அங்கீகரிப்பான் செயலியைப் பயன்படுத்தி இரு-படி அங்கீகாரம்

அங்கீகரிப்பான் செயலியுடன் இரு-படி அங்கீகாரத்தைச் செயல்படுத்த, iOS, Android அல்லது Windows இயங்குதளத்தைப் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் போன்ற உங்களின் மொபைல் சாதனத்தில் ஓர் அங்கீகரிப்பான் செயலியை நிறுவ வேண்டும்

நீங்கள் தொடங்குவதற்கு முன்

உங்கள் மொபைல் சாதனத்தில் அங்கீகரிப்பான் செயலியை நிறுவவும். இந்தச் செயலியால் QR குறியீடுகளை ஸ்கேன் செய்து, உங்களுக்கான அங்கீகாரத் தரவை மீட்டெடுக்க முடியும். அங்கீகரிப்பான் செயலிகளின் பின்வரும் பட்டியலை மதிப்பாய்வு செய்யவும்:

அங்கீகரிப்பான் செயலியை நிறுவும் போது, அதற்கான வழிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றுவதை உறுதிசெய்யவும். உங்கள் மொபைல் சாதனங்களில் இந்த மூன்றாம் தரப்புச் செயலிகளை நிறுவ Shopify ஆதரவால் உதவ முடியாது. உங்களின் செயலியைப் பதிவிறக்கி அமைத்த பிறகு, நீங்கள் Shopify இல் இந்த அம்சத்தைச் செயல்படுத்தலாம்.

Shopify இல் அங்கீகரிப்பான் செயலியைச் செயல்படுத்துங்கள்

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உங்கள் ஸ்டோர் பெயரைக் கிளிக் செய்யவும்.

  2. உங்கள் சுயவிவரத்தைக் கிளிக் செய்து, பாதுகாப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. இரு-படி அங்கீகாரம் பிரிவில், இரு-படியை இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. உங்கள் கடவுச்சொல்லை உள்ளிட்டு, அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. அங்கீகார முறை பட்டியலிலிருந்து, அங்கீகரிப்பான் செயலி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. உங்கள் அங்கீகரிப்பான் செயலியைப் பயன்படுத்தி, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.

  7. உங்கள் அங்கீகரிப்பான் செயலியால் உருவாக்கப்பட்ட ஆறு-இலக்கக் குறியீட்டை உள்ளிட்டு, இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  8. விருப்பத்தேர்வு: உங்களின் முதன்மை அங்கீகார முறை கிடைக்காதபோது நீங்கள் பயன்படுத்தக்கூடிய காப்பு அங்கீகார முறை ஒன்றை உருவாக்கவும்.

  9. உங்கள் முதன்மை அல்லது காப்பு அங்கீகார முறையைப் பயன்படுத்த முடியாதபோது உதவுவதற்காக உங்கள் மீட்புக் குறியீடுகளைச் சேமிக்கவும். பின்வரும் எடுத்துக்காட்டுகள்படி மீட்புக் குறியீடுகளைப் பல வழிகளில் சேமித்து வைப்பதை உறுதிசெய்யவும்:

    • உங்கள் மொபைல் சாதனம், டேப்லெட், லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் உள்ள உள்ளூர் கோப்பில்
    • LastPass அல்லது 1Password போன்ற கடவுச்சொல் நிர்வாகி பிளாட்ஃபார்மில்
    • நீங்கள் பயன்படுத்தும் கிளவுட் ஸ்டோரேஜ் இடத்தில்
    • அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட ஆவணத்தில்

இப்போது நீங்கள் உள்நுழைய முயலும்போது, இரு-படி அங்கீகாரத்திற்கு உங்களின் மொபைல் சாதனம் தேவைப்படும்.

உங்கள் அங்கீகரிப்பான் செயலியை அணுக முடியாமல் போனால், காப்பு அங்கீகார முறையைப் பயன்படுத்தி நீங்கள் உள்நுழையலாம். சேமிக்கப்பட்ட மீட்புக் குறியீட்டைப் பயன்படுத்தியும் உள்நுழையலாம்.

உங்களின் அங்கீகார முறைகளோ மீட்புக் குறியீடுகளோ கிடைக்கவில்லை எனில், உங்கள் ஸ்டோரை முடக்குவது போன்ற முக்கியமான செயல்களை முடிக்கும் முன்பு, உங்கள் கணக்கிற்கான அணுகலை மீட்டெடுக்க வேண்டும்.