திட்டங்களுக்கான Shopify-இன் பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கையைப் புரிந்துகொள்ளுதல்

Shopify சேவை விதிமுறைகளின் பிரிவு 5.10 இல் குறிப்பிட்டுள்ளபடி, Shopify திட்டங்களுக்கான கட்டணங்கள் பொதுவாகத் திரும்பப் பெற முடியாதவை. திட்ட ரத்துசெய்தல்கள் மற்றும் முடக்கங்கள் உட்படப் பெரும்பாலான சூழல்களுக்கு இது பொருந்தும். இருப்பினும், உங்களிடம் தவறுதலாகக் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக நீங்கள் கருதினால் அல்லது ஏதேனும் சிறப்புக் காரணம் இருந்தால், உங்கள் கோரிக்கையைச் சரிபார்க்க Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளலாம்.

இந்தப் பக்கத்தில்

பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான தகுதிவாய்ந்த காலவரம்புகள்

பணத்தைத் திரும்பப்பெறுதல்களுக்கு உத்தரவாதம் இல்லை என்றாலும், Shopify ஆதரவு தகுதிவாய்ந்த கோரிக்கைகளைச் சூழலுக்கு ஏற்ப மதிப்பாய்வு செய்யும். பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான மதிப்பாய்வுக்குத் தகுதிபெற, உங்களின் ரத்துசெய்தல் அல்லது கோரிக்கை குறிப்பிட்ட காலவரம்புகளுக்குள் இருக்க வேண்டும்:

சந்தா வகைபணத்தைத் திரும்பப் பெறுதலைப் பரிசீலிப்பதற்கான காலவரம்பு
மாதாந்திரச் சந்தாஇன்வாய்ஸ் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 7 நாட்களுக்குள்
சோதனைக் காலத்துக்குப் பிந்தைய முதல் இன்வாய்ஸ்இன்வாய்ஸ் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள்
வருடாந்திரச் சந்தாஇன்வாய்ஸ் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள்
SEPA நேரடி டெபிட் பேமெண்ட்டுகள்இன்வாய்ஸ் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 14 நாட்களுக்குள்
பிரேசிலில் அமைந்துள்ள வணிகர்கள்இன்வாய்ஸ் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 90 நாட்களுக்குள்

எதற்கெல்லாம் பணத்தைத் திரும்பப்பெற முடியாது

பின்வரும் சூழல்களுக்குப் பொதுவாகப் பணத்தைத் திரும்பப் பெற முடியாது:

  • திட்டத் தரமிறக்கங்கள்: சுழற்சியின் மத்தியில் உங்கள் திட்டத்தைத் தரமிறக்கும்போது, பணத்தைத் திரும்பப்பெறுவதற்குப் பதிலாக, எதிர்கால இன்வாய்ஸ்களில் பயன்படுத்தப்படும் வகையில் கணக்குக் கிரெடிட்களைப் பெறுவீர்கள். தற்போதைய திட்டத்தின் அம்சங்கள் உங்கள் கட்டணச் சுழற்சியின் இறுதி வரை தொடர்ந்து கிடைக்கும்.
  • காலவரம்புகளுக்குப் பிறகான கோரிக்கைகள்: தகுதிவாய்ந்த காலவரம்புகள் கடந்த பிறகு செய்யப்படும் ரத்துசெய்தல் அல்லது பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான கோரிக்கைகள்.
  • பயன்படுத்தப்படாத சேவைகள்: Shopify தொடர்ந்து சேவையை வழங்குவதால், உங்கள் பில்லிங் காலத்தில் உங்கள் Shopify ஸ்டோரைப் பயன்படுத்தாமல் இருப்பது, பணத்தைத் திரும்பப்பெறுவதற்கு உங்களுக்குத் தானாகவே தகுதி தராது.
  • மூன்றாம் தரப்புச் செயலிக் கட்டணங்கள்: மூன்றாம் தரப்புச் செயலிகளுக்கான கட்டணங்களை Shopify-ஆல் திரும்ப வழங்க முடியாது. நீங்கள் செயலியை உருவாக்குபவரை நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டும்.
  • தீம் கொள்முதல்கள்: தீம் விற்பனையே இறுதியானது, அதைப் திரும்பப் பெற முடியாது. தீமிற்கான பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கைகள் குறித்து மேலும் அறிக.

குறிப்பிட்ட பில்லிங் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல் சூழல்களைக் கையாளுதல்

Shopify திட்டங்களைக் கையாளும்போது, பில்லிங் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கைகளைப் புரிந்துகொள்வது அவசியமான பல்வேறு சூழல்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம். சில முக்கியச் சூழ்நிலைகளும் அவற்றை எப்படிக் கையாளுவது என்பதும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • திட்டத்தை ரத்துசெய்தல்: உங்கள் Shopify திட்டத்தை ரத்துசெய்தால், ரத்துசெய்தலுக்குப் பிறகான மீதமுள்ள காலத்திற்குப் பணம் திரும்ப வழங்கப்படாது.
  • திட்டத் தரமிறக்கங்கள்: Shopify திட்டங்கள் முன்கூட்டியே செலுத்தப்படுபவை. சுழற்சியின் மத்தியில் தரமிறக்க நீங்கள் தேர்வுசெய்தால், உங்களின் தற்போதைய கட்டணச் சுழற்சியின் முடிவில் உங்களின் புதிய திட்டம் நடைமுறைக்கு வரும். கட்டணச் சுழற்சிகள் குறித்து மேலும் அறிக.
  • பில்லிங் பிழைகள்: பில்லிங் பிழை ஏற்பட்டுள்ளதாக நீங்கள் கருதினால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும். ஆதரவு ஆலோசகர் உங்கள் பில்லிங் சிக்கலை மதிப்பாய்வு செய்து, அதைத் தீர்க்க உதவுவார்.
  • எதிர்பாராத கட்டணங்கள்: எதிர்பாராத கட்டணங்களைத் தவிர்க்க விரும்பினால், அடுத்த கட்டணச் சுழற்சி தொடங்குவதற்கு முன்பே உங்கள் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். தேவையற்ற கட்டணங்களைத் தவிர்க்க உங்கள் ஸ்டோரை முடக்கும் செயல்முறை குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

பில்லிங் மதிப்பாய்வைக் கோருதல்

உங்களிடம் தவறாகக் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகக் கருதினாலோ, நகல் ஸ்டோர்கள் இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் சிறப்புச் சூழல் இருந்தாலோ, Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும். ஆதரவு ஆலோசகர் உங்களின் கோரிக்கையை மதிப்பாய்வு செய்து, பணத்தைத் திரும்பப் பெறுதல் அல்லது கிரெடிட் வழங்குதல் பொருத்தமானதா என்பதைத் தீர்மானிப்பார். பணத்தைத் திரும்பப்பெறுதல்களுக்கும் கிரெடிட்களுக்கும் உத்தரவாதமில்லை, ஆனால் சில சூழ்நிலைகளில் மதிப்பாய்வு செய்த பிறகு அவை அங்கீகரிக்கப்படலாம்.

பில்லிங் பணத்தைத் திரும்பப்பெறுதல் அல்லது கிரெடிட் குறித்து Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளும் முன்

பில்லிங் பணத்தைத் திரும்பப்பெறுதல் அல்லது கிரெடிட் குறித்து Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளும் முன், உங்கள் சிக்கலை விரைவாகத் தீர்க்க உதவும் பின்வரும் தகவல்களைச் சேகரிக்கவும்:

  • நீங்கள் கடையின் உரிமையாளர் அல்லது பில்லிங் அனுமதிகள் உள்ள பணியாளர் என்பதை உறுதிப்படுத்தவும், ஏனெனில் அவர்களால் மட்டுமே பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க முடியும்
  • உங்களின் ஸ்டோர் URL மற்றும் கணக்கு மின்னஞ்சல் முகவரி
  • கேள்விக்குரிய கட்டணத்துக்கான இன்வாய்ஸ் எண் மற்றும் தேதி
  • உங்கள் ஸ்டோரை ரத்துசெய்த அல்லது தரமிறக்கிய தேதி (பொருந்தினால்)
  • சோதனைக் காலத்துக்குப் பிறகு இது உங்கள் முதல் இன்வாய்ஸா என்பது
  • செயலிகளுக்கான பணத்தைத் திரும்பப்பெறுதல்களுக்கு: செயலியை நீங்கள் நிறுவல் நீக்கிய தேதி மற்றும் செயலியின் பில்லிங் காலம் தொடங்கிய தேதி
  • பில்லிங் பிழை அல்லது இரட்டிப்புக் கட்டணம் போன்று, பணத்தைத் திரும்பக் கோருவதற்கான காரணத்தின் சுருக்கமான விளக்கம்
  • பில்லிங் பிழைகளின் திரைப்பிடிப்புகள் அல்லது ரத்துசெய்தலை உறுதிப்படுத்தும் தகவல் போன்ற ஏதேனும் ஆதார ஆவணங்கள்
  • இந்தப் பக்கத்தின் சிக்கல் தீர்த்தல் பிரிவுகளில் நீங்கள் ஏற்கனவே முயன்றுபார்த்த படிகள்

இந்தத் தகவலைத் தயாராக வைத்திருப்பது, உங்களுக்குச் சிறப்பான முறையில் உதவ Shopify ஆதரவுக்கு உதவியாக இருக்கும்.

பயன்படுத்தாத சேவை உரிமைகோரல்களைக் கையாளுதல்

Shopify திட்டங்கள் முன்கூட்டியே கட்டணம் செலுத்தப்படுபவை என்பதால், கட்டணச் சுழற்சியின் நடுவே திட்டத்தைக் குறைத்தால் உங்களின் தற்போதைய கட்டணச் சுழற்சியின் முடிவில்தான் புதிய திட்டம் அமலுக்கு வரும்.

அங்கீகரிக்கப்படாத அல்லது தவறான கட்டணங்களுக்குப் பணத்தைத் திரும்பப் பெறக் கோரவும்

பில்லிங் முரண்பாடுகள் தொடர்பான அங்கீகரிக்கப்படாத கட்டணங்களுக்குத் தீர்வு காண்பது குறித்தோ அங்கீகரிக்கப்படாத அல்லது தவறான கட்டணங்களுக்குப் பணத்தைத் திரும்பப் பெறக் கோருவது குறித்தோ தகவல் பெற, உங்கள் Shopify பில்களில் உள்ள அறியப்படாத கட்டணச் சிக்கல்களைத் தீர்த்தல் என்பதைப் பார்க்கவும்.

பில்லிங் முரண்பாடு ஏற்படும்போது பணத்தைத் திரும்பப்பெறுதலுக்கான தகுதி

பணத்தைத் திரும்பப்பெறுவதற்கு Shopify-இன் சேவை விதிமுறைகள் அனுமதிப்பதில்லை. இருப்பினும், நிரூபிக்கப்பட்ட பிழை ஏதேனும் இருந்தால், உங்கள் பில்லில் உள்ள குறிப்பிட்ட சிக்கலை மதிப்பாய்வு செய்து தீர்வு காண, நீங்கள் உடனடியாக Shopify ஆதரவுடன் இதை விவாதிக்கலாம்.

Shopify App Store கொள்முதல்களுக்குப் பணத்தைத் திரும்பப்பெறுதல்

ஒரு செயலியானது Shopify நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதா அல்லது மூன்றாம் தரப்பு டெவலப்பரால் உருவாக்கப்பட்டதா என்பதைப் பொறுத்து, செயலி கொள்முதலுக்கான பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கைகள் மாறுபடும்.

மூன்றாம் தரப்புச் செயலிகள்

மூன்றாம் தரப்புச் செயலிகளுக்கான பணத்தைத் திரும்பப்பெறுதல்கள், Shopify-ஆல் அல்லாமல் செயலியை உருவாக்குபவரால் நேரடியாக நிர்வகிக்கப்படுகின்றன. ஒரு மூன்றாம் தரப்புச் செயலிக்காகப் பணத்தைத் திரும்பப் பெறவோ கிரெடிட்டைப் பெறவோ கோருவதற்கு, செயலியை உருவாக்குபவரை நேரடியாகத் தொடர்புகொள்ளவும். செயலிக் கட்டணப் புகார்கள் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல் தொடர்பான சிக்கல் தீர்த்தல் குறித்து மேலும் அறிக.

Shopify செயலிகள்

Shopify உருவாக்கிய செயலிகளுக்கு, செயலியின் பில்லிங் காலம் தொடங்கிய 7 நாட்களுக்குள் செயலியானது நிறுவல் நீக்கப்பட்டால், பணத்தைத் திரும்பப்பெறுதலுக்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படலாம். பணத்தைத் திரும்பப் பெறக் கோரும் முன், எதிர்காலக் கட்டணங்களைத் தடுக்க செயலியை நிறுவல் நீக்கிவிட்டீர்கள் என்பதை உறுதிசெய்யவும்.

Shopify App Store கொள்முதல்களுக்குப் பணத்தைத் திரும்பப் பெற அல்லது கிரெடிட்டைக் கோருதல்

Shopify App Store-இல் வாங்கப்பட்ட செயலிகளுக்கான கிரெடிட் அல்லது பணத்தைத் திரும்பப் பெறக் கோரும்போது, செயலியை உருவாக்குபவரைத் தொடர்புகொள்வதற்கான சரியான படிகளையும் பணத்தைத் திரும்பப்பெறுதலுக்கான செயல்முறைகளையும் புரிந்துகொள்வது முக்கியமாகும்.

Shopify App Store கொள்முதல்களுக்குப் பணத்தைத் திரும்பப் பெற அல்லது கிரெடிட்டைக் கோருவது எப்படி

நீங்கள் ஒரு செயலிக்காகப் பணத்தைத் திரும்பப் பெறவோ கிரெடிட்டையோ கோரும்போது, பேமெண்ட் எவ்வாறு கையாளப்பட்டது என்பதைப் பொறுத்து பின்வரும் வழிகளில் அந்தச் செயல்முறை மாறுபடலாம்:

  • Shopify-ஆல் செயலாக்கப்பட்ட பேமெண்ட்டுகள்: செயலிக்கான கட்டணம் Shopify மூலம் செயலாக்கப்பட்டிருந்தால், செயலியை உருவாக்குபவர் பணத்தைத் திரும்ப வழங்கலாம் அல்லது உங்களுக்கு ஒரு கிரெடிட்டை வழங்கலாம். Shopify App Store-இல் நீங்கள் எதிர்காலத்தில் செய்யும் கொள்முதல்களுக்குக் கிரெடிட்கள் பொருந்தும் என்பதோடு உங்கள் சந்தா பில்லிலும் அவை ஆவணப்படுத்தப்படும்.
  • வெளிப்புறமாகச் செயலாக்கப்பட்ட பேமெண்ட்டுகள்: கட்டணமானது Shopify-க்கு வெளியே செயலாக்கப்பட்டிருந்தால், அசல் கட்டண முறையைப் பயன்படுத்தி டெவலப்பரால் பணத்தைத் திரும்பப்பெறுதல் கையாளப்படும்.

பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை தொடர்பான குறிப்பிட்ட விவரங்களுக்கு, எப்போதும் செயலியின் பட்டியலிடல் பக்கம் அல்லது டெவலப்பரின் முகப்புப்பக்கத்தைச் சரிபார்க்கவும், ஏனெனில் பணத்தைத் திரும்பப்பெறுதலுக்கான ஒப்புதல் இந்த விதிமுறைகளைப் பொறுத்தே அமையலாம்.

படிகள்:

  1. Shopify App Store-க்குப் சென்று செயலியைத் தேடவும்.
  2. செயலியைத் தேர்ந்தெடுத்து, ஆதரவைப் பெறு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. உங்கள் தகவலையும் உங்கள் கோரிக்கை தொடர்பான செய்தியையும் வழங்கி, செய்தியை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் Shopify கணக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரிக்கு டெவலப்பரின் பதில்கள் அனுப்பப்படும்.

செயலியை நிறுவல் நீக்குதல்

உங்களுக்கு ஒரு செயலி இனி தேவையில்லை என நீங்கள் முடிவெடுத்தால், உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து நேரடியாக அதை நிறுவல் நீக்கலாம்.

தீம் கொள்முதலுக்கான பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை

Shopify Theme Store-இலிருந்து செய்யப்படும் தீம் கொள்முதல்கள் இறுதியானவை, மேலும் அவற்றுக்குப் பணத்தைத் திரும்பப் பெற முடியாது. ஒரு தீமை நீங்கள் வாங்கும்போது, அந்தத் தீமின் சோர்ஸ் குறியீட்டிற்கான முழு அணுகலை உடனடியாகப் பெறுவீர்கள், வாங்கிய பிறகு அந்த அணுகலை Shopify-ஆல் திரும்பப் பெற முடியாது.

ஒரு தீமை வாங்குவதற்கு முன், பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ளவும்:

  • வாங்குவதற்கு முன் முயன்று பார்க்கவும்: நீங்கள் வாங்குவதற்கு முன் உங்கள் ஸ்டோரில் எந்தவொரு தீமையும் இலவசமாக முயன்று பார்க்கலாம். அந்தத் தீம் உங்கள் தேவைகளுக்காகச் செயல்படுகிறதா என்பதைச் சரிபார்க்க, இதைப் பயன்படுத்தவும்.
  • தீம் ஆவணத்தை மதிப்பாய்வு செய்யவும்: வாங்குவதற்கு முடிவெடுக்கும் முன், தீமின் அம்சங்கள் மற்றும் தேவைகளை அதன் பட்டியலிடல் பக்கத்தில் சரிபார்க்கவும்.
  • தீம் டெவலப்பரைத் தொடர்புகொள்ளவும்: தீமின் செயல்பாடு குறித்து உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால், வாங்குவதற்கு முன் தீமின் பட்டியலிடல் பக்கம் மூலம் டெவலப்பரைத் தொடர்புகொள்ளவும்.

தவறாக எழுதப்பட்ட டொமைன்களுக்குப் பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை

பயன்படுத்தப்படாத சேவைகள், தவறாக எழுதப்பட்ட டொமைன்கள் அல்லது தகுதியின்மைச் சூழல்கள் உள்ளிட்ட சந்தாத் திட்டங்களுக்கு Shopify பொதுவாகப் பணத்தைத் திரும்ப வழங்காது. உங்களிடம் தவறுதலாகக் கட்டணம் வசூலிக்கப்பட்டுவிட்டதாக நீங்கள் கருதினால், மதிப்பாய்வு செய்யக் கோருவதற்கு Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும். Shopify-இன் பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை குறித்த விவரங்களுக்கு, Shopify-இன் சேவை விதிமுறைகள் பிரிவு 5.10-ஐப் பார்க்கவும்.

பரிவர்த்தனைக் கட்டணக் கொள்கைகளைப் புரிந்துகொள்ளுதல்

Shopify-இல் நீங்கள் ஓர் ஆர்டரை ரத்துசெய்யும்போது, அந்த ரத்துசெய்தல் தொடர்புடைய பரிவர்த்தனைக் கட்டணம் உங்கள் கணக்கிற்குத் திரும்ப வழங்கப்பட மாட்டாது அல்லது கிரெடிட்டாகவும் வழங்கப்பட மாட்டாது.

பரிவர்த்தனைக் கட்டணங்கள் என்பவை Shopify Payments கட்டணங்களில் இருந்து மாறுபட்டவை, அவை உங்களின் பேஅவுட்டிலிருந்து நேரடியாக எடுக்கப்படும். கட்டணங்கள் மற்றும் செலவுகள் குறித்து மேலும் அறிக.