Shopify ஆதரவைத் தொடர்புகொள்வது எப்படி
உங்கள் ஸ்டோர் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க உதவ, Shopify பல்வேறு ஆதரவு விருப்பங்களை வழங்குகிறது. உங்கள் தேவைகள் மற்றும் திட்ட வகையின் அடிப்படையில் உதவி பெறுவதற்கான பல்வேறு வழிகளை இந்தக் கட்டுரை விவரிக்கிறது.
இந்தப் பக்கத்தில்
Shop செயலிக்கான ஆதரவு
Shop செயலிக்கான ஆதரவு, செயலியை ஷாப்பிங் செய்யப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், Shop செயலியை விற்பனைச் சேனலாகப் பயன்படுத்தும் வணிகர்கள் என இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- வாடிக்கையாளருக்கான ஆதரவு: ஷாப்பிங், ஆர்டர் கண்காணிப்பு மற்றும் பேமெண்ட் விருப்பங்களுக்காகச் செயலியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு Shop செயலி ஆதரவுக் குழு உதவுகிறது. ஒரு ஸ்டோர் அல்லது ஷிப்பிங் கேரியரைத் தொடர்புகொள்வது எப்படி என்பது குறித்து அறிந்துகொள்ளவும், Shop செயலியைப் பயன்படுத்தி ஏதேனும் சிக்கலைப் புகாரளிக்கவும், Shop செயலிப் பயனர்கள் Shop உதவி மையத்தைப் பார்வையிடலாம்.
- வணிகருக்கான ஆதரவு: நீங்கள் Shop சேனல் தொடர்பான கேள்விகளைக் கொண்ட வணிகராக இருந்தால், நீங்கள் நேரடியாக Shopify ஆதரவைத் தொடர்புகொள்ள வேண்டும். வணிகர் சார்ந்த சிக்கல்களை Shop செயலி ஆதரவுக் குழு கையாளுவதில்லை.
செயலிகள் குறித்த உதவி பெறுதல்
Shopify App Store-இல் உள்ள பெரும்பாலான செயலிகள் மூன்றாம் தரப்பு டெவலப்பர்களால் உருவாக்கப்படுகின்றன, மேலும் செயலியை உருவாக்கியவரைப் பொருத்து ஆதரவு மாறுபடும்.
Shopify வழங்கும் செயலிகளுக்கு மட்டுமே Shopify ஆதரவு அளிக்கிறது. மூன்றாம் தரப்பு டெவலப்பர்களால் உருவாக்கப்பட்ட செயலிகள் அல்லது விற்பனைச் சேனல்கள் தொடர்பாக, நீங்கள் டெவலப்பரை நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டும்.
செயலிகளுக்கான ஆதரவைப் பெறுவது குறித்த விரிவான தகவல்களுக்கு, உங்கள் செயலிகளுக்கான ஆதரவைப் பெறுதல் என்பதைப் பார்க்கவும்.
குறியீடு தொடர்பான கேள்விகளுக்கு உதவி பெறுதல்
குறியீடு தொடர்பான தீர்வுகளைக் கண்டறிய Shopify.dev சிறந்த இடமாகும். நீங்கள் .dev உதவியாளரிடமும் கேட்கலாம். தேடல் பட்டியில் கிளிக் செய்து, உதவியாளரைத் திற (Open Assistant) என்பதைக் கிளிக் செய்து, குறியீடு குறித்த உங்கள் கேள்விகளைக் கேட்கவும். மன்றங்களில் டெவலப்பர்களிடம் கேள்விகளைக் கேட்கவும் உதவி பெறவும் Shopify சமூகம் ஒரு சிறந்த இடமாகும். நீங்கள் Shopify Plus திட்டத்திலோ Shopify பார்ட்னராகவோ இல்லாவிட்டால், பெரும்பாலான பிரத்தியேகக் குறியீடு சிக்கல்களுக்கு Shopify ஆதரவால் உதவ முடியாது.
Shopify வழங்கும் இலவசத் தீம்களுக்கான ஆதரவு
அடிப்படைச் சிக்கல் தீர்த்தல், நிர்வாகி மேலாண்மை மற்றும் மார்க்கெட்டிங் போன்ற சில வணிகத் தலைப்புகள் குறித்த வழிகாட்டுதல் உட்பட, Shopify உருவாக்கிய இலவசத் தீம்களுக்கான ஆதரவை Shopify வழங்குகிறது. குறியீடு மாற்றங்கள் Shopify ஆதரவின் வரம்பிற்கு அப்பாற்பட்டவை.
நீங்கள் இலவச Shopify தீமைப் பயன்படுத்தி, Basic அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்தில் இருந்தால், சிறிய தீம் மாற்றங்களுக்கு 60 நிமிடங்கள் வரை இலவச வடிவமைப்பு ஆதரவைப் பெறுவீர்கள் (15-நிமிட இடைவெளிகளில்).
கட்டண மூன்றாம் தரப்புத் தீம்களுக்கான ஆதரவு
கட்டண மூன்றாம் தரப்புத் தீம்களுக்கு, தீம் டெவலப்பரால் ஆதரவு வழங்கப்படுகிறதே தவிர, Shopify ஆதரவால் அல்ல. உங்கள் Shopify நிர்வாகி வழியாக நீங்கள் தீம் ஆவணங்களை அணுகலாம் மற்றும் டெவலப்பர் ஆதரவைத் தொடர்புகொள்ளலாம்.
மூன்றாம் தரப்பு டெவலப்பர்கள் வழக்கமாகத் தனிப்பயனாக்கங்களை வழங்குவதில்லை. கட்டணத் தீமைத் தனிப்பயனாக்குவதற்கான உதவிக்கு, நீங்கள் ஒரு Shopify பார்ட்னரைப் பணியமர்த்தலாம். தீம் ஆதரவு, தகுதி மற்றும் Shopify வடிவமைப்புப் கொள்கை குறித்த முழு விவரங்களையும் மதிப்பாய்வு செய்யவும்.
Shopify ஆதரவைத் தொடர்புகொள்வது
உங்கள் திட்ட வகை மற்றும் குறிப்பிட்ட தேவைகளைப் பொருத்து வெவ்வேறு நிலைகளிலான ஆதரவை Shopify வழங்குகிறது.
திட்டம் மற்றும் சந்தாவின் அடிப்படையில் Shopify ஆதரவு விருப்பங்கள்
உங்கள் ஆதரவு விருப்பங்கள் உங்கள் Shopify திட்டம் அல்லது சந்தாவைப் பொருத்தது:
- அனைத்துத் திட்டங்களுக்கும்: அரட்டை (24/7 கிடைக்கும்)
- Shopify Plus திட்டத்திற்கு: இன்பவுண்ட் தொலைபேசி ஆதரவு, மின்னஞ்சல் ஆதரவு மற்றும் அரட்டை
- Retail திட்டத்திற்கு: இன்பவுண்ட் தொலைபேசி ஆதரவு, மின்னஞ்சல் ஆதரவு மற்றும் அரட்டை
- Shopify POS Pro-க்கு: Shopify உதவி மையம் வழியாக இன்பவுண்ட் தொலைபேசி ஆதரவு
Shopify ஆதரவுடன் தொடங்குதல்
ஒரு மனித ஆலோசகரைத் தொடர்புகொள்ளும் முன்பு எங்களின் AI-ஆல் இயக்கப்படும் தேடலைப் பயன்படுத்தத் தொடங்குவதே உதவி பெறுவதற்கான விரைவான வழியாகும்.
படி 1: AI தேடலைப் பயன்படுத்துதல்
Shopify உதவி மையத்தைப் பார்வையிட்டு, உங்களின் கேள்வியைக் கேட்க AI தேடல் பட்டியைப் பயன்படுத்தவும். 24/7 கிடைக்கும் AI தேடல், பின்வரும் வழிகளில் உதவலாம்:
- தொடர்புடைய உதவிக் கட்டுரைகளுக்கு உங்களை வழிநடத்தும்
- பின்பற்ற எளிதான, படிப்படியான வழிமுறைகளை வழங்கும்
படி 2: குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்டல்
உங்கள் சிக்கல் குறித்து AI தேடலிடம் விரிவான கேள்விகளைக் கேட்கவும். பெரும்பாலும், ஒரு ஆதரவு ஆலோசகருக்காகக் காத்திருக்காமல் உங்கள் சிக்கலைத் தீர்ப்பதற்குத் தேவையான அனைத்தும் பரிந்துரைக்கப்பட்ட ஆதாரங்களிலும் கட்டுரைகளிலும் இருக்கும்.
ஒரு மனித ஆதரவு ஆலோசகருடன் இணைதல்
AI தேடல் உங்கள் சிக்கலைத் தீர்க்கவில்லை என்றால், நீங்கள் Shopify ஆதரவு ஆலோசகருடன் இணையலாம்.
படிகள்:
- help.shopify.com க்குச் செல்லவும்.
- Shopify ஆதரவு ஆலோசகருடன் தொடர்புகொள்ள, நபருடன் அரட்டையடி என்பதைக் கிளிக் செய்யவும்.
- உள்நுழையுமாறு உங்களிடம் கேட்கப்பட்டால், மிகவும் பொருத்தமான செயலை மேற்கொள்ளவும்:
- உங்கள் கணக்கை அணுக உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்களால் உள்நுழைய முடியவில்லை எனில், என் கணக்கை அணுக முடியவில்லை என்பதைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் Shopify-க்குப் புதியவர் எனில், Shopify-க்குப் புதியவரா? தொடங்குங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- மாற்றாக, உங்களால் உள்நுழைய முடியாவிட்டால், https://help.shopify.com/en/contact/login-issue என்ற இணைப்பில் உள்நுழைய முடியவில்லை (Can't log in) படிவத்தைப் பூர்த்தி செய்யலாம்.
- உங்கள் மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல்லை அல்லது பாஸ்கீகள், Facebook அல்லது Google போன்ற மாற்று முறைகளைப் பயன்படுத்தி உள்நுழைவு செயல்முறையை முடிக்கவும். உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும் சரிபார்ப்புக் குறியீட்டை நீங்கள் உள்ளிட வேண்டியிருக்கலாம்.
- உங்கள் செயலில் உள்ள ஸ்டோரைத் தேர்ந்தெடுக்கவும்.
- உள்நுழைந்த பிறகு, உதவி மைய அரட்டை திறக்கும். அதோடு, மதிப்பிடப்பட்ட காத்திருப்பு நேரத்தைக் காட்டி ஆதரவு வரிசையில் உங்களைச் சேர்க்கும்.
உங்கள் Shopify ஆதரவு அனுபவத்தை மேம்படுத்துதல்
Shopify ஆதரவிலிருந்து விரைவான மற்றும் மிகவும் பயனுள்ள உதவியைப் பெற இந்த உதவிக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்:
- திரைப்பிடிப்புகளைப் பகிரவும்: தொடர்புடைய திரைப்பிடிப்புகளைப் பகிர்வதன் மூலம் உங்கள் சிக்கலை ஆதரவு ஆலோசகர்கள் விரைவாகப் புரிந்துகொள்ள உதவுங்கள். கோப்புகளை இணைக்க, அரட்டையில் உள்ள பேப்பர்கிளிப் ஐகானைக் கிளிக் செய்யவும்
- குறிப்பாகக் கூறவும்: நீங்கள் என்ன செய்ய முயற்சித்தீர்கள், அதற்கு மாறாக என்ன நடந்தது என்பது உட்பட உங்கள் சிக்கலை விரிவாக விவரிக்கவும்
- ஸ்டோர் தகவலைத் தயாராக வைத்திருக்கவும்: உங்களுக்கு எந்த ஸ்டோருக்கு உதவி தேவை என்பதை நீங்கள் அறிந்திருப்பதை உறுதிசெய்யவும்
Shopify ஆதரவு வரம்புகளும் கிடைக்கும் தன்மையும்
பின்வரும் வரம்புகளைப் புரிந்துகொள்வது, உங்கள் ஆதரவு அனுபவத்திற்கான சரியான எதிர்பார்ப்புகளை அமைக்க உதவும்:
- மேம்படுத்தப்பட்ட ஆதரவு இல்லாத ஸ்டோர்களுக்கு தொலைபேசி ஆதரவு இல்லை: உங்கள் ஸ்டோர் Shopify Plus திட்டம் அல்லது Retail திட்டத்தில் இல்லை எனில் மற்றும் Shopify POS Pro-ஐப் பயன்படுத்தவில்லை எனில், உங்களால் திருப்பி அழைக்கக் கோரவோ நேரடியாக Shopify-க்குத் தொலைபேசியில் அழைக்கவோ முடியாது.
- Plus அல்லாத திட்டங்கள் அல்லது Retail திட்டத்தில் இல்லாத ஸ்டோர்களுக்கு மின்னஞ்சல் ஆதரவு இல்லை: மின்னஞ்சல் ஆதரவுக்கு, உங்கள் ஸ்டோர் Shopify Plus திட்டம் அல்லது Retail திட்டத்தில் இருக்க வேண்டும்.
- 24/7 கிடைக்கும் தன்மை: AI தேடல் வசதி வருடத்தின் ஒவ்வொரு நாளும், 24 மணிநேரமும் கிடைக்கும்
- வரிசையிலிருந்து வெளியேறவும்: காத்திருக்கும்போது உங்களுக்கு ஆதரவு தேவைப்படாவிட்டால், வெளியேற வரிசையிலிருந்து வெளியேறு என்பதைக் கிளிக் செய்யலாம்
மேம்படுத்தப்பட்ட Shopify Plus ஆதரவு விருப்பத்தேர்வுகள்
உங்கள் ஸ்டோர் Shopify Plus திட்டத்தில் இருந்தால், உதவி மையத்தின் மூலம் நீங்கள் அணுகக்கூடிய பின்வரும் கூடுதல் ஆதரவு விருப்பத்தேர்வுகளைப் பெறுவீர்கள்:
- Plus ஆதரவுடனான அரட்டை: உதவி மைய அரட்டை மூலம் Plus ஆதரவு ஆலோசகர்களுடன் அரட்டையடிக்கலாம்
- தொலைபேசி ஆதரவு: Plus ஆதரவு ஆலோசகர்களுக்கான நேரடித் தொலைபேசி வசதி
- மின்னஞ்சல் ஆதரவு: வழக்கமான பதிலளிப்பு நேரமாக 48 மணிநேரம் என்ற அடிப்படையில், மின்னஞ்சல் மூலம் டிக்கெட்டுகளைச் சமர்ப்பிக்கலாம்
மேம்படுத்தப்பட்ட சில்லறை விற்பனை ஆதரவு விருப்பத்தேர்வுகள்
உங்கள் ஸ்டோர் Retail திட்டத்தில் இருந்தால் அல்லது Shopify POS Pro-ஐப் பயன்படுத்தினால், Shopify உதவி மையத்தின் மூலம் நீங்கள் அணுகக்கூடிய கூடுதல் ஆதரவு விருப்பத்தேர்வுகளைப் பெறுவீர்கள்:
- தொலைபேசி ஆதரவு: Retail திட்டம் அல்லது Shopify POS Pro-ஐப் பயன்படுத்தும் ஸ்டோர்களுக்கான Shopify சில்லறை விற்பனை ஆதரவு ஆலோசகர்களை நேரடியாகத் தொடர்புகொள்ளும் வசதி
- மின்னஞ்சல் ஆதரவு: Retail திட்டத்தில் உள்ள ஸ்டோர்கள் மட்டுமே மின்னஞ்சல் மூலம் டிக்கெட்டுகளைச் சமர்ப்பிக்கலாம், வழக்கமான பதிலளிப்பு நேரம் 48 மணிநேரம் ஆகும்
Shopify POS Pro தொலைபேசி ஆதரவுக்கு, Shopify உதவி மையத்தில் உள்நுழைந்து, உங்கள் ஸ்டோரைத் தேர்ந்தெடுத்து, தொலைபேசி ஆதரவு விருப்பத்தேர்வு கிடைக்கும்போது அதைத் தேர்ந்தெடுக்கவும்.
Shopify POS-இல் Shopify சில்லறை விற்பனை ஆதரவுத் தொடர்பைக் கண்டறிதல்
Shopify POS-இலிருந்து, ஐகானைத் தட்டவும் > ஆதரவு > ஆதரவைத் தொடர்புகொள்க.