உள்ளமைக்கப்பட்ட அங்கீகரிப்பியைப் பயன்படுத்தி இரு-படி அங்கீகாரம்

உங்கள் கணக்கில் உள்நுழைவதற்கான இரண்டாவது காரணியாக WebAuthn தரநிலையுடன் இணக்கமான உள்ளமைக்கப்பட்ட அங்கீகரிப்பியைப் பயன்படுத்தலாம். உள்ளமைக்கப்பட்ட அங்கீகரிப்பிகள் அங்கீகரிப்பியாகப் பயன்படுத்தும் சாதனத்தில் ஒருங்கிணைக்கப்படும். எடுத்துக்காட்டாக, கைரேகை சென்சார் அல்லது முக அங்கீகாரம் போன்ற பயோமெட்ரிக் தரவைப் பயன்படுத்த உங்கள் சாதனத்தை அமைக்கலாம். உள்ளமைக்கப்பட்ட அங்கீகரிப்பிக்கு சில எடுத்துக்காட்டுகள் Windows Hello மற்றும் Apple Touch ID அல்லது Face ID ஆகும். மாற்றாக, கடவுச்சொல் அல்லது PIN ஐப் பயன்படுத்த உங்கள் சாதனங்களை அமைக்கலாம். உங்கள் சாதனத்தில் உள்நுழைய நீங்கள் எதைப் பயன்படுத்தினாலும், இந்த இரு-படி அங்கீகார முறைக்கு அதையே பயன்படுத்துவீர்கள்.

உள்ளமைக்கப்பட்ட அங்கீகரிப்பிகள் ஒரு சாதனத்தில் மட்டுமே செயல்படும். இரு-படி அங்கீகாரத்திற்கு மொபைல் சாதனத்தை நம்பியிருக்க நீங்கள் விரும்பவில்லை எனில், உங்கள் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பில் உள்ளமைக்கப்பட்ட அங்கீகரிப்பியைத் தேர்வுசெய்யலாம். உங்கள் கணக்கில் உள்நுழைவதற்கான முதன்மை அங்கீகார முறையாக உள்ளமைக்கப்பட்ட அங்கீகரிப்பியைப் பயன்படுத்தினால், உள்ளமைக்கப்பட்ட அங்கீகரிப்பியை நம்பியிருக்காத காப்புநகல் அங்கீகார முறையை நீங்கள் சேர்க்க வேண்டும். உள்ளமைக்கப்பட்ட அங்கீகரிப்பியைத் தவிர வேறு காப்புநகல் அங்கீகார முறையைச் சேர்ப்பதன் மூலம் பிற சாதனங்களில் உங்கள் கணக்கில் உள்நுழையலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து உங்கள் ஸ்டோர் பெயரைக் கிளிக் செய்யவும்.

  2. உங்கள் சுயவிவரத்தைக் கிளிக் செய்து, பாதுகாப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. இரு-படி அங்கீகாரம் பிரிவில், இரு-படியை இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. உங்கள் கடவுச்சொல்லை உள்ளிட்டு, அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. அங்கீகார முறை பட்டியலில் இருந்து, உள்ளமைக்கப்பட்ட அங்கீகரிப்பி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. உங்கள் அங்கீகார சாதனத்திற்கான பெயரை உள்ளிடவும். நீங்கள் பல அங்கீகார சாதனங்களைப் பயன்படுத்தினால், அர்த்தமுள்ள பெயரை உள்ளிடுவதை உறுதிசெய்யவும், இதன்மூலம் எந்த அங்கீகாரச் சாதனம் தேவை என்பதை எளிதாக அடையாளம் காண முடியும். எடுத்துக்காட்டாக, iPhone PIN அல்லது Laptop fingerprint.

  7. இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  8. அங்கீகரிப்பியைச் செயல்படுத்துவதற்கான திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

  9. விருப்பத்தேர்வு: உங்கள் முதன்மை அங்கீகார முறை கிடைக்காத பட்சத்தில் பயன்படுத்திக்கொள்ள காப்புநகல் அங்கீகார முறையை உருவாக்கவும்.

  10. உங்கள் முதன்மை அல்லது காப்புநகல் அங்கீகார முறையைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் பயன்படுத்திக்கொள்ள உங்கள் மீட்புக் குறியீடுகளைச் சேமிக்கவும். பின்வரும் எடுத்துக்காட்டுகள் உட்பட பல வழிகளில் மீட்புக் குறியீடுகளை நீங்கள் சேமிப்பதை உறுதிசெய்யவும்:

    • உங்கள் மொபைல் சாதனம், டேப்லெட், லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் உள்ள லோக்கல் கோப்பில்
    • LastPass அல்லது 1Password போன்ற கடவுச்சொல் நிர்வாகி பிளாட்ஃபார்மில்
    • நீங்கள் பயன்படுத்தும் கிளவுட் ஸ்டோரேஜ் இடத்தில்
    • அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட ஆவணத்தில்

இப்போது நீங்கள் உள்நுழைய முயலும்போது, அந்தச் சாதனத்தின் இரு-படி அங்கீகாரத்திற்கு உள்ளமைக்கப்பட்ட அங்கீகரிப்பி தேவைப்படும்.

இந்தப் பக்கத்தில்

அடுத்து செய்ய வேண்டியவை

வேறு சாதனத்திலிருந்து உங்கள் கணக்கில் உள்நுழைய, உள்ளமைக்கப்பட்ட அங்கீகரிப்பியைச் சாராத குறைந்தபட்சம் ஒரு காப்புநகல் அங்கீகார முறையை அமைப்பதைக் கருத்தில் கொள்ளவும்.