Shopify mobile பிராம்ட்களைக் காப்புநகல் முறையாகப் பயன்படுத்தும் இரு-படி அங்கீகாரம்
நீங்கள் உள்நுழையும்போது, உங்கள் கணக்கில் உள்நுழைய முயல்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்துமாறு கேட்கும் செய்தியைப் பெற Shopify mobile பிராம்ட்கள் மொபைல் சாதனத்தைப் பயன்படுத்துகின்றன.
Shopify mobile பிராம்ட்களை இரு-படி அங்கீகாரக் காப்புநகல் முறையாக மட்டுமே பயன்படுத்த முடியும். உங்கள் கணக்கில் ஏற்கனவே அங்கீகரிப்பான் செயலி, பாதுகாப்பு விசை அல்லது தற்போதுள்ள SMS இரு-படி அங்கீகாரம் போன்ற முதன்மை இரு-படி அங்கீகார முறை தேவை:
Shopify mobile பிராம்ட்களுக்காக நீங்கள் பயன்படுத்தும் மொபைல் சாதனத்தில் Shopify செயலி நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
இந்தப் பக்கத்தில்
Shopify mobile பிராம்ட்களின் பலன்கள்
கீழ்க்காணும் காரணங்களுக்காக, உங்கள் கணக்கைப் பாதுகாப்பதில் உதவ, குறுஞ்செய்தி (SMS) சரிபார்ப்புக் குறியீடுகளுக்குப் பதிலாக Shopify mobile பிராம்ட்களைப் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது:
- தாக்குதல்காரர்கள் SMS மூலம் அனுப்பப்படும் அங்கீகாரக் குறியீடுகளைத் திருட முயற்சி செய்யலாம். நீங்கள் உள்நுழைந்த சாதனங்களுக்கு மட்டும் மிகவும் பாதுகாப்பாக அனுப்புவதன் மூலம், தாக்குதல்காரர்களிடமிருந்து உங்களைப் பாதுகாக்க Shopify mobile பிராம்ட்கள் உதவுகின்றன.
- உங்கள் கணக்கிற்கான எந்தவொரு உள்நுழைவு முயற்சிகள் குறித்தும் அதிகத் தகவல்களை Shopify mobile பிராம்ட்கள் வழங்குகின்றன. இந்தத் தகவல்களில் சாதனம், இடம் மற்றும் நேரம் ஆகியவை அடங்கும்.
- Shopify mobile பிராம்ட்களைப் பயன்படுத்தி சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டை விரைவாக முடக்கலாம். உங்கள் கணக்கில் உள்நுழைய நீங்கள் முயற்சிக்கவில்லை எனில், உங்கள் கணக்கைப் பாதுகாக்க அறிவிப்பில் உள்ள இல்லை என்பதைத் தட்டவும்.
தொடங்குவதற்கு முன்
Shopify mobile பிராம்ட்களை அமைக்கும் முன், கீழ்க்காண்பவற்றை நிறைவு செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்:
முதன்மை அங்கீகார முறையை அமையுங்கள்.
Shopify mobile பிராம்ட்களுக்காக நீங்கள் பயன்படுத்தும் மொபைல் சாதனத்தில் Shopify செயலியை நிறுவுங்கள். உங்கள் மொபைல் சாதனத்தில் ஏற்கனவே Shopify செயலி நிறுவப்பட்டிருந்தால், அதிலுள்ள பதிப்பு மிகச் சமீபத்தியதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
அந்தச் சாதனத்தில் உள்ள Shopify செயலியில் உள்நுழையுங்கள்.
Shopify mobile பிராம்ட்களை அமையுங்கள்
படிகள்:
புஷ் அறிவிப்புகளைப் பெற நீங்கள் பயன்படுத்த விரும்பும் மொபைல் சாதனத்தில் உள்ள Shopify செயலியில் உள்நுழையுங்கள்.
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உங்கள் ஸ்டோர் பெயரைக் கிளிக் செய்யவும்.
உங்கள் சுயவிவரத்தைக் கிளிக் செய்து, பிறகு பாதுகாப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
இரு-படி அங்கீகாரம் பிரிவில், மற்றொரு முறையைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் கடவுச்சொல்லை உள்ளிட்டு, பிறகு அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
அங்கீகார முறை பட்டியலில் இருந்து, Shopify Mobile பிராம்ட்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அறிவிப்புகளைப் பெற நீங்கள் பயன்படுத்த விரும்பும் மொபைல் சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கக்கூடிய சாதனங்களின் பட்டியலில் உங்கள் சாதனம் இல்லையென்றால், கீழ்க்காண்பவற்றைச் சரிபார்க்கவும்:
- உங்கள் மொபைல் சாதனத்தில் Shopify செயலியின் மிகச் சமீபத்திய பதிப்பு நிறுவப்பட்டுள்ளது.
- அந்தச் சாதனத்தில் உள்ள Shopify செயலியில் நீங்கள் உள்நுழைந்துள்ளீர்கள்.
கிடைக்கக்கூடிய பட்டியலில் உங்கள் சாதனம் இல்லை எனில், அந்தச் சாதனத்தில் உள்ள Shopify செயலியில் உள்நுழைந்த பிறகு, பின்வரும் படிகளை நீங்கள் மீண்டும் செய்ய வேண்டும்:
- இரு-படி அங்கீகாரம் பிரிவில், மற்றொரு முறையைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் கடவுச்சொல்லை உள்ளிட்டு, பிறகு அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
- அங்கீகார முறை பட்டியலில் இருந்து, Shopify Mobile பிராம்ட்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- அறிவிப்புகளைப் பெற நீங்கள் பயன்படுத்த விரும்பும் மொபைல் சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
மொபைல் பிராம்ட்டை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் தேர்ந்தெடுத்த சாதனத்தில் சோதனைச் செய்தி காட்டப்படும்.
உங்கள் மொபைல் சாதனத்தில், அங்கீகரி என்பதைத் தட்டவும். காப்புநகல் முறையாக Shopify Mobile பிராம்ட்டை நீங்கள் செயல்படுத்தி உள்ளீர்கள் என்பதைக் குறிப்பிடும் மின்னஞ்சல் செய்தியைப் பெறுவீர்கள்.
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, நிறைவுசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் முதன்மை அல்லது காப்புநகல் அங்கீகார முறையைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலைக்கு உதவ, உங்கள் மீட்புக் குறியீடுகளைச் சேமிக்கவும். கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளை உள்ளடக்கி, பல வழிகளில் மீட்புக் குறியீடுகளை நீங்கள் தேக்கி வைப்பதை அல்லது சேமித்து வைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்:
- உங்கள் மொபைல் சாதனம், டேப்லெட், லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் கணினியிலுள்ள லோக்கல் கோப்பில்
- LastPass அல்லது 1Password போன்ற கடவுச்சொல் நிர்வாகி பிளாட்ஃபார்மில்
- நீங்கள் பயன்படுத்தும் கிளவுட் ஸ்டோரேஜ் இடத்தில்
- அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட ஆவணத்தில்
இப்போது நீங்கள் உள்நுழையும்போது, இரு-படி அங்கீகாரத்திற்கு உங்கள் மொபைல் சாதனத்தைப் பயன்படுத்தலாம்.
இரு-படி அங்கீகார அறிவிப்புகளைச் செயல்படுத்துங்கள்
Shopify mobile பிராம்ட்களை அமைத்த பிறகு நீங்கள் அறிவிப்புகளைப் பெறவில்லை எனில், உங்கள் மொபைல் சாதனத்தில் உள்ள Shopify செயலிக்காக பாதுகாப்புப் புதுப்பிப்புகள் மற்றும் பல்-காரணி அங்கீகாரம் ஆகியவற்றைச் செயல்படுத்தியுள்ளீர்களா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டியிருக்கலாம்.
படிகள்:
Shopify செயலியில்,
என்பதைத் தட்டி, பிறகு
அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
செயலி அமைப்புகள் பிரிவில், கணக்கு அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
Security updates மற்றும் Multi-factor authentication ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளதா எனச் சரிபார்க்கவும்.