கிரெடிட் நோட்டுகள் மற்றும் பில்லிங் கிரெடிட்களை நிர்வகித்தல்

உங்களின் Shopify நிர்வாகி மூலம் கிரெடிட் நோட்டுகளையும் பில்லிங் கிரெடிட்களையும் நிர்வகிப்பது எப்படி என்பது இந்தப் பக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பக்கத்தில் உள்ளவை

பில்லிங் சரிசெய்தல்களுக்கான கிரெடிட் நோட்டுகளை நிர்வகித்தல்

உங்களுக்கு வழங்கப்பட்ட பில்லில் ஒரு பகுதியை அல்லது முழுவதையும் ரத்துசெய்ய கிரெடிட் நோட்டு பயன்படுத்தப்படுகிறது. இது இரண்டு முக்கிய நோக்கங்களுக்காகப் பயன்படுகிறது:

  • செலுத்தப்படாத பில்கள்: உங்கள் பில்லுக்கான தொகையை நீங்கள் செலுத்தாமல் இருந்தால், கிரெடிட் நோட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை உங்கள் மொத்த நிலுவைத் தொகையைத் தானாகவே குறைக்கும்.
  • செலுத்தப்பட்ட பில்கள்: உங்கள் பில்லுக்கான தொகையை ஏற்கனவே நீங்கள் செலுத்தியிருந்தால், குறிப்பிட்ட தொகைக்கான பணத்தைத் திரும்பப்பெறுதலைக் கிரெடிட் நோட்டு தூண்டும், இதன் மூலம் அந்தத் தொகை உங்களுக்கே வந்துசேரும்.

கிரெடிட் நோட்டை அணுகுதல் மற்றும் பதிவிறக்குதல்

  1. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > பில்லிங் என்பதற்குச் செல்லவும்.

  2. கடந்தகால பில்கள் பிரிவில், தொடர்புடைய கிரெடிட் நோட்டைக் கொண்டுள்ள பில்லைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. உங்கள் கணக்கில் [amount] தொகையானது [date] அன்று கிரெடிட் செய்யப்பட்டது பிரிவில், கிரெடிட் நோட்டைப் பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்யவும். PDF வடிவமைப்பில் உங்கள் சாதனத்தில் கிரெடிட் நோட்டு பதிவிறக்கப்படும்.

கணக்கு இருப்புகள் மற்றும் பில்லிங் கிரெடிட்களைப் புரிந்துகொள்ளுதல்

Shopify-இல் உள்ள ஒவ்வொரு பில்லிங் கணக்கிலும் ஒரு குறிப்பிட்ட இருப்புப் பராமரிக்கப்படும். அந்த இருப்பானது பின்வருமாறு செயல்படும்:

  • நேர்மறை இருப்புகள்: உங்கள் கணக்கில் இருக்கும் ஏதேனும் நேர்மறை இருப்பானது, எதிர்கால இன்வாய்ஸ்களில் உள்ள நிலுவைத் தொகையைக் குறைக்கப் பயன்படுத்தப்படும். இது இருப்பு பூஜ்ஜியமாகும் வரை தொடரும்.
  • கிரெடிட் நோட்டுகள் மற்றும் இன்வாய்ஸ்கள்: Shopify உங்களுக்குத் தர வேண்டிய பணத்திற்காக ஒரு கிரெடிட் நோட்டு வழங்கப்பட்டால், வரவிருக்கும் இன்வாய்ஸ்களுக்கான பேமெண்ட் செயல்முறையை அது சரிசெய்யும். இது நீங்கள் அடுத்த முறை செலுத்த வேண்டிய தொகையைக் குறைக்கலாம் அல்லது முழு இன்வாய்ஸ் தொகைக்கும் ஈடுகட்டலாம்.

பில்லிங் கிரெடிட்களுக்கான தகுதிக்கான நிபந்தனைகள்

பயன்படுத்தப்படாத சேவைகள், தவறாக எழுத்துக்கூட்டப்பட்ட டொமைன்கள் அல்லது தகுதியின்மைச் சூழ்நிலைகள் உள்பட, சந்தாத் திட்டங்களுக்கான பணத்தை Shopify பொதுவாகத் திரும்ப வழங்காது. உங்களிடம் தவறுதலாகப் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக நீங்கள் கருதினால், மதிப்பாய்வு செய்யக் கோரி Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும். Shopify-இன் பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை குறித்த விவரங்களுக்கு, Shopify-இன் சேவை விதிமுறைகளின் 5.10-ஆவது பிரிவைப் பார்க்கவும்.

கணக்குக் கிரெடிட்களாகத் திரும்பப்பெறும் பணம்

கணக்குக் கிரெடிட்களாகப் பணத்தைத் திரும்பப்பெற நீங்கள் தேர்வுசெய்தால், உங்களின் அடுத்த பில்லுக்கான நிலுவைத் தொகையிலிருந்து இந்தக் கிரெடிட்கள் தானாகவே கழிக்கப்படும்.

எடுத்துக்காட்டாக, 1 ஜனவரி 2025 முதல் 30 ஜனவரி 2025 வரையிலான கட்டணச் சுழற்சியில் உங்கள் கணக்கு $40 USD கிரெடிட்டைப் பெற்றால், 31 ஜனவரி 2025 முதல் 1 மார்ச் 2025 வரையிலான அடுத்தச் சுழற்சிக்கான பில் தொகையைக் குறைக்க இந்தக் கிரெடிட் பயன்படுத்தப்படும்.

பில்லிங் கிரெடிட்களின் வகைகள் மற்றும் பயன்பாடு

பில்லிங் கணக்குக் கிரெடிட்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டு, அதற்கேற்பப் பயன்படுத்தப்படும்:

  • சந்தா கிரெடிட்: உங்களின் சந்தாக் கட்டணங்களுக்கான தள்ளுபடியாகப் பயன்படுத்தப்படும்.
  • செயலி கிரெடிட்: உங்களின் செயலிக் கட்டணங்களுக்கான தள்ளுபடியாகப் பயன்படுத்தப்படும்.
  • ஷிப்பிங் கிரெடிட்: உங்களின் ஷிப்பிங் கட்டணங்களுக்கான தள்ளுபடியாகப் பயன்படுத்தப்படும்.
  • பரிவர்த்தனை கிரெடிட்: உங்களின் பரிவர்த்தனைக் கட்டணங்களுக்கான தள்ளுபடியாகப் பயன்படுத்தப்படும்.

பில்லிங் கிரெடிட்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன

உங்கள் Shopify கணக்கில் உள்ள கிரெடிட்கள் குறிப்பிட்ட பில்லிங் வகைகளுக்கென ஒதுக்கப்பட்டவை, மேலும் அவை எந்த வகையின் கீழ் ஒதுக்கப்பட்டனவோ அந்த வகையிலான உங்களின் அடுத்த இன்வாய்ஸில் தானாகவே பயன்படுத்தப்படும். பின்வரும் கட்டுப்பாடுகளைக் கவனிக்க வேண்டியது முக்கியம்:

  • வகை சார்ந்தது: ஒரு வகையில் (சந்தா அல்லது ஷிப்பிங் போன்ற) பெற்ற கிரெடிட்களை, வேறொரு வகைக்கு மாற்றவோ அந்த வகையிலான கட்டணங்களை ஈடுகட்டவோ பயன்படுத்த முடியாது.
  • எதிர்கால பில்லிங்கிற்கு மட்டுமே: கிரெடிட்களை எதிர்காலக் கட்டணச் சுழற்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும், மேலும் உங்களின் சந்தா மற்றும் பரிவர்த்தனைக் கட்டணங்கள் உள்பட, உங்கள் கணக்கில் உள்ள நடப்பு அல்லது நிலுவைக் கட்டணங்கள் எதற்கும் இதைப் பயன்படுத்த முடியாது.

உங்களிடம் உள்ள பில்லிங் கிரெடிட்களை மதிப்பாய்வு செய்தல்

  1. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > பில்லிங் என்பதற்குச் செல்லவும்.

  2. ஏதேனும் கிரெடிட் வகையின்கீழ் உங்களிடம் கிரெடிட் இருந்தால், தற்போதைய கட்டணச் சுழற்சி பிரிவில் மீதமுள்ள கிரெடிட்களைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. உங்கள் கணக்கில் உள்ள கிரெடிட்கள் உரையாடல் கட்டத்தில், ஏதேனும் கிரெடிட் வகையின்கீழ் உங்களிடம் உள்ள கிரெடிட்களைப் பார்க்கவும்.

Shopify திட்ட மேம்படுத்தல்களின்போது கிடைக்கும் விகிதாசாரக் கிரெடிட்கள்

ஒரு சுழற்சியின் நடுவில் உங்களின் Shopify திட்டத்தை மேம்படுத்தும்போது, பயன்படுத்தப்படாத சந்தாக் காலத்திற்கான தொகை விகிதாசாரக் கிரெடிட்களாக மாற்றப்படும். பின்பு, இந்தக் கிரெடிட்கள் உங்களின் மேம்படுத்தப்பட்ட திட்டத்தின் இன்வாய்ஸில் தானாகவே பயன்படுத்தப்படும்.

விகிதாசாரக் கிரெடிட்கள் எப்படிக் கணக்கிடப்படுகின்றன

கட்டணச் சுழற்சியின்போது உங்கள் திட்டத்தை மேம்படுத்தினால், உங்களின் தற்போதைய திட்டத்தின் பயன்படுத்தப்படாத நாட்கள் கணக்கிடப்பட்டு, அவை கிரெடிட்டாக மாற்றப்படும். மாதாந்திரத் திட்டச் செலவை மாதத்தில் உள்ள நாட்களின் எண்ணிக்கையால் வகுத்து, பயன்படுத்தப்படாத நாட்களின் எண்ணிக்கையால் பெருக்குவதன் மூலம் இது கணக்கிடப்படுகிறது.

விகிதாசார கிரெடிட் கணக்கீட்டிற்கான எடுத்துக்காட்டு

உங்கள் Shopify ஸ்டோரின் சந்தாத் திட்டத்திற்கு மாதத்திற்கு $39 USD செலவாகிறது என்றும், மே 1ஆம் தேதி மாதாந்திர இன்வாய்ஸைப் பெற்றுள்ளீர்கள் என்றும் வைத்துக்கொள்வோம். மே 11ஆம் தேதி உயர் திட்டத்திற்கு மேம்படுத்த முடிவு செய்தால், உங்களின் அசல் சந்தாவில் 19 நாட்களை நீங்கள் பயன்படுத்தவில்லை. விகிதாசார கிரெடிட் எவ்வாறு கணக்கிடப்பட்டுப் பயன்படுத்தப்படும் என்பது இங்கே:

  1. தினசரி கட்டணத்தைக் கணக்கிடுதல்: தினசரி கட்டணம் = $39 USD/30 நாட்கள் = நாளொன்றுக்கு $1.30 USD
  2. விகிதாசார கிரெடிட்டைக் கணக்கிடுதல்: நாளொன்றுக்கு $1.30 USD x பயன்படுத்தப்படாத 19 நாட்கள் = $24.70 USD

புதிய மாதாந்திர Shopify திட்டத்தில் விகிதாசார கிரெடிட்டைப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டு

மேம்படுத்துவதற்காக உங்கள் இன்வாய்ஸைச் சரிசெய்ய விகிதாசார கிரெடிட் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது இங்கே:

  • புதிய திட்டத்தின் செலவு: $105 USD
  • கழிக்கப்படும் விகிதாசாரத் தொகை: $24.70 USD
  • இறுதி இன்வாய்ஸ் தொகை: $105 USD - $24.70 USD = $80.30 USD

எனவே, உங்கள் இன்வாய்ஸ் தொகை $80.30 USD ஆக இருக்கும்.

புதிய வருடாந்திர Shopify திட்டத்தில் விகிதாசார கிரெடிட்டைப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டு

மேம்படுத்துவதற்காக உங்கள் இன்வாய்ஸைச் சரிசெய்ய விகிதாசார கிரெடிட் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது இங்கே:

  • வருடாந்திரக் கட்டணச் செலவு: $348 USD
  • கழிக்கப்படும் விகிதாசாரத் தொகை: $24.70 USD
  • இறுதி இன்வாய்ஸ் தொகை: $348 USD - $24.70 USD = $323.30 USD

எனவே, உங்கள் இன்வாய்ஸ் தொகை $323.30 USD ஆக இருக்கும்.

கிரெடிட் நோட் அல்லது பில்லிங் கிரெடிட் குறித்து Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன்

கிரெடிட் நோட் அல்லது பில்லிங் கிரெடிட் குறித்து Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன், உங்கள் சிக்கலை விரைவாகத் தீர்க்க பின்வரும் தகவல்களைச் சேகரித்து வைத்துக்கொள்ளவும்:

  • உங்கள் ஸ்டோர் URL மற்றும் கணக்கின் மின்னஞ்சல் முகவரி
  • தொடர்புடைய பில்லுக்கான இன்வாய்ஸ் எண் மற்றும் தேதி
  • நீங்கள் பெறுவதற்கு எதிர்பார்த்த கிரெடிட் தொகை மற்றும் அதற்கான காரணம்
  • கிரெடிட்டைத் தூண்டியிருக்க வேண்டிய திட்ட மாற்றம் அல்லது நிகழ்வின் தேதி
  • உங்கள் Shopify நிர்வாகியில் காட்டப்படும் ஏதேனும் பில்லிங் பிழைகள் அல்லது முரண்பாடுகளின் திரைப்பிடிப்புகள்
  • அமைப்புகள் > பில்லிங் என்பதில் நீங்கள் பெற்றிருக்கக்கூடிய கிரெடிட்களைச் சரிபார்த்தல் போன்ற நீங்கள் முன்பே முயன்றுபார்த்த படிகள்

இந்தத் தகவல்களைத் தயாராக வைத்திருப்பது, உங்களுக்குச் சிறப்பாக உதவ Shopify ஆதரவுக்கு உதவியாக இருக்கும்.

பரிவர்த்தனைக் கட்டணக் கொள்கைகளைப் புரிந்துகொள்ளுதல்

Shopifyஇல் ஓர் ஆர்டரை நீங்கள் ரத்துசெய்யும்போது, அந்த ரத்துசெய்தலுடன் தொடர்புடைய பரிவர்த்தனைக் கட்டணம் உங்கள் கணக்கிற்குத் திரும்பப்பெறப்படாது அல்லது கிரெடிட்டாக வழங்கப்படாது.

பரிவர்த்தனைக் கட்டணங்கள் என்பவை Shopify Payments கட்டணங்களிலிருந்து வேறுபட்டவை, இவை நேரடியாக உங்கள் பேஅவுட்டிலிருந்து எடுக்கப்படும். கட்டணங்கள் மற்றும் செலவுகள் குறித்து மேலும் அறிக.