறது. கண்காணிப்பு நிலையில் மாநிலங்கள் பட்டியலிடப்பட்டிருந்தால், Shopify-ஆல் செயலாக்கப்படாத விற்பனையையும் கணக்கில் கொண்டு, அந்த மாநிலங்களில் உங்கள் விற்பனையை மதிப்பாய்வு செய்யவும்.
ஒவ்வொரு மாநிலத்திற்குமான வரம்புத் தேவைகள்
சாத்தியமான பொறுப்பிற்கான காரணத்தை Shopify Tax-இன் வரிப் பொறுப்பு நுண்ணறிவுகள் பக்கம் தானாகவே குறிக்கிறது. பொருளாதார அல்லது நேரடி இருப்பு நெக்ஸஸைத் தூண்டும் காரணங்கள் பற்றி மேலும் அறிய, மாநில வரி மேற்கோள் அட்டவணையைப் பார்க்கவும்.
வரம்புக் காலங்கள்
ஒரு மாநிலத்தின் வரம்புக் காலம் என்பது, நெக்ஸஸைக் கணக்கிடும்போது கருத்தில் கொள்ளப்படும் கால அளவாகும். நெக்ஸஸைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் கால அளவு உட்பட, வரி விதிகள் குறித்த மாநிலம் வாரியான தகவல்களை மாநில வரி மேற்கோள் அட்டவணை வழங்குகிறது. இந்தக் காலம் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.
| வரம்புக் காலம் | விளக்கம் |
|---|---|
| முந்தைய அல்லது தற்போதைய நாள்காட்டி ஆண்டு | நெக்ஸஸைத் தீர்மானிக்கும் நோக்கங்களுக்காக முந்தைய அல்லது நடப்பு நாள்காட்டி ஆண்டைக் கருத்தில் கொள்ளும் மாநிலங்களுக்கு, பொறுப்பு டிராக்கர் முதலில் முந்தைய ஆண்டிற்கான உங்கள் விற்பனைத் தரவை மதிப்பாய்வு செய்யும். முந்தைய ஆண்டின் நெக்ஸஸ் வரம்பை உங்கள் ஸ்டோர் எட்டவில்லை என்றால், நடப்பு ஆண்டு மதிப்பாய்வு செய்யப்படும். முந்தைய நாள்காட்டி ஆண்டின் வரம்பை உங்கள் ஸ்டோர் எட்டவில்லை மற்றும் நடப்பு நாள்காட்டி ஆண்டில் நீங்கள் எந்த விற்பனையும் செய்யவில்லை என்றால், நடப்பு ஆண்டில் குறைந்தது ஒரு விற்பனை நடைபெறும் வரை அந்த மாநிலம் காட்டப்படாது. |
| பன்னிரண்டு மாத சுழற்சிக் காலம் | நெக்ஸஸைத் தீர்மானிக்கும் நோக்கங்களுக்காகப் பன்னிரண்டு மாத சுழற்சிக் காலத்தைக் கருத்தில் கொள்ளும் மாநிலங்களுக்கு, கடந்த பன்னிரண்டு மாதங்களில் நீங்கள் செய்த விற்பனைத் தரவைப் பொறுப்பு டிராக்கர் மதிப்பாய்வு செய்யும். ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும், மதிப்பாய்வு செய்யப்படும் காலத்தில் இருந்து மிகப்பழைய மாதம் அகற்றப்பட்டு, புதிய மாதம் சேர்க்கப்படும். |
| முந்தைய நாள்காட்டி ஆண்டு | நெக்ஸஸைத் தீர்மானிக்கும் நோக்கங்களுக்காக முந்தைய நாள்காட்டி ஆண்டைக் கருத்தில் கொள்ளும் மாநிலங்களுக்கு, பொறுப்பு டிராக்கர் முந்தைய ஆண்டின் உங்கள் விற்பனையை மதிப்பாய்வு செய்யும். முந்தைய ஆண்டின் நெக்ஸஸ் வரம்பை உங்கள் ஸ்டோர் எட்டவில்லை என்றால், நடப்பு ஆண்டு முடியும் வரை உங்கள் விற்பனைத் தரவு மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படாது. |
| முந்தைய நான்கு வரி காலாண்டுகள் | நெக்ஸஸைத் தீர்மானிக்கும் நோக்கங்களுக்காக முந்தைய நான்கு நாள்காட்டிக் காலாண்டுகளைக் கருத்தில் கொள்ளும் மாநிலங்களுக்கு, முந்தைய நான்கு காலாண்டுகளில் உங்கள் விற்பனையைப் பொறுப்பு டிராக்கர் மதிப்பாய்வு செய்யும். பெரும்பாலான அதிகார வரம்புகளில், ஒரு ஆண்டின் காலாண்டுகள் பின்வருமாறு:
|
உங்கள் வரிப் பொறுப்புகளுக்குத் தீர்வு காணுங்கள்
வரிப் பொறுப்பு நுண்ணறிவுகள் பக்கத்தில் ஒரு மாநிலம் சாத்தியமான வரிப் பொறுப்பாகப் பட்டியலிடப்பட்டிருந்தால், அம்மாநிலத்தின் விற்பனை வரிச் சட்டங்களை நீங்கள் கவனமாக மதிப்பாய்வு செய்ய வேண்டும். மாநில வரி அதிகாரிகளுக்கான இணைப்புகள் மாநில வரி மேற்கோள் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஒரு மாநிலத்தில் விற்பனை வரியை வசூலிக்க வேண்டும் என நீங்கள் தீர்மானித்தால், அனுமதி பெறுவதற்கு மாநிலத்தின் வரி ஆணையத்திடம் விற்பனை வரிக்குப் பதிவுசெய்ய வேண்டும். அனுமதியைப் பெற்ற பிறகு, வரிப் பொறுப்பு நுண்ணறிவுகள் பக்கத்திலிருந்து வரி வசூலிப்பை நீங்கள் அமைக்கலாம்.
படிகள்:
- வரிப் பொறுப்பு நுண்ணறிவுகள் பக்கத்தில், மாநிலத்தைக் கண்டறிந்து, வரி வசூலிப்பை அமை (Set up tax collection) என்பதைக் கிளிக் செய்யவும்.
- விற்பனை வரி ID புலத்தில், நீங்கள் பதிவுசெய்தபோது பெற்ற உங்கள் விற்பனை வரி ID-ஐ உள்ளிடவும்.
- வரிகளை வசூலி (Collect taxes) என்பதைக் கிளிக் செய்யவும்.
வரிப் பொறுப்புக் காலாவதி
ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில், அது நேரடி அல்லது பொருளாதார நெக்ஸஸ் என எதுவாக இருந்தாலும், அதற்கான வரம்பிற்குக் கீழே சென்றால் உங்கள் வரிப் பொறுப்பு உடனடியாக முடிவுக்கு வராது. நெக்ஸஸை உருவாக்கிய விளம்பரம் அல்லது விற்பனைப் பணியாளர்கள் போன்ற செயல்பாடுகள் நின்றபிறகும், அவற்றின் மூலம் குறிப்பிட்ட காலத்திற்குத் தொடர்ந்து விற்பனை நடக்கும் என்ற கருத்தின் அடிப்படையில் சில மாநிலங்கள் வரிக் கொள்கைகளைக் கொண்டுள்ளன. இந்தக் கருத்து, பின்தொடரும் நெக்ஸஸ் (trailing nexus) அல்லது மீதமுள்ள நெக்ஸஸ் (residual nexus) என்று அழைக்கப்படுகிறது. பின்தொடரும் நெக்ஸஸ் வரி விதிகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். எடுத்துக்காட்டாக, ஒரு மாநிலத்தில், வணிகர் நெக்ஸஸைக் கொண்டிருப்பதை நிறுத்தும் காலாண்டு மற்றும் அதற்கடுத்த காலாண்டிற்கும் அவருக்கு வரிப் பொறுப்பு இருக்கும். மற்றொரு மாநிலத்தில், வணிகர் நெக்ஸஸைக் கொண்டிருப்பதை நிறுத்திய பிறகு பன்னிரண்டு மாதங்களுக்கு அவருக்கு வரிப் பொறுப்பு இருக்கும்.