இரு-படி அங்கீகாரத்தை முடக்குதல்
நீங்கள் இரு-படி அங்கீகாரத்தை முடக்கலாம். நீங்கள் பல அங்கீகார முறைகளை அமைத்து முதன்மை முறையை முடக்கினால், அடுத்துள்ள காப்புநகல் முறையானது முதன்மை முறையாக மாறும். நீங்கள் புதிய அங்கீகார முறைக்கோ சாதனத்துக்கோ மாறும்போது இரு-படி அங்கீகாரத்தை முடக்குவது அவசியமாக இருக்கலாம்.
அங்கீகார முறையை மாற்றுவதற்கு அல்லது அகற்றுவதற்கு முன் நீங்கள் உங்கள் அடையாளத்தை சரிபார்க்க வேண்டியிருக்கலாம்.
உங்கள் நிறுவனத்தாலோ அல்லது நிதித் தயாரிப்புகளுக்கான அணுகலை நீங்கள் கொண்டிருப்பதாலோ பாதுகாப்பான உள்நுழைவு முறை தேவைப்பட்டால், உங்களின் கடைசி முறையை உங்களால் அகற்ற முடியாது. விவரங்களுக்கு, நிதித் தயாரிப்புகளுக்கான பாதுகாப்பான உள்நுழைவுத் தேவைகள் என்பதைப் பார்க்கவும்.
உங்களின் அனைத்து இரு-படி அங்கீகார முறைகளையும் செயலிழக்கச் செய்தால், உங்களிடம் பாஸ்கீ இருந்தாலும் உங்கள் கணக்கின் பாதுகாப்பு குறையும். பாஸ்கீயைப் பயன்படுத்தும் உள்நுழைவுகளை மட்டுமே அது பாதுகாக்கும். பாஸ்கீகள் மற்றும் இரு-படி அங்கீகாரம் பற்றி மேலும் அறிக.
இந்தப் பக்கத்தில்
அங்கீகார முறைக்கான அணுகல் இருக்கும்போது இரு-படி அங்கீகாரத்தை முடக்குதல்
உங்கள் கணக்கின் பாதுகாப்பு அமைப்புகளில் இருந்து செயலில் உள்ள எந்தவொரு இரு-படி அங்கீகார முறையையும் நீங்கள் செயலிழக்கச் செய்யலாம். முதலில், உங்களின் முதன்மை முறை, காப்புநகல் முறை அல்லது மீட்புக் குறியீடு ஆகியவற்றைப் பயன்படுத்தி உங்கள் கணக்கில் உள்நுழையவும். மீட்புக் குறியீட்டைக் கொண்டு உள்நுழைவது உங்களின் எந்த முறையையும் செயலிழக்கச் செய்யாது.
உங்கள் நிறுவனத்திற்குப் பாதுகாப்பான உள்நுழைவு முறை தேவையென்றாலோ அல்லது நிதித் தயாரிப்புகளுக்கான அணுகல் உங்களிடம் இருப்பதாலோ கட்டாயமாகத் தேவைப்பட்டால் தவிர, உங்கள் கணக்கில் உள்ள ஒரேயொரு அங்கீகார முறையாக இருந்தாலும், அதை நீங்கள் செயலிழக்கச் செய்யலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியில், உங்கள் ஸ்டோர் பெயரைக் கிளிக் செய்யவும்.
உங்கள் சுயவிவரத்தைக் கிளிக் செய்து, பாதுகாப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
இரு-படி அங்கீகாரம் பிரிவில், நீங்கள் முடக்க விரும்பும் அங்கீகார முறைக்கு அடுத்துள்ள அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்குமாறு கேட்கப்பட்டால், சரிபார்த்தலை முடிக்கவும்.
உறுதிப்படுத்தல் உரையாடலில், அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
- உங்கள் Shopify செயலியில், உங்கள் ஸ்டோர் பெயர் அருகிலுள்ள ஐகானைத் தட்டவும்.
- உங்கள் பெயரைத் தட்டவும்.
- கணக்கை நிர்வகி என்பதைத் தட்டவும். இது உங்கள் மொபைல் உலாவியில் திறக்கப்படும்.
- பாதுகாப்பு தாவலைத் தட்டவும்.
- இரு-படி அங்கீகாரம் பிரிவில், நீங்கள் முடக்க விரும்பும் அங்கீகார முறைக்கு அடுத்துள்ள அகற்று என்பதைத் தட்டவும்.
- உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்குமாறு கேட்கப்பட்டால், சரிபார்த்தலை முடிக்கவும்.
- உறுதிப்படுத்தல் உரையாடலில், அகற்று என்பதைத் தட்டவும்.
எந்தவொரு அங்கீகார முறைக்கும் அணுகல் இல்லாதபோது இரு-படி அங்கீகாரத்தை முடக்குதல்
உங்கள் முதன்மை முறை, மாற்று அங்கீகார முறைகள் அல்லது மீட்புக் குறியீடு ஆகியவற்றில் எதையும் பயன்படுத்த முடியாவிட்டால், கணக்கு மீட்பு மூலம் இரு-படி அங்கீகாரத்தை அகற்றக் கோரலாம். கணக்கு மீட்பு, உங்கள் கணக்கில் உள்ள அனைத்து பாஸ்கீகளையும் அகற்றும். மீண்டும் அணுகலைப் பெற்றதும், மறுபடியும் ஒரு பாஸ்கீயை உருவாக்கலாம்.
படிகள்:
accounts.shopify.com தளத்திற்குச் சென்று உங்கள் ஸ்டோர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் தற்போதைய உள்நுழைவுச் சான்றுகளை உள்ளிடவும்.
பாதுகாப்பு முறையைக் கேட்கும்போது, மீட்புக் குறியீட்டைப் பயன்படுத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும். முன்பு சேமிக்கப்பட்ட மீட்புக் குறியீடுகள் எதற்கும் உங்களுக்கு அணுகல் இல்லாவிட்டாலும்கூட இந்த விருப்பத்தேர்வை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
எனது கணக்கை மீட்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் கணக்கின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்ட 6 இலக்கச் சரிபார்ப்புக் குறியீட்டை உள்ளிட்டு, சரிபார் என்பதைக் கிளிக் செய்யவும்.
கூடுதல் தகவல் தேவைப்பட்டால், Stripe-இன் சரிபார்ப்புப் போர்ட்டலைப் பயன்படுத்தி உங்கள் அடையாளத்தை சரிபார்க்க வழிமுறைகளைப் பின்பற்றவும். Shopify-இல் அடையாளச் சரிபார்ப்பு பற்றி மேலும் அறிக.
தேவையான தகவல்களைச் சமர்ப்பித்த பிறகு, கணக்கு மீட்புச் செயல்முறை தொடங்கிவிட்டது என்பதைத் தெரிவிக்கும் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைப் பெறுவீர்கள். மதிப்பாய்வு நிறைவடைந்ததும், உங்கள் கணக்கை மீண்டும் அணுகுவதற்கு உதவும் கூடுதல் படிகள் அடங்கிய ஃபாலோ-அப் மின்னஞ்சலை நீங்கள் பெறுவீர்கள்.