பாதுகாப்பு விசையைப் பயன்படுத்தி இரு-படி அங்கீகாரம்
உங்கள் கணக்கில் உள்நுழைவதற்கான இரண்டாம் காரணியாக, WebAuthn தரநிலைக்கு இணக்கமான பாதுகாப்பு விசையைப் பயன்படுத்தலாம். பாதுகாப்பு விசையுடன் இரு-படி அங்கீகாரத்தைச் செயல்படுத்த, இணக்கமான உலாவி மற்றும் இணக்கமான பாதுகாப்பு விசை ஆகியவை தேவை. உங்கள் கணக்கில் புதிய பாதுகாப்பு விசையைப் பதிவுசெய்த பிறகு, நீங்கள் உள்நுழையும்போதெல்லாம் பாதுகாப்பு விசையைச் செயல்படுத்துமாறு கேட்கப்படுவீர்கள்.
உங்கள் கணக்கில் உள்நுழைய முடியாமல் போவதைத் தவிர்க்க, நீங்கள் பல பாதுகாப்பு விசைகளையும் பல இரு-படி அங்கீகார முறைகளையும் பதிவுசெய்யலாம்.
பாதுகாப்பு விசைகளுடன் பின்வரும் உலாவிகள் இணக்கமாக உள்ளன:
- டெஸ்க்டாப்பிற்கான Google Chrome பதிப்பு 67 மற்றும் அதற்குப் பிந்தையவை
- டெஸ்க்டாப்பிற்கான Mozilla Firefox பதிப்பு 60 மற்றும் அதற்குப் பிந்தையவை
- Android-க்கான Google Chrome பதிப்பு 73 மற்றும் அதற்குப் பிந்தையவை
- Android-க்கான Mozilla Firefox பதிப்பு 66 மற்றும் அதற்குப் பிந்தையவை
- Microsoft Edge பதிப்பு 18 மற்றும் அதற்குப் பிந்தையவை
- Opera பதிப்பு 54 மற்றும் அதற்குப் பிந்தையவை
- Safari Technology Preview 83 அல்லது அதற்குப் பிந்தையவை
- iOS-க்கான Brave பதிப்பு 1.11.3 மற்றும் அதற்குப் பிந்தையவை
பரிந்துரைக்கப்படும் சாதன உற்பத்தியாளர்களில் பின்வரும் பிராண்டுகளும் அடங்கும்:
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உங்கள் ஸ்டோர் பெயரைக் கிளிக் செய்யவும்.
உங்கள் சுயவிவரத்தைக் கிளிக் செய்து, பிறகு பாதுகாப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
இரு-படி அங்கீகாரம் பிரிவில், இரு-படியை இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் கடவுச்சொல்லை உள்ளிட்டு, அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
அங்கீகார முறை பட்டியலிலிருந்து, பாதுகாப்பு விசை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் பாதுகாப்பு விசைக்கான பெயரை உள்ளிட்டு, பிறகு இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
USB பாதுகாப்பு விசை என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் பாதுகாப்பு விசையைச் செயல்படுத்தவும். உங்களுக்கு 10 மீட்புக் குறியீடுகளின் பட்டியல் வழங்கப்படும்.
விருப்பத்தேர்வு: உங்கள் முதன்மை அங்கீகார முறையைப் பயன்படுத்த முடியாத நிலையில், பயன்படுத்துவதற்கான காப்புநகல் அங்கீகார முறையை உருவாக்கவும்.
உங்களின் முதன்மை அல்லது காப்புநகல் அங்கீகார முறையைப் பயன்படுத்த முடியாமல் போனால், உங்கள் மீட்புக் குறியீடுகளைச் சேமித்து வைத்துக்கொள்ளவும். பின்வரும் உதாரணங்கள் உட்பட, பல வழிகளில் மீட்புக் குறியீடுகளைச் சேமிப்பதை உறுதிசெய்து கொள்ளவும்:
இப்போது நீங்கள் உள்நுழைய முயற்சிக்கும்போது, இரு-படி அங்கீகாரத்திற்கு உங்கள் பாதுகாப்பு விசையானது உங்கள் சாதனத்துடன் இணைக்கப்பட வேண்டும்.