உங்கள் Shopify கணக்கில் உள்நுழைதல்
பல்வேறு சாதனங்கள் மூலமாக உங்கள் Shopify கணக்கை நீங்கள் பாதுகாப்பாக அணுகலாம். பாஸ்கீ அல்லது இரு-படி அங்கீகாரம் போன்ற பாதுகாப்பான உள்நுழைவு முறையைக் கொண்டு உங்கள் கணக்கைப் பாதுகாக்கவும். உங்கள் ஸ்டோரின் .myshopify.com URL கோரப்பட்டால், உங்கள் ஸ்டோரில் தனிப்பயன் டொமைன் இருந்தாலும் அல்லது கணக்கை உருவாக்கிய பிறகு உங்கள் ஸ்டோரின் .myshopify.com URL-ஐத் தனிப்பயனாக்கியிருந்தாலும், உங்களின் அசல் .myshopify.com URL-ஐயே வழங்க வேண்டும்.
உள்நுழைதல் மற்றும் ஸ்டோர்களை மாற்றுதல்
உங்கள் டெஸ்க்டாப் உலாவி அல்லது Shopify மொபைல் செயலி மூலம் உங்கள் Shopify கணக்கில் உள்நுழையலாம். Apple, Facebook, Google அல்லது WhatsApp போன்ற வெளிப்புற உள்நுழைவுச் சேவைகளையும் பயன்படுத்தலாம். நீங்கள் பல ஸ்டோர்களை நிர்வகித்தால், ஒற்றை உள்நுழைவு அணுகலுக்கு Shopify ID-ஐ அமைத்து, ஸ்டோர்களுக்கு இடையே விரைவாக மாறலாம்.
உங்கள் கணக்கைப் பாதுகாத்தல்
பாஸ்கீ அல்லது இரு-படி அங்கீகாரம் போன்ற பாதுகாப்பான உள்நுழைவு முறையை நீங்கள் அமைக்கலாம். உங்கள் முகம், கைரேகை, பின் (PIN) அல்லது திரைப் பூட்டைப் பயன்படுத்தி உள்நுழைய பாஸ்கீகள் அனுமதிக்கின்றன. நீங்கள் உள்நுழையும்போது, அங்கீகரிப்பான் செயலி அல்லது பாதுகாப்பு விசை போன்ற கூடுதல் சரிபார்ப்புப் படியை இரு-படி அங்கீகாரம் சேர்க்கிறது. உங்கள் நிறுவனம் பாதுகாப்பான உள்நுழைவு முறையைக் கட்டாயமாக்கினாலோ குறிப்பிட்ட சில நிதித் தயாரிப்புகளுக்கான அணுகல் உங்களிடம் இருந்தாலோ, பாதுகாப்பான உள்நுழைவு முறை தேவைப்படலாம்.
சிக்கல் தீர்த்தல் மற்றும் மீட்டெடுத்தல்
உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டால், உள்நுழைவுப் பக்கம் அல்லது உங்கள் கணக்கு அமைப்புகளிலிருந்து அதை மீட்டமைக்கலாம். உங்கள் கணக்கு விவரங்களை உறுதிப்படுத்தவும், ஆள்மாறாட்டம் அல்லது கணக்கு கையகப்படுத்தல்களில் இருந்து பாதுகாக்கவும் அடையாளச் சரிபார்ப்பை முடிக்குமாறு உங்களிடம் கேட்கப்படலாம். உள்நுழைவதில் வேறு ஏதேனும் சிக்கல் இருந்தால், உள்நுழைவுச் சிக்கல் தீர்த்தல் என்பதைப் பார்க்கவும்.