உங்கள் Shopify பில்லிங் திட்ட மாற்றங்களை நிர்வகித்தல்

எந்த நேரத்திலும் உங்கள் Shopify திட்டத்தை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். உங்கள் திட்டத்தை மேம்படுத்துவது அல்லது தரம் குறைப்பது பில்லிங்கில் தாக்கங்களை ஏற்படுத்தும், மேலும் சில மாற்றங்களுக்குக் குறிப்பிட்ட அனுமதிகள் தேவைப்படும்.

உங்கள் Shopify திட்டத்தை மாற்றுவதற்கான பில்லிங் விருப்பங்கள்

Shopifyஇன் விலை நிர்ணயப் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளபடி, தற்போது கிடைக்கக்கூடிய எந்தவொரு திட்டத்திற்கும் நீங்கள் மாறலாம். நீங்கள் நிறுத்தப்பட்ட ஒரு திட்டத்தில் இருந்தால், உங்கள் திட்டங்களை மாற்றிய பிறகு அல்லது ஸ்டோரை இடைநிறுத்திய பிறகு அதற்கே மீண்டும் மாற முடியாது.

உங்கள் திட்டத்தை மேம்படுத்துவதால் ஏற்படும் பில்லிங் தாக்கங்கள்

உங்கள் திட்டத்தை மேம்படுத்தும்போது பின்வரும் பில்லிங் தாக்கங்கள் குறித்து அறிந்திருங்கள்:

  • உடனடி பில்லிங்: உங்கள் திட்டத்தை மேம்படுத்தியவுடன், உங்களின் புதிய திட்டத்திற்கான சந்தாக் கட்டணத்தை மட்டும் உள்ளடக்கிய உடனடி பில்லைப் பெறுவீர்கள்.
  • நிலுவையில் உள்ள கட்டணங்கள்: உடனடி பில்லானது உங்கள் கணக்கிலுள்ள எந்தவொரு நிலுவைக் கட்டணங்களையும் உள்ளடக்காது. இந்தக் கட்டணங்கள் தனியாகச் சேர்க்கப்பட்டு, உங்களின் பில்லிங் வரம்பைத் தாண்டிய பிறகு அல்லது உங்களின் கட்டணச் சுழற்சியின் முடிவில் பில் செய்யப்படும்.
  • உடனடிச் செயலாக்கம்: நீங்கள் மேம்படுத்தும்போது, உங்களின் புதிய திட்டத்துடன் தொடர்புடைய அம்சங்கள் உடனடியாகச் செயல்படத் தொடங்கும்.
  • விகிதாசாரச் சரிசெய்தல்கள்: உங்கள் புதிய திட்டத்திற்கான பில்லிங் சரிசெய்தல்கள் மேம்படுத்தப்பட்ட தேதியிலிருந்து விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்படும். அதாவது, உங்கள் கட்டணச் சுழற்சியில் மீதமுள்ள நாட்களின் அடிப்படையில் செலவின் எந்தவொரு வித்தியாசமும் கணக்கிடப்படும்.
  • முந்தைய திட்டக் கழிவுகள்: உங்கள் முந்தைய திட்டத்தின் விலையும் சரிவிகிதமாக்கப்பட்டு, அந்த மாதத்தில் உங்களின் புதிய திட்டத்தின் மொத்த விலையிலிருந்து கழிக்கப்படும்.
  • வருடாந்திரச் சுழற்சிக்கான பரிசீலனைகள்: நீங்கள் வருடாந்திரக் கட்டணச் சுழற்சிக்கு மாறினால், புதிய கட்டணச் சுழற்சி தொடங்கும். உங்கள் புதிய திட்டத்தில் குறைந்த சந்தாக் கட்டணம் இருந்தால், இந்தக் குறைப்பைப் பிரதிபலிக்கும் வகையிலான சரிவிகிதப் பில்லைப் பெறுவீர்கள்.
  • ஷிப்பிங் கேரியர் தகவல் மீட்டமைக்கப்படும்: நீங்கள் Basic அல்லது Grow திட்டத்தில் மாதாந்திரக் கட்டணச் சுழற்சியிலிருந்து வருடாந்திரக் கட்டணச் சுழற்சிக்கு மாறினால், உங்களின் ஷிப்பிங் கேரியர் தகவல் மீட்டமைக்கப்படும். ஒவ்வொரு ஷிப்பிங் கேரியருக்கும் இந்தத் தகவலை நீங்கள் மீண்டும் உள்ளிட வேண்டும்.

திட்டத்தைத் தரமிறக்கும்போது அல்லது கட்டணச் சுழற்சியை மாற்றும்போது ஏற்படும் பில்லிங் தாக்கங்கள்

உங்கள் திட்டத்தைத் தரமிறக்கும்போது அல்லது கட்டணச் சுழற்சியை மாற்றும்போது பின்வரும் பில்லிங் தாக்கங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்:

  • ப்ரீபெய்டு திட்டங்கள்: உங்களின் Shopify திட்டம் ப்ரீபெய்டு திட்டமாகும், அதாவது குறைந்த விலைத் திட்டத்திற்கான எந்த மாற்றங்களும் உங்களின் நடப்புக் கட்டணச் சுழற்சியின் முடிவில் அமலுக்கு வரும்.
  • சுழற்சி இறுதிக்கான மாற்றங்கள்: உங்கள் திட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்தால் அவை உடனடியாக இல்லாமல், நடப்புக் கட்டணச் சுழற்சியின் முடிவிலேயே செயல்படுத்தப்படும்.
  • க கட்டணச் சுழற்சிகளை மாற்றுதல்: நீங்கள் வருடாந்திரக் கட்டணச் சுழற்சியிலிருந்து மாதாந்திரக் கட்டணச் சுழற்சிக்கு மாறினால், உங்களுடைய தற்போதைய வருடாந்திரச் சுழற்சியின் முடிவில் இந்த மாற்றம் அமலுக்கு வரும்.
  • ஷிப்பிங் கேரியர் தகவல் மீட்டமைக்கப்படும்: நீங்கள் Basic அல்லது Grow திட்டத்தில் மாதாந்திரக் கட்டணச் சுழற்சியிலிருந்து வருடாந்திரக் கட்டணச் சுழற்சிக்கு மாறினால், உங்களின் ஷிப்பிங் கேரியர் தகவல் மீட்டமைக்கப்படும். ஒவ்வொரு கேரியருக்கும் இந்தத் தகவலை நீங்கள் மீண்டும் உள்ளிட வேண்டும்.

எடுத்துக்காட்டுகள்:

  • Basic திட்டத்திற்கு மாறுதல்: நீங்கள் Basic திட்டத்திற்குத் தரமிறக்க விரும்பினால், அந்த மாற்றம் உங்களின் நடப்புக் கட்டணச் சுழற்சியின் முடிவில் அமலுக்கு வரும். கட்டணச் சுழற்சி முடிவடையும் வரை உங்கள் தற்போதைய திட்டத்திலேயே இருப்பீர்கள்.
  • Changing to monthly payment cycle: If you request a change to a monthly payment cycle but are still charged the annual amount, then the switch occurs at the end of your current annual billing cycle. For example, if your annual billing cycle ends on October 31, then your account displays the annual charge until that date. Switching from annual billing to monthly might result in the loss of features or benefits included with your annual plan. To switch to monthly billing, go to Settings > Plan and click Switch to monthly. Refer to changing from annual to monthly billing.

திட்ட மாற்றங்களுக்குத் தேவையான அனுமதிகள்

மேம்படுத்துதல் அல்லது தரமிறக்குதல் மூலம் உங்கள் திட்டத்தில் மாற்றங்களைச் செய்ய, கடையின் உரிமையாளர் அல்லது திட்டத்தை நிர்வகி என்பதற்கான அனுமதியைக் கொண்ட பணியாளர் அந்த மாற்றத்தை அங்கீகரிக்க வேண்டும்.

உங்கள் Shopify திட்டத்தில் இலவச சோதனையின்போது மேம்படுத்துவதால் ஏற்படும் தாக்கம்

இலவச சோதனையின்போது உங்கள் திட்டத்தை மேம்படுத்தினால், அது சோதனையின் நீளத்தை மாற்றாது அல்லது உங்களின் ஸ்டோர் தரவைப் பாதிக்காது. உங்கள் இலவச சோதனை முடிவடையும் வரை உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது. இலவச சோதனையில் Shopify-ஐ முயற்சித்துப் பார்ப்பது பற்றி மேலும் அறிக.

உங்களின் இலவச சோதனை முடிவடைந்த பிறகு உங்களுக்கான சலுகை விலை அமலில் இருந்தால், திட்ட மாற்றங்கள் சலுகைகளுடன் எப்படிச் செயல்படும் என்பது குறித்த விவரங்களுக்கு மாதாந்திரத் திட்டச் சலுகை விலையைப் பார்க்கவும்.

சலுகைக்கான சோதனையின்போது திட்டங்கள் அல்லது கட்டணச் சுழற்சிகளை மாற்றுதல்

நீங்கள் ஒரு சலுகைக்கான சோதனையில் இருந்தால், இலவச சோதனையின்போது நடப்பதைவிடத் திட்ட மாற்றங்கள் வேறுவிதமாகச் செயல்படும்:

  • வேறு திட்ட நிலைக்கு மாறுதல்: உங்களின் புதிய திட்டம் உடனடியாக அமலுக்கு வரும். எஞ்சிய அசல் சலுகைக்காலத்திற்குச் சலுகை விலையே தொடரும், மேலும் அதன் முடிவுத் தேதி மீட்டமைக்கப்படாது. மாற்றத்தின்போது புதிய திட்டத்தின் முழு விலைக்கான விலைப்பட்டியலாக இல்லாமல் சலுகை விலைக்கான சரிவிகித விலைப்பட்டியலைப் பெறுவீர்கள். சலுகை முடிந்ததும், புதிய திட்டத்தின் நிலையான விலையைச் செலுத்துவீர்கள். சலுகை பொருந்தாத Plus திட்டம் போன்றவற்றுக்கு நீங்கள் மாறினால், அந்தப் புதிய திட்டத்திற்குச் சலுகை விலை பொருந்தாது.
  • மாதாந்திரத்திலிருந்து வருடாந்திரப் பில்லிங்கிற்கு மாறுதல்: சலுகைக்கான சோதனை முடிவடைந்த பிறகு இந்தக் கட்டணச் சுழற்சி மாற்றம் அமலுக்கு வரும். சலுகைக்கான சோதனையின்போது ஒரு மாதத்திற்கான சலுகை விலையைத் தொடர்ந்து செலுத்துவீர்கள். சோதனை முடிந்ததும் வருடாந்திரக் கட்டணச் சுழற்சி தொடங்கும், மேலும் நீங்கள் முழு வருடாந்திரத் தொகையையும் முன்கூட்டியே செலுத்த வேண்டும்.
  • Changing from annual to monthly billing: To make this change, go to Settings > Plan and click Switch to monthly. Review the billing cycle considerations before confirming the change.

உங்களின் நடப்புக் கட்டணச் சுழற்சியை உறுதிப்படுத்தவும்

நடப்புக் கட்டணச் சுழற்சி மற்றும் மாற்றங்கள் எப்போது அமலுக்கு வரும் என்பதை உறுதிப்படுத்த:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > திட்டம் என்பதற்குச் செல்லவும்.

  2. திட்ட விவரங்கள் பிரிவில், கட்டணச் சுழற்சியையும் திட்டமிடப்பட்ட ஏதேனும் மாற்றங்களையும் சரிபார்க்கவும்.

உங்களின் தற்போதைய திட்டத்தைச் சரிபார்க்கவும்

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > திட்டம் என்பதற்குச் செல்லவும்.

  2. உங்களின் தற்போதைய திட்டத்தைச் சரிபார்க்கவும்.

மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து மெனு என்பதைத் தட்டி, பின்னர் அமைப்புகள் அமைப்புகள் என்பதைத் தட்டவும்.

  2. ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், திட்டம் என்பதைத் தட்டவும்.

  3. உங்களின் தற்போதைய திட்டத்தைச் சரிபார்க்கவும்.

உங்கள் ஸ்டோரின் சந்தாத் திட்டத்தை மாற்றவும்

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > திட்டம் என்பதற்குச் செல்லவும்.

  2. திட்டத்தை மாற்று, திட்டத்தைத் தேர்வுசெய் அல்லது திட்டத்தைத் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. தற்போதுள்ள திட்டங்களைச் சரிபார்க்கவும். நீங்கள் எந்தத் திட்டத்திற்கு மாற விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து, Basic திட்டத்தைத் தேர்ந்தெடு, Grow திட்டத்தைத் தேர்ந்தெடு, Advanced திட்டத்தைத் தேர்ந்தெடு அல்லது Plus திட்டத்தைத் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. கட்டணச் சுழற்சியைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் ஏற்கவிருக்கும் கிரெடிட் கார்டு கட்டணங்கள் குறித்த விளக்கத்தைப் படிக்கவும்.

  5. மற்றொரு Shopify ஸ்டோரில் சேமிக்கப்பட்ட கட்டண முறை இருந்தால், புதிய கட்டண முறையை உள்ளிடுவதற்குப் பதிலாக நீங்கள் அதைத் தேர்ந்தெடுக்கலாம். பாதுகாப்புக் காரணங்களுக்காக, நீங்கள் சந்தா பெறுவதற்கு முன்பாக கார்டின் பாதுகாப்புக் குறியீட்டை உள்ளிட வேண்டியிருக்கலாம்.

  6. புதிய ஒப்பந்தத்தை ஏற்க சந்தா பெறு என்பதைக் கிளிக் செய்யவும்.

நீங்கள் Plus திட்டத்தைத் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்தால், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கப் பின்வரும் படிகளை நிறைவுசெய்யவும்:

  1. சந்தாவை உறுதிப்படுத்த, உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கவும் எனும் உரையாடல் பெட்டியில், Stripe-க்குச் செல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. விதிமுறைகளைச் சரிபார்த்து, பின்னர் ஏற்றுத் தொடரு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. உங்கள் மொபைல் சாதனத்தில் உள்ள கேமரா மூலம் நீங்கள் ஸ்கேன் செய்வதற்கான QR குறியீடு காட்டப்படும். மின்னஞ்சல் இணைப்பு, உரை இணைப்பு, இணைப்பை நகலெடு அல்லது இந்தச் சாதனத்தில் தொடரு என்பதைத் தேர்ந்தெடுக்க பிற விருப்பத்தேர்வுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. அரசாங்கம் வழங்கிய உங்களின் புகைப்பட ID-இன் முன் மற்றும் பின்பக்கத்தைப் படம் பிடிக்கத் தயாராக வைத்திருக்கவும்.
  5. உங்கள் ID-ஐ ஸ்கேன் செய்யத் தயாராகுங்கள் எனும் உரையாடல் பெட்டியில், நான் தயார் என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. உங்கள் புகைப்பட ID-இன் முன்பக்கத்தைப் படமெடுத்து, புகைப்படத்தைச் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது மீண்டும் முயற்சிக்க மீண்டும் படமெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. உங்கள் புகைப்பட ID-இன் பின்பக்கத்தைச் சமர்ப்பிக்க, நான் தயாராக உள்ளேன் என்பதைக் கிளிக் செய்யவும்.
  8. உங்கள் புகைப்பட ID-இன் பின்பக்கத்தைப் படமெடுத்து, புகைப்படத்தைச் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது மீண்டும் முயற்சிக்க மீண்டும் படமெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  9. சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்ததும் உறுதிப்படுத்தல் செய்தி காட்டப்படும். பிழை ஏற்பட்டால், அரசால் வழங்கப்பட்ட வேறு புகைப்பட ID-ஐப் பயன்படுத்திச் சரிபார்க்க, சந்தா செலுத்து என்பதைக் கிளிக் செய்து முயலலாம்.
மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து மெனு என்பதைத் தட்டி, பின்னர் அமைப்புகள் அமைப்புகள் என்பதைத் தட்டவும்.

  2. ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், திட்டம் என்பதைத் தட்டவும்.

  3. திட்டத்தை மாற்று, திட்டத்தைத் தேர்வுசெய் அல்லது திட்டத்தைத் தேர்ந்தெடு என்பதைத் தட்டவும்.

  4. தற்போதைய திட்டங்களை மதிப்பாய்வு செய்யவும். நீங்கள் மாற்ற விரும்பும் திட்டத்தைப் பொறுத்து, Basic-ஐத் தேர்ந்தெடு, Grow-ஐத் தேர்ந்தெடு, Advanced-ஐத் தேர்ந்தெடு அல்லது Plus-ஐத் தேர்ந்தெடு என்பதைத் தட்டவும்.

  5. கட்டணச் சுழற்சியைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் ஏற்கவிருக்கும் கிரெடிட் கார்டு கட்டணங்கள் குறித்த விளக்கத்தைப் படிக்கவும்.

  6. மற்றொரு Shopify ஸ்டோரில் சேமிக்கப்பட்ட கட்டண முறை இருந்தால், புதிய கட்டண முறையை உள்ளிடுவதற்குப் பதிலாக நீங்கள் அதைத் தேர்ந்தெடுக்கலாம். பாதுகாப்புக் காரணங்களுக்காக, நீங்கள் சந்தா பெறுவதற்கு முன்பாக கார்டின் பாதுகாப்புக் குறியீட்டை உள்ளிட வேண்டியிருக்கலாம்.

  7. புதிய ஒப்பந்தத்தை ஏற்க, சந்தா செலுத்து என்பதைத் தட்டவும்.

நீங்கள் Plus-ஐத் தேர்ந்தெடு என்பதைத் தட்டினால், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கப் பின்வரும் படிகளை நிறைவுசெய்யவும்:

  1. சந்தாவை உறுதிப்படுத்த உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கவும் டயலாக்கில், Stripe-க்குச் செல் என்பதைத் தட்டவும்.
  2. விதிமுறைகளை மதிப்பாய்வு செய்து, ஏற்றுத் தொடரு என்பதைத் தட்டவும்.
  3. உங்கள் கேமரா மூலம் ஸ்கேன் செய்வதற்கான ஒரு QR குறியீடு காட்டப்படும். மின்னஞ்சல் இணைப்பு, குறுஞ்செய்தி இணைப்பு, இணைப்பை நகலெடு அல்லது இதே சாதனத்தில் தொடரு என்பதைத் தேர்ந்தெடுக்க, பிற விருப்பங்கள் என்பதைத் தட்டவும்.
  4. அரசாங்கம் வழங்கிய உங்களின் புகைப்பட ID-இன் முன் மற்றும் பின்பக்கத்தைப் படம் பிடிக்கத் தயாராக வைத்திருக்கவும்.
  5. உங்கள் ID-ஐ ஸ்கேன் செய்யத் தயாராகுங்கள் டயலாக்கில், நான் தயாராக உள்ளேன் என்பதைத் தட்டவும்.
  6. உங்கள் புகைப்பட ID-இன் முன்பக்கத்தைப் படமெடுத்து, புகைப்படத்தைச் சமர்ப்பி என்பதைத் தட்டவும் அல்லது மீண்டும் முயற்சிக்க மீண்டும் படமெடு என்பதைத் தட்டவும்.
  7. உங்கள் புகைப்பட ID-இன் பின்பக்கத்தைச் சமர்ப்பிக்க, நான் தயாராக உள்ளேன் என்பதைத் தட்டவும்.
  8. உங்கள் புகைப்பட ID-இன் பின்பக்கத்தைப் படமெடுத்து, புகைப்படத்தைச் சமர்ப்பி என்பதைத் தட்டவும் அல்லது மீண்டும் முயற்சிக்க மீண்டும் படமெடு என்பதைத் தட்டவும்.
  9. சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்ததும் உறுதிப்படுத்தல் செய்தி காட்டப்படும். பிழை ஏற்பட்டால், அரசால் வழங்கப்பட்ட வேறு புகைப்பட ID-ஐப் பயன்படுத்திச் சரிபார்க்க, சந்தா செலுத்து என்பதைத் தட்டி முயலலாம்.

திட்ட மாற்றம் தொடர்பான சிக்கல் குறித்து Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளும் முன்

திட்ட மாற்றம் தொடர்பான சிக்கல் குறித்து Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன், உங்கள் சிக்கலை விரைவாகத் தீர்க்க உதவும் பின்வரும் தகவல்களைச் சேகரிக்கவும்:

  • உங்கள் ஸ்டோர் URL மற்றும் கணக்கின் மின்னஞ்சல் முகவரி
  • உங்கள் தற்போதைய திட்டம் மற்றும் நீங்கள் மாற்ற விரும்பும் திட்டம்
  • திட்ட மாற்றம் கோரப்பட்ட தேதி மற்றும் அது மேம்படுத்தலா அல்லது தரமிறக்கலா என்ற விவரம்
  • நீங்கள் இருக்கும் கட்டணச் சுழற்சி (மாதாந்திரம் அல்லது வருடாந்திரம்) மற்றும் அது மீட்டமைக்கப்படும் தேதி
  • திட்டத்தை மாற்ற முயலும்போது காட்டப்படும் ஏதேனும் பிழைச் செய்திகள்
  • பொருந்தினால், பில்லிங் முரண்பாட்டின் திரைப்பிடிப்புகள்
  • அமைப்புகள் > திட்டம் என்பதில் உங்கள் திட்டத்தைச் சரிபார்ப்பது உட்பட நீங்கள் ஏற்கனவே முயன்ற படிகள்

இந்தத் தகவல்கள், Shopify ஆதரவுக் குழு உங்களுக்கு மிகவும் திறம்பட உதவப் பயன்படும்.